Headline

ரஜினியை காங்கிரஸில் சேர்க்க முயற்சித்தோம்:ஈ.வி.கே.எஸ்.



காங்கிரஸ் கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிகவை சேர்க்க முயற்சி நடக்கிறதா? என்று கேட்டதற்கு, மத சார்பின்மையில் நம்பிக்கை உள்ள அனைத்து கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணிக்கு வரவேண்டும் என்று மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.



சத்தியமூர்த்தி பவனில் தமிழக மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்தை சந்தித்த பின் வெளியில் வந்த மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது அவர், ‘விடுதலைப்புலிகளையோ, விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கட்சிகளையோ காங்கிரஸ் ஆதரிக்காது. சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தோம்.



அதில் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது போதாது என்பது எங்கள் கருத்து. காங்கிரசை திருப்திப்படுத்தவே தன்னை கைது செய்திருப்பதாக வைகோ, யாரையோ திருப்திப்படுத்த கூறுகிறார் என்று தெரிவித்தார்.



அவரிடம், விஜயகாந்தை காங்கிரஸ் கூட்டணியில் சேர்க்க முயற்சி நடக்கிறதா? என்று கேட்டதற்கு, ’முன்பு கூட ரஜினிகாந்தை காங்கிரசுக்கு ஆதரவாக சேர்க்க வேண்டும் என்று எதிர்பார்த்தோம். அது நடக்காமல் போய்விட்டது.



மத சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் காங்கிரஸ் கூட்டணிக்கு வரவேண்டும். ஆனாலும் கூட்டணியில் இருக்கும் யாரையெல்லாம் நீக்குவது, யாரையெல்லாம் புதிதாக சேர்ப்பது என்பதை காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு செய்யும்’ என்று தெரிவித்தார்.

நன்றி
நக்கீரன்

2 comments:

கார்க்கிபவா said...

ம்ம்.. போயும் போயும் காங்கிரசா?

puduvaisiva said...

"ம்ம்.. போயும் போயும் காங்கிரசா?"



வாங்க கார்க்கி
நெனப்பு பொழப்பை கெடுக்கும்
செல்லுவாங்க.
அது இதுதான் போல.

;-))))))))