Headline

அவுட்ஸோர்ஸிங்-நிறுவனங்களுக்கு ஒபாமா 'வேட்டு'!



வெளிநாடுகளுக்கு வேலை ஒப்பந்தங்களை அளிக்கும் (அவுட்ஸோர்ஸிங்) அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகை கிடையாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

இதில் பெரிதும் பாதிக்கப்படும நாடு இந்தியாவாகவே இருக்கும்.

அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவி ஏற்ற பிறகு அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைகளின் கூட்டுக் கூட்டம் நடந்தது. இதில் அவர் முதல் முறையாக உரை நிகழ்த்தினார் ஒபாமா.

அவர் கூறியதாவது:

ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், சரிந்து கிடக்கும் பொருளாதாரத்தை நாம் மீண்டும் புதுப்பிப்போம். சரிவில் இருந்து மீள்வோம். முன்பை விட வலுவானதாக அமெரிக்க பொருளாதாரம் உயிர்த்து எழும்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் மின்சார உற்பத்தி, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நிதி நெருக்கடியில் சிக்கிய வங்கிகளை மீட்பதற்கு பெரும் அளவில் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் நிதி உதவி தேவைப்படுவது உண்மையே. இந்த நிதி உதவியை அரசு வழங்குவதற்கு சில எதிர்ப்புகள் இருந்தன. ஆனால் அப்படியே விட்டுவிட்டால், இது ஒவ்வொரு அமெரிக்கனையும் நேரடியாக பாதிக்கும்.

அடுத்த 2 ஆண்டுகளில் 40 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும். இந்த வேலைகளில் 90 சதவீதம் தனியார் துறையிலேயே உருவாக்கப்படும். சாலைகள் போடுதல், பாலங்கள் கட்டுதல், காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்தல் போன்ற வேலைகளில் தனியார் துறை ஈடுபடும்.

அவுட்ஸோர்ஸிங்குக்கு ஆபத்து!:

வெளிநாடுகளுக்கு வேலை ஒப்பந்தங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை தருவதில்லை என்ற புதிய முடிவை அரசு எடுத்துள்ளது.

ஒபாமாவின் இந்த அறிவிப்பு, இந்திய பி.பி.ஓ நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரம் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வேலைகளை வெளிநாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்துள்ளன.

இந்த அறிவிப்பால், இந்தியாவில் பிபிஓ தொழிலை மட்டுமே நம்பி தொடங்கப்பட்ட பல நிறுவனங்கள் பெரும் சிக்கலுக்கு ஆளாகும்.

இந்த நிறுவனங்களில் பல லட்சம் பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர்.

நன்றி
- தட்ஸ்தமிழ்

0 comments: