இணையதள பயன்பாட்டாளர்களின் ஆன்லைன் முகவரிகளை ஒதுக்கும் பணியைச் செய்து வரும் பெயர்கள் மற்றும் எண்களுக்கான இன்டர்நெட் கழகம் (ஐசிஏஎன்என்), இனி அனைத்து மொழிகளிலும் டொமைன் பெயர்களைப் பெறலாம் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், டொமைன் பெயர்களில், உலகின் எந்த மொழியையும் பயன்படுத்தவும் அது அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்த முடிவு சியோலில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து ஐசிஏஎன்என் தலைவர் ராட் பெக்ஸ்டிரோம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது இன்டர்நெட் பயன்பாட்டாளர்களிடையே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இது முதல் படி மட்டுமே. ஆனால் இது மிகப் பெரிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவாகும். இனிமேல் இன்டர்நெட், சர்வதேசியமாகிறது.
ஆசியா, மத்திய கிழக்கு, ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் இனிமேல் இன்டர்நெட்டை மிக எளிதாக கையாள முடியும் என்றார்.
நவம்பர் 16ம் தேதி முதல் இந்தத் திட்டம் படிப்படியாக அமலுக்கு வருகிறது.
தொடக்கத்தில், சைனீஸ், கொரியன், அரபி ஆகிய மொழிகளில் அமைந்த சர்வதேச டொமைன் பெயர்களை இந்த அமைப்பு ஒதுக்கும். அதன் பிறகு உலகின் அனைத்து மொழிகளிலும் டொமைன் பெயர்கள் வழங்கப்படும்.
1998ம் ஆண்டு ஐசிஏஎன்என் தொடங்கப்பட்டது. அமெரிக்க அரசின் வர்த்தகத்துறையின் கீழ் இது செயல்பட்டு வருகிறது.
.com போன்ற டொமைன் பெயர்களை இந்த அமைப்புதான் முடிவு செய்கிறது.
கடந்த மாதம், இந்த அமைப்பு அமெரிக்காவுக்கு மட்டும் உரியதாக இல்லாமல், சர்வதேச அளவிலான அமைப்பாக மாற வேண்டும் என்று அமெரிக்க அரசு முடிவு செய்து அதற்கான அனுமதியையும் வழங்கியது.
இதன் மூலம் தற்போது முதல் அதிரடி மாற்றத்தை ஐசிஏஎன்என் அறிவித்துள்ளது.
டொமைன் பெறுவது எப்படி? விளக்கம் தரும் வீடியோ
நன்றி
- தட்ஸ்தமிழ்
Headline
இணையத்தில் வாரலாற்று சிறப்புமிக்க புரட்சி நவம்பர் 16 முதல் - வீடியோ
0 commentsகமலின் அடுத்த படம் மர்மம் நிறைந்த "புத்தனின் பல்"
8 comments
புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம்
கி.மு. 500-ம் நூற்றாண்டில் புத்தர் இறந்தவுடன் அவரது சீடர்கள் புத்தரின் உடலை எரித்துவிட்டார்கள். புத்தரின் பெண் சீடரான கீமா என்பவர் மட்டும், புத்தரின் நினைவாக ஒரே ஒரு பல்லை எடுத்துவைத்துக்கொண்டார். அந்தப் பல்லை அப்போதைய கலிங்கத்து மன்னன் (இப்போதைய ஒரிஸ்ஸா) பிரம்மதாத்திக்கு அன்புப் பரிசாகக் கொடுத்தார்.
'புத்தரின் பல் எந்த நாட்டில் இருக்கிறதோ, அங்கே மழை பெய்யும். செல்வம் கொழிக்கும். சுபிட்சம் வரும்' என்று சென்டிமென்ட்கள் பரவ ஆரம்பிக்கின்றன. வறட்சியில் வறளும் பல அரசர்கள், புத்தரின் பல்லைக் குறிவைக்கிறார்கள். கலிங்கத்தின் மேல் போர் தொடுக்கிறார்கள். அமைதி படிக்கச் சொன்ன புத்தனின் பல்லுக்காகப் பல்லாயிரம் உயிர்கள் மடிகின்றன. புத்தரின் பல் பல அரசுகளின் கைமாறிச் சென்றுகொண்டே இருக்கிறது.
புத்தர் இறந்து 800 ஆண்டுகள் கழித்து, மீண்டும் கலிங்க நாட்டுக்கு வருகிறது புத்தரின் பல். அப்போது கலிங்கத்தின் அரசனாக இருப்பவர் குஹசீவா. இந்தப் பல்லால் தன் நாட்டில் பல அதிசயங்கள் நிகழ்வதாக நம்புகிறார் குஹசீவா. தகவல் வெளியே பரவி, மீண்டும் பல்லுக்காகப் பல போர்கள் ஆரம்பிக்கின்றன. பல்லைக் காப்பாற்ற குஹசீவா, தன்னுடைய மகள், மருமகனிடம் பல்லைக் கொடுத்து இலங்கைக்கு அனுப்பிவைக்கிறார். இலங்கை ராஜா குஹசீவாவின் குடும்பத்தை ராஜ மரியாதையோடு வரவேற்று, பல்லை வாங்கிக்கொள்கிறார். இன்றும் புத்தரின் பல் இலங்கை கண்டியில் உள்ள புத்த மதக் கோயிலில் பத்திரமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
புத்தரின் பல்
இதுதான் புத்தரின் பல் வரலாறு. சரி, அதற்கு என்ன என்கிறீர்களா? 'இந்த பல் கதையைத்தான் மிஷ்கின் இயக்க, கமல் நடிக்க இருக்கிறார்' என கோடம்பாக்கம் முழுக்கக் கதைகள். கமல் இந்தக் கதையில் என்ன வேஷத்தில் நடிக்கப் போகிறார் என்பது சஸ்பென்ஸ்!
எதுவாக இருந்தாலும், 'புத்தம் சரணம் கச்சாமி!'
நன்றி
-Vikatan
joe
அனைவரும் பாரட்ட வேண்டிய சேவையை தமிழிஷ் தொடங்கியுள்ளது
0 comments
இன்று தமிழிஷ் திரட்டியில் ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது
தலைப்பை கிளிக் செய்து படிக்கவும் "கொடுக்கமாட்டேன் ~ வாங்கமாட்டேன் / வரதட்சணை"
இன்றைய சமூக சூழலில் வரதட்சணை கொடுமையை முதிர் கன்னியின் மனநிலையை வைரமுத்துவின் கவிதையின் சோகத்தை இவ் வரிகளில் காணலம்.
"என் கனவுகளில் மட்டும் குதிரைகளின் குளம்படிகள்
அனால் எந்த ராஜகுமாரனும் என் வீட்டு வாசலில் இறங்கவே இல்லை
பறக்க நினைத்த வான் பார்த்த என் இளமை இன்று புதைய நினைத்து ப்தூமி பார்க்கிறது
கண்ணீரில் கரைந்தது கண் மை மட்டுமா? இளமையும் இளமையும்
கன்னத்தில் விழுந்த மெல்லிய பள்ளங்களில் என் கனவுகளின் சமாதிகள்!"
எனவே தமிழிஷின் இந்த நல்ல முயற்சியை வலையுலகம் சார்பாக வரவேற்போம்.
கிங் பிஷர் 2010 கவர்ச்சி நாள்காட்டி ஆரம்பம் - வீடியோ
0 comments
ஒவ்வொரு ஆண்டும் கிங் பிஷர் தனது விளம்பர மாடல் மற்றும் வரும் ஆண்டிற்காக நாள்காட்டியின் தேவதையின் தேர்வுகள் பலத்த போட்டி நிலவும் அதுபோல் இந்த ஆண்டும் வரும் அக்டோபர் 30 வெள்ளி இரவு 10.00 மணிக்கு NDTV-ல் 2010 ஆம் ஆண்டிற்காக கிங் பிஷர் நாள்காட்டியின் மாடல் அழகிகளின் தேர்வு நடைபெறுகிறது அதில் சிறந்த அழகியாக தேர்ந்தேடுக்கும் நபரே அடுத்த ஆண்டிற்கான கிங் பிஷர் விளம்பரங்களில் வலம் வருவார்.
இளம் பெண்கள் விரும்பும் நவீன மீன் சிகிச்சை + 18 - வீடியோ
2 commentsதிருச்செந்தூர் சூரசம்ஹாரம்- வீடியோ
2 comments
சூரசம்ஹாரத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். இதேபோல சென்னை வடபழனி உள்ளிட்ட கோவில்களிலும் இன்று சூர சம்ஹாரம் நடைபெறுகிறது.
இந்துக்கள் கடைப்பிடிக்கும் விரதங்களில் மிக முக்கியமானதாக மகா கந்த சஷ்டி விரதம் அமைந்து உள்ளது. முருகப் பெருமான் சூரபத்மனுடன் போரிட்டு சூரனை சம்ஹாரம் செய்ததைக் குறிப்பிடும் வகையில், ஐப்பசி மாதம் வளர்பிறையில் முருக பக்தர்கள் மகா கந்த சஷ்டி விரதத்தை தொடங்குகிறார்கள்.
கடந்த 18-ந் தேதி கந்த சஷ்டி விரதம் தொடங்கியது. சூரனை சம்ஹாரம் செய்த இடம் திருச்செந்தூர் என்பதால், சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் திருச்செந்தூரில் 6 நாட்கள் தங்கி கந்த சஷ்டி கவசம், பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் உள்பட முருகப்பெருமான் பாடல்களை பாராயணம் செய்து கடும் விரதம் மேற்கொள்கிறார்கள்.
மேலும் விரிவான தகவல் படிக்க
சீர்காழி கோவிந்தராஜன் & டி.எம்.ஸ்- ன் மனதை மயக்கும் முருகன் பாடல்
நன்றி
-தட்ஸ்தமிழ்
வழுக்கை தலையில் முடிகள் வளரும் அழகுகலை - வீடியோ
0 comments
முன்பு எல்லாம் மரபு வழி குறைபாட்டால் தலையில் முடி இழப்பு ஏற்பட்டன ஆனால் இன்று இரசாயண உணவுகளை தினம் சாப்பிடுதல் மற்றும் நாகரீகம் என்ற பெயரில் தலைக்கு பல வண்ண சாயம் அடித்தல் மேலும் முக்கிய காரணியாக இருப்பது சூற்று சூழல் காற்று மாசு பாதிப்பின் மூலமாகவும் அதிக அளவு முடி இழப்பு ஏற்படுத்துகிறது.
அயல் நாடுகளில் பல புதிய தொழில்நுட்பத்துடன் தலை முடிக்கு மாற்று வழிகாண்கின்றனர் ஆனால் இந்த சிகிச்சைக்கு மிக அதிக அளவு பணம் தேவைபடுகிறது.
இவற்றால் நன்மை தீமையும் கலந்தே உள்ளது.
மிஸ்டர் பீன் கட்டிங்
போலீஸ் நிலையம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் - வீடியோ
3 comments
நேற்று மேற்கு வங்கத்தில் உள்ள காவல் நிலையம் மீது மாவோயிஸ்டுகள் அதிரடி தாக்குதல் நடத்தி காவல்நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்களையும் படுகொலை செய்துள்ளனர் மேலும் காவல் நிலையத்தில் இருந்த ஆயுதங்களையும் கொள்ளையடித்து உள்ளனர்.
இந்த சம்பவத்தால் அந்த மாநிலத்தில் பதட்டம் நிலவி வருகிறது.
நன்றி
-rediff.com
பாம்புகளை விரும்பி வளர்க்கும் அதிசய குடும்பம்
2 comments
பாம்புகளை பற்றி மக்கள் மனதில் இருக்கும் பல சந்தேங்களுக்கு அந்த குடும்பம் தரும் விளக்கமும்.
1. பாம்பு பால் குடிக்குமா? முட்டை சாப்பிடுமா ?
2. பாம்பு பழி வாங்குமா ?
3. 100 வயது பாம்பு மாணிக்கம் கக்குமா?
4. சிரியா நங்கை முலிகை வளர்த்தால் பாம்பு வாராதா?
5. கொம்பேரிமூக்கன் கடித்தவரை கான சுடுகாட்டில் காத்திருக்குமா?
என்றும் நினைவில் வரும் பாம்பு பாடல்
திரை படத்தில் பாம்பு நகைசுவை
அறிய சேவை ஆன்லைனில் பிறப்பு| இறப்பு சான்றிதழ் தமிழில் கிடைக்கும்
4 comments
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் பிறப்பு , இறப்பு சான்றிதழ்களை இனிமேல் ஆன்லைனில் தமிழிலேயே பெற முடியும். நவம்பர் மாதம் முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
கடந்த ஆண்டு பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனிலேயே பதிவு செய்து பெறும் நடைமுறையை மாநகராட்சி ஆரம்பித்தது.
இந்த நிலையில் தற்போது தமிழிலேலேய சான்றிதழ் பெறும் முறை நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதுதொடர்பான தகவல் பதியும் நடைமுறைகள் அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும். நவம்பர் மாதம் இந்த புதிய முறை அமலுக்கு வரும் என்று மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கோனி கூறியுள்ளார்.
முன்பு ஆங்கிலத்தில் மட்டும் சான்றிதழ்கள் தரப்பட்டு வந்தன. ஆனால் அதில் ஏராளமான ஸ்பெல்லிங் மிஸ்டேக்குள் இருப்பதாக புகார் கள் வந்தன. இதையடுத்து ஆன்லைனிலேயே பிழைகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து கிட்டத்தட்ட 9488 பேர் பிறப்பு சான்றிதழ் பிழை திருத்தத்திற்காகவும், 1458 பேர் இறப்பு சான்றிதழ் பிழை திருத்தத்திற்காகவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தினர். இதையடுத்தே தமிழிலும் சான்றிதழ்களை வழங்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது மாநகராட்சி டேட்டா பேஸில் 50 லட்சம் பிறப்பு தகவல்களும், 25 லட்சம் இறப்புத் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. தினசரி 5000 பேர் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.
மாநகராட்சியின் இணையதளம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 5.31 லட்சம் ஹிட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவர்கள்தான்.
இதுவரை 2.97 லட்சம் பிறப்பு சான்றிதழ்களும், 78,000 இறப்பு சான்றிதழ்களும் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளன.
தமிழ் எழுத்துக்களுக்காக யுனிகோட் எழுத்துரு பயன்படுத்தப்படவுள்ளதாம். பெயர், பாலினம், பிறப்பு தேதி, பிறப்பிடம், தந்தை- தாய் பெயர்கள், நிரந்தர முகவரி, குழந்தை பிறந்தபோது பெற்றோர் இருந்த முகவரி, பதிவுத் தேதி, விநியோக தேதி ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும்.
இந்த நடைமுறை அமலுக்கு வந்த பின்னர் மருத்துவமனைகள், தங்களது மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தை கள் குறித்த விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளீடு செய்யலாம்.
தற்போது பிறப்பு விவரங்களைப் பதிவு செய்து கொள்ள மாநகரில் உள்ள 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பு லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி நேரடியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் பிறப்பு குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
நன்றி
-தட்ஸ்தமிழ்
பட்டாசு வெடிப்பில் உலக சாதனை - வீடியோ
0 commentsஜகன்மோகினி நமிதாவின் கலக்கல் பேட்டி - வீடியோ
0 comments
நமிதா, நிலா நடித்திருக்கும் ஜகன்மோகினி தீபாவளி விருந்தாக நாளை திரைக்கு வருகிறது என்.கே.விஸ்வநாதன் இயக்கியிருக்கும் இந்த மாயஜால படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியாகிறது.
அருந்ததி போன்ற மாயஜால படங்களுக்கு அமோக வரவேற்பு இருப்பதால் ஜகன்மோகினிக்கு மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக பிரிண்டுகள் போடப்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 500 பிரிண்டுகள் போடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நமிதாவும், நிலாவும் ஆந்திர ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகைகள். மேலும், படத்தில் இருவரும் போட்டி போட்டு கவர்ச்சியில் குளித்தெழுந்திருக்கிறார்கள். ஆந்திர ரசிகர்களுக்கு
நமீதாவின் 'ஜகன்மோகினி' டிரெய்லர்
நன்றி
-தமிழ்ஜெர்னல்
தீபாவளி திருடர்கள் - பொது மக்களே உஷார் !
0 comments
தீபாவளி சீசன் திருடர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை நகருக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பொருட்கள் வாங்கச்செல்லும் பொதுமக்களை உஷாராக இருக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. இதனால் தீபாவளி பண்டிகை இப்போதே களைகட்ட தொடங்கி விட்டது. தீபாவளி போனஸ் பணத்தில் பொதுமக்கள் புத்தாடைகளும், நகைகளும் வாங்கி குவித்தவண்ணம் உள்ளனர். இதனால் கடைகளில் தினமும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் கூட்டத்தில் புகுந்து பொருட்களையும், நகைகளையும் திருடும் தீபாவளி சீசன் திருடர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை நகருக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பஸ்களிலும், ரெயில்களிலும் பயணம் செய்யும் பொதுமக்களிடம் பணத்தை அபேஸ் செய்யும் `பிக்பாக்கெட்' கொள்ளையர்களும் அதிகளவில் நடமாடுகிறார்கள். இதனால் சென்னை நகரில் மக்களின் உடைமைகளை காப்பாற்றுவதற்காக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். தியாகராயநகர், புரசைவாக்கம், பூக்கடை, மைலாப்பூர், வண்ணாரப்பேட்டை போன்ற மக்கள் கூடும் இடங்களில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தியாகராயநகரை பொறுத்தமட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்புக்காக 600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கமாண்டோ படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 100 பெண் போலீசார் கூட்டத்தோடு கூட்டமாக மாறுவேடத்தில் சுற்றுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விசேஷ போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. 23 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 9 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
துணை கமிஷனர் சம்பத்குமார், உதவி கமிஷனர் கண்ணபிரான் ஆகியோர் தலைமையில் ரோந்து படை ஒன்றும் ரோந்து சுற்றி வருகிறது. தீபாவளி திருடர்களின் புகைப்படங்கள் சென்னை நகரில் முக்கியமான இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக டிஜிட்டல் பேனரில் வைக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு வாங்கும் நகை போன்ற பொருட்களை திருடர்களிடம் பறிகொடுத்துவிடாமல் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை தீபாவளி திருடர்கள் 15 பேரை போலீசார் வேட்டையாடி பிடித்துள்ளனர். அவர்களில் 4 பேர் பெண்கள் ஆவார்கள்.
பிக்பாக்கெட் கொள்ளையர்களில் அதிகளவில் பெண்களும் இடம் பெற்றுள்ளனர். சிலர் கைகுழந்தைகளோடு சுற்றுகிறார்கள். பஸ்சில் பயணம் செய்யும்போது கைக்குழந்தையோடு நிற்கும் பெண்களிடம் இரக்கம் காட்டாமல் உஷாராக இருப்பது நல்லது.
நன்றி
-தினதந்தி
வடிவேலுவின் பிக்பாக்கெட்
உயிரை பனையம் வைத்து ஒரு கிரிவலம் தமிழகத்தில்
0 comments
முசிறி வட்டம், தா.பேட்டை ஒன்றியம், அஞ்சலம் ஊராட்சி அருகே அமைந்துள்ள தலைமலை கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கிரிவலம் நடைபெற்றது.
இங்கு சஞ்சீவிராயர், பூதேவி, ஸ்ரீதேவி, ஸ்ரீ வெங்கடாசலபதி, கோதண்டராமன், அலமேலுமங்கை, கிருஷ்ணர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களின் சன்னிதிகள் அமைந்துள்ளன.
ராமனுக்கு, ராவணனுக்கும் இடையே நடைபெற்ற போரில் லட்சுமணன் மயக்கமடைந்த நிலையில், அவரைக் காபாற்ற அனுமன் சஞ்சவி மலையை பெயர்த்து எடுத்துச் சென்றபோது, அதிலிருந்து உதிர்ந்து விழுந்த மலையின் தலைமை பகுதி என்பதால் அது தலைமலை என்று அழைக்கப்படுகிறது.
தரை மட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக் கோயில் சன்னதியைச் சுற்றி 3 அங்குல விளிம்பில் 3 ஆயிரம் அடி பள்ளத்தின் அருகே எந்த பிடிமானமும் இன்றி பக்தர்கள் கிரிவலம் சுற்றி தங்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
மேலும், புரட்டாசி மாதத்தை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன.
கிரிவலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் கோயிலை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள நண்பர் "என்னார்" வலைக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
நன்றி
- தினகரன்
-24துனியா
ராக்கட் வேகத்தில் பறக்கும் சித்தர்
சக்கரை நோயாளிகளுக்கான யோகா பயிற்ச்சி- வீடியோ
6 comments
சக்கரை நோயாளிகளுக்கு தினமும் சக்கரையின் அளவைச் சரியாகப் பராமரிப்பது மிகக் கடினமாக இருக்கும். தொடர்ந்து அவர்கள மாத்திரை உட்கொள்வது ஊசிகளைப் போடுவது இதனால் கொஞ்சம் நாளாக ஆக ஆக சலிப்பை தறும் செயலாக அது அமையும்.
இதனால் அவர்கள் தங்களின் சக்கரை அளவுகளை சரியாகக் கவனிக்காமல் இருந்து விடுவார்கள். இதனால் தாழ்நிலை சக்கரை, உயர்நிலைச் சக்கரை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப் படுகின்றனர்.
எனவே மருந்துகள் மட்டும் இன்றி தினமும் எளிய உடல் பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.
பாபா ராம் தேவ்வின் முழுமையான சக்கரை நோயாளிகளுக்கான பயிற்ச்சி முறை
இலங்கைக்கு திமுக கூட்டணி எம்பிக்கள் பயணத்தின் கருத்து கணிப்பு !
0 comments
தட்ஸ்தமிழ் தினமும் சமுதாய நலனில் அக்கரை கொண்டு பல்வேறு வகையான கருத்து கணிப்பை நடத்துகிறது. அதுபோல் இன்று அவர்கள் நடத்திய திமுக கூட்டணி எம்பிக்கள் குழு இலங்கை பயணம் பற்றிய கருத்து கணிப்பின் விபரம்.
இதுவரை பதியப்பட்ட ஓட்டின் முடிவுகள்
நீங்கள் ஓட்டு போட இங்கே கிளிக் செய்யவும்
நன்றி
-தட்ஸ் தமிழ்
தமிழக அரசியல் கட்சிகளின் இலங்கை பயணத்தின் சில படங்கள்
0 commentsதமிழக அரசியல் கட்சிகளின் குழு ஐந்து நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமை யில் வந்துள்ள இக்குழுவில் எம்.பி.க் களான என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், கவிஞர் கனிமொழி, ஏ.கே.எஸ். விஜயன், ஜே.எம். ஆரூண், டி.கே.எஸ். இளங்கோவன், தொல். திருமாவளவன், கே.எஸ். அழகிரி, ஹெலன் டேவிட்சன் ஆகியோர் இடம் செய்துள்ளன.
நன்றி
-வீரகேசரி
அக்டோபர் 15 முதல் ஏ.டி.எம் சேவையில் புதிய மாற்றம்
0 comments
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் அல்லாத மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி இருந்தது.
இதனால் ஏற்பட்ட பிற வங்கிகளின் நிர்வாக சிக்கலால் ரிசர்வ் வங்கி வரும் அக்டோபர் 15ம் தேதி முதல் புதிய நடைமுறையை மற்றும் கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது.
இதன் மூலம் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் அல்லாத மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் ஒரு நாளில் ரூ 15000\- அதிகபட்சமாக எடுக்க அனுமதியும் அதுபோல் பிற வங்கி ஏ.டி.எம்யை மாதத்திற்கு ஐந்து முறை மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.
எனவே மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் முன் போல் பிற வங்கியின் சேவை தொகை வசூலிக்கும் நிலை உறுவாகி உள்ளது.
இது நம்ப சரக்கு
நடிகர் சங்க கண்டனக் கூட்டம்- ரஜினி பேச்சு - வீடியோ
0 comments
ரஜினி மற்றும் அனைவரின் உரையும் கேட்க இங்கே கிளிக் செய்யவும்
பொதுவா எனக்குக் கோபம் வந்தா அதிகம் பேசமாட்டேன். ரிலாக்ஸான மைன்ட்ல இருக்கும்போது நிறையப் பேசுவேன். இப்போ நான் ரொம்ப கோபமா இருக்கேன்.
அந்தப் பத்திரிகையில போட்டோவோட செய்தி பார்த்தப்போ எனக்கே மனசு சரியில்லை. ஒருவேளை ஏப்ரல் ஒண்ணா இருக்குமோன்னு நினைச்சேன். ஆனா தேதியைப் பார்த்தப்போதான் இது சீரியஸ் மேட்டர்னு புரிஞ்சது. ஒரு வேலையும் ஓடல. என்ன செய்யுறதுன்னே தெரியல.
பொதுவா விபச்சார வழக்குகளில் கைதாகும் பெண்களை பர்தா போட்டு மூடி போலீசார் அழைச்சிட்டுப் போறதை படம் பிடிச்சி போடறதை பார்க்கும்போதே மனசுக்கு கஷ்டமா இருக்கும். பத்திரிகைகள் தயவு செய்து இதைச் செய்யக்கூடாது என்று வருத்தத்துடன் பேசினார்.
வதந்தி எப்படி பரவுது பாருங்க !
நன்றி
-சிவாஜி டிவி
மெய் சிலிர்க்க வைத்த தாய் பாசம் - மருத்துவர்கள் வியப்பு !
2 comments
ஓடும் ரயிலில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. கழிப்பறை துவாரம் வழியாக தவறி கீழே விழுந்த அந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. குழந்தையை காப்பாற்ற ரயிலில் இருந்து குதித்த தாயும் தப்பினார்.
ஜார்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து பீகார் மாநிலம் சாப்ராவுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் போலோ நாத் என்பவர் மனைவி ரிங்குவுடன் பயணம் செய்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரிங்குவுக்கு நள்ளிரவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அந்த பெட்டியில் நிறைய ஆண்கள் இருந்ததால், கழிப்பறைக்கு ரிங்கு சென்றார். சிறிது நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தையின் முகத்தை ரிங்கு பார்ப்பதற்குள் கழிப்பறையில் இருந்த துவாரம் வழியாக அந்த குழந்தை தண்டவாளத்தின் நடுவே தவறி விழுந்துவிட்டது.
ரயிலில் இருந்து குழந்தை விழுந்துவிட்டதே என்று அலறியபடி கழிப்பறையைவிட்டு ரிங்கு வெளியே ஓடிவந்தார். வெளியே நின்றிருந்த போலோ நாத் அபாய சங்கிலியை பிடித்து இழுக்கச் சென்றார். அப்போது, குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஓடும் ரயிலில் இருந்து ரிங்கு குதித்துவிட்டார். இதற்கிடையே அபாய சங்கிலியை போலோநாத் இழுத்ததால் 2 கி.மீ. தூரம் சென்று ரயில் நின்றது. பயணிகள் இறங்கி ஓடிவந்து பார்த்தபோது, ரிங்குவும், குழந்தையும் காயத்துடன் கிடந்தனர். அவர்களை மீட்டு ரயிலுக்கு தூக்கி வந்தனர். மேற்குவங்க மாநிலம் புரூலியா ரயில் நிலையத்துக்கு ரயில் வந்ததும் அவர்களை தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரிங்குவுக்கும், குழந்தைக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த சிசுவும், குழந்தையை காப்பாற்ற பாய்ந்த தாயும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது உலக அதிசயங்களில் ஒன்று என்று டாக்டர்கள் கூறினர்.
நன்றி
-தினகரன்
சும்மா ஜாலிக்கு
பழங்களை விரும்பி சாப்பிடுபவரா? நீங்கள் இனி தேவை எச்சரிக்கை !
2 comments
சென்னை, செயற்கை முறையில் மாம்பழம், ஆப்பிள், வாழைப்பழங்களைப் ரசாயன முறையில் பழுக்க வைத்து சாப்பிடுவதில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தானாய் பழுக்க வேண்டியதை தடியால் அடித்துப் பழுக்கவைப்பது என்தெல்லாம் பழமொழி. கால்சயிம் கார்பைட் தான் புதுமொழி. கடைகளில் விற்கப்படும் மாம்பழங்கள் பெரும்பாலும் கார்பைட் கற்களால் பழுக்கவைக்கப்பட்டதாகத்தான் இருக்கும். வியாபாரக் காரணங்களுக்காக அவர அவசரமாகப் பறிக்கப்படும் மாங்காய்களை இயற்கை முறையில் பழுக்க வைக்க சுமார் ஆறு நாட்கள் தேவைப்படும். ஆனால், அதுரை வியாபாரிகளால் லாபம் சம்பாதிக்காமல் இருக்க முடியுமா? அதனால்தான் திருவாளர் கார்பைடின் கைங்கர்யத்தில் பழுக்க வைக்கிறார்கள். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களைச் சாப்பிடுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற கோளாறுகள்தான் ஏற்படும் என்று சொல்லி வந்தார்கள். ஆனால், கார்பைட் கற்களில் உள்ள ஆர்சனிக் ரசாயனம் புற்றுநோயை ஏற்படுத்தும் எனச் சமீபத்தில் கண்டறிந்துள்ளார்கள். ஒரு மாம்பழத்தைப் பார்த்தே அது இயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்டதா இல்லையா என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். இயற்கையான முறைகளில் பழுக்கவைக்கப்பட்டதெனில் பழும் முழுவதும் ஒரே நிறமாக இருக்கும். கார்பைட் பழுத்தின் நிறம் ஆங்காங்கே அதிகமாகவும் சில இடங்களில் கறைவாகவும் இருக்கும். தவிர பழம் சூடானதாகவும் தோலில் மெல்லிய சுருக்கங்களும் இருக்கும். சுவையான மாம்பழம் என்ற வாங்கி சொந்தத் செலவில் சூன்யம் வைத்துக்கொள்ள வேண்டாம். கவனித்து வாங்குங்கள், கழுவி உண்ணுங்கள்.
பழக்கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பளபளா ஆப்பிள்கள் நம் கண்ணைப் பறிக்கும். பறிக்கப்பட்ட ஆப்பிள்கள் கெட்டுப்போகாமல் இருக்க அதன் மீது மெழுகுப் பூச்சு செய்யப்பட்டு பதப்படுத்தப்படுவது வழக்கமானதுதான். அப்படிப் பூசப்படும் மெழுகு தேன் கூடுகளில் இருந்தோ அல்லது தாவர எண்ணெய்களில் இருந்தோ தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது அரசின் கட்டுப்பாடு. ஆனால், அந்தக் கட்டுப்பாடுகள் காற்றில பறக்க விடப்பட்டு பலகாலம் ஆகிவிட்டது. இப்போதைய பளபளாவுக்குக் காரணம் பெட்ரோலியப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் மெழுகு பூசப்படுவதே. இத்தகைய மெழுகுப்பூச்சுக்கள் ஜீரணக் கோளாறுகளில் துவங்கி பல்வேறு கேடுகளை ஏற்படுத்தும். ‘தினம் ஒரு ஆப்பில் சாப்பிட்டால் மருத்துவரே தேவை இல்லை‘ என்பார்கள். மோசமான மெழுகு பூசப்பட்ட ஆப்பிளைச் சாப்பிடுவதாலேயே, மருத்துவரைத் தேட வேண்டி வரலாம். கவனம்.
மாம்பழங்கள் தவிர்த்து வாழைப்பழங்களும் கூட அரசாங்க விதிமுறைகளை மீறி செயற்கை முறையில் பழுக்கவைக்கப்படுகின்றன. இவ்வகை வாழைப்பழங்களின் காம்பு பச்சையாகவும் பழம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
நன்றி
-சங்கம்
-விஜய் டி,வி
சென்னையில் பரபரப்பு நைஜீரிய நபரின் போலி பரிசு மோசடி உஷார்...
5 comments
சென்னை மாங்காடு காமாட்சி அம்மன் நகரைச் சேர்ந்த சாத்தையா வயது 55 என்பவர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் பரபரப்பு புகார் தெரிவித்தார்.
நான் குவைத்தில் வேலை பார்த்து லட்சக்கணக்கில் சம்பாதித்தேன். தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். எனது செல்போனுக்கு சிலமாதங்களுக்கு முன்பு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில், இங்கிலாந்து நாட்டின் “பி ஓல்டு நோக்கியா ட்ரஸ்ட்” நடத்திய பரிசு குலுக்கலில் உங்கள் செல்போன் நம்பருக்கு 5.5 பவுண்டு (ரூ.12 1/2 கோடி) பரிசு விழுந்துள்ளது. உங்களிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் என்று இ-மெயில் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.
சம்பந்தப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொண்டபோது பரிசு தொகையை பெற ரூ.50 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தவேண்டும் என்றனர். அதன்படியே அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் பணம் செலுத்தினேன். அதே போல பணத்தை கொண்டு வர சுங்கவரி செலுத்த வேண்டும், அனுமதி பெற வேண்டும் என்று ரூ.13 லட்சம் வரை வங்கி கணக்கில் கட்ட சொன்னார்கள். அவ்வளவு பணத்தையும் சிறிது சிறிதாக கட்டினேன். பரிசு பணம் வந்தபாடில்லை.
பரிசு தருவதாக சொன்ன நபரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினேன். அவர் பெயர் ஹாரீஸ் ஹாட். இங்கிலாந்தில் இருப்பதாகவும், எங்கள் நிறுவன ஊழியர் பணத்துடன் உங்கள் வீட்டிற்கு வருவார் எனக்கூறினார். அதன்படி வெளிநாட்டு வாலிபர் ஒருவர் வீட்டிற்கு வந்து பெரிய பார்சல் ஒன்றை தந்துவிட்டு சென்றார். அதை திறந்து பார்த்தால் உள்ளே ரூபாய் நோட்டு அளவில் கத்தரிக்கப்பட்ட கருப்பு நிற காகிதங்கள் இருந்தது. 40 கட்டுகளாக கட்டி வைத்திருந்தனர்.
சம்பந்தப்பட்ட செல்போனில் தொடர்பு கொண்டபோது அதில் புதுவிதமான ரசாயன திரவத்தை ஊற்றினால் அவை அனைத்தும் நல்ல ரூபாய் நோட்டாக மாறும். காகிததாளின் மதிப்பு ரூ.12 1/2 கோடியாகும். எனவே ரசாயன திரவம் வாங்கி அனுப்புவதற்கு ரூ,32 லட்சம் பணம் கட்டுங்கள் என்றார். சம்பந்தப்பட்ட நபர் என்னை மோசடி செய்ய எண்ணுகிறார். எனவே அவரிடம் இருந்து நான் கட்டிய ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்தை மீட்டுத்தர வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் புகாரில் கூறியிருந்தார்.
தனிப்படை போலீசார் செல்போன் மூலம் துப்பு துலக்கினர். சாத்தையாவுடன் செல்போனில் பேசிய நபர் சென்னை மாடம்பாக்கம் அடுத்த ராஜ கீழ்ப்பாக்கம் பகுதியில் இருந்து பேசி வருவதை கண்டுபிடித்தனர். அவர்களின் அங்க அடையாளத்தின்படி அங்குள்ள ஒரு பங்களா வீட்டில் தங்கியிருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த டேவிட் வில்சன் என்ற ஓரிபாஜி (வயது 30). என்ற வாலிபரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 1 1/2 லட்சம் அமெரிக்க டாலர், ரசாயன திரவப்பாட்டில்கள், கருப்பு காகித கட்டுக்கள், லேப்டாப் கம்ப்யூட்டர் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
வெளிநாட்டில் இருந்து தனது கூட்டாளி ஹாரீஸ் ஹாட் என்பவர் மூலமாக மோசடி தொழில் செய்து வருவதை ஒப்புக்கொண்டார். கூட்டாளியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய தனிப்படை போலீசாரை கமிஷனர் ஜாங்கிட் பாராட்டினார். செல்போன் மூலமாக யாராவது பரிசு விழுந்துள்ளது என ஆசைவார்த்தை கூறினால் உடனடியாக போலீசில் புகார் செய்யுங்கள். மக்கள் யாரும் இதுபோன்ற அறிவிப்புகளை நம்பி ஏமாறாதீர்கள் என புறநகர் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்
நன்றி
-மாலை மலர்
& Net photos
தமிழக போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு !!!
4 comments
இன்று தமிழக போக்குவரத்து துறை வெளியீட்ட செய்தி குறிப்பில் வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு R.T.O கூறப்பட்ட அளவுகளில் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை போக்குவரத்து துறை போலீசார் கெடு விதித்துள்ளனர்.
இன்று பலர் தங்கள் வாகன நம்பர் பிளேட்டுகளில் சாமி படங்கள், அரசியல் சின்னங்கள், வாசகங்கள் ஆகியனவற்றை முறையற்று செய்கின்றனர் எனவே இதுபோல் எந்த ஒரு சின்னங்களை பொறிக்கக் கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.
அரசு விதிமுறைக்கு உட்பட்ட வாகன நம்பர் பிளேட்டுகள் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு பைன் விதிக்கப்படும் என்றும் முறையான நம்பர் பிளேட்டு பொறுத்தப்பட்ட பிறகு தான் பயணத்தை தொடர அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேக்கடியில் நடந்த படகு விபத்தின் சோக வீடியோ
0 comments
நேற்று மாலை கேரள அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான ஜலகன்யகா என்ற இரண்டு அடுக்கு படகில் பயணித்த பயணிகள் நீர் குடிக்க வந்த யானைகளை காணும் ஆவலில் ஏற்பட்ட பதற்றத்தினால் ஒரே பகுதியில் குவிந்ததினால்இதனால் படகு நிலைகுலைந்து கவிழ்ந்த்து.
1.படகு வடிவமைப்பில் தவறை சுட்டிக்காட்டும் காட்சி
2.மக்களின் அதிர்ச்சியில் உடல்கள் மீட்கும் காட்சி
3. ஒரு தொலைகாச்சியின் நேரடி தொகுப்பாளரின் காட்சி
4.குடும்ப நபர்களை இழந்த ஒரு தமிழரின் துயரம் காட்சி