புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம்
கி.மு. 500-ம் நூற்றாண்டில் புத்தர் இறந்தவுடன் அவரது சீடர்கள் புத்தரின் உடலை எரித்துவிட்டார்கள். புத்தரின் பெண் சீடரான கீமா என்பவர் மட்டும், புத்தரின் நினைவாக ஒரே ஒரு பல்லை எடுத்துவைத்துக்கொண்டார். அந்தப் பல்லை அப்போதைய கலிங்கத்து மன்னன் (இப்போதைய ஒரிஸ்ஸா) பிரம்மதாத்திக்கு அன்புப் பரிசாகக் கொடுத்தார்.
'புத்தரின் பல் எந்த நாட்டில் இருக்கிறதோ, அங்கே மழை பெய்யும். செல்வம் கொழிக்கும். சுபிட்சம் வரும்' என்று சென்டிமென்ட்கள் பரவ ஆரம்பிக்கின்றன. வறட்சியில் வறளும் பல அரசர்கள், புத்தரின் பல்லைக் குறிவைக்கிறார்கள். கலிங்கத்தின் மேல் போர் தொடுக்கிறார்கள். அமைதி படிக்கச் சொன்ன புத்தனின் பல்லுக்காகப் பல்லாயிரம் உயிர்கள் மடிகின்றன. புத்தரின் பல் பல அரசுகளின் கைமாறிச் சென்றுகொண்டே இருக்கிறது.
புத்தர் இறந்து 800 ஆண்டுகள் கழித்து, மீண்டும் கலிங்க நாட்டுக்கு வருகிறது புத்தரின் பல். அப்போது கலிங்கத்தின் அரசனாக இருப்பவர் குஹசீவா. இந்தப் பல்லால் தன் நாட்டில் பல அதிசயங்கள் நிகழ்வதாக நம்புகிறார் குஹசீவா. தகவல் வெளியே பரவி, மீண்டும் பல்லுக்காகப் பல போர்கள் ஆரம்பிக்கின்றன. பல்லைக் காப்பாற்ற குஹசீவா, தன்னுடைய மகள், மருமகனிடம் பல்லைக் கொடுத்து இலங்கைக்கு அனுப்பிவைக்கிறார். இலங்கை ராஜா குஹசீவாவின் குடும்பத்தை ராஜ மரியாதையோடு வரவேற்று, பல்லை வாங்கிக்கொள்கிறார். இன்றும் புத்தரின் பல் இலங்கை கண்டியில் உள்ள புத்த மதக் கோயிலில் பத்திரமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
புத்தரின் பல்
இதுதான் புத்தரின் பல் வரலாறு. சரி, அதற்கு என்ன என்கிறீர்களா? 'இந்த பல் கதையைத்தான் மிஷ்கின் இயக்க, கமல் நடிக்க இருக்கிறார்' என கோடம்பாக்கம் முழுக்கக் கதைகள். கமல் இந்தக் கதையில் என்ன வேஷத்தில் நடிக்கப் போகிறார் என்பது சஸ்பென்ஸ்!
எதுவாக இருந்தாலும், 'புத்தம் சரணம் கச்சாமி!'
நன்றி
-Vikatan
joe
Headline
கமலின் அடுத்த படம் மர்மம் நிறைந்த "புத்தனின் பல்"
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
மேட்டர் நச்சின்னு இருக்கு தல..
படம் வருதோ இல்லையோ.. நீங்க சொன்ன கதை (விகடனா?) ரொம்ப சுவாரசியமா இருக்கு! :)
வாங்க வினோத்
இதுதான் பட்டாம் பூச்சியின் விளைவுன்னு (Butterfly Effect) சொல்லலாம் புத்தர் பற்றிய பதிவுக்கு புத்தரின் பெயரின் முதல் பாதியும் "கெளதம்" உங்கள் பெயரின் கடைசி "கெளதம்" பகுதியும் எப்படி ஒரு ஒற்றுமையை பாருங்க.
கருத்துக்கு நன்றி "கெளதம்"
:-)))))))))
"ஹாலிவுட் பாலா said...
படம் வருதோ இல்லையோ.. நீங்க சொன்ன கதை (விகடனா?) ரொம்ப சுவாரசியமா இருக்கு! :)"
வாங்க ஹாலிவுட் பாலா
சென்ற வாரம் ஆனந்த விகடனின் வந்த கட்டுரைதான் பாலா இது
http://www.vikatan.com/av/2009/oct/28102009/digi1av.asp
:-))))))))
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி!
நல்ல "பல்"சுவைக் கதையா இருக்கே !
-Toto
www.pixmonk.com
"Toto said...
நல்ல "பல்"சுவைக் கதையா இருக்கே
-Toto
www.pixmonk.com"
வாங்க Toto
தங்கள் வருகைக்கும் சூழ்நிலைக்கு தகுந்த சொல் வித்தைக்கு நன்றி !
லிங்கு கொடுத்தமைக்கு + நன்றி!
ஆக மொத்தத்துல ,அந்த பல் எங்க இருக்கோ அங்க வெறும் சண்டை சச்சரவு,போர் இப்படிதான் இருக்கு.
"சிவா said...
ஆக மொத்தத்துல ,அந்த பல் எங்க இருக்கோ அங்க வெறும் சண்டை சச்சரவு,போர் இப்படிதான் இருக்கு."
வாங்க சிவா
மனித மனத்தின் ஆசைகள் இருக்கும் வரை
அமைதி என்பது இருப்பது இல்லை - இதற்கு
புத்தன் பல் என்பது வேஷத்தின் வெளீப்பாடு!
Post a Comment