-net photo
இந்தியாவில் எங்குமே நடந்திராத இந்த துணிகர திருட்டு சென்னையில் நடந்துள்ளது.
ஏடிஎம் இயந்திரத்தையே சிலர் வேனில் போட்டு திருடிச் சென்று விட்டனர். அந்த இயந்திரத்தில் ரூ. 80,000 பணம் இருந்தது.
கீழ்ப்பாக்கம் கார்டன் ஆர்ம்ஸ் ரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது. இதற்கான ஏடிஎம் மையம் சற்று அருகில் உள்ளது.
வங்கிக்கும், ஏடிஎம் மையத்துக்கும் சேர்த்து ஒரே காவலாளிதான் பணியில் இருந்ததாகவும், ஏடிஎம் மையத்தில் காமிரா இயங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஏடிஎம் மையத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் வேனில் வந்து உள்ளனர். ஏடிஎம் மையத்துக்கு சென்ற அவர்கள் மையத்தில் பணம் நிரப்பவோ, பழுது பார்க்கவோ வந்தவர்களாக இருக்கலாம் என்று கருதியதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.
சிறிது நேரத்தில் இயந்திரத்தின் ஒவ்வொரு பாகத்தையும், அந்த நபர்கள் கழற்றி உள்ளனர்.
பின்னர் ஏடிஎம் பணப் பெட்டியை தாங்கள் வந்த வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தப்பினர். காலையில் பணம் எடுக்க வந்தவர்கள், ஏடிஎம் மையத்தில் இயந்திரம் இல்லாமல் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
வங்கிக் கிளையை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏடிஎம் இயந்திரம் திருடு போனது குறித்து வங்கியின் கிளை மேலாளர் ஸ்ரீதரன், கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
திருடப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.80 ஆயிரம் இருந்ததாக தெரிகிறது.
வழக்கமாக போலி கார்டுகளைப் போட்டு ஏடிஎம்மில்லிருந்து பணம் திருடுவார்கள். அதிகபட்சமாக வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
நன்றி
-தட்ஸ்தமிழ்
Headline
சென்னையில் பரபரப்பு நூதன திருட்டு! உஷார்
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
அடப்பாவிகளா! மிச்சமான ஆளாய் இருக்கறானுக
இவர்களோட நேரம் சரி இல்லை போல இருக்கு..அவ்வளோ கஷ்டப்பட்டும் 80,000 தான் கிடைத்ததா.. :-))))
ஆரம்பிச்சுட்டாங்களா...
திருட்டு பயங்கரமா இருக்கே..
"அடப்பாவிகளா! மிச்சமான ஆளாய் இருக்கறானுக
இவர்களோட நேரம் சரி இல்லை போல இருக்கு..அவ்வளோ கஷ்டப்பட்டும் 80,000 தான் கிடைத்ததா.. :-))))"
வாங்க கிரி
சிறு தொழில் செய்ய வங்கியில் லோன் கேட்டு இருப்பாங்க அதற்கு வங்கி தந்து இருக்காது. இந்த திருட்டையே சிறு தொழிலா தொடங்கிட்டாங்களோ என்னமோ.
:-)))))))))))))))
"ஆரம்பிச்சுட்டாங்களா...
திருட்டு பயங்கரமா இருக்கே.."
வாங்க இராகவன் நைஜிரியா
இன்ன இராகவன் சார் நைஜிரியாவில் திருட்டுகள் எல்லாம் மிக சாதாரனம் நடங்கும் சொல்லராங்க எப்படி சார் பாதுகாப்பா இருக்கிறீர்கள்?
இங்க இப்ப தான் ஆட்டம் தொடங்கி இருக்காங்க எப்படியும் நம்ப போலீஸ் கிட்ட மாட்டிக்குவாங்க.
இதைப்போல சவுதி அரேபியாவில் ரியாதிலுள்ள பதியா என்னும் இடத்தில் ஒருமுறை நடந்தது.
"Selvaraj said...
இதைப்போல சவுதி அரேபியாவில் ரியாதிலுள்ள பதியா என்னும் இடத்தில் ஒருமுறை நடந்தது."
வாங்க செல்வராஜ் சார்
ஆங்கில படம் தமிழ டப் பன்னாது தப்ப போச்சு அதலாம் பாத்துட்டு
பய புள்ளைகள் இதுமாதிரியல்லாம் நடக்குதுங்க.
:-)))))
வழக்கமாக போலி கார்டுகளைப் போட்டு ஏடிஎம்மில்லிருந்து பணம் திருடுவார்கள். அதிகபட்சமாக வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
செம தில்லு தலை...
அதிர்ச்சியாக இருந்தது. என்ன தைரியம்
மாட்டிக்கொள்வோம் என்ற பயம் துளிகூட இல்லாமல்..
//இவங்க பேசாம அரசியலுக்குப் போனால், 80 கோடியை இலகுவாகச் சுருட்டலாம்.//
மெசினையே கழட்டி வண்டியில் ஏற்றும் போது ,பழுது பார்க்கிறார்கள்
என நினைத்த மக்கள்.
ஆச்சரியமானவர்களே!
"jackiesekar
வழக்கமாக போலி கார்டுகளைப் போட்டு ஏடிஎம்மில்லிருந்து பணம் திருடுவார்கள். அதிகபட்சமாக வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
செம தில்லு தலை..."
வாங்க ஜாக்கி
வாழ்கையில முன்னேரனுமுனா ரிஸ்க எடுக்கனும் என்பதை இந்த கூட்டம் தப்பா அர்தம் எடுத்துகிட்டு இருக்கு.
:-)))))))))))))))
"அறிவே தெய்வம்
அதிர்ச்சியாக இருந்தது. என்ன தைரியம்
மாட்டிக்கொள்வோம் என்ற பயம் துளிகூட இல்லாமல்.."
வாங்க அறிவே தெய்வம்
இப்ப ஜெயில எல்லா வசதியும் இருக்கு வாரம் 2 முறை கோழி கறி போடராங்க. இவங்கள பொருத்த வரைக்கும் இதலாம் ரொம்ப சாதரணம். எப்படியும் ஏதோ ஒரு கட்சிகாரன் இவங்க வெளியே வர உதவுவான் அதனால இவனுங்களுக்கு ஜெயிலுலாம் கெஸ்ட் அவுஸ் மாதிரி.
"யோகன் பாரிஸ்(Johan-Paris)
//இவங்க பேசாம அரசியலுக்குப் போனால், 80 கோடியை இலகுவாகச் சுருட்டலாம்.//
மெசினையே கழட்டி வண்டியில் ஏற்றும் போது ,பழுது பார்க்கிறார்கள்
என நினைத்த மக்கள்.
ஆச்சரியமானவர்களே!"
வாங்க யோகன் பாரிஸ்(Johan-Paris)
தமிழ்நாட்டில் பெருபால நேரம் டிவி சீரியல் , சினிமா,கிரிகட் பார்கவே நேரம் போதல இதல எப்ப பொது பிரச்சனைக்கு குரல் கொடுக்க முடியும்.
80 கோடியல்லாம் 1 மாச சுருட்டல் சார் இங்க.
:-))))))))))))))))))
Post a Comment