தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்திய தளபதி கேணல் ராம் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருப்பதாக அமைச்சர் வி் முரளிதரன் பி.பி.சி.யின் சிங்கள சேவையான 'சந்தேசிய' வுக்குத் தெரிவித்திருக்கின்றார்.
வன்னியில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டதையடுத்து, அம்பாறைக் காடுகளுக்குள் மறைந்திருந்த ராம், நகுலன் மற்றும் தயாமோகன் உட்பட்ட குழுவினரே இலங்கைப் படையினருக்கு சவாலாக இருந்துவந்தனர்.
இவர்களையும் சரணடையுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதனை ஏற்க முடியாது என தயாமோகன் ஊடகப் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதேவேளையில் சரணடைவதற்கு முற்பட்ட விடுதலைப் புலிகளைச் சேர்ந்த சுமார் 10 போராளிகள் அம்பாறையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இவர்கள் தொடர்ந்தும் அம்பாறை மற்றும் அதனையடுத்துள்ள மொனறாகல காடுகளுக்குள் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவல்களையடுத்து இலங்கைப் படையினர் குறிப்பிட்ட காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியிருந்தனர். அத்துடன், இவர்களின் நடமாட்டங்களைக் கண்காணிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படையின் இரண்டு முகாம்களும் அங்கு அமைக்கப்பட்டன.
இந்நிலையிலேயே இவர்கள் அம்பாறைக் காட்டுப் பகுதியில் இருந்து தப்பிச் சென்றிருப்பதாகவும், மலேசியாவுக்கு இவர்கள் சென்றிருப்பதாகவும் அரசுடன் சேர்ந்தியங்கும் இராணுவத் துணைப்படையின் தலைவரும் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் 'சந்தேசிய'வுக்குத் தெரிவித்திருக்கின்றார்.
இதேவேளையில் தமது ஆதரவாளர்களில் 600 பேர் இராணுவம் மற்றும் காவல்துறையில் இணைந்து பயிற்சி பெற்றுவருவதாகவும் முரளிதரன் மேலும் தெரிவித்தார்.
நன்றி
-சுவிஸ் தமிழ்
Headline
அவர்கள் தப்பி விட்டனர் - கருணாவின் கதறல்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment