முல்லைத்தீவு பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை முதல் அகோர தாக்குதலை தொடங்கி தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 988-க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,215-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்டு வரும் பாரிய படை நடவடிக்கையின் போது பெரும் மனிதப் பேரவலம் நிகழ்ந்துள்ளது. இதில் 988-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,215-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை பகுதியை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை தன்னிடம் உள்ள அனைத்து நாசகார ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பாரிய படை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
அதேவேளையில் மக்கள் மீதும் மக்கள் வாழ்விடங்கள் மீதும் ஆட்லெறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி, கனரக துப்பாக்கி, தொலைதூர துப்பாக்கி மற்றும் வான் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் அகோரமாக நடத்தியுள்ளனர்.
இத் தாக்குதல்களில் 988-க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,215-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஏலவே பொக்கணைப் பகுதிக்குச் சென்ற மக்களை கேடயமாக பாவித்துக்கொண்டு பாரிய நடவடிக்கையினை சிறிலங்கா படையினர் மேற்கொண்டதுடன், அதற்கு ஒத்துழைக்காத மக்கள் மீதும் சரமாரியான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகவும் இதிலும் பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் இழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.
நன்றி
தமிழ்வின்
Headline
இன்று நாசகார ஆயுதங்களின் தாக்குதல் பலி 1000 மேல்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment