வவுனியா இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் கைதுசெய்யப்பட்டுள்ள 7 ஆயிரத்து 200 விடுதலைப்புலி உறுப்பினர்களில் 3 ஆயிரம் பேரிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய விடுதலைப்புலி உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் சிரேஷ்ட பிரதிக் காவற்துறை மா அதிபர் நிமால் லெவ்கே தெரிவித்துள்ளார்.
குற்றச்செயல்களுடன் சம்பந்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர்கள் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இந்த விடுதலைப்புலி உறுப்பினர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் வவுனியா உள்ளிட்ட பல பிரதேசங்களில் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் லெவ்கே கூறியுள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் தனியாக வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடம் காவற்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். ரகசிய காவற்துறையினர், பயங்கரவாத விசாரணை பிரிவினர், புலனாய்வு பிரிவினர், மற்றும் விசேட காவற்துறை குழுவினர் இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் நிமால் லெவ்கே குறிப்பிட்டுள்ளார்.
நன்றி
-உலக தமிழ்ச் செய்திகள்
Headline
புலிகளிடம் இருந்து பெறப்பட்ட ரகசிய வாக்கு மூலங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அந்த கண் படம் எங்க பிடித்தீங்க? நல்லா இருக்கு
"கிரி said...
அந்த கண் படம் எங்க பிடித்தீங்க? நல்லா இருக்கு"
நன்றி கிரி
அந்த இரு கண்களும் http://photobucket.com/images/eye%20gif/ தளத்தில் இருந்து பெற்றது.
Post a Comment