Headline

தடை இல்லா சான்றிதழ்க்கு வழங்க ரூ 2 கோடி லஞ்சமா ???



போஸ்ட் ஆபீஸ் கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.2 கோடி லஞ்சம் கேட்டு அதில் பெரும் பகுதியை பெற்றபோது, மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மஞ்சித் சிங் பாலியை சி.பி.ஐ. அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.

மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக இருந்து வந்தவர் மஞ்சித் சிங் பாலி. தானே மாவட்டம் மிரா பயண்டர் என்ற இடத்தில் தனியார் பில்டிங் கான்டிராக்டர் ஒருவர் தனக்கு சொந்தமான 21,600 சதுர அடி (9 கிரவுண்ட்) நிலத்தில் 5,400 சதுர அடி நிலத்தை போஸ்ட் ஆபீஸ் கட்டுவதற்கு தர ஒப்புக் கொண்டார். தனியாரிடம் இருந்து தபால் துறைக்கு நிலம் வாங்கினால், அந்த நிலத்துக்கு தபால் துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

மகாராஷ்டிரா தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் என்ற முறையில் மஞ்சித் சிங் பாலிதான் தடையில்லா சான்றிதழ் தர வேண்டும்.

இந்நிலையில், மிரா பயண்டர் பகுதியின் முன்னாள் கவுன்சிலரான ரீட்டா ஷா என்பவர் மஞ்சித் சிங் பாலியை கடந்த மாதம் சந்தித்து தடையில்லா சான்றிதழை விரைவில் வழங்க வேண்டும் என்று கோரினார்.

இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, தனியார் ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வரும் அருண் டால்மியா, அவரது மகன் ஹர்ஷ் டால்மியா ஆகியோர் ரீட்டா ஷாவை தொடர்பு கொண்டு போஸ்ட் ஆபீஸ் நிலத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தெற்கு மும்பையில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு வரும்படி கேட்டுக் கொண்டனர்.

ரீட்டா ஷா அங்கு சென்றபோது, தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.1.5 கோடி மஞ்சித் சிங் பாலிக்கும் ரூ.50 லட்சம் தங்களுக்கும் ஆக மொத்தம் ரூ.2 கோடி லஞ்சமாக கொடுக்குமாறு ஹர்ஷ் மற்றும் அருண் டால்மியா கோரினர். தங்களை மஞ்சித் சிங் பாலிதான் இது தொடர்பாக பேசுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.

சி.பி.ஐ. வலைவிரிப்பு:

இதைத் தொடர்ந்து சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்பு பிரிவிடம் ரீட்டா ஷா புகார் செய்தார். மஞ்சித் சிங் பாலியை பிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் வலை விரித்தனர். அதன்படி, ஹர்ஷ் மற்றும் அருணிடம் ரீட்டா ஷா நேற்று முன்தினம் லஞ்சமாக ரூ.2 கோடி கொடுத்தார்.

அதை எடுத்துக் கொண்டு தெற்கு மும்பையில் கொலாபாவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இருவரும் சென்றனர். அங்கு மஞ்சித் சிங்கிடம் ரூ.1.5 கோடியை கொடுத்தனர். அப்போது, மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் மஞ்சித் சிங் பாலியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இடைத்தரகர்களாக செயல்பட்ட ஹர்ஷ் டால்மியா, அருண் டால்மியா ஆகியோரும் கைதாயினர்.

மும்பை, டெல்லியில் சோதனை:

இதைத் தொடர் ந்து மும்பை, பரிதாபாத், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள மஞ்சித் சிங்கின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

1. மும்பை வீட்டில் இருந்து ரூ.34 லட்சம்
2. 10,722 அமெரிக்க டாலர்கள்
3. 3,050 இங்கிலாந்து பவுன்ட்ஸ்
4. 3,470 யூரோ

தொகையை கைப்பற்றினர். வெளிநாட்டு பணம் பெருமளவில் கைப்பற்றப்பட்டுள்ளதால் இது குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மஞ்சித் சிங் பாலி, இந்திய அஞ்சல் பணியின் 1978ம் ஆண்டு பிரிவு அதிகாரியாவார். அஞ்சல் துறையின் 10 மூத்த அதிகாரிகளுள் ஒருவர்.

கடந்த 60 ஆண்டுகளில் ரூ.2 கோடி அளவுக்கு பெரும் தொகையை லஞ்சமாக வாங்கியதற்காக உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி
-தினகரன்
mumbaimirror.com

2 comments:

தமிழ் உதயம் said...

ரீட்டா ஷாவின் துணிச்சலை பாராட்டுவோம்

puduvaisiva said...

"தமிழ் உதயம் said...
ரீட்டா ஷாவின் துணிச்சலை பாராட்டுவோம்"

நிச்சயம் இந்த துணிவான நடவடிக்கைக்கு அவருக்கு மணமார்ந்த பாராட்டுகள்.

தங்கள் வருகைக்கு நன்றி தமிழ் உதயம்.