கூகிள் தினம் தினம் பல புதிய சேவைகளையும் மாற்றங்களையும் வழங்கிவருகிறது. அவற்றில் கூகிள் வழங்கும் இந்த மாயக்கண்ணாடி சேவையை (Google Goggles) பெற நம்மிடம் அண்ட்ராய்டு தொழில்நுட்பம் கொண்ட கைபேசி, (ஐபோன்) இதனுடன் இனைந்து செயல்படும் வகையில் கூகிள் மாயக்கண்ணாடி மென்பொருளை வழங்கியுள்ளது.
இந்த சேவையின் மூலம் நாம் பார்க்கும்,படிக்கும், தகவல்களை கைபேசியின் மூலம் புகைப்படமாக எடுத்து அவற்றை கூகிளின் தொழில்நுட்பம் உதவியுடன் அனைத்து விவரங்களையும் பெறமுடியும்.
மேலும் தகவலுக்கு
Headline
கூகிள் வழங்கும் புதிய சேவை மாயக்கண்ணாடி
2 commentsஎஸ்.ராமகிருஷ்ணன் பாராட்டு விழாவில் ரஜினி பேச்சு - வீடியோ
0 commentsபுதிய முப்பரிமாண (3D) வசதியுடன் ஃபயர் பாக்ஸ் 10வது பதிப்பு
1 comments
நமக்கு தேவையான தகவல்களை தேடி கொடுக்கும் நெருப்பு நரி (ஃபயர் பாக்ஸ்) இப்பொழுது பல அதிநவீன தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு வசதியுடன் தனது புதிய பதிப்பை (version10) உருவாக்கியுள்ளது.
மேலும் அதன் விளக்கம் பெற மற்றும்
புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு
மத்திய அமைச்சர் ராசா ராஜினாமா???
0 comments
மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ராசா வகித்த பதவியை திமுக அமைச்சர்களுக்கு
கொடுக்கக்கூடாது:ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
மேலும் விரிவான செய்திக்கு நக்கீரன்
நன்றி நக்கீரன்
பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது ஏன்? டி.ராஜேந்தரின் பரபரப்பு பேச்சு - வீடியோ
6 commentsடி.ராஜேந்தர் மன வேதனையுடன் மைய, மாநில அரசுகளின் நிலையை கண்டித்து உணர்ச்சி மிக்க பேச்சு
1.டி.ராஜேந்தர் வீடியோவை கான தயவு செய்து இங்கு கிளிக் செய்யவும்
2.விமான நிலையத்தில் நடந்த வைகோ vs போலீஸ் - வீடியோ
நன்றி
-ஈழம்வெப்
-குறள்டிவி
Breaking News ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய முடிவா??? - வீடியா
4 comments
"நக்சலைட்டுகள் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குறைபாடு எனது அலுவலகத்துக்கு உண்டு என்று கூறுவதில் எனக்கு தயக்கம் இல்லை. தண்டேவாடா தாக்குதலுக்கு முழுப் பொறுப்பையும் நான் ஏற்கிறேன்"
நான் டெல்லி திரும்பிய உடன் பிரதமரைச் சந்தித்து கடிதத்தை அவரிடம் அளித்தேன் மற்றும் தண்டேவாடா நிகழ்வுக்கு முழுப் பொறுப்பையும் நான் ஏற்பதாக ஒப்புக்கொண்டுள்ளேன் என்ற தகவலைதெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய ப.சிதம்பரம் முன் வந்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானை நோக்கி நகர தொடங்கிய சுனாமி - வீடியோ
2 comments
சுனாமி தற்பொது ஜப்பானை தாக்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன
ஆனால் எழும் அனைகளின் உயரம் குறைந்த அளவாக உள்ளது இதனால் தற்பொழுது எவ்வித சேதத்தையும் அவைகள் ஏற்படுத்த வில்லை ஆனால் சுனாமி உயரமான அனைகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் அரசு துறைகள் அனைத்தும் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் இடுபட்டுள்ளன.
தடை இல்லா சான்றிதழ்க்கு வழங்க ரூ 2 கோடி லஞ்சமா ???
2 comments
போஸ்ட் ஆபீஸ் கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.2 கோடி லஞ்சம் கேட்டு அதில் பெரும் பகுதியை பெற்றபோது, மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மஞ்சித் சிங் பாலியை சி.பி.ஐ. அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.
மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக இருந்து வந்தவர் மஞ்சித் சிங் பாலி. தானே மாவட்டம் மிரா பயண்டர் என்ற இடத்தில் தனியார் பில்டிங் கான்டிராக்டர் ஒருவர் தனக்கு சொந்தமான 21,600 சதுர அடி (9 கிரவுண்ட்) நிலத்தில் 5,400 சதுர அடி நிலத்தை போஸ்ட் ஆபீஸ் கட்டுவதற்கு தர ஒப்புக் கொண்டார். தனியாரிடம் இருந்து தபால் துறைக்கு நிலம் வாங்கினால், அந்த நிலத்துக்கு தபால் துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.
மகாராஷ்டிரா தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் என்ற முறையில் மஞ்சித் சிங் பாலிதான் தடையில்லா சான்றிதழ் தர வேண்டும்.
இந்நிலையில், மிரா பயண்டர் பகுதியின் முன்னாள் கவுன்சிலரான ரீட்டா ஷா என்பவர் மஞ்சித் சிங் பாலியை கடந்த மாதம் சந்தித்து தடையில்லா சான்றிதழை விரைவில் வழங்க வேண்டும் என்று கோரினார்.
இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, தனியார் ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வரும் அருண் டால்மியா, அவரது மகன் ஹர்ஷ் டால்மியா ஆகியோர் ரீட்டா ஷாவை தொடர்பு கொண்டு போஸ்ட் ஆபீஸ் நிலத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தெற்கு மும்பையில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு வரும்படி கேட்டுக் கொண்டனர்.
ரீட்டா ஷா அங்கு சென்றபோது, தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.1.5 கோடி மஞ்சித் சிங் பாலிக்கும் ரூ.50 லட்சம் தங்களுக்கும் ஆக மொத்தம் ரூ.2 கோடி லஞ்சமாக கொடுக்குமாறு ஹர்ஷ் மற்றும் அருண் டால்மியா கோரினர். தங்களை மஞ்சித் சிங் பாலிதான் இது தொடர்பாக பேசுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.
சி.பி.ஐ. வலைவிரிப்பு:
இதைத் தொடர்ந்து சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்பு பிரிவிடம் ரீட்டா ஷா புகார் செய்தார். மஞ்சித் சிங் பாலியை பிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் வலை விரித்தனர். அதன்படி, ஹர்ஷ் மற்றும் அருணிடம் ரீட்டா ஷா நேற்று முன்தினம் லஞ்சமாக ரூ.2 கோடி கொடுத்தார்.
அதை எடுத்துக் கொண்டு தெற்கு மும்பையில் கொலாபாவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இருவரும் சென்றனர். அங்கு மஞ்சித் சிங்கிடம் ரூ.1.5 கோடியை கொடுத்தனர். அப்போது, மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் மஞ்சித் சிங் பாலியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இடைத்தரகர்களாக செயல்பட்ட ஹர்ஷ் டால்மியா, அருண் டால்மியா ஆகியோரும் கைதாயினர்.
மும்பை, டெல்லியில் சோதனை:
இதைத் தொடர் ந்து மும்பை, பரிதாபாத், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள மஞ்சித் சிங்கின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
1. மும்பை வீட்டில் இருந்து ரூ.34 லட்சம்
2. 10,722 அமெரிக்க டாலர்கள்
3. 3,050 இங்கிலாந்து பவுன்ட்ஸ்
4. 3,470 யூரோ
தொகையை கைப்பற்றினர். வெளிநாட்டு பணம் பெருமளவில் கைப்பற்றப்பட்டுள்ளதால் இது குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மஞ்சித் சிங் பாலி, இந்திய அஞ்சல் பணியின் 1978ம் ஆண்டு பிரிவு அதிகாரியாவார். அஞ்சல் துறையின் 10 மூத்த அதிகாரிகளுள் ஒருவர்.
கடந்த 60 ஆண்டுகளில் ரூ.2 கோடி அளவுக்கு பெரும் தொகையை லஞ்சமாக வாங்கியதற்காக உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி
-தினகரன்
mumbaimirror.com
தீவு ஹைட்டி- ல் இன்று மிக பெரிய நிலநடுக்கம் - வீடியோ
0 comments
கரீபியன் தீவு நாடுகளின் ஒன்றான ஹைட்டியில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.0 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஹைட்டி நாட்டை இந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக தெரிவித்த அமெரிக்க அதிகாரிகள், இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் சாலைகளில் அநாதையாக கிடப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் விரிவான தகவலுக்கு நக்கீரன்
நன்றி
- நக்கீரன்
இனி ரேஷன் கார்டுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
2 comments
புதிய ரேஷன் கார்டுகளுக்கு இனி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்துகிறது தமிழக அரசின் உணவுத்துறை.
தமிழகம் முழுக்க போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசு பல லட்சம் கார்டுகளைப் பிடித்தது. இவற்றில் சந்தேகத்துக்கிடமான கார்டுகளின் எண்களை இணையதளத்தின் மூலம் சரிபார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
போலி ரேஷன் கார்டு நீக்கும் பணி மற்றும் கார்டுகளுக்கு கால நீட்டிப்பு வழங்கும் பணி நடந்து வந்ததால், புதிய கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இன்னும் பல லட்சம் மக்கள் ரேஷன் கார்டு பெறாமல் உள்ளதால் அவர்களுக்கு புதிய கார்டுகள் வழங்கும் பணியை மீண்டும் துவங்குமாறு அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.
இதைத் தொடர்ந்து புதிய கார்டுகள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
புதிய ரேஷன் கார்டுகளுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இணைய தளத்தில் விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களைப் பிரிண்ட் அவுட் எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.
இதுவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி இல்லாமல் இருந்தது. புது கார்டுகள் கேட்டு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், இனி ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தமிழக அரசின் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இனி ரேஷன் கடைகளில் காய்கறி வாங்கலாம்
மேலும் செய்திக்கு தட்ஸ்தமிழ்
நன்றி
-தட்ஸ்தமிழ்
கவுண்டர் கலக்கல் காமடி
இந்திய குடிவரவுத் துறையால் சிவாஜிலிங்கம் நாடு கடத்தப்பட்டார்
0 comments
தமிழகத்தின் தஞ்சையில் நேற்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி சென்ற இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் இந்திய குடிவரவுத் துறையால் அனுமதி மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கம் நேற்று அதிகாலை 3.00 மணிக்கு விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார். ஆனால் அவரை விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதி மறுத்த குடிவரவுத் துறை அதிகாரிகள், அவரை தடுத்து வைத்தனர்.
சிறிது நேரத்தில் திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டனர். அங்கிருந்து சிவாஜிலிங்கம் கொழும்பு வர வேண்டும். ஆனால் நேற்று இரவுவரை இவர் கொழும்பு வந்து சேரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
என்ன காரணத்திற்காக சிவாஜிலிங்கத்தை நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தனர் என்று குடி யேற்றத்துறை அவருக்குத் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் சரத் பொன்சேகாவிற்கும், மகிந்த ராஜபக்சவிற்கும் கடும் போட்டி நிலவும் நிலையில், வெற்றி பெறுவதற்கு தமிழர்களின் வாக்குத் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் தனி வேட்பாளராக சிவாஜிலிங்கம் களமிறங்கியிருப்பது தேர்தலில் அளிக்கப்படும் தமிழர்களின் வாக்குகளை அவர் பெறும் வாய்ப்புள்ளதால் தங்கள் வெற்றி பாதிக்கப்படும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
நன்றி
- வீரகேசரி
சன் டிவி புதிய தொடருக்கு புதுமுக நடிகர் - நடிகை தேவை !
4 comments
சக வலை பதிவரும் பன்முக வித்தகருமான திரு க. தங்கமணி பிரபு
அவர்களின் நேற்று வெளியீட்ட பதிவின் மறு பதிப்பு.
பிரியமுள்ள நண்பர்களே,
சன் டிவிக்காக எனது நண்பர் சிவா இயக்கும் தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு இம்மாத மத்தியில் தொடங்கவுள்ளது.
மேற்படி தொடரில் நானும் ஒரு பங்காற்றுகிறேன்.
இந்த தொடரில், இயக்குனர் சிவா புதுமுக நடிகர் நடிகையரை அறிமுகப்படுத்தவுள்ளார். நடிகர் நடிகையர் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன.
ஆர்வமுள்ள சென்னை மற்றும் அதன் சுற்றுப்புரத்தில் உள்ளவர்கள் அல்லது சென்னைக்கு இதன் பொருட்டு இடம் மாற முடிந்தவர்கள் மின்னஞ்சல் மூலம் இயக்குநரை தொடர்பு கொள்ளவும்.
உங்களால் இயலுமானால், இணையம் மற்றும் வலைப்பூக்கள் தொடர்பில்லாத உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை தெரிவியுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: dir1siva@yahoo.co.in
இம்முயற்சியில் ஈடுபடும் தோழர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி
- க. தங்கமணி பிரபு
குறும்பட போட்டி பரிசு ரூ 10,000 /-
0 comments
தென் திசை திரைப்பட இயக்கத்தின் முதலாம் ஆண்டு விழாவினை முன்னிட்டும், தென் திசை குறும்பட திருவிழா நடத்தவிருக்கிறது. இதற்கான குறும்படங்கள் கீழ்காணும் விதிமுறைக்குட்பட்டு வரவேற்கப்படுகிறது.
பரிசுகள்:
மொத்தப் பரிசுத் தொகை: 10,000
நிபந்தனைகள்:
* குறும்படங்கள் எந்த உள்ளடக்கத்திலும் அடங்கியிருக்கலாம்.
* குறும்படங்கள் 30 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.
* படங்கள் 1.1.2008 ஆண்டுக்கு பிறகு எடுக்கப்பட்டவனாக இருக்க வேண்டும்.
* தேர்வு செய்யப்படாத படங்கள் திருப்பி அனுப்ப இயலாது.
* போட்டி முடிவு தொடர்பாக நடுவர் குழு தீர்ப்பே இறுதியானது.
* போட்டியின் முடிவுகள் டிசம்பர் 18.19 அன்று நடைபெறும் குறும்பட திருவிழாவில் அறிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும். தேர்வு பெற்ற குறும்படங்கள் திரையிடப்படும்.
* படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 12.12.2009
* நுழைவுக் கட்டணம் ரூபாய். 200/- பணவிடையாக (M.O) கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
* மேலே கண்ட விதிகளை ஏற்றுக் கொண்டு படத்தின் உரிமையாளர், படம் குறித்த விபரம், ஏற்கனவே பரிசு பெற்றிருந்தால் அது பற்றிய விபரம், மற்றும் இயக்குனரின் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
க. வீரமணி (தேவிமகன்)
1/192, மீனாட்சி நகர்,
செவ்ராஷ்டிரா காலனி
சக்கிமங்கலம் (அஞ்சல்)
மதுரை - 625 020.
அலைப்பேசி: தேவிமகன் - 9952266992
சுரேன் - 9843061319
(நிபந்தனைகள் குறித்தோ, போட்டிக் குறித்தோ ஏதோனும் ஐயங்கள் இருப்பின் போட்டியை நடத்தும் அமைப்பினரை தொடர்பு கொள்ளவும். போட்டி தொடர்பாக தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.)
நன்றி
-சங்கமம் லைவ் செய்திகள்
கவுண்டர் சிரிப்பு
கலைஞர் கருணாநிதியை கண்டித்து கண்டனச் சுவரொட்டிகள்
0 comments
விடுதலைப் புலிகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படவில்லை. அதனால்தான் இன்று நாடு நாடாக இலங்கைத் தமிழர்கள் அலையும் நிலை ஏற்பட்டு விட்டது என்று முதல்வர் கருணாநிதி, யாருக்குத் தெரியும் இந்த மெளன வலி என்ற தலைப்பில் முரசொலியில் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தமிழின உணர்வாளர்கள் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், ஈழ விடுதலைப் போரை கொச்சைப்படுத்தும் கலைஞரே, உங்கள் அறிக்கை மெளனத்தின் வலியா, துரோகத்தின் மொழியா என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழின உணர்வாளர்கள், மதுரை என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டரில் பெரியார் படமும் இடம் பெற்றுள்ளது.
இந்தப் போஸ்டர்களை பெரியார் தி.க. அல்லது நாம் தமிழர் அமைப்பினர் ஒட்டியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த போஸ்டர்களை போலீஸார் உடனடியாக அகற்றி விட்டனர்.
நன்றி
- தட்ஸ்தமிழ்
கைய புடிச்சி இழுத்தியா
சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் முக்கிய அறிவிப்பு !
0 comments
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2008-ம் ஆண்டு தங்கள் பதிவை புதுப்பிக்கத் தவறிய சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிறப்பு சலுகையை அரசு அறிவித்துள்ளது.
ஜனவரி மாதம் 2008 முதல் டிசம்பர் மாதம் 2008 வரை புதுப்பிக்கத் தவறிய சென்னை மாவட்ட பதிவுதாரர்கள் இப்போது புதுப்பித்துக் கொள்ளலாம்.
புதுப்பித்துக் கொள்ள விரும்புபவர்கள், தாங்கள் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சென்று புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இதற்கான கடைசி தேதி நவம்பர் 23 ஆகும். கடைசி தேதிக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் திரு
த. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை வேலைவாய்ப்பு அலுவலக தொடர்புக்கு
அயல்நாட்டு வேலைவாய்ப்புகளை பற்றி தெரிந்து கொள்ள
(a+b)2 சிரிப்பு
பறவைகள் விரும்பும் நவீன செல் போன் டவர்கள்
0 comments''ஈழம்: மௌனத்தின் வலி'' - புத்தகம் வெளியீட்டின் - புகைப்படம்
0 comments
''ஈழம்: மௌனத்தின் வலி'' என்ற புத்தகம், சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில் உள்ள டான் போஸ்கோ அரங்கில் சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்
நன்றி
- சிவாஜி டிவி
அர்ச்சகரின் காம லீலை சிடியால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு !
0 comments
காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்தவர் தேவநாதன்.
6 பெண்களுடன் கோவில் கருவறையில் இவர் காமலீலைகளை அரங்கேற்றியது தெரியவந்தபோது பெரும் அதிர்ச்சி பரவியது.
தேவநாதன் தனது செல்போன் மூலம் படமும் பிடித்துள்ளார். செல்போன் பழுதானபோது அதை வெளியில் ரிப்பேர் செய்யக் கொடுத்தபோது அந்தக் கடைக்காரர் இந்தக் காட்சிகளைப் பார்த்து விட்டு பதிவு செய்து வெளியே விட்டு விட்டார். இதன் மூலமே தேவநாதனின் அசிங்கம் அம்பலத்திற்கு வந்தது.
தற்போது தேவநாதனின் அசிங்கம் அடங்கிய காட்சிகள் சிடிக்களாக போட்டு படு சூடாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த சிடிக்கள் படு வேகமாக விற்பனையாகிறதாம். ஒரு சிடிக்கு ரூ. 100 விலை வைத்து விற்று வருகின்றனர்.
மேலும் முழு செய்தியை படிக்க
நன்றி
- தட்ஸ்தமிழ்
தமிழக அரசியல் கட்சிகளின் இலங்கை பயணத்தின் சில படங்கள்
0 commentsதமிழக அரசியல் கட்சிகளின் குழு ஐந்து நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமை யில் வந்துள்ள இக்குழுவில் எம்.பி.க் களான என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், கவிஞர் கனிமொழி, ஏ.கே.எஸ். விஜயன், ஜே.எம். ஆரூண், டி.கே.எஸ். இளங்கோவன், தொல். திருமாவளவன், கே.எஸ். அழகிரி, ஹெலன் டேவிட்சன் ஆகியோர் இடம் செய்துள்ளன.
நன்றி
-வீரகேசரி