Headline

சக்கரை நோயாளிகளே உஷார் ஒரு ஷாக் ரிப்போட்


நூற்றுக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் தற்போது “அவந்தியா” என்ற மாத்திரையை சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் அந்த மாத்திரை தேவையில்லாத வகையில் இருதய நோய்களையும், மாரடைப்பையும் ஏற்ப படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

எனவே, அந்த மாத்திரையை விற்பனை செய்ய தடை விதித்து அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள் ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அவந்தியா மாத்திரைக்கு பதிலாக “ஆக்டாஸ்” என்ற மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் மாரடைப்பை ஏற்படுத்தக்கூடியது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த மாத்திரை சாப்பிட்டவர்களில் மாதந்தோறும் 500 பேர் மாரடைப்பு மற்றும் இருதய பாதிப்பினால் பாதிக்கப்படுவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அவந்தியா மாத்திரை விற்பனையாளர்கள் இதை மறுத்துள்ளனர். இந்த மாத்திரைகள் மாரடைப்பை ஏற்படுத்தும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மத்திய அரசு இதை விசாரனை செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளது.

நன்றி
- சங்கம்லைவ்
* photo from net.

0 comments: