Headline

Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

என்.டி.டி.வி வழங்கும் ஈழத்தமிழரின் - Blood on Water - வீடியோ

6 comments


“Blood on Water” எனும் தலைப்பில் வட இந்திய தொலைக்காட்சியான என்.டி.டி.வி ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டார்கள்.

அதில் இறுதி யுத்தத்திற்கு பின் தமிழர்களின் நிலையும் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் மேற்க் கொள்ளும் தக்குதலை முதல் முறையாக பதிவு செய்து உள்ளனர்.




இந்த ஆவணப்படத்தில் உண்மைக்குப் புறம்பான பல தகவல்கள் என்.டி.டி.வி வெளியிடப்பட்டுள்ளது என்று அதை வாபஸ் பெறுமாறு இந்தியாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் பிரசாத் காரியவசம் இந்திய தொலைக்காட்சி சேவைக்கு எழுத்து மூலம் வேண்டுகேள் விடுத்துள்ளார்.


சரத் பொன்சேகா கைது - வீடியோ

0 comments


இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரச்பொன்,
இலங்கை அதிபர் சேகாராஜபக்சேவை கொல்ல முயன்றதாக
குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



நாளை தமிழர்களுக்கு பாரிய ஆச்சரியம் ஒன்று ஏற்படும்

0 comments


கொல்லப்பட்டதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை உலகமே எதிர்பார்த்திருப்பதாக இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நாளை தமிழர்களுக்கு பாரிய ஆச்சரியம் ஒன்று ஏற்படும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கே பத்மநாதனுக்கு ஆதரவான குழுவுக்கும், எதிரான குழுவுக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருடம் இந்த நாளை யுத்தத்தில் பலியான தலைவர்களை நினைவு கூரும் வகையில் விமரிசையாக அனுஷ்ட்டிக்க ஏற்கனவே கே. பத்மநாதனுக்கும், மற்றுமொரு தலைவரான நெடியவனுக்கும் இடையில் நோர்வேயில் இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், கே. பத்மநாதன் கைது செய்யப்பட்ட ஒருசில தினங்களில் கே. பி. க்கு எதிரான குழுவின் தலைவர் நெடியவன் தலைமறைவானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நாளை மறுநாள் விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் அனுஷ்ட்டிக்கப்படுகின்ற போதும், அவர்களின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதில் குழப்பத்துடன் உள்ளது.

இதற்கு காரணம் கே. பத்மநாதன், பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த போதும், நெடியவன் இதனை மறுதலித்து அவ்வாறான அறிவிப்பை வெளியிடுவதை தவிர்த்தார்.
இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டால் இயக்கத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் துச்சமாக்கப்படும் என்ற அடிப்படையிலேயே அது தவிர்க்கப்பட்டது.

இதன் காரணமாக பிரபாகரனின் பிறந்தநாள் வரையில் அதனை இரகசியமாக பேணி, நாளை அதனை வெளியிட நெடியவனும் அவரது குழுவினரும் திட்டமிட்டனர்.
இதன் பின்னர் புலிகளின் அடுத்த காய் நகர்த்தலை மேற்கொள்ள அவர்கள் தீர்மானித்திருந்தனர்.

அவர்கள் அனைவரும் பிரபாகரன் நாளை தமது முகத்தை காட்டுவார் எனவும், நாளை மறுநாள் மாவீரர் தின உரையை நிகழ்த்துவார் எனவும் நம்புகின்றனர்.

இதே நம்பிக்கையை தமிழகத்தின் அரசியல் தலைவர்களான நெடுமாறன் மற்றும் வைகோ ஆகியோர் கொண்டுள்ளமையும் இதற்கான காரணமாக கொள்ளலாம்.

தமிழீழத் தலைவர் நாளை மறுநாள் அதாவது 27ம் திகதி எங்கிருந்தேனும் தமது மாவீரர் நாள் உரையை நிகழ்த்துவார் என நெடுமாறன் நம்பிக்கை வெளியிட்டார்.
அது தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், தற்போது தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை தெளிவாக விளங்குகிறது.

அதற்கு காரணம் பிரபாகரன் இருக்கும் போது, ஒருவாரத்துக்கு முன்னதாக மாவீரர் தின ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். இந்த நிலையில் இந்தவருடம் விடுதலைப்புலிகளுக்கு சார்பான இணையத்தளங்கள் மாவீரர் வாரம் தொடர்பான எந்த அறிவித்தலையும் விடுக்கவில்லை.

எனவே புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது சந்தேகத்திற்கு இடமானதாக இருந்தாலும் ஒரு சில நம்பிக்கைகைகள் நிலவத்தான் செய்கின்றன.

இந்த நிலையில் உலகமே எதிர்பார்த்துள்ள நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களில் யாரை யார் ஆச்சரரியப்படுத்துவர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


நன்றி
- kavishan.blogspot.com


நாளை பிரபாகரன் பிறந்த நாள்: பெரும் ஆச்சரியம் நிகழும்
- நக்கீரன்


ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் புதிய கண்டு பிடிப்பு !

0 comments


இலங்கையில் உள்ள முகாம்கள், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களைவிட அனைத்து வசதிகளுடன் சிறப்பாக உள்ளன. இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட இந்திய அரசின் முயற்சிகளினால்தான், இவை அனைத்தும் அரங்கேறியுள்ளன.

மேலும் முழு செய்தியை படிக்க

தமிழகத்தில் உள்ள முகாம்களை விட இலங்கையில் உள்ள அகதி முகாம்கள் சிறப்பாக உள்ளன: EVKS இளங்கோவன்


நன்றி
- நக்கீரன்

வண்டு முருகன் சிரிப்பு


தமிழக அரசியல் கட்சிகளின் இலங்கை பயணத்தின் சில படங்கள்

0 comments

தமிழக அரசியல் கட்சிகளின் குழு ஐந்து நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமை யில் வந்துள்ள இக்குழுவில் எம்.பி.க் களான என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், கவிஞர் கனிமொழி, ஏ.கே.எஸ். விஜயன், ஜே.எம். ஆரூண், டி.கே.எஸ். இளங்கோவன், தொல். திருமாவளவன், கே.எஸ். அழகிரி, ஹெலன் டேவிட்சன் ஆகியோர் இடம் செய்துள்ளன.





நன்றி
-வீரகேசரி


கொலைக் குழுக்களே படுகொலைக்கும் காணமல்போதல்களுக்கும் காரணம்

0 comments


என்னதான் மறுக்கின்றபோதும் சிறிலங்காப் படையினரும் அரசைச் சேர்ந்தவர்களும் முழுத் தமிழர்களையும் எதிரிகளாகவே பார்க்கின்றனர் என்று சரத் குமார என்கிற சிங்கள ஊடகவியலாளர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
உலக பொதுவுடமைவாதிகள் இணையத்தளத்தில் இலங்கையின் இன்றைய கள நிலவரம் குறித்து எழுதியுள்ள கட்டுரையின் விபரம் வருமாறு:

உள்நாட்டில் கடும் எதிர்ப்பு - குறிப்பாக தமிழர்களிடம் இருந்து எதிர்ப்புத் - தெரிவிக்கப்படுகின்றபோதும் இறுதிக்கட்டப் போரின்போது சிறைப்பிடிக்கப்பட்ட 3 லட்சம் தமிழ் மக்களையும் அரசு தொடர்ந்து முகாம்களில் தடுத்து வைத்திருக்கப்போகிறது.

அந்த மக்களை விடுவிக்குமாறு அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் முன்வைத்த கோரிக்கையை, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச புறந்தள்ளி விட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஜூலை மாதம் 17 ஆம் நாள் அறிக்கைப்படி, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் அரச படையினரின் பாதுகாப்பில் உள்ள 30 முகாம்களில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 621 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வவுனியாவுக்கு அருகில் உள்ள மெனிக் பாம் முகாமில் உள்ளனர்.

முகாம்களில் உள்ள தமிழ்மக்களை 3 வருடங்களுக்குத் தடுத்து வைக்க அரச படையினர் திட்டமிட்டிருந்தது. இருந்தாலும், அனைத்துலக விமர்சனங்களையடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் இந்த வருட இறுதிக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார்.

இப்போது அந்த வாக்குறுதி மெல்லச் சரிகிறது. மீள்குடியமர்வைத் தாமதப்படுத்துவதற்கு புதிய காரணங்களை அரசு கண்டுபிடிக்கிறது. கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டி உள்ளன என்றும் கடைசி விடுதலைப் புலிச் சந்தேகநபர் கூட முகாம்களில் இருந்து அகற்றப்பட வேண்டியவராக உள்ளார் என்றும் அது கூறுகிறது.

ஜூலை மாதம் 30 ஆம் நாள் கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய, தடுப்பு முகாம்களின் புதிய பொறுப்பதிகாரியான மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க, முகாம்களில் இன்னும் பல ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் உள்ளனர் என்றார்.

முகாம்களில் படையினர் சல்லடை போட்டு நடத்திவரும் சோதனைகள் முடிவடையும்போது, புலிகளின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 796 இல் இருந்து 20 ஆயிரம் வரைக்கும் உயரும் என்றும் அவர் கூறினார்.

புலிகளின் புதுப்பிக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அச்சத்தை அதிகரிப்பதற்காக, தற்கொலைப் படையினராகப் பயிற்சி அளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களும் முகாம்களில் இருக்கின்றனர் என்று ரட்னாயக்க தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளரும் அரச தலைவரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச கடந்த வார இறுதியில் 'சண்டே ஐலண்ட்' வார ஏட்டுக்கு வழங்கிய நேர்காணலில் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்.

நன்கு பயிற்சி பெற்ற புலி உறுப்பினர்களை முகாம்களில் இருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் அந்த நேர்காணலில் கூறினார். அத்துடன், இந்த நடவடிக்கை விடுதலைப் புலிகள் தமது இயக்கத்தை மீளக்கட்டியெழுப்ப எடுக்கும் முயற்சியின் ஒரு பகுதி என எந்தவிதமான சான்று ஆதாரங்களையும் வழங்காமலேயே அவர் மேலும் குறிப்பிட்டார்.

முகாம்களில் இருக்கும் விடுதலைப் புலிகளை அடையாளம் காண்பதற்கு முன்பாகவே அவர்களை விடுவிக்க வேண்டும் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.

கோத்தபாயவின் இந்தக் கருத்தானது, அரசின் ஜனநாயக விரோதச் செயல்களை எதிர்க்கும் எவரையும் "விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கிறார்கள்" என்று முத்திரை குத்தும் நோக்கத்தைக் கொண்டது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் முன்னர் இருந்த பகுதிகளில் அரச படையினர் தமது ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்தும் வரையில் தமிழ் மக்களை முகாம்களில் வைத்திருப்பதே அரசின் உண்மையான நோக்கம் தவிர அவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக அல்ல என்பதை கோத்தபாயவின் கருத்து வலியுறுத்துகின்றது.

என்னதான் அவர்கள் மறுக்கின்றபோதும் படையினரும் அரசைச் சேர்ந்தவர்களும் முழுத் தமிழர்களையும் எதிரிகளாகவே பார்க்கின்றனர்.

விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழ் மக்களைத் தாம் விடுவித்துவிட்டதாகக் கூறும் அரசின் கருத்தை கேலிக்கு உள்ளாக்குகிறது, தமிழ் மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் செயல். இந்த முகாம்களுக்குள் அரச படையினர் துன்புறுத்தல் மற்றும் மிரடல் உள்ளிட்ட தமது கொடுங்கோல் ஆட்சியை நிலைநாட்டியுள்ளனர்.

முகாம்களில் இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதுடன், அவர்களின் உறவினர்களுக்குக்கூட தகவல் சொல்லப்படாமல் எங்கோ இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.

விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களோ சட்டப்பூர்வமான பிரதிநிதித்துவமோ இன்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

கோத்தபாயவின் நேர்காணலில், கடந்த இரு மாதங்களில் முகாம்களைவிட்டு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தப்பிச் சென்றுவிட்டனர் என்று தெரிவித்திருப்பதுதான் மிகக் கொடுமையானது. தடுப்பு முகாம்கள் முட்கம்பிகளால் சுற்றி அடைக்கப்பட்டுள்ளதுடன் படையினரின் கடுமையான காவலும் இருக்கிறது.

மக்கள் 'தப்பிச் சென்றார்கள்' என்பதைவிட அவர்களில் பெரும்பாலனவர்கள் 'காணாமல்' போகச் செய்யப்பட்டார்கள் என்பது போன்றே தெரிகிறது. கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக, படையினரின் ஆசீர்வாதத்துடன் இயங்கும் அரச ஆதரவு கொலைக் குழுக்களே ஆயிரக்கணக்கான படுகொலைகளுக்கும் காணமல்போதல்களுக்கும் காரணம்.

முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் தமிழ் மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று, அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஜூலை 28 ஆம் நாள் சிறிலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

"போருக்கு மத்தியில் அகப்பட்டுக்கொண்ட லட்சக்கணக்கான மக்கள் இவ்வாறு முகாம்களில் முடக்கப்பட்டிருப்பது கொடுமையானது. அவர்கள் இதுவரை பட்டதெல்லாம் போதாதா? நாட்டின் ஏனைய பகுதிகளில் வசிப்பவர்களைப் போன்றே அவர்களுக்கும் தமது சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான உரிமை இருக்கிறது" என்று அந்த அமைப்பின் ஆசியப் பிராந்திய இயக்குநர் பிறட் அடம்ஸ் தெரிவித்திருந்தார்.

"போர் காரணமாகத் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறிய அநேகமாக அனைவரும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து ஒரு சிறு தொகையினர் மட்டுமே, குறிப்பாக மூத்தவர்கள் மட்டுமே வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ளவர்கள் மருத்துவத் தேவைக்காக மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் பின்னர் மருத்துவமனை செல்லவேண்டி இருந்தால் படையினரின் பாதுகாப்புடனேயே செல்ல முடியும்." என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது.

கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, எந்த ஊடகமும் தடுப்பு முகாம்களுக்குச் செல்வதை ராஜபக்ச அரசு தடுத்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கைப்படி, முகாம்களில் பணியாற்றும் மனிதாபிமானப் பணியாளர்கள் - அரசின் கவனத்திற்கு வராமல் முகாம்களின் நிலை பற்றிய எந்தவொரு தகவலையும் வெளியிடக்கூடாது என - நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதனை நிராகரிப்பவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். அல்லது அவர்களின் கடவுச்சீட்டு அனுமதி நீடிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி
- புதினம்


பிரபாகரனின் பெற்றோர் கடத்தப்பட்டார்களா?

0 comments


வவுனியா மெனிக்பாம் தடுப்பு முகாமில் இருந்த தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது பெற்றோரைக் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களாக இவர்கள் மெனிக்பாம் தடுப்பு முகாமில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவர்கள் சிறீலங்காப் படையினரால் இரகசிய இடத்தில் தங்கவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 17ம் நாள் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்த நடவடிகையின் போது அரச கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.


நன்றி
-பாரிஸ்தமிழ்


ராணுவத்தினரின் உடல்களில் வெட்டுக்காயங்கள்

0 comments

Plane GIF Pictures, Images and Photos


நேற்று இலங்கை விமானப்படையால் வன்னிக்காட்டுப் பகுதிக்குள் கடும் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வன்னி வான்பரப்பை நோக்கி நேற்று 2,3தடவைகளிற்கு மேலாக போர்விமானங்கள் பரந்து சென்றதாகவும் அந்த விமானங்கள் வன்னிக்காட்டுப்பகுதியில் குண்டு வீசியதாகவும் தெரிய வந்துள்ளது.

இதே வேளை பல சிங்கள ராணுவத்தினரின் உடல்கள் வவுனியா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அங்கு கொண்டுவரப்பட்ட ராணுவத்தினரின் உடல்களில் வெட்டுக்காயங்கள் தென்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்

நன்றி
-சுவிஸ்தமிழ்


அவர்கள் தப்பி விட்டனர் - கருணாவின் கதறல்!

0 comments


தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்திய தளபதி கேணல் ராம் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருப்பதாக அமைச்சர் வி் முரளிதரன் பி.பி.சி.யின் சிங்கள சேவையான 'சந்தேசிய' வுக்குத் தெரிவித்திருக்கின்றார்.
வன்னியில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டதையடுத்து, அம்பாறைக் காடுகளுக்குள் மறைந்திருந்த ராம், நகுலன் மற்றும் தயாமோகன் உட்பட்ட குழுவினரே இலங்கைப் படையினருக்கு சவாலாக இருந்துவந்தனர்.
இவர்களையும் சரணடையுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதனை ஏற்க முடியாது என தயாமோகன் ஊடகப் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதேவேளையில் சரணடைவதற்கு முற்பட்ட விடுதலைப் புலிகளைச் சேர்ந்த சுமார் 10 போராளிகள் அம்பாறையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இவர்கள் தொடர்ந்தும் அம்பாறை மற்றும் அதனையடுத்துள்ள மொனறாகல காடுகளுக்குள் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவல்களையடுத்து இலங்கைப் படையினர் குறிப்பிட்ட காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியிருந்தனர். அத்துடன், இவர்களின் நடமாட்டங்களைக் கண்காணிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படையின் இரண்டு முகாம்களும் அங்கு அமைக்கப்பட்டன.
இந்நிலையிலேயே இவர்கள் அம்பாறைக் காட்டுப் பகுதியில் இருந்து தப்பிச் சென்றிருப்பதாகவும், மலேசியாவுக்கு இவர்கள் சென்றிருப்பதாகவும் அரசுடன் சேர்ந்தியங்கும் இராணுவத் துணைப்படையின் தலைவரும் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் 'சந்தேசிய'வுக்குத் தெரிவித்திருக்கின்றார்.
இதேவேளையில் தமது ஆதரவாளர்களில் 600 பேர் இராணுவம் மற்றும் காவல்துறையில் இணைந்து பயிற்சி பெற்றுவருவதாகவும் முரளிதரன் மேலும் தெரிவித்தார்.

நன்றி
-சுவிஸ் தமிழ்


ராஜபக்சேவின் மகன் மீது தாக்குதல்

2 comments


வவுனியா அகதிகள் முகாமுக்கு பயணம் செய்த மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச மீது பொதுமக்கள் சேறடிப்பு மற்றும் கல்வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை வவுனியா மெனிக்பாம் அகதிகள் முகாமுக்கு ஊடகவியலாளர்களுடன் சென்ற நாமல் ராஜபக்ச மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இளையோர்களின் செயற்திட்டம் குறித்த விடயங்களை முன்னெடுப்பதற்காகவே அங்கு சென்றிருந்தார்.

தாக்குதல்கள் சம்பவங்களை அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு மற்றும் புகைப்படங்களை எடுத்திருந்த போதும் அவற்றை நாமல் ராஜபக்ச பறித்து அழித்துள்ளார். இதனால் பல ஊடங்களில் தாக்குதல்கள் தொடர்பான பதிவுகள் வெளிவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி
-தமிழ்வின்


போரளி வெளியிட்ட ரகசிய தகவல்!!!

1 comments

Shadows Pictures, Images and Photos

படையினரிடம் சரணடைந்துள்ள புலிகளில் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பிரபாகரனது மகள் துவாகராவின் உடலை தோண்டி எடுக்க படையினர் விரைவதாக உள்ளகத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. துவாரகா சோதியா படையணியில் லெ.கேணல் தரத்தில் இருந்ததாகவும் கடந்த மே மாதம் 12ம் இடம்பெற்ற தாக்குதலில் ஆட்லறி செல்வீச்சுக்கு இலக்காகி மரணமடைந்ததாகவும், அவரது உடல் புதுமாத்தளனில் உள்ள பிரதேசம் ஒன்றில் புதைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட புலி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அவரின் தகவலை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரையும் படையினர் துவாரகாவின் சடலத்தின் எச்சங்கள் எவற்றையாவது கைப்ற்றின் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி பிரபாகரனது மரபணுவுடன் ஒப்பிட்டு உறுதி செய்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நன்றி
-பரந்தன் இணைய செய்திகள்


ரணில் விக்கிரமசிங்கயின் அவசர வேண்டுகோள்

0 comments


தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும். இன்றேல் தமிழ் மக்கள் இந்த பாராளுமன்றத்தில் நம்பிக்கை இழந்து விடுவதுடன் பாராளுமன்றத்தின் மீது நம்பிக்கை வைக்காத மற்றுமொரு குழு உருவாக வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பாராளுமன்றத்தினூடாக தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கையில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளனர். எனவே, கூட்டமைப்பினரை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பாராளுமன்ற உறுப்பினர்களாக சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும். அதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பாராளுமன்ற உறுப்பினர்களை சுதந்திரமாக உரிமையுடன் செயல்படுவதற்கு அனுமதிக்காவிடில் பாராளுமன்றம் ஊடாக தமது பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாதென்ற நிலைப்பாட்டிற்கும் முடிவுக்கும் தமிழ் மக்கள் வந்து விடுவர். அத்துடன், பாராளுமன்றத்தின் மீது நம்பிக்கை கொள்ளாத புதியதோர் குழு உருவாகக் கூடிய சூழ்நிலையும் ஏற்படும்


நன்றி
-சங்கதி


ஆசிய மனித உரிமைப் பேரவையின் அதிர்ச்சி தகவல்!

0 comments



இலங்கை காவல் நிலையங்களில் பல்வேறு சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக ஆசிய மனித உரிமைப் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக பரவலகாக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும், அதனைவிடவும் காவல் நிலையங்களில் சித்திரவதைச் சம்பவங்கள் அதிகமாக பதிவாவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
குறிப்பாக மோதல் சம்பவங்கள் இடம்பெற்ற வடக்கு கிழக்கை விடவும் தெற்கில் அதிகளவு சித்திரவதை சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சித்திரவதைச் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டுமாயின் சித்திரவதைச் சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் உரிய முறையில் விசாரணை செய்து தண்டனை வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக காவல்துறை திணைக்களம் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆகியவற்றிலேயே அதிக குறைபாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.



கடந்த காலங்களை விடவும் தற்போது காவல் நிலையங்களில் சித்திரவதை மற்றும் உரிமை மீறல் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக ஆசிய மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

சித்திரவதைகளினால் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு ஆசிய மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நன்றி
-உலக தமிழ்ச் செய்திகள்


நெருப்பின் புதல்வர்களாக அவர்கள் எழுந்து வருவார்கள்

0 comments

Fire Pictures, Images and Photos

சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான மேலாதிக்கப் போட்டியில், ஈழத்தின் புதல்வர்கள் மடிந்து போய் விட்டார்கள் என்று மூத்த பத்திரிக்கையாளர் சோலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக 'குமுதம் ரிப்போர்டர்' இதழில் சோலை எழுதியுள்ள கட்டுரை..

இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தவரையில் நமது வெளிநாட்டுக் கொள்கை நடுநிலையுடன் இருந்தது. அதனைத் தங்கள் திசைக்கு இழுக்க அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் எடுத்த முயற்சிகள் முனை மழுங்கிப் போயின.

தென்னாப்பிரிக்க வெள்ளை இனவெறி அரசு அதன் மண்ணின் மைந்தர்களையே இரும்புக் கால்களால் நசுக்கி தாண்டவம் ஆடியது. அங்கே நசுக்கப்பட்ட மக்களுக்காக பண்டிட் ஜவகர்லால் நேரு குரல் கொடுத்தார். அதன் பின்னர் அன்னை இந்திரா குரல் கொடுத்தார். அங்கே இனப் படுகொலைக்கு எதிராக இந்தியா எழுந்து நின்றது.

அமைதி வழியில் போராடி தங்கள் உரிமைகளைப் பெற முடியவில்லை என்ற நிலை வந்த போதுதான் சிங்கள தேசத்தில் ஈழத் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு ஆயத்தமானார்கள். அன்னை இந்திராவும் அமரர் எம்.ஜி.ஆரும் இருந்த வரை அவர்கள் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாகவே இருந்தனர். கலைஞரும் கரம் கொடுத்தார்.

தனி ஈழம் மலர்ந்தால் இந்தியாவில் தமிழ்நாடும் தனி நாடாகும் என்று சிங்கள அதிபர்கள் காட்டிய பூச்சாண்டியை இந்திரா நம்பவில்லை. ஆனால், அவருக்குப் பின்னே வந்த அவருடைய மைந்தன் ராஜீவ் காந்தி நம்பினார்.

அதன் விளைவாக, ஈழம் பற்றிய இந்திய அரசின் பார்வை திசை மாறியது. போராளிகளை ஒடுக்க இந்திய ராணுவம் ஈழத்தில் இறங்கியது. ஆனால் சோதனைகளைத்தான் சந்தித்தது. அழைத்த ராணுவத்தை சிங்கள அரசே "சீக்கிரம் வெளியேறு" என்றது.

காரணம், இந்திய ராணுவத்தால் பிரபாகரனைக் கூட பிடிக்க முடியவில்லையே என்று சிங்கள இனவாதம் சீற்றம் கொண்டது. சிங்களம் ஒரே தேசம் - ஒரே மொழி - ஒரே இனம் - ஒரே மதம் என்ற அவர்களுடைய சித்தாந்தம் சிதையத் தொடங்கியது. ஆகவே, அவர்கள் தூக்கத்தைத் தொலைத்து விட்டார்கள்.

ஈழ மக்களின் விடுதலை இயக்கத்தை நசுக்குவதற்கு அவர்கள் கஜானாவைக் காலி செய்து ஆயுதங்கள் வாங்கிக் குவித்தனர். சீனமும், பாகிஸ்தானும் உதவ முன்வந்தன.

கூர்ந்து பார்த்தால் இந்துமாக்கடல் பிரதேசத்தில் தனது செல்வாக்கை, -ஆதிக்கத்தை நிலை நிறுத்த சீனம் தொடர்ந்து முயன்று வருவது தெரியும்.

இந்தியாவிற்கு எதிராக ஒரு பக்கம் பாகிஸ்தானுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறது என்றும் பாகிஸ்தான் இந்தியாவின் பகை நாடாகவே இருக்க வேண்டும் என்பது அதன் லட்சியம்.

காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கிறது. அந்த ஆக்கிரமிப்பை அங்கீகரிக்கும் முறையில் சீனத்து எல்லையிலிருந்து அந்த காஷ்மீரத்துக் கானகங்களுக்குள் விரிவான சாலை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

இப்போது இலங்கையைத் தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. எனவே, ஈழ மக்களின் நியாயத்தை உணர்ந்தாலும் அவர்களின் உரிமைப் போராட்டத்தை முறியடிக்க சிங்கள அரசிற்கு ஆயுத சேவை செய்கிறது.

இந்தியா என்ன செய்கிறது? இலங்கை சீனத்தின் செல்லப்பிள்ளையாகி விடக்கூடாது என்பதற்காக ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க எல்லா வழிகளிலும் உதவி செய்கிறது.

ஈழத் தமிழர்களும் இங்கே தாய்த் தமிழக மக்களும் ரத்த உறவுகள் என்பதனை இந்திய அரசு மறந்துவிட்டது. ஈழம் மயானமானாலும் தொடர் குண்டு வீச்சுக்களால் தமிழ் இனம் அழிந்தாலும் தப்பிப் பிழைத்த அரும்புகளையாவது காக்க வேண்டும் என்ற உணர்வு தமிழகத்தில் தலைதூக்கி நிற்கிறது. அங்கே பனை மரங்கள் கூட பஸ்பமாகி விட்டாலும் அதன் சாம்பலில் பிறக்கும் புதிய ஜீவன்கள் நெருப்பின் புதல்வர்களாக எழுந்து வருவார்கள்.

ஆனால், சிங்கள இனவாதத்திற்கு சீனத்திற்குப் போட்டியாக தாமும் உதவி செய்வதில்தான் இந்திய அரசு துடிப்பாக இருக்கிறது. அதே சமயத்தில் சீனத்தின் செல்வாக்கையாவது கட்டுப்படுத்த முடிந்ததா? இன்றைக்கு இலங்கையில் சீனம் இரண்டு கப்பற்படைத் தளங்களை அமைத்து வருகிறது.

இருபெரும் நாடுகளின் ஆதிக்கப் போட்டியில் சுண்டைக்காய் இலங்கை நன்றாகவே சுகம் கண்டு வருகிறது.

இறுதிப் போர் என்று அண்மையில் சிங்கள ராணுவம் ஈழத்தின் மிச்ச மீதங்களைக் கூட பாஸ்பரஸ் குண்டுகளால் எரித்தது. இதனை உலகமே கண்டித்தது. ஆனால் சீனமும் கண்டிக்கவில்லை. இந்தியாவும் கண்டுகொள்ளவில்லை.

ஐ.நா.மன்றத்தில் சிங்கள அரசு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்தியாவும் சீனமும் சிங்கள அரசிற்குத் துணையாக நின்றன. மனித இனப் படுகொலைகளைக் கண்டிக்க மறுத்தன. அந்தக் கொடுமையை உள்நாட்டுப் பிரச்சினை என்று இரத்தத் திரையிட்டு மறைத்தன.

இன்றைக்கு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை நிர்ணயிப்பது யார்?

நடைமுறையில் சீனம்தானா? அதனால்தான் இந்தியா அநியாயங்களுக்குத் துணை போகிறதா?

நமக்கு அண்மையிலுள்ள மியான்மர் (பர்மா) கடந்த முப்பது ஆண்டுகளாக ராணுவ சர்வாதிகாரத்தின் கோரக்கரங்களில் துடித்துக் கொண்டிருக்கிறது. ராணுவ ஆட்சியைத் தூக்கி எறிய மியான்மரின் இளைய தலைமுறை போராடுகிறது. மியான்மரின் தந்தை அவுங்சானின் புதல்வி சூயிகி பத்தாண்டுகளாக வீட்டுச் சிறையில் அடைபட்டிருக்கிறார்.

இந்திரா காந்தி ஆட்சிக்காலம் வரை மியான்மர் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இந்தியா கரம் உயர்த்தியது. மியான்மர் மாணவர்கள் சுதந்திரமாக டெல்லித் தலைநகரில் தங்கள் நியாயங்களை எடுத்துக் கூறி வந்தனர். இந்திய எல்லைக்குள் மியான்மர் மக்களின் விடுதலை இயக்க முகாம்கள் விடிவெள்ளிகளாகப் பூத்திருந்தன.

இந்தியா எந்த ராணுவ ஆட்சியையும் ஆதரித்ததில்லை. ஆனால், காலப்போக்கில் மியான்மரின் ராணுவ ஆட்சியை ஆதரிக்க ஆரம்பித்தோம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக கிரீடம் சூட்டப்பட்ட இந்தியா, மியான்மர் மக்களின் ஜனநாயகப் போராட்டப் பாதையை அடைத்தது. டெல்லியில் கேட்டுக் கொண்டிருந்த விடுதலை கீதம் கெடுதலை ஓலமாகக் கருதப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மியான்மர் ராணுவ ஆட்சியோடு மன்மோகன் சிங் அரசு நேசம் கொண்டிருக்கிறது. என்ன காரணம்? மியான்மர் சீனத்தின் செல்வாக்கு வட்டத்திற்குள் முடங்கி விடக் கூடாது என்று கருதுகிறது. வெற்றி பெற்றதா? இல்லை.

இன்றைக்கு தென்னிந்தியாவை நோக்கி மியான்மர் தீவில் சீனம் கப்பற் படைத்தளம் அமைத்தே விட்டது.

ஆம். மியான்மர் ராணுவ ஆட்சிக்கு ஒரு பக்கம் சீனா ஆதரவு தருகிறது. இன்னொரு பக்கம் இந்தியா தோள் கொடுக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்க ராணுவத் தளங்களை எதிர்த்து ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ் இன்ன பிற நாடுகள் போராடின. தங்கள் மண்ணில் அத்தகைய தளங்களுக்கு இடமில்லை. ஏனெனில், அணுகுண்டுகள் மீது தலை வைத்துத் தங்களால் தூங்க முடியாது என்று அந்த நாடுகள் அறிவித்தன. அந்த நாடுகளின் போராட்டங்களுக்கு சீனம் ஆதரவு அளித்தது. ஆனால், இன்றைக்கு அதே சீனம் இலங்கையிலும் மியான்மரிலும் தனது கப்பற் படைத்தளங்களை அமைத்து வருகிறது.

இன்றைய சீனத் தலைமையின் போக்கு புரியாத புதிராக இருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு வெடிகுண்டுப் பற்களைக் கட்டிக் கொடுத்ததில் அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, சீனத்திற்கும் பங்கு உண்டு.

இலங்கையிலும் மியான்மரிலும் சீனம் செல்வாக்குப் பெறுவது தமது நலன்களுக்கு எதிரானது என்று கருதியே இந்திய அரசு ஈழ இனப் படுகொலையையும் மியான்மர் ராணுவ ஆட்சியையும் ஆதரித்து மவுன சாட்சியாக நிற்கிறது. இதே காரணத்திற்காக இப்போது நேபாள அரசியலையும் இந்தியா குழப்புகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

மன்னராட்சிக்கு முடிவு கட்ட நேபாள மக்கள் பல்லாண்டுகளாக மாவோயிஸ்டுகள் தலைமையில் போராடினார்கள். அப்போதெல்லாம் ஒரு பக்கம் சீனமும் இன்னொரு பக்கம் இந்தியாவும் மன்னராட்சிக்குத்தான் வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தன.

நேபாளத்திலும் எண்ணற்ற கட்சிகள். இரண்டொன்றைத் தவிர எல்லாமே அரண்மனை வாசலில்தான் பாடம் படித்துக் கொண்டிருந்தன. மாவோயிஸ்டுகள் தலைநகரையும் கைப்பற்றுவர் அரண்மனையையும் மியூசியம் ஆக்குவர் என்ற நிலை வந்த போதுதான் அந்தக் கட்சிகள் புரட்சிக்கு ஆதரவளித்தன. புரட்சியில் மட்டுமல்ல; அடுத்து வந்த தேர்தலிலும் மாவோயிஸ்டுகள் மகத்தான வெற்றி பெற்றனர். கூட்டணி அரசு அமைந்தது.

புஷ்பகமல் தகால் என்ற பெயர் கொண்ட மாவோயிஸ்டு தலைவர் பிரசண்டா பிரதமரானார். ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டத்தை அவர் செயல்படுத்தத் தொடங்கினார். பிரச்சினைகள் எழுந்தன. மன்னராட்சிக்கு விசுவாசமாக இருந்த ராணுவத் தளபதியை மாற்ற முயன்றார். அந்தத் தளபதியோ ஏற்கெனவே ஓய்வு பெற்று வீட்டிற்குப் போய் விட்ட ராணுவ அதிகாரிகளை மீண்டும் பதவியில் அமர்த்தினார். அதற்காகச் சொல்லப்பட்ட காரணம், ராணுவத்தை பிரசண்டா தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கிறார் என்பதுதான்.

பிரசண்டா பதவி விலகினார். இல்லை. நிர்ப்பந்திக்கப்பட்டார். பிரதமராகும் வரை அவரை அங்கீகரிக்காத சீனம் அவரை அங்கீகரித்தது. அதற்காக அவர் சீனத்தின் பக்கம் சாய்ந்துவிடவில்லை. ஆனால் அப்படிச் சாய்கிறார் என்று இந்தியாவிற்குச் சந்தேகம் வந்தது. அதன் விளைவாகத்தான் அவர் பதவி விலகினார். அதனை அவரே பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இனி நேபாளத்திற்கு என்று அரசியல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக அரசமைப்பு சபைக்கான தேர்தல் நடைபெற வேண்டும். அந்தத் தேர்தலில் நேபாளி காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். அதன் தலைவர் சி.பி.கொய்ராலா பிரதமராக வேண்டும். இதுதான் இந்தியாவின் விருப்பம் என்று அண்மையில் நமது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கூறியதை இங்கே நினைவுகூர வேண்டும்.

அப்படி ஓர் நிலை வந்தால் என்ன நடைபெறும்? மீண்டும் மன்னராட்சி சிம்மாசனம் ஏறும். பெயரளவில் நாடாளுமன்றமும் நகர்ந்து கொண்டிருக்கும். ஏனெனில், கொய்ராலாக்கள் அரண்மனையின் கொல்லைப்புறத்திலிருந்தே ஆட்சி செய்து அனுபவப்பட்டவர்கள்.

பொதுவாக, சீனமும் இந்தியாவும் அண்டை நாடுகள் மீது மேலாதிக்கம் செலுத்த போட்டி போடுகின்றன என்ற கருத்து உருவாகி வருகிறது. அந்தப் போட்டியில் ஈழத்தின் புதல்வர்கள் மடிந்தார்கள். மியான்மரே ராணுவ முகாமாக உருமாறி இருக்கிறது. நேபாளத்தில் வாக்குப்பெட்டி மூலமே 40 சதவிகித மக்களின் ஆதரவைப் பெற்ற மாவோயிஸ்டுகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். சரித்திரத்தின் மீது ரத்தத் துளிகளைத் தெளிக்கிறார்கள். பார்ப்போம்.

நன்றி
-தட்ஸ்தமிழ்


தீவிர தொடர் விசாரனையில் தமிழினி

0 comments


தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் பிரிவுப் பொறுப்பாளராகப் பணி யாற்றியவர் என்று கூறப்படும் தமிழினி (சிவசுப்பிரமணியம் சிவாதை) நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
சந்தேகநபரான தமிழினி, வவுனியா அகதி முகாமில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விசாரணை நடவடிக்கைகளுக்கென தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்தது.

குறித்த சந்தேகநபர் கடந்த 1991ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவரெனவும் பின்னர் 1993ஆம் ஆண்டில் பூநகரி இராணுவ முகாம் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளோடு நெருங்கிய தொடர்புடையவர் என்பது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் குற்றப்புலனாவுப் பிரிவினர் தெரிவித்தனர்.


கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவரை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை நீதிவான் நிஷாந்த ஹப்பு ஆராய்ச்சி முன்னிலையில் வழங்கினார்.

நன்றி
-தமிழ்வின்


தடுப்பு முகாம்கள் ஒரு "தேசிய வெட்கக் கேடு" - மனித உரிமைகள்

0 comments


முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 300,000 பொதுமக்களை விடுவிக்குமாறு அரசாங்கத்தை பல்வேறு தரப்புகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், இலங்கை அரசினால் நடத்தப்பட்டு வருகின்ற இந்த தடுப்பு முகாம்கள், "தேசிய வெட்கக் கேடு" என அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

சர்வதேச சட்டங்களை மீறி, ஒரு வருடத்திற்குள் அதிகமாக தடுப்பு முகாம்களை நிறுவி, மோதல்களால் பாதிக்கப்பட்ட பொது மக்களை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.


அங்குள்ள ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரையும், தமிழீழ விடுதலைப் புலிகளாக அரசாங்கம் கருதுவதாக அதன் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் பொது மக்கள் அனைவரையும் மீள் குடியேற்றுவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் முகாம்களில் உள்ள விடுதலைப் புலி போராளிகளை அடையாளம் கண்டு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில் அரசாங்கத்தினால் நிவாரணக் கிராமங்கள் என அழைக்கப்படும் இடங்களிலும் பொது மக்களுக்கான நடமாட்ட சுதந்திரம் மீறப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மோதல்களினால் இடப்பெயர்வுகளுக்கு உள்ளாக்கப்பட்ட 300,000 தமிழ் பொது மக்களை சட்ட விரோதமாக தடுத்து வைத்திருக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

முகாம்களில் உள்ள பொது மக்கள் தாம் தங்குவதற்கு வேறு இடங்கள் இன்றி முகாம்களில் வசிப்பதில்லை எனவும், அங்கிருந்து அவர்கள், வெளியேற அரசாங்கம் அனுமதிக்காத நிலையிலேயே முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அத்துடன் முகாம்களில் அதிகரித்த சன நெரிசல் காரணமாக, முகாம்கள் பொது மக்கள் தங்குவதற்கான வசதியான சூழ்நிலையை கொண்டிருக்கவில்லை எனவும் எதிர்கால பருவ பெயர்ச்சி மழை காரணமாக மிகவும் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து வாழ விரும்பும் பொது மக்களை, சட்டத்தையும் மனித உரிமைகளையும் மீறி அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாகவும் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளமையையும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்றி
-தமிழ்செய்தி
* Net photo


விடுதலைப் புலிகளின் அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல்

1 comments


முல்லைத்தீவு வெள்ள முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.



தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்பிச் செல்வதற்காக மேற்படி நீர்மூழ்கிக் கப்பல் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட கப்பல் 4 அடி உயரமும் 24 அடி நீளமும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நன்றி
-வீரகேசரி


புலிகளிடம் இருந்து பெறப்பட்ட ரகசிய வாக்கு மூலங்கள்

2 comments

eye Pictures, Images and Photos

வவுனியா இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் கைதுசெய்யப்பட்டுள்ள 7 ஆயிரத்து 200 விடுதலைப்புலி உறுப்பினர்களில் 3 ஆயிரம் பேரிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய விடுதலைப்புலி உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் சிரேஷ்ட பிரதிக் காவற்துறை மா அதிபர் நிமால் லெவ்கே தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்களுடன் சம்பந்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர்கள் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இந்த விடுதலைப்புலி உறுப்பினர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் வவுனியா உள்ளிட்ட பல பிரதேசங்களில் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் லெவ்கே கூறியுள்ளார்.
evil eyes Pictures, Images and Photos
கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் தனியாக வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடம் காவற்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். ரகசிய காவற்துறையினர், பயங்கரவாத விசாரணை பிரிவினர், புலனாய்வு பிரிவினர், மற்றும் விசேட காவற்துறை குழுவினர் இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் நிமால் லெவ்கே குறிப்பிட்டுள்ளார்.

நன்றி
-உலக தமிழ்ச் செய்திகள்


யுத்த வெடிக்கும் நாள் தொலைவில் இல்லை - திலினா வீரசிங்க

0 comments


விடுதலைப் புலிகளை அழிப்பதில் உறுதியாக இருந்த மகிந்த அரசாங்கம் தமிழர்களுக்கான சிறந்த அரசியல் தீர்வினை முன்வைப்பதற்கான திட்டங்களையும் வகுத்து வைத்திருக்க வேண்டும். யுத்தம் முடிவடைந்து மூன்று வாரங்கள் பூர்த்தியான நிலையிலும் அரசியல் தீர்வினை முன்வைக்க அரசாங்கம் தவறி விட்டது. இது தமிழர்களுக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு என்ற விடயத்தின் சாத்தியத்தினை கேள்விக்குட்படுத்துகின்றது.

புலிகள் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துவதாக கடும் குற்றச்சாட்டினை முன்வைத்த அரசாங்கம் இன்று வன்னியிலிருந்து வந்த மக்களை இராணுவ முகாம்களுக்கு மத்தியில் சுற்றிவளைத்து முகாம் அமைத்து தங்க வைத்திருப்பது மட்டும் நியாயமானதா? அவர்கள் இப்பொழுது அரசின் மனிதக் கேடயங்களாகியிருக்கின்றனர் என குளோபல் தமிழ் செய்திகளுக்கு வழங்கிய விசேட செவ்வியில் குற்றம்சாட்டுகின்றார் இலங்கையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் பெண்ணியவாதியுமான திலினா வீரசிங்க.


அரசியல் அதிகாரத்தினைப் பெறுவதற்காக போராடிய ஆயதக் குழுவொன்றினை அரசாங்கம் தோற்கடித்துள்ளது. இதனால் மட்டும்; அரசாங்கம் கூறும் சுதந்திரமும், ஜனநாயகமும் இலங்கையில் ஏற்பட்டு விடப்போவதில்லை. கடந்த இரண்டு வருடங்களாக முன்னெப்போதுமில்லாத வகையில் தமிழ் மக்கள் மீது கடும் வன்முறையைப் பிரயோகித்து 30 வருட போhட்டத்தினை அரசாங்கம் அடக்கியிருக்கின்றது. இதனால் புலிகள் மட்டுமன்றி வடக்கு கிழக்கு வாழ் மற்றும் இதர பகுதி வாழ் தமிழ் மக்களும் பெரும் பிரச்சினைகளை சந்தித்திருந்தனர். தமது எதிரிகளை அழித்து விட்டதாக அரசு கூறுகின்றது. ஆனால் எதிரிகள் உருவாக்கிய பிரச்சினையும், யுத்தத்தினால் பெரும் அவலத்தினை சந்தித்த மக்களும் அவ்வாறே இருக்கின்றனர்.

புலிகள் தோற்கடித்தது மட்டும் அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. புலிகள் இல்லாததனை காரணமாகக் கொண்டு தமக்கு சார்பான தமிழ்ப்பிரதிநிதிகளைப் பயன்படுத்தி அரசாங்கம் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையைக் கட்டவிழத்து விடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. புலிகளின் தோல்வியினால் தமிழர்கள் பாதுகாப்பற்ற உணர்வினை கொண்டிருக்கின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்படாத நிலையில் புலிகளை அழித்து விட்டதாக அரசு கூறுவது அர்த்தமற்றது. ஏனெனில் இது பல ஆயுத மோதல்களின் தொடராக அமையப்போகின்றது.


இன்று இந்த யுத்த நடவடிக்கையில் தமிழ் மக்கள் தமது தாயகத்தினை இழந்து நிற்கின்றனர். அடிப்படை வசதிகள் இன்றி பெரும் துன்பத்தினை அந்த மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இது பெரும் மனிதாபினமானப் பிரச்சினையாகும். ஒரே நாட்டில் கூடி வாழ்ந்த சமூகம் பெரும் அவலத்தினை சந்தித்து நிர்க்கதியாக நிற்கும் நிலையில் தென்னிலங்கை புலிகளின் வீழ்ச்சியினை யுத்த முடிவினை கொண்டாடி மகிழ்ந்தது பெரும் கொடுமையாகும். வடக்கில் மக்கள் கொன்று குவிக்கும் போது தெற்கில் மக்கள் அமைதியாக இருந்தனர். சிங்களவர்கள் பிரபாகரனின் இறப்புச் செய்திக்காக காத்திருந்தனர்.

இந்த பேரவலத்திற்கு அரசாங்கம் மனிதாபிமான நடவடிக்கை என்று பெயர் சூட்டியது பெருத்த அவமானத்திற்குரியதாகும். இலங்கை வரலாற்றில் மிக மோசமான யுத்த நடவடிக்கையை அரசாங்கம் நடத்தி முடித்திருக்கின்றது. முன்னைய அரசாங்கங்கள் யுத்தம் செய்திருந்தன. ஆனால் மக்களின் இழப்பினைக் கருத்திற்கொண்டு அவை செயற்பட்டன. ஆனால் இந்த அரசாங்கம் மனிதாபிமானம் என்ற விடயத்தினை துச்சமென மதித்துள்ளது. அது மட்டுமன்றி இப்படியொரு யுத்தத்தினை நடத்தாமை குறித்து முன்னைய அரசாங்கங்கள் மீது கடும் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றன.

தமிழ் மக்களுக்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. முகாம்களில் இன்னும் உரிமை மீறல்கள் நிகழுகின்றன. புலிகள் தமது இயக்கத்திற்கு பலவந்தமாக ஆட்களைத் திரட்டினர் என்று குற்றம் சுமத்தும் அரசாங்கம் புலிகளிடமிருந்து தப்பி வந்த மக்களைக் கொன்று மனித உரிமை மீறல்களை நிகழுத்துவது எந்த விதத்தில் நியாயம்? இந்த செயற்பாடுகளை அரச ஊடகங்கள் ஊடாக அரசாங்கம் நியாயப்படுத்துகின்றமை தமிழ் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகும்.

தமிழ் மக்கள் தமது மனித கௌவரத்தினை இழந்து நிற்கின்றனர். அவர்கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். அவர்கள் சுயமாக உழைத்து வாழ்ந்த தாயகப் பகுதியின் நிலை என்ன? தென்னிலங்கை மக்கள் தமது பிரதேசம் தொடர்பாக அனுபவிக்கும் உரிமைகள் அனைத்தும் வன்னி மக்களுக்கும் உண்டு. இந்த நிலையில் அவர்களுக்கான மீள் குடியேற்றத் திட்டங்கள் எவ்வாறு அமையப்போகின்றன? முகாம்களில் குடும்பங்களைப் பிரித்து வைத்திருக்கின்றனர். அவர்களை எப்படி மீள ஒன்றுசேர்க்கப் போகின்றது அரசாங்கம்? 2 நிமிடம் நூடில்ஸ் செய்வதைப்போன்று 180 நாட்களில் இவர்களை குடியேற்ற முடியுமா? சிங்கள மக்களையும் அங்கு குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இதனை எல்லாம் பார்க்கும் போது எதிர்காலத்தில் மிக மோசமான மற்றுமொரு பிரச்சினையை இலங்கை அரசாங்கம் சந்திக்கப்போகின்றது.

சிங்களத்தின் அநீதியினை எதிர்த்தே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடினர். இதனை அரசாங்கம் உணர வேண்டும். புலிகளின் பயங்கரவாதச் செயல்களுக்கு இலங்கை அரசாங்கங்களும் ஒருவகையில் பொறுப்பாளிகளே. புலிகளைப் பிடிக்கின்றேன் என்று தமிழ் மக்கள் மீது கட்டவிழத்து விடப்படும் அடக்குமுறைகளை அரசாங்கம் கைவிட வேண்டும். அதுவரை நாட்டில் யுத்தம் முடிவடைந்து விட்டது என்று கூறுவதில் அர்த்தமில்லை. இந்த நிலை தொடர்ந்தால் நாட்டில் மோசமான யுத்த வெடிக்கும் நாள் தொலைவில் இல்லை.

ஜனாதிபதியினை சூழ பிற்போக்கு யுத்த வாத அரசியல் சக்திகளே அணி வகுத்து நிற்கின்றன. தனது அதிகாரப்பலத்தினை வெளிப்படுத்தும் ஆசை கொண்டவராக ஜனாதிபதி இருக்கின்றார். புலிகளைத் தோற்கடித்ததன் பின்னர் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு தேவையில்லை என்பதே இச்சக்திகளின் ஒட்டுமொத்த கருத்தாகும். இதனையே சாதாரண சிங்களப் பொது மக்களும் கூறுகின்றனர்.

யுத்தவெற்றிக்காக இந்தியாவின் பகைமை நாடுகளான சீனா, பாக்கிஸ்தானுக்கு இலங்கை களம் அமைக்க இடமளித்து விட்டது. அப்பாவி தமிழர்களைக் கொன்று அவர்களின் தாயகப்பகுதிகளை அபகரித்து கொண்ட சிங்களவர்கள் அநியாயமாக வெளிநாட்டுச் சக்திகளுக்கு அப்பகுதிகளை தாரை வார்த்து விடும் நிலை தான் இதனால் ஏற்படப் போகின்றது. அப்பொழுது வடக்கு கிழக்குக்கு உரிமை கோர முடியாத நிலை சிங்களவர்களுக்கு ஏற்படும். தமிழ் மக்களுக்கு வடக்கு கிழக்கு உரித்தாவதனை விரும்பாத சி
சிங்களவர்கள் ஏதோ ஒரு வெளிநாட்டுச் சக்தி அப்பகுதிகளில் அதிகாரம் செலுத்துவதனை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்படப் போகின்றது.

தமிழ் மக்களுக்கு எதிராக பெரும் கொடுமைகளை இழைத்த அரசாங்கத்தின் பிரதிநிதிகள் யுத்தக் குற்றவாளிகள். சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் நான் ஜெனீவாவுக்கு சென்று எனது நாட்டில் 2 கோடி மக்கள் பார்த்திருக்க தமிழினப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று கூறுவேன். இலங்கையில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஊடகச்சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் அடக்குமுறைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது சாத்தியமில்லை தான். இவ்வாறு கூறுவதற்காக என்னை சிங்களப் புலி என்று கூறுவர். அதற்காக என்னைக் கொல்லவும் துணிவர். அதற்கு நான் அச்சப்பட மாட்டேன். ஆனால் நான் ஒரு பெண்ணாக இருப்பதனால் என்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியே கொல்வர். இதனையே நான் வெறுக்கின்றேன்.

யுத்த வெற்றியினை ஒருவாரம் கொண்டாடியது தமிழர்களை பெரிதும் பாதித்துள்ளது. இந்த கொண்டாட்டங்கள் ஊடாக தான் தெரிகின்றது பிரபாகரனுக்கு சிங்களவர்கள் எந்தளவுக்கு பயந்திருக்கின்றார்கள் என்று. சிங்கள சமூகம் அவரை பெரும் விரோதியாகவும், பயங்கரவாதியாகவும் பார்த்தாலும், என்னைப் பொறுத்தவரையில் அவர் வரலாற்றில் ஓர் நாயகனுக்குரிய அந்தஸ்தினை பெறும் தகுதி கொண்டவர். ஓர் சமூகத்தினை ஆட்டிப்படைப்பது என்பது எளிதானதல்ல. அதனை சாதாரண எவராலும் செய்து முடிக்க இயலாது. அவரின் இறப்பினை பார்த்து சிங்கள சமூகம் மன மகிழ்ந்தது. காலையில் பௌத்த உரையைக் கேட்கும் சிங்களப் பௌத்தர்கள் இரவில் பிரபாகரனின் சடலத்தினை தொலைக்காட்சிகளில் பார்க்க குதூகலித்துக் கொண்டிருந்தனர். ஒருவகையில் பிரபாகரனின் வீரத்தினை ஊதிப்பெருக்கியதும் சிங்கள மக்களே.

என்னைப் பொறுத்தவரை கிழக்கு நிலைமைகள் தான் வடக்கில் ஏற்படப் போகின்றன. கிழக்கில் அரசாங்கத்தின் தழிழ்ப் பிரதிநிதிகள் பெரும் அடக்குமுறையை தமிழ் மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ஜனநாயகம் அங்கு நிலவுவதாகக் கூறப்பட்டாலும் அந்த மக்கள் அச்சத்துடன், பாதுகாப்பின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறையை அரசாங்கம் தமது தரப்பில் இருக்கும் தமிழ் தலைமைகளைக் கொண்டு கட்டவிழ்த்து வருகின்றது. இவ்வாறான நிலை வடக்கில் தொடராது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.

நன்றி
-globaltamilnews


நம்பிக்கை துரோகம் -சூழ்ச்சியால் புதைக்கப்பட்ட உண்மைகள்

0 comments


இந்த இரத்த ஆற்றை நாம் தடுத்திருக்க முடியாதா?

பதில் ஆம் என்பது தான். ஆனால் இந்தப் போரினால் அவர்களுக்குப் பல நன்மைகள் கிடைத்துள்ளன. அதனால் இந்தப் போரை நிறுத்துவதில்லை என்று அவர்கள் தீர்மானித்தார்கள். அதேவேளை பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் அதனை அதன் முடிவு வரை அனுமதிப்பது என்றும் அவர்கள் முடிவெடுத்தார்கள். இந்தியா சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகள் பாரம்பரியமாகவே நல்லுறவைக் கொண்டிருக்காத போதிலும் ஆச்சரியப்படத்தக்க வகையிலே நண்பர்களானர்கள். தமக்கான பங்கிறைச்சித்துண்டை கொத்திக் கொண்டு போகக் காத்திருக்கும் கழுகுகள் போல தமக்கிடையேயான உடன்பாட்டோடும் ஒரு மூர்க்கத்தனத்தோடும் காத்திருந்தார்கள்.

என்ன நடந்து கொண்டிருந்தது என்று எல்லோருக்கும் தெரியும். இழப்புக்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை உலகத் தலைவர்கள் கிரிக்கெட் வர்ணனை கேட்பது போல மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பழக்கப்பட்ட காரணத்தால் சிலர் இங்கும் அங்குமாக சில அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தார்கள்.

படுகொலைகளை நிறுத்துங்கள் என்று எவரும் உரக்கக் குரல் கொடுக்கவில்லை. அவர்களிடம் அதிகாரம் இருந்தது. ஆனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை.

அங்கு இடம்பெற்ற படுகொலைகளின் எண்ணிக்கையைக் கொண்டு கிரிக்கெட் ஓட்டங்களை அதன் அறிவிப்புப் பலகையில் புதுப்பிப்பது போன்று ஐநா புதுப்பித்துக் கொண்டிருந்தது. அந்த எண்ணிக்கை ஆயிரக்கணக்கைத் தாண்டிய போதும் ஐநா மௌனமாகவே இருந்தது. அவர்கள் வாயைத் திறந்து இதனைப் பற்றி எதுவும் பேசவில்லை.

ஐநாவின் சற்றலைட்டுக்கள் படங்களை எடுத்துக் கொண்டே இருந்தன. ஆனால் அந்த இரத்த ஆற்றைத் தடுத்து நிறுத்த அவை எந்தப் பிரயத்தனத்தையும் எடுக்கவில்லை. தேசங்களின் இதயங்கள் எல்லாம் கல்லாகி, உதவியேதுமின்றி சிதைந்தழிந்தன. அந்தப் பேராசைத்தனம் திருப்தி செய்யப்பட்டது.

மனித உரிமைக்காப்பாளர்களும், பெரும் ஊதியத்துடன் நியமிக்கப்பட்ட ராஜதந்திரிகளும் தங்களது காலையுணவை உண்ணுகையில் இலங்கையின் பயங்கரத்தைப் பற்றிக் கேள்வியுற்றார்கள். அவர்களுக்கு இந்தக் கதைகள் பெரும் சலிப்பூட்டுவனவாக இருந்தன. மனித உரிமை ஆய்வாளர்களும் நிபுணத்துவம் மிக்கவர்களும் அந்த உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஏதாவது செய்வதற்குப் பதிலாக இது தொடர்பான தங்களது ஆய்வுக்கட்டுரையை வெளியிடுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். மேற்கு நாடுகள் பல தமது குரல்களை உயர்த்தினாலும் அவர்களுடைய அறிக்கைகள் இந்த அழிவுப் போக்குடைய நிகழ்ச்சித்திட்டத்தைக் கட்டுப்படுத்துமளவுக்குப் பலமானவையாக இருக்கவில்லை.

வன்னியில் இறந்து கொண்டிருந்தவர்களின் உறவினர்கள் உலகின் பிரதான தலைநகரங்களின் தெருக்களில் இறங்கினார்கள். அவர்கள் முழந்தாளில் நின்று இந்த மன்னர்களிடமும் மகாராணிகளிடமும் அழுதார்கள். அவர்கள் தங்களுடைய எதிர்ப்பைப் பல்வேறு வழிகளில் காட்டினார்கள். அவர்களது அழுகையை நாங்கள் கேட்கவில்லை. ஆனால் அவர்களை எம்மைத் தொந்தரவு செய்பவர்களாகவே நாம் பார்த்தோம். ஏனென்றால் அவர்கள் எங்களது தெருக்களைத் தடை செய்தார்கள். நாங்கள் அவர்களது அழுகையைக் காது கொடுத்துக் கேட்டிருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.

எங்களுடைய வானொலிகள் அவர்கள் ஏன் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் அவர்களை எவ்வாறு அந்த வீதிகளிலிருந்து அப்புறப்படுத்துவது என்று பேசின. நாங்கள் இப்போது சந்தோசமாக இருக்கிறோம். ஏனென்றால் அங்கு எந்தத் தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களும் இல்லை. பாதுகாக்க முற்பட்ட பொதுமக்களும் இறந்து பட்டு விட்டார்கள்.

இது மிகத் தெளிவானது. இந்தப் போர் பலநாடுகளின் பெரும் துணையுடன் நடத்தப்பட்டிருக்கிறது. அவர்களால் இந்த இரத்த ஆற்றைத் தடுத்துநிறுத்தும் வகையில் இலங்கை அரசை இணங்கச் செய்திருக்க முடியும். குறிப்பாக கிளர்ச்சியாளர்கள் தாங்கள் சரணடைவதாக அறிவித்த பின்னராவது.

இந்த இரத்த ஆற்றைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும.; ஆனால் எவருக்கும் அதில் அக்கறை இருக்கவில்லை. ஏனென்றால் எல்லோரும் தத்தமது திட்டத்துடனேயே அங்கு சென்றிருந்தார்கள். அது முடிவுக்கு வர முன்னரே இந்தப் போரின் பங்குதாரர்கள் தமது அறுவடையைச் செய்ய ஆரம்பித்தார்கள்.

யார் இந்தப் போரால் நன்மையடைந்தார்கள்?

இந்தப்பிராந்தியத்தில் தங்களுடைய நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நினைக்கிற இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் கைப்பாவையாக இலங்கை அரசாங்கம் பயன்படுத்தப்பட்டது. இலங்கையிலிருந்து மெதுவாகத் துடைத்தழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழ்மக்கள் தவிர மற்றைய ஒவ்வொருவரும் இப்போது சந்தோசமாக உள்ளார்கள்.

கடந்த 60 வருடங்களு;க்கு மேலாகவே தமிழ் மக்களைக் கொன்று வரும் சிங்களத் தீவிரவாதிகள் இப்போது மகிழ்ச்சியடைவார்கள்.

உலகின் குழம்பிய குட்டையில் சீனா மீன்பிடிக்கிறது. தனது கொலைகார ஆயுதங்களை இன்னொருவருக்கு வழங்கி அவரை பலமிக்க மனிதனாக்கியதன் மூலம் அது மீண்டும் ஒரு தடவை தனது இலக்கை அடைந்துள்ளது. அதனது கடற்டையால் பயன்படுத்துவதற்கென கட்டப்படும் துறைமுகம் உட்பட பல்வேறு கட்டுமானத்திட்டங்களை சீனா இலங்கையின் தெற்குப் பகுதியில் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளது.

இந்தியாவும் ஏற்கெனவே போடப்பட்ட எண்ணெய் ஆய்வுத் திட்டத்தை ஆரம்பித்;துள்ளதோடு இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் தனது பல்வேறு திட்டங்களை ஆரம்பிக்க தனது நிபுணர்களை அனுப்பி வைத்துள்ளது.

சீனாவும் பாகிஸ்தானும் தமது கொலைகார ஆயுதங்களை இலங்கைக்குக் கொடுத்து போரை எவ்வாறு கொண்டு செல்வது என்றும் போரை எவ்வாறு நடாத்துவது என்றும் இலங்கை அரசு;கு உதவியிருக்கிறார்கள்.

இந்தியாவின் போரை தான் இலங்கையில் நடாத்தியதாக இலங்கை ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்தப் போரில் இந்தியாவின் கைகளில் இரத்தக்கறை படிந்துள்ளது என்று இந்தியாவின் முன்னாள் உயர் ஸ்தானிகர் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். எனினும் தமிழ் மக்களின் இக்கட்டான நிலை குறித்து இந்தியா கவலைப்படவில்லை.

இலங்கையின் போர் கிளர்;ச்சிக்குழுத் தலைவரை வைத்து எதுவும் செய்வதற்கல்ல. அவருடைய உடலுக்கு அப்பால் மிகப் பெரிய கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வெற்றிப் பேச்சுக்கள் ஒன்றும் மடத்தனமானவை அல்ல. அவையெல்லாம் அந்தந்தத் தரப்புக்களால் மிக நிதானமாகச் சிந்தித்துச் செய்யப்பட்ட பேச்சுக்களே. கம்பளத்திற்குக் கீழ் ஒளிந்து கொண்டுள்ள எல்லா நச்சுப் பாம்புகளின் பேச்சுக்களே அவை.

இலங்கையின் போர்க்குற்றங்கள்:

சதாம் ஹுசைன் குர்த்ஷ் மக்களுக்கு இழைத்ததைவிட பலமடங்கான போர்க்குற்றங்களை இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு இழைத்துள்ளது.

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த கிளர்ச்சிக்காரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்த பொதுமக்கள் கருணையற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இலங்கைப் படையினரால் மட்டுமல்ல, இலங்கை இந்திய அரசியல்வாதிகளாலும், ஐநா அதிகாரிகளாலும் மிகக் கடுமையான போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன.

அப்பாவிகளான ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் மீது தடை செய்யப்பட்ட கிளஸ்டர் மற்றும் பொஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. சர்வதேச செஞ்சிலுவைச்சங்கப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரே வைத்தியசாலை பலமுறை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. கட்டிடங்களும் சொத்துக்களும் மிகப் பலம்வாய்ந்த குண்டுகளினால் தகர்க்கப்பட்டுள்ளன.

அப்பாவி மக்கள் பதுங்குகுழிகளில் மாதக்கணக்காக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவும் மருந்தும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

இலங்கை இப்போதும் ஆதாரங்களை மறைத்துக் கொண்டிருக்கிறது:

ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்குப் புறம்பாக முப்பதாயிரம் பேர் காயமடைந்துள்ளனர். உண்மையான மனிதாபிமான அல்லது மீட்பு உதவிகள் எதுவும் கிடைக்கா வண்ணம் இன்னொரு மூன்று இலட்சம் பேர் இனவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்குத் தெரியும் தான் மிகப் பெரிய போர்க்குற்றங்களை இழைத்துள்ளேன் என்று. அதனால் இப்போது அந்த அக்கிரமங்களை மூடி மறைக்கும் பணியில் அது இறங்கியிருக்கிறது.

போர்ப்பிராந்தியத்திலிருந்து வெளியேறிய மக்களே இந்தக் கொடுமையான போர்க்குற்றங்களின் சாட்சியாளர்களாவர். அவர்கள் தமக்கு என்ன நடந்தது என்றும் தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் கண்ணால் கண்டவர்கள். இலங்கை அரசாங்கம் ஊடகவியலாளர்களையும் மனிதநேயப் பணியாளர்களையும் சுதந்திரமாக இந்த முகாம்களுக்கு அனுமதிக்காததன் முக்கிய நோக்கமே இந்தச் சாட்சியங்களை வெளிவரவிடாமல் தடுப்பதும் அவற்றை எவ்வாறாயினும் அழித்து விடுவதனூடாக தனது போர்க்குற்றங்களை மூடி மறைப்பதும் தான்.

வன்னியில் காயமடைந்த மக்களின் உயிர்களைப் பாதுகாத்த அந்த மூன்று வைத்தியர்களுமே உண்மையான வீரர்கள் என சர்வதேச சமூகத்தால் கணிப்பிடப்படுகிறார்கள். அவர்களுடைய அந்த முயற்சியை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக இலங்கை அரசாங்கம் தனது போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை மறைப்பதற்காக அவர்களைச் சிறையில் தள்ளிப் பூட்டியுள்ளது.

இந்தப் போர் இரண்டு வாரங்களுக்கு முன்னரே முடிவடைந்து விட்டது. ஆனால் இதுவரை போர்ப்பிராந்தியங்களுக்கு ஊடகவியலாளர்களோ உதவிநிறுவனப் பணியாளர்களோ செல்ல அனுமதிக்கப்படவில்லை.

போர் முடிவடைந்த விட்டது என்றும் அங்குள்ள மக்கள் யாவரும் மீட்கப்பட்டு விட்டார்கள் என்றும் இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதும், காயமடைந்து வீழ்ந்து கிடக்கின்ற பலர் இன்னமும் அங்கேயே கிடக்கிறார்கள். அதுமட்டுமின்றி வெளியே வர அஞ்சிய பலர் இன்னமும் பதுங்குகுழிகளுக்குள்ளேயே பதுங்கியிருக்கிறார்கள்.

புதைகுழிகள் இலங்கை அரசாங்கத்திற்கு பழைய வழிமுறைகளாகி விட்டன. போர்ப்பிராந்தியத்திற்கு இன்னமும் ஊடகவியலாளர்களோ அல்லது உதவி நிறுவனப் பணியாளர்களோ இலங்கை அரசால் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு மிக நீண்டகாலம் எடுக்கும். ஏனெனில் அங்கு இறந்துபட்டுக் கிடக்கும் ஆயிரக்கணக்கானவர்களின் இறந்த உடல்களை இராணுவத்தினர் அடையாளமின்றி அழித்துக் கொண்டிருக்கின்றனர்.

கிளர்ச்சித் தலைவரின் உடலைத் தகனஞ்செய்து சாம்பலை கடலில் எறிந்த விட்டதாகத் தெரிவிக்கும் இலங்கை ஆயுதப்படைகளின் தலைமையின் அண்மைய அறிவிப்பு இதேபோன்ற வழிமுறையையே அங்கு கொல்லப்பட்டுக் கிடக்கும் உடலங்களுக்கும் மேற்கொள்ளப்படும் என்பதைக் கோடி காட்டுகிறது. இலங்கைப் படைகள் அங்கு இடத்துக்கு இடம் எடுத்துச் சென்று உடல்களைத் தகனஞ் செய்யக்கூடிய உலைகளைப் பயன்படுத்தக் கூடும். இதன்மூலம் அவர்கள் எல்லாவகையான சாட்சியங்களையும் துடைத்தழித்து விடலாம்.

இது வெளிப்படையாகத் தெரிய வரக் கொஞ்சக் காலம் எடுக்கும். எவ்வளவு மக்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டார்கள் எனக்கணக்கெடுக்கும் போது இது தெரிய வரும்.
இவை எல்லாம் முடிந்த பிறகு நமது பிபிசி செய்தியாளர்கள் அப்பிரதேசத்திற்குச் சென்று எவ்வளவு அழகிய நீல வானமும் தங்க நிற மணலும் கொண்டது இந்தக் கடற்கரை என்று வர்ணனை செய்வார்கள்.

நன்றி
-உலக தமிழ்ச் செய்திகள்