தமிழீழ மக்கள் படும் இன்னல்களை மக்களுக்கு விளக்கவும், இலங்கை அரசுக்கு துணை போகும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் ”தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்” நேற்று தொடங்கியது.
தஞ்சை சாந்தி கமலா திரையருங்கு அருகில் நடந்த தொடக்க விழாவில், இயக்குனர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, எழுத்தாளர் தூரன் நம்பி, தஞ்சை வழக்கறிஞர் சங்க செயலாளர் வழக்கறிஞர் நல்லதுரை, இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி, பயணத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ம.செந்தமிழன் ஆகியோர் பங்கேற்றனர்.
பி்ன்னர் ''காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்” கையெழுத்து இயக்கத்திற்கு முதல் கையெழுத்தை இயக்குனர் மணிவண்ணன் போட பின்னர் பலரும் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர்.
இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை நோக்கி ஒரு அணியும், வேதாரண்யம் நோக்கி ஒரு அணியும் கிளம்பிச் சென்றன. வழிநெடுகிலும் பல்வேறு கிராம மக்களிடம் பரப்புரையின் நோக்கம் குறித்தும் இலங்கை தமிழர்களின் இன்னல்கள் குறித்தும் குழுவினர் விளக்கி வருகின்றனர்.
மேலும் ”காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்” கையெழுத்து இயக்கப் படிவத்திலும் மக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.
வட தமிழ்நாடு நோக்கி செல்லும் அணிக்கு ம.செந்தமிழனும், தென் தமிழ்நாடு நோக்கி செல்லும் அணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சேசுபாலன்ராஜாவும் வழிநடத்திச் செல்கின்றனர். இந்தப் பயணக் குழுவினர் மார்ச் 6ம் தேதி சேலத்தில் நடக்கும் ”இன எழுச்சி மாநாட்டில்” சந்திக்கின்றனர்.
நன்றி
- தட்ஸ்தமிழ்
Headline
இயக்குனர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணியின் புரட்சி
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
மிக அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.
Post a Comment