Headline

டீசல் விலை ரூ. 2 குறைகிறது



டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் பெட்ரோல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் நவிலை 40 டாலர்களுக்கும் கீழே போய் விட்டது. இதனால் அதற்கேற்றவாறு இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு குறைத்து வருகிறது. சமீபத்தில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் லாரி அதிபர்களின் கோரிக்கையை ஏற்று டீசல் விலையை மேலும் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி லிட்டருக்கு 2 ரூபாய் வரை டீசல் விலையில் குறைப்பு செய்யப்படவுள்ளது.

இருப்பினும் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என மத்திய பெட்ரோலியத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று டீசல் விலைக் குறைப்பு குறித்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் விலை மேலும் குறைவதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி
- தட்ஸ்தமிழ்

2 comments:

சிவாஜி த பாஸ் said...

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்,
அதுக்கு கீழே உள்ள குண்டு பொண்ணு படம், நல்லாத்தான் இருக்கு!

puduvaisiva said...

''மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்,
அதுக்கு கீழே உள்ள குண்டு பொண்ணு படம், நல்லாத்தான் இருக்கு''


நன்றி சிவாஜி த பாஸ்
ஆனா குண்டு பொண்ணு நம்ப நமீதா.

;-))))))))))))))