Headline

கன்னியாஸ்திரிகள் உலகம்:அதிர்ச்சியூட்டும் புத்தகம்:கேரளாவில் பதட்டம்ஒட்டுமொத்த கேரள மக்களையும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்து சென்று இருக்கிறது ஒரு கன்னியாஸ்திரி எழுதிய புத்தகம். ஆமென் என்பதுதான் அப்புத்தகத்தின் பெயர்.ஆமென்' புத்தகத்தை எழுதியவர் 53 வயதான ஜெஸ்மி. கேரளாவில் உள்ள காங்கரேசன் ஆப் மதர் ஆப் கார்மெல் என்கிற `சி.எம்.சி' என்று அனைவரும் அறிந்த கன்னியாஸ்திரி அமைப்பில் 33 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்தவர் ஜெஸ்மி.திருச்சூரில் மிகப் பிரபலமான விமலா கல்லூரியின் முதல்வராக பணியாற்றியவர். மிகப் பெரிய கத்தோலிக்க சர்ச் சான சிரோ மலபார் சர்ச்சால் நடத்தப்படும் கல்லூரி இது.தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கோழிக்கோட்டில் உள்ள ஒரு வாடகை வீடான `லில்லி' என்ற பிளாட்டில் தனி ஆளாக வசிக்கிறார் அவர்.ஜெஸ்மி எழுதியுள்ள `ஆமென்' புத்தகத்தில் கன்னியாஸ்திரி மடங்களில் நடக்கும் பாலியல் கொடுமைகள், ஓரினச் சேர்க்கைகள், ஆணாதிக்க போக்கு என சகல விஷயங்களையும் அக்கு வேறு, ஆணி வேறாக போட்டு உடைத்திருக்கிறார்.ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு எனப்படும் அந்தப் புத்தகத்தில் தான் இளம் கன்னியாஸ்திரியாக இருந்த போது பாதிரியார் ஒருவர் வலுக்கட்டாயமாக தன்னை கெடுத்தது பற்றியும் எழுதி இருக்கிறார். அந்த வயதில் நானும் அவருக்கு அடிமையாகி விட்டேன் என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.மூத்த கன்னியாஸ்திரிகள் தன்னை ஓரினச்சேர்க்கைக்கு அடிமைப்படுத்தியதையும் சொல்லியிருக்கிறார்.அவர் கன்னியாஸ்திரி ஆக ஆசைப்பட்டது முதல் கடைசியில் ராஜினாமா செய்தது வரை தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒரு கதை போல் எழுதி இருக்கிறார்.இன்னமும் திருச்சபை உறுப்பினராக இருக்கும் ஜெஸ்மி எழுதிய புத்தகத்தால் கேரளாவில் பல பாதிரியார்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கி உள்ளன

. கன்னியாஸ்திரி மடத்தில் இருந்து பலர் வீடு திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள்

நன்றி
நக்கீரன்

10 comments:

Premanandhan said...

பிரமச்சாரியாக வாழ்வது கூட இந்த காலத்தில் மிகவும் கடினம் போலிருக்கிறது .

கஷ்டம் ,கஷ்டம் ....

♠புதுவை சிவா♠ said...

"பிரமச்சாரியாக வாழ்வது கூட இந்த காலத்தில் மிகவும் கடினம் போலிருக்கிறது .

கஷ்டம் ,கஷ்டம் .."

வாங்க பிரேம்
உண்மையான பத்தியை அனைத்து மதத்திலும் தவறாக எடுத்து கூறுவதிலால் ஏற்படும் பிழையே. அதன் சில நிகழ்வுகள் சமுதாயத்தில் வெளியே தெரியும் போது அதன் புனிதம் இழந்ததாக பேசுகிறோம்.
கட + உள் = கடவுள்
உன்னில் கடவுளை பார் இதுவே சித்தர் வழி.

குப்பன்_யாஹூ said...

நக்கீரனும் சரி, கேரளா மக்களும் சரி, இப்படிதான் இடை இடையே மதங்களை வைத்து பரபரப்பு ஏற்படுத்த முயல்வார்கள்.

இதற்கு முன்பு சபரிமலை பெண்கள் வருகை, பிரசாதத்தில் எலி, ஜெய மாலா என எழுதி பணம் பார்த்தனர்.

எதாவது ஒரு சர்ச்சில் நடந்து இருக்கும், உடனே உலகில் உள்ள எல்லா சர்சுக்களும் மோசம், அணைத்து மத தலைவர்களும் ஓரின சேர்க்கையாளர்கள் என்று முடிவுக்கு வர வேண்டாம்.

நக்கீரனுக்கு இந்த வார வியாபாரத்திற்கு இந்த செய்தி உத்வியது போல.

குப்பன்_யாஹூ

♠புதுவை சிவா♠ said...

"நக்கீரனும் சரி, கேரளா மக்களும் சரி, இப்படிதான் இடை இடையே மதங்களை வைத்து பரபரப்பு ஏற்படுத்த முயல்வார்கள்.

இதற்கு முன்பு சபரிமலை பெண்கள் வருகை, பிரசாதத்தில் எலி, ஜெய மாலா என எழுதி பணம் பார்த்தனர்.

எதாவது ஒரு சர்ச்சில் நடந்து இருக்கும், உடனே உலகில் உள்ள எல்லா சர்சுக்களும் மோசம், அணைத்து மத தலைவர்களும் ஓரின சேர்க்கையாளர்கள் என்று முடிவுக்கு வர வேண்டாம்.

நக்கீரனுக்கு இந்த வார வியாபாரத்திற்கு இந்த செய்தி உத்வியது போல."

வாங்க குப்பன்_யாஹூ

தங்கள் கருத்துக்கு நன்றி

thevanmayam said...

இது சரிதான்!!!
மனம் ஒருகுரங்கு!!!
உடல் அடங்காத குரங்கு!!!

♠புதுவை சிவா♠ said...

"இது சரிதான்!!!
மனம் ஒருகுரங்கு!!!
உடல் அடங்காத குரங்கு!!!"

:-))))))))))))

thz for your comment Thevanmyam.

Anonymous said...

தெய்வமகனுக்கு சமர்பணம்

Anonymous said...

சாமியாரை நம்பாதே!
உலகெங்கும் சுப்புணிகளும்,பிரமானந்தாக்களும்,எல்லா மதச் சாமியார்களும் செய்வதுதான்,

சில கதைகள் தான் வெளி வரும்.
பல அய்க்கியமாகி விடும்,பக்தியில்!

♠புதுவை சிவா♠ said...

"தெய்வமகனுக்கு சமர்பணம்"

"சாமியாரை நம்பாதே!
உலகெங்கும் சுப்புணிகளும்,பிரமானந்தாக்களும்,எல்லா மதச் சாமியார்களும் செய்வதுதான்,

சில கதைகள் தான் வெளி வரும்.
பல அய்க்கியமாகி விடும்,பக்தியில்!"


தங்கள் கருத்துக்கு நன்றி

erathinam said...

idhu pondra nigalvugal aangaangae nadandhukondudhan irukkiradhu.allavai theya aram perugum nallavai naadi iniya solin.nallavaigalai mattume vazhkkayin vazhiyaaga eduththukkondu idhu pondra seidhikalai puranthalluvom