இதுவரை யூடிப்பில் 37 இலட்சம் மக்கள் பார்த்து சாதனையை படைத்து உள்ளது JK-ன் திருமண வீடியோ.
மேலும் இன்று வரை யூடிப்பில் தொடர்ந்து முதலிடம் மக்களால் வாக்கு அளித்து ஆதாரவு தந்துள்ளனர்.
நண்பரின் திருமணந்தில் அனைவருக்கும் ஒரு புதுமையை செய்ய நினைத்த மணமகளின் 11 நண்பர்கள் அவர்களின் மனைவி மற்றும் பெண் நண்பர்கள் இணைந்து மணமக்கள் மாதா கோயிலில் உள் நுழையும் போது நல்ல இசையுடன் பாடலுக்கு நடனம் ஆடியபடி பார்வையாளர்களுக்கு மகிழ்சியை தருகின்றனர்.
இவர்கள் திருமணத்தை சிலர் கலாய்த்து உருவாக்கிய காமடி புது வீடியோ
Headline
அதிக மக்கள் பார்த இவர்கள் திருமண - வீடியோ
0 commentsகலைஞருக்கு நோபல் பரிசு கிடைக்க தடையாக இருப்பது - துரைமுருகன்
0 comments
இன்று ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் அமைந்த சந்திரபுரத்தில் 1 கோடியே 98 லட்ச ரூபாய் செலவில் நூறு வீடுகள் கொண்ட சமத்துவப்புரத்தை தளபதி மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன் பின் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன்:
"ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூட தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு ஆலய பிரவேசம் செய்தார். இப்படி பல தலைவர்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும் என ஒவ்வொரு விதத்தில் போராடி விட்டு அவர்கள் தங்களது இடங்களுக்கே திரும்பி சென்று விட்டனர்.
ஆனால் தமிழக முதல்வர் கலைஞர் மட்டும்தான் இதிலிருந்து வித்தியாசமாக யோசித்து சமத்துவபரம் என்ற உன்னத திட்டத்தை கொண்டு வந்து எல்லா ஜாதி மக்களையும் ஒரே இடத்தில் குடியமர்த்தி ஜாதி ஒழிக்க பாடுபடுகிறார்.
இதற்காக தமிழக முதல்வர் கலைஞருக்கு நோபல் பரிசு தர வேண்டும். ஆனால் தரமாட்டார்கள். காரணம் இவர் தமிழன் என்பதால்தான். ஏன். இந்தியாவில் தரப்படும் சாகித்ய அகடாமி விருதுக்கு கூட தகுதியானவர். கலைஞர் எழுதாத இலக்கியங்களா, தம்பிக்கு எழுதும் கடிதங்கள் புகழ்ப் பெற்றவை. திரைப்படங்களுக்கு எழுதிய வசனங்கள், திரைக்கதைகள் அறியா புகழ்ப் பெற்றவை. இதுபோல் வேறு யார் எழுதியிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட தலைவருக்கு அவ்விருது கூட வழங்கப்படவில்லை. காரணம் இவர் தமிழன். அதனாலேயே புறக்கணிக்கப்படுகிறது என்றார்" என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
யானையின் ஆசிர்வாதம் சிரிப்பு
தமிழக போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு !!!
4 comments
இன்று தமிழக போக்குவரத்து துறை வெளியீட்ட செய்தி குறிப்பில் வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு R.T.O கூறப்பட்ட அளவுகளில் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை போக்குவரத்து துறை போலீசார் கெடு விதித்துள்ளனர்.
இன்று பலர் தங்கள் வாகன நம்பர் பிளேட்டுகளில் சாமி படங்கள், அரசியல் சின்னங்கள், வாசகங்கள் ஆகியனவற்றை முறையற்று செய்கின்றனர் எனவே இதுபோல் எந்த ஒரு சின்னங்களை பொறிக்கக் கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.
அரசு விதிமுறைக்கு உட்பட்ட வாகன நம்பர் பிளேட்டுகள் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு பைன் விதிக்கப்படும் என்றும் முறையான நம்பர் பிளேட்டு பொறுத்தப்பட்ட பிறகு தான் பயணத்தை தொடர அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருமகளை மாமியார் அடிப்பது தவறில்லை - நீதிபதி எஸ்.பி. சின்ஹா
2 comments
"மருமகளை மாமியார் காலால் உதைப்பது வன்கொடுமை ஆகாது" என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறி இருக்கிறது. "மாமியார் என்னை காலால் எட்டி உதைத்தார். தன் மகனிடம் கூறி என்னை விவாகரத்து செய்து விடுவதாக மிரட்டினார். கணவரும் நாத்தனார்களும் கொடுமைப்படுத்தினர். அவர்களை தண்டிக்க வேண்டும்" என்று கீழ் நீதிமன்றத்தில் மருமகள் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், மாமியாருக்கும் கணவருக்கும் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கணவர் மேல் முறையீடு செய்தார்.
அதை நீதிபதிகள் எஸ்.பி. சின்ஹா, சிரியாக் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வழங்கிய தீர்ப்பு
மருமகளை மாமியாரோ நாத்தனாரோ உதைப்பது, விவாகரத்து செய்து விடுவேன் என்று மிரட்டுவது, மனைவிக்கு எதிராக மகனிடம் குற்றம்சாட்டுவது, போன்ற செயல்களை வன்கொடுமையாக கருதி இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498-ஏ யின் கீழ் தண்டனை வழங்க முடியாது. அதே நேரம், திருமணத்தின் போது மணமக்களுக்கு பரிசாக அளிக்கப்பட்ட பொருட்களை மாமியார் எடுத்துக் கொண்டால் அது நம்பிக்கை மோசடியாக கருதப்பட்டு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 406 படி தண்டிக்கலாம்.
நன்றி
-பரந்தன்
சென்னையில் பரபரப்பு நூதன திருட்டு! உஷார்
12 comments
-net photo
இந்தியாவில் எங்குமே நடந்திராத இந்த துணிகர திருட்டு சென்னையில் நடந்துள்ளது.
ஏடிஎம் இயந்திரத்தையே சிலர் வேனில் போட்டு திருடிச் சென்று விட்டனர். அந்த இயந்திரத்தில் ரூ. 80,000 பணம் இருந்தது.
கீழ்ப்பாக்கம் கார்டன் ஆர்ம்ஸ் ரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது. இதற்கான ஏடிஎம் மையம் சற்று அருகில் உள்ளது.
வங்கிக்கும், ஏடிஎம் மையத்துக்கும் சேர்த்து ஒரே காவலாளிதான் பணியில் இருந்ததாகவும், ஏடிஎம் மையத்தில் காமிரா இயங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஏடிஎம் மையத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் வேனில் வந்து உள்ளனர். ஏடிஎம் மையத்துக்கு சென்ற அவர்கள் மையத்தில் பணம் நிரப்பவோ, பழுது பார்க்கவோ வந்தவர்களாக இருக்கலாம் என்று கருதியதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.
சிறிது நேரத்தில் இயந்திரத்தின் ஒவ்வொரு பாகத்தையும், அந்த நபர்கள் கழற்றி உள்ளனர்.
பின்னர் ஏடிஎம் பணப் பெட்டியை தாங்கள் வந்த வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தப்பினர். காலையில் பணம் எடுக்க வந்தவர்கள், ஏடிஎம் மையத்தில் இயந்திரம் இல்லாமல் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
வங்கிக் கிளையை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏடிஎம் இயந்திரம் திருடு போனது குறித்து வங்கியின் கிளை மேலாளர் ஸ்ரீதரன், கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
திருடப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.80 ஆயிரம் இருந்ததாக தெரிகிறது.
வழக்கமாக போலி கார்டுகளைப் போட்டு ஏடிஎம்மில்லிருந்து பணம் திருடுவார்கள். அதிகபட்சமாக வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
நன்றி
-தட்ஸ்தமிழ்
ரஜினியின் புது திட்டம்
3 comments
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில், ரஜினிகாந்துக்கு சொந்தமான பெரிய தோட்டம் உள்ளது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ரஜினி, இங்குதான் ஓய்வு எடுக்கிறார்.
எந்திரன் படத்தின் ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்து, கேளம்பாக்கம் பண்ணை வீட்டில், ரஜினி ஓய்வு எடுத்து வருகிறார். அப்போது, தோட்டத்தில் கொளுத்தும் வெயிலில் தொழிலாளர்கள் வேலை செய்வதைக் கண்டார்.
இதையடுத்து, பகல் நேரத்தில் தொழிலாளர்களுக்கு மோர் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தன் தொழிலாளர்களுடன் நின்றுவிடாமல், தோட்டத்தின் அருகில் உள்ள சாலையில் செல்லும் பொது மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று விரும்பிய ரஜினி, அதற்காக பெரிய பந்தல் அமைத்து கோடைகாலம் முடியும் வரை தினசரி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தோட்டத்துக்கு வெளியே நேற்று பந்தல் அமைக்கப்பட்டது. பெரிய அண்டாவில் மோர் வைக்கப்பட்டிருந்தது. கேளம்பாக்கத்தில் இருந்து இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களுக்கு மோர் வழங்கப்பட்டது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரஜினி, நேற்று காலை 10 மணிக்கு, அந்த வழியாக சென்ற பொது மக்களுக்கு தன் கையாலேயே மோர் வழங்கி மகிழந்துள்ளார். இதை கேள்விபட்டதும் அப்பகுதியில் மக்கள் கூட்டமாக திரண்டு வந்துவிட்டனராம்.
ஏற்கெனவே, ராகவேந்திரா கல்யாண மண்டபம் வளாகத்தையொட்டி பெரும் பந்தல் அமைத்து இலவச மோர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டும் கூட இதேபோல வழங்கப்பட்டது.
நன்றி
-தட்ஸ்தமிழ்
டிஸ்கி
ரஜினியின் புது திட்டத்தால் மக்கள் அடையும் பயனை தமிழகத்தின் அனைத்து பகுதியையும் சென்றுயடைய அவரது ரசிகர்கள் இது போன்ற மோர் பந்தல் அமைத்து மக்களுக்கு பயன் தரலாம்.
ரோம் போப்பின் கருத்துக்கு எதிர்ப்பு
2 comments
போப்பாண்டவர் பெனடிக்ட் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஆணுறை பயன்பாடு குறித்த விஞ்ஞானபூர்வ ஆதாரங்களைக் குலைப்பதாய் அமைந்துள்ளதாகவும் அவர் அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் உலகின் முன்னணி மருத்துவ சஞ்சிகை ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.
ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் பிரச்சினையை ஆணுறைகள்தான் அதிகமாக்குகின்றன என்று சென்ற வாரம் விமானத்தில் ஆப்பிரிக்கா சென்ற வேளையில், செய்தியாளர்களிடையில் பேசிய போப்பாண்டவர் கூறியிருந்ததை ஆத்திரம் வரவழைக்கும் விதமான மிகவும் தவறான கருத்து என்று லான்செட் சஞ்சிகையின் தலையங்கம் கண்டித்துள்ளது.
இது முன்னெப்போதுமில்லாத வகையில் மிகக் கடுமையான ஒரு தலையங்கம் என்று பிபிசியின் ரோம் நகர செய்தியாளர் கூறுகிறார்.
''பெரும் செல்வாக்குடைய ஒரு நபர், அறிவியல் ரீதியில் பிழையான ஒரு கருத்தை சொல்லும்போது ஏராளமானவர்கள் அதனால் பாதிப்படையக்கூடிய ஆபத்து இருக்கிறது. அவர்கள் தம்முடைய தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும்'' என்று லான்செட் தெரிவித்துள்ளது.
நன்றி
செய்தி.காம்
வீட்டு வாடகை செலுத்தாத ஐஏஎஸ் அதிகாரிகள்
2 comments
மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஐஏஎஸ் அதிகாரிகள், அதிகாரிகள், ஊழியர்களுக்கு தமிழக அரசு வாடகைக்கு வீடு ஒதுக்குகிறது.
இப்போது குடியிருப்பவர்கள் பலரும் சரியாக வாடகை செலுத்தாமல் உள்ளனர். அந்த வகையில் அரசுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வரவேண்டி உள்ளது.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரங்கமணி, ரூ.11.53 லட்சம் பாக்கி வைத்துள்ளார். அவர் ஓய்வூதியத்தில் இருந்து 43 தவணைகளில் வசூல் செய்ய அரசு உத்தரவிட்டும் ரூ.20,000 மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் பீலா ராஜேஷ் ரூ.7.78 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளார். இதில் சமீபத்தில் ரூ.52,000 வசூல் செய்யப்பட்டது.
பொதுத்துறை கூடுதல் செயலாளராக இருக்கும் வீரசண்முகமணியின் வாடகை பாக்கி ரூ.7.76 லட்சம். இதில் கடந்த டிசம்பர் மாதம் ரூ.13,000 வசூலிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை செயலாளர் பிரபாகர ராவின் வாடகை பாக்கி ரூ.11.16 லட்சம். இதில் கடந்த டிசம்பர் மாதம் ரூ.18,600 மட்டும் வசூலாகி உள்ளது.
மத்திய நிதித்துறை இணை செயலாளர் சக்திகாந்ததாஸ் வாடகை பாக்கி ரூ.7.90 லட்சம். இவரிடம் எதுவுமே வசூலிக்கப்படவில்லை.
இப்படி ஐஏஎஸ் அதிகாரிகளின் வாடகை பாக்கி ரூ.45.32 லட்சமாக உள்ளது. அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்களின் வாடகை பாக்கி ரூ.30.91 லட்சம். இதுபோல் தமிழகம் முழுவதும் அரசுக்கு வரவேண்டிய வாடகை ரூ.1 கோடியை தாண்டிவிட்டது. இதையடுத்து, வாடகை பாக்கி உள்ள அதிகாரிகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நன்றி
நக்கீரன்
கன்னியாஸ்திரிகள் உலகம்:அதிர்ச்சியூட்டும் புத்தகம்:கேரளாவில் பதட்டம்
10 comments
ஒட்டுமொத்த கேரள மக்களையும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்து சென்று இருக்கிறது ஒரு கன்னியாஸ்திரி எழுதிய புத்தகம். ஆமென் என்பதுதான் அப்புத்தகத்தின் பெயர்.
ஆமென்' புத்தகத்தை எழுதியவர் 53 வயதான ஜெஸ்மி. கேரளாவில் உள்ள காங்கரேசன் ஆப் மதர் ஆப் கார்மெல் என்கிற `சி.எம்.சி' என்று அனைவரும் அறிந்த கன்னியாஸ்திரி அமைப்பில் 33 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்தவர் ஜெஸ்மி.
திருச்சூரில் மிகப் பிரபலமான விமலா கல்லூரியின் முதல்வராக பணியாற்றியவர். மிகப் பெரிய கத்தோலிக்க சர்ச் சான சிரோ மலபார் சர்ச்சால் நடத்தப்படும் கல்லூரி இது.
தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கோழிக்கோட்டில் உள்ள ஒரு வாடகை வீடான `லில்லி' என்ற பிளாட்டில் தனி ஆளாக வசிக்கிறார் அவர்.
ஜெஸ்மி எழுதியுள்ள `ஆமென்' புத்தகத்தில் கன்னியாஸ்திரி மடங்களில் நடக்கும் பாலியல் கொடுமைகள், ஓரினச் சேர்க்கைகள், ஆணாதிக்க போக்கு என சகல விஷயங்களையும் அக்கு வேறு, ஆணி வேறாக போட்டு உடைத்திருக்கிறார்.
ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு எனப்படும் அந்தப் புத்தகத்தில் தான் இளம் கன்னியாஸ்திரியாக இருந்த போது பாதிரியார் ஒருவர் வலுக்கட்டாயமாக தன்னை கெடுத்தது பற்றியும் எழுதி இருக்கிறார். அந்த வயதில் நானும் அவருக்கு அடிமையாகி விட்டேன் என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
மூத்த கன்னியாஸ்திரிகள் தன்னை ஓரினச்சேர்க்கைக்கு அடிமைப்படுத்தியதையும் சொல்லியிருக்கிறார்.
அவர் கன்னியாஸ்திரி ஆக ஆசைப்பட்டது முதல் கடைசியில் ராஜினாமா செய்தது வரை தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒரு கதை போல் எழுதி இருக்கிறார்.
இன்னமும் திருச்சபை உறுப்பினராக இருக்கும் ஜெஸ்மி எழுதிய புத்தகத்தால் கேரளாவில் பல பாதிரியார்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கி உள்ளன
. கன்னியாஸ்திரி மடத்தில் இருந்து பலர் வீடு திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள்
நன்றி
நக்கீரன்
டீசல் விலை ரூ. 2 குறைகிறது
2 comments
டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் பெட்ரோல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் நவிலை 40 டாலர்களுக்கும் கீழே போய் விட்டது. இதனால் அதற்கேற்றவாறு இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு குறைத்து வருகிறது. சமீபத்தில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் லாரி அதிபர்களின் கோரிக்கையை ஏற்று டீசல் விலையை மேலும் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி லிட்டருக்கு 2 ரூபாய் வரை டீசல் விலையில் குறைப்பு செய்யப்படவுள்ளது.
இருப்பினும் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என மத்திய பெட்ரோலியத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று டீசல் விலைக் குறைப்பு குறித்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டீசல் விலை மேலும் குறைவதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி
- தட்ஸ்தமிழ்