Headline

விரைவில் விபரீதத்தை அறுவடை செய்வீர்கள் - வைகோ


”இலங்கையில் தடுப்புமுகாம்களில் இராணுவத்தின் படியில் உள்ள அப்பாவித் தமிழர்களைவிடுவிக்க வேண்டும்” என்று ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ பேசினார்.

விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டதில் பேசிய வைகோ மேலும் கூறியது, ”இலங்கையில் அனைத்து விடுதலைப்புலிகளையும் அழித்து விட்டதாக கூறும் ராஜபக்செ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆபத்துக்கு விதை விதைத்துள்ளீர்கள் விரைவில் விபரீதத்தை அறுவடை செய்வீர்கள். தமிழர்கள் உணர்வற்றுப் போய்விடவில்லை. இந்திய அரசுதான் இலங்கை இனப்படுகொலைக்கு காரணம் இந்திய அரசுதான் ஆயுதம் வழங்கி, போராட்டத்தை நடத்தியது.

ஈழத்தமிழர்கள் விடுதலைக்காக பாடுபடுபவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் அடைக்கலம் கொடுத்து சோறு போடுவோம்.

அண்டை நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு உதவும் பிரதமர் இந்தியாவின் ஒருமைப்பாட்டை குலைத்துவிட வேண்டாம்.

தமிழ் ஈழம் அமைய தமிழக இளைஞர்கள் உதவுவார்கள். பாலஸ்தீன விடுதலைக்காக குரல் கொடுத்த இந்தியா, இலங்கை தமிழர்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை?

தேர்தலுக்காகவும், பதவிக்காகவும் கட்சி நடத்துபவர்கள் அல்ல நாங்கள். என் உடலில் வலு உள்ளவரை ஈழத்திற்காக பேசுவேன்.
ஈழத்தமிழர்கள் துன்பம் தொடர்ந்தால் தமிழ்நாட்டிலும் பிரச்சனை தொடங்கும்.” என்றார் வைகோ.

நன்றி
-தமிழ்செய்தி இணையம்

3 comments:

ram.pragash said...

பேசாமல் வைக்கோ அவர்களுக்கு சிங்களம் கற்றுக்கொடுத்து யாராவது கொழும்புக்கு ஒரு டிக்கெட் எடுத்து அனுப்பலாம் எங்க பேசுரத அங்க பொய் பேசுன எதாவது பிரோஜனம் உண்டு

puduvaisiva said...

//ram.pragash said...
பேசாமல் வைக்கோ அவர்களுக்கு சிங்களம் கற்றுக்கொடுத்து யாராவது கொழும்புக்கு ஒரு டிக்கெட் எடுத்து அனுப்பலாம் எங்க பேசுரத அங்க பொய் பேசுன எதாவது பிரோஜனம் உண்டு//


வாங்க ராம்.பிரகாஷ்

நிச்சயம் இவருடைய பேச்சுகளை அனைத்தையும் இலங்கை அரசின் ஒட்டுன்னிகள் சிங்களத்தில் மொழி மாற்றம் செய்து கொடுத்து இருக்கும். இந்தியாவே இவரை அங்கு அனுப்பினாலும் இலங்கை அரசு இவரை உள்ளே விடாது.

Anonymous said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ்

என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html