பிரபல இசை மேதை டி.கே.பட்டம்மாள் காலமானார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள்.
கர்நாடக இசையில் மேதையான இவர் நாடு தழுவிய புகழ் பெற்றவர். ஆயிரக்கணக்கான மேடைகளில் இசை பரப்பிய இவருக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் இவர் இன்று காலமானார். இவரது மறைவுக்கு இசை கலைஞர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். இவருக்கு வயது 90. பிரபல பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் இவரது பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவரையும் கவர்ந்த காந்த குரல்
நன்றி
-நக்கீரன்
Headline
டி.கே.பட்டம்மாள் காலமானார்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
அவருக்கு எனது அஞ்சலிகள். இடுகைக்கு நன்றி.
ஸ்ரீ....
Hi
மறைந்த இசைமேதைக்கு எங்களின் இதய அஞ்சலி. உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
அன்னாருக்கு அஞ்சலிகள் உரித்தாகுக
ஆண்டவனால் பட்டம் (கள்)+ஆழ் என ஆசீர்வதிக்கப்பட்டவர்.
என் வாழ்வில் ஒரே தடவை அவர் கச்சேரியை பாரிசில் 1985ல் நேரே கேட்டுள்ளேன்.சமீபத்தில் யூருயூப்பில் அவர் நித்தியசிரியுடன் பங்குபற்றிய பேட்டி பார்த்தேன். அத் தள்ளாத வயதிலும்
அவர் ஆர்வம்; பாரதமாதா பற்றிய அங்கலாப்பு...என் கண்ணைக் கசிய வைத்தது.
அவர் தெவிட்டாத குரல் அவர் ரசிகர்கள் காதில் என்றும் ஒலிக்கும்.
நிச்சயம் அவர் ஆத்ம சாந்தி அடைவார்.
அவர்கள் குரல் செல்வம் நம்மிடம் இருக்கிறது. அருமையான அழுத்தமான,கம்பீரமான குரலால் தேசிய எழுச்சிக்கு ஆதரவு கொடுத்து மக்களை
உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியவர்,.
அன்னாருக்கு அஞ்சலிகள்.
வாங்க
ஸ்ரீ....,
கானா பிரபா ,
யோகன் பாரிஸ்(Johan-Paris) மற்றும் வல்லிசிம்ஹன்
இசையின் இன்பத்தை நமக்கு வழங்கிய அவர்கள் ஆன்மா சாந்தி அடைய நம் அனைவரின் சார்பாக இறைவனை வேண்டுவோம்.
செய்திவளையம் குழுவிநர்களுக்கு வணக்கம்
இசை மேதைக்கு அஞ்சலி செலுத்தியதற்கு நன்றி
மேலும் உங்கள் தமிழ் இணையத்தில் விரைவில் இனைகிறேன் தங்கள் அழைப்பிற்கு நன்றி...
Post a Comment