போலீசாருக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கும் வாக்குவாதம்-தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் பிறகு 30 பேரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.
திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினர் எதிர்ப்பால் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நிருபமா ராஜபக்சே செல்ல வில்லை. திருச்சி விமான நிலையத்தில் விமானம் மூலம் இலங்கை செல்ல புறப்பட்டார்.
மேலும் முழு செய்தியை படிக்க
நன்றி
- நக்கீரன்
Headline
எதிர்ப்புகளை கண்டு இலங்கைக்கே சென்றுவிட்டார் ராஜபக்சே தங்கை
0 commentsசிதம்பரத்தின் மீது ஷூ வீசியவருக்கு "லயன் ஆப் டெல்லி" - விருது !
0 comments
டெல்லியில் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீது காங்கிரஸார் நடத்திய வெறியாட்டத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது ஷூ வீசி எதிர்ப்பைக் காட்டிய சீக்கிய பத்திரிக்கையாளர் ஜர்னைல் சிங்குக்கு கனடாவில் சீக்கியர்கள் அமைப்பு விருதளித்து கெளரவித்துள்ளது.
டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது ப.சிதம்பரம் மீது தனது இரண்டு ஷூக்களையும் கழற்றி அடுத்தடுத்து வீசினார் ஜர்னைல் சிங். இருப்பினும் அது ப.சிதம்பரம் மீது படவில்லை.
இந்த சம்பவம் நடந்தபோது அவர் டைனிக் ஜாக்ரன் என்ற இந்தி நாளிதழில் பணியாற்றி வந்தார். இச்சம்பவத்திற்குப் பின்னர் அவர் அதிலிருந்து விலகி விட்டார். தற்போது ஐ அக்யூஸ்ட் என்ற நூலை ஜர்னைல் சிங் எழுதியுள்ளார்.
ப.சிதம்பரம் சம்பவத்திற்குப் பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார் ஜர்னைல் சிங்.
சமீபத்தில் அவர் கனடா சென்றிருந்தார். அங்கு நடந்த சீக்கியர்கள் குறித்த திரைப்படங்கள் கலந்து கொண்ட வீல்ஸ் திரைப்பட விழாவின்போது, ஜர்னைல் சிங்குக்கு லயன் ஆப் டெல்லி என்ற விருதினை சீக்கியர்கள் வழங்கிக் கெளரவித்தனர்.
இதுகுறித்து ஜர்னைல் சிங் கூறுகையில், தொடர்ந்து பல கூட்டங்களில் பங்கேற்று வருகிறேன். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் 25வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி வான்கூவரில் நடந்த மெழுகுவர்த்தி நிகழ்ச்சியில் தலைமையேற்றேன்.
இந்தூர், லூதியானா, சஹரன்பூர், டெல்லியில் நடந்த கூட்டங்களில் நீதி கேட்டுப் பேசினேன்.
எனக்கு அரசியல் ஆர்வம் கிடையாது. அதற்காக நான் இவ்வாறு பேசி வரவில்லை. 1984ம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு இதுவரை சீக்கியர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அதற்காகத்தான் குரல் கொடுத்து வருகிறேன்.
இந்த அநாகரீகச் சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளிகளை குற்றம் சாட்டி தற்போது நூல் எழுதியுள்ளேன். அரசியல் ரீதியாக அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் மீதான வழக்குகளை விட்டு விடக் கூடாது. சட்ட ரீதியாக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார் சிங்.
நன்றி
- தட்ஸ்தமிழ்
சார்லி சாப்ளின் ஷூ சாப்பிடும் சிரிப்பு
பிரபாகரன் திராவிட கழகமாக உருவெடுக்கும் - கொளத்தூர் மணி
0 comments
விடுதலைப் புலிகளின் முப்பத்து மூன்று வருடகால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாக கடந்த மே 18-ம் தேதி இலங்கை அரசு அறிவித்தது.
ஆனால் அதற்கு முன்பே அதே மே மாதம் 2-ம் தேதி இலங்கையில் போர் உச்சகட்ட நிலையில் இருந்த-போது, இலங்கைக்கு உதவுவதற்காக 92 வாகனங்களில் ராணுவத் தளவாடங்களையும், பீரங்கி டாங்கி-களை-யும்
இந்திய அரசு கொச்சின் வழியாக இலங்கைக்கு அனுப்புவதாகத் தகவல் பரவ, கோவையில் பெரியார் தி.க.வினரும், ம.தி.மு.க.-வினரும் அந்த வாகனங்-களை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற ஈழ ஆதரவாளர்கள், அந்த வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்தினர். இந்தச் சம்பவத்திற்காக பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட 250 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்-துறை, இதுவரை 75 பேரை கைது செய்துள்ளது. மற்றவர்களையும் தேடி வருகிறது. அது-மட்டுமல்லாமல் கையில் சிக்குபவர்-களையெல்லாம் கைது செய்து, இந்த வழக்கில் சேர்த்து வருவதாகவும் காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர் ஈழ ஆதரவாளர்கள்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கோவை மத்திய சிறையில் ராமகிருஷ்ணனைச் சந்தித்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள், இன்னும் போலீஸிடம் சிக்காமல் இருப்பவர்களை அடையாளம் காட்டும்படி மிரட்டியதாகவும் தகவல்கள் உள்ளன. ஈழத்திற்காகப் போராடி வந்தவர்கள், தற்போது ஈழ ஆதரவாளர்களுக்காகப் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும், அதுவும் தமிழக அரசிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘ஈழ ஆதரவாளர் விடுதலை கோரிக்கை மாநாடு’ கோவையில் நடந்தது. மாநாட்டில் கொளத்தூர் மணி, சீமான், ‘கற்றது தமிழ்’ ராம், பாவாணன், வழக்கறிஞர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கொளத்தூர் மணி பேசுகையில், “ஈழத்தில் சிங்கள அரசு இனவெறித் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்தே நாம் இங்கே பொங்கியெழ ஆரம்பித்துவிட்டோம். ஈழ மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு இந்திய அரசே துணை நிற்பதைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் முத்துக்குமார் தொடங்கி பதினைந்திற்கும் மேற்பட்ட ஈழ ஆதரவாளர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
ஈழம் அழிந்து வருவதைப் பொறுக்க முடியாமல் நாம் எல்லோரும் கொதித்துக் கொண்டிருந்த வேளையில், போர் உச்சகட்ட நிலையில் இருந்த-போது, எதற்கும் அஞ்சாமல் மத்திய அரசு தமிழகம் வழியாகவே இலங்கைக்கு ராணுவத் தளவாடங்களை அனுப்பியது. கோவை வழியாக ராணுவ வாகனங்கள் சென்றபோது, மானமுள்ள தமிழர்கள் ஒன்றுகூடி அந்த வாகனங்களை வழிமறித்தனர். ‘எங்கள் வரிப்பணத்தில் எங்கள் இனத்தையே அழிப்பதா!’ என்று மத்திய, மாநில அரசுகளை எச்சரித்தனர்.
மத்திய, மாநில அரசுகள் ஆற்ற வேண்டிய கடமையை அவர்கள் செய்யாததால், மக்களே செய்தனர். கடமையைச் சரியாகச் செய்த எங்களுக்குக் கிடைத்த பரிசு தேசிய பாதுகாப்புச் சட்டமா? இந்த அநீதியை இனியும் அனுமதிக்கக் கூடாது.
மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு, பெரியார் திராவிட கழகத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறது. அறிவிக்கட்டுமே! பெயரை மட்டும்தானே அவர்களால் தடை செய்யமுடியும்? அப்படி மத்திய அரசு தடை விதித்தால் பெரியார் திராவிட கழகம், பிரபாகரன் திராவிட கழகமாக உருவெடுக்கும்” என்றார் அதிரடியாக.
பலத்த எதிர்பார்ப்புக்கிடையில் மைக்கைப் பிடித்தார் சீமான். “இதுவரை ஈழ விடுதலைக்காகப் போராடினோம். ஆனால் இன்று ஈழ ஆதரவாளர்கள் விடுதலைக்காகப் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நான் என்ன பேசினேன் என்பதற்காக தமிழக அரசு என் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சியது என்பது எனக்குத் தெரியவில்லை. நான் பேசியது புதுவையில். ஆனால் வழக்கு பதிவு செய்யப்-பட்டது பாளையங்-கோட்டையில். பிரபாகரனை அண்ணன் என்று கூறியது குற்றமா? இத்தாலியில் பிறந்த சோனியாவை அன்னை என்று கூறும்போது, என் மண்ணில் பிறந்த பிரபாகரனை அண்ணன் என்று கூறுவது குற்றமாகத் தெரிகிறதா நம் தமிழக அரசுக்கு?
இலங்கையில் நடக்கும் படுகொலையைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. அதனால்தான் தமிழகத்தில் நாங்கள் போராடுகிறோம். இந்திய ராணுவமே எங்களுக்கு எதிராக வந்தாலும் வெறும் கையோடு அவர்களை விரட்டி அடிப்போம். தற்போது ஆஸ்திரேலியா, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிவிட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அவர்கள் வாழும் நாட்டின் பாராளுமன்றங்களின் முன் ஈழ விடுதலைக்காக ஆர்ப்பாட்டங்-களை நடத்துகிறார்கள். ஆனால் தமிழகத்தில் அதைப் பற்றிப் பேசக்கூட அனுமதி இல்லை. அது ஜனநாயக நாடா அல்லது இந்தியா ஜனநாயக நாடா?
ஈழத்திற்காகக் கதறினோம், கத்தினோம், புலம்பினோம். இது பிழையா? இதற்குக்கூட அனுமதி இல்லாத நாடு, என்ன நாடு? தமிழனாகப் பிறந்தது தப்பா? தமிழா இனி உனக்கு நாடில்லை. மத-மில்லை. ஜாதியும் இல்லை. இனி உனக்கென்று எதுவும் இல்லை. இனி தமிழனின் பொதுச் சொத்து சிறை மட்டும்தான். வேண்டுமென்றால் இனம் மாறிப்போய்விடு.
இந்திய தேசமே அழிந்துபோனாலும் பரவாயில்லை, ஒரு விடுதலைப் புலிகூட இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் மத்திய அரசே, ஈழத்தை அழித்துவிட்டு இந்தியாவை-யும் அழிக்க வருவான் சிங்களன்.
ஈழத்தில் போர் முடிந்துவிட்டது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் தமிழனுக்குச் சம உரிமை கிடைக்க வழி வகுக்கப்படும் என்று இலங்கை அரசு கூறுகிறது. பசிக்குச் சோறு தராத சிங்களனா, என் மக்களுக்குச் சம உரிமை தரப் போகிறான்.
பசியால் துடித்துக்கொண்டிருக்கும் என் மக்களுக்கு உணவு வழங்க ‘வணங்காமண்’ என்ற கப்பலை அனுப்பி வைத்தது சில நல்ல உள்ளங்கள். அதைக்கூட ஏற்க மறுக்கிறது ராஜபக்ஷே அரசு. சென்னை துறைமுகத்தில் நிற்கும் அந்தக் கப்பலை இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசும், மத்திய அரசும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் குண்டடி பட்டு செத்தது பத்தாதா, பசியிலும் சாக வேண்டும் என்று ஆசைப் படுகிறதா இந்த அரசுகள்?
ஐ.நா.சபையில் நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததில் இருந்தே தெரியவில்லையா, தமிழ்நாடு இந்தியாவில் இல்லை என்பது? ஒரு மனிதனின் மரணத்திற்கு ஆயிரம் திரைக்கதை எழுதுகிறது, இலங்கை அரசு. நம் இனத்தின் சூரியன் அழியாது. தமிழ் ஈழ தேசக் கொடியை ஏற்றாமல் பிரபாகரன் தலை சாயாது” என்று ஆவேசம் குறையாமலேயே பேசி முடித்தார் சீமான்.
நன்றி
-தமிழ்ஸ்கைநியுஸ்
விரைவில் விபரீதத்தை அறுவடை செய்வீர்கள் - வைகோ
3 comments
”இலங்கையில் தடுப்புமுகாம்களில் இராணுவத்தின் படியில் உள்ள அப்பாவித் தமிழர்களைவிடுவிக்க வேண்டும்” என்று ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ பேசினார்.
விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டதில் பேசிய வைகோ மேலும் கூறியது, ”இலங்கையில் அனைத்து விடுதலைப்புலிகளையும் அழித்து விட்டதாக கூறும் ராஜபக்செ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆபத்துக்கு விதை விதைத்துள்ளீர்கள் விரைவில் விபரீதத்தை அறுவடை செய்வீர்கள். தமிழர்கள் உணர்வற்றுப் போய்விடவில்லை. இந்திய அரசுதான் இலங்கை இனப்படுகொலைக்கு காரணம் இந்திய அரசுதான் ஆயுதம் வழங்கி, போராட்டத்தை நடத்தியது.
ஈழத்தமிழர்கள் விடுதலைக்காக பாடுபடுபவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் அடைக்கலம் கொடுத்து சோறு போடுவோம்.
அண்டை நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு உதவும் பிரதமர் இந்தியாவின் ஒருமைப்பாட்டை குலைத்துவிட வேண்டாம்.
தமிழ் ஈழம் அமைய தமிழக இளைஞர்கள் உதவுவார்கள். பாலஸ்தீன விடுதலைக்காக குரல் கொடுத்த இந்தியா, இலங்கை தமிழர்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை?
தேர்தலுக்காகவும், பதவிக்காகவும் கட்சி நடத்துபவர்கள் அல்ல நாங்கள். என் உடலில் வலு உள்ளவரை ஈழத்திற்காக பேசுவேன்.
ஈழத்தமிழர்கள் துன்பம் தொடர்ந்தால் தமிழ்நாட்டிலும் பிரச்சனை தொடங்கும்.” என்றார் வைகோ.
நன்றி
-தமிழ்செய்தி இணையம்
ஈழ தமிழரைவிட மோசமான நிலையில் தமிழக பிராமணர்கள்
10 comments
"எனக்கு யாராவது பணம் கொடுத்து உதவி பண்ணத் தயாரா இருந்தா பிராமணர்களுக்காக கட்சி நடத்தத் தயார்", என்று நடிகரும் அதிமுக சார்பில் எம்எல்ஏவாகி இப்போது தனித்து இயங்குபவருமான எஸ்வி சேகர் கூறினார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்
இப்போது எந்தக் கட்சியையும் சாராதவனாகவே நான் உள்ளேன். பல கட்சிகளில் சேருமாறு என்னை அழைத்தார்கள். ஆனால் எனக்கு உடன்பாடில்லை.
இப்போது பிராமண சமுதாயத்துக்கு தொண்டு செய்ய புதிய கட்சியைத் துவங்குமாறு பலர் வற்புறுத்தி வருகிறார்கள்.
நான் தலைமை ஏற்க தயார். ஆனால் கட்சி நடத்துவது சாதாரணமா... அதற்கு தலை இருந்தால் மட்டும் போதாது. பெரிய அளவு பணமும் ஆள் பலமும் தேவை. அதை சமுதாயத்தில் உள்ளவர்கள் செய்து கொடுத்தால் கட்சி ஆரம்பிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. யாராவது பணம் கொடுத்து கட்சி ஆரம்பிக்க பக்கபலமா இருந்தா நான் ரெடி.
புதுக் கட்சிக்கு 'அகில இந்திய ஆர்ய முன்னேற்ற கழகம்', மற்றும் 'ஆர்ய முன்னேற்ற கழகம்' என இரு பெயர்களைத் தேர்வு செய்து வைத்துள்ளோம். கட்சி தொடங்குவதா? இல்லையா? என்பதை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவு செய்து விடுவோம். ஆதரவாளர்களுடன் கலந்து பேசிக்கொண்டு இருக்கிறேன்.
ஈழ தமிழரைவிட மோசமான நிலையில் பிராமணர்கள்:
பிராமணர்கள் என்றாலே, அவங்களுக்கென்ன உயர்ந்த சாதிக்காரர்கள் என்ற உணர்வு பலருக்கும். உண்மையில் பிராமணர்கள் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளனர். அவர்களுக்கும் இட ஒதுக்கீடு அவசியம்.
தமிழக பிராமணர்கள் ஈழத் தமிழர்களை விடமோசமான நிலையில்தான் உள்ளனர். இலவச கலர் டி.வி. பெட்டிகூட எங்களுக்கு தர மறுக்கிறார்கள். புது கட்சி துவங்கினால் அது ஆர்யர்கள் முன்னேறத்துக்காகவும், ஆர்ய-திராவிட ஒற்றுமைக்காகவும் பாடுபடுவதாக இருக்கும்.
பிராமணர்கள் கட்சி ஆரம்பிப்பதும், ஆரம்பிக்காததும் தமிழக அரசியல் கட்சிகள் கையில் உள்ளது. ஒவ்வொரு கட்சியும் தலா 5 தொகுதிகளை பிராமணர்களுக்கு ஒதுக்க முன்வந்தால் நாங்கள் ஏன் கட்சி தொடங்கப் போகிறோம்.
தந்தை பெரியார் சொன்னது போல் எல்லா சமூகத்தினருக்கும் சமமான பங்களிப்பு வேண்டும். பிராமணர்களுக்காக நான் துவங்கிய அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. மீண்டும் சொல்கிறேன், பண பலமும், ஆட்கள் பலமும் சரியாக அமைந்தால் கட்சி துவங்குவேன்.
12 தொகுதிகளில் ஜெயிக்க கூடிய அளவு நாங்கள் பலம் வாய்ந்தவர்களாக உள்ளோம். குறைந்தது 5 எம்.எல்.ஏக்களாவது எங்கள் சமூகத்தின் சார்பில் சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும். அதற்கு ஆதரவான கட்சிகளுடன் இணக்கமாக செல்வோம்.
எங்களிடம் 20 லட்சம் ஓட்டுக்கள் உள்ளன. போன தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளின் வெற்றி வித்தியாசமே 15 லட்சம் ஓட்டுகள்தான். பிராமணர் ஓட்டுக்களை ஆதரவு ஓட்டுக்களாக மாற்ற திமுக எந்த முயற்சியும் எடுக்காமல் உள்ளது. அதிமுக ஏற்கெனவே அந்த ஆதரவை இழந்துடுச்சி.
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் பிராமணர்களுக்கும், உள்ஒதுக்கீடு வேண்டும். இந்த விஷயத்தில் எங்கள் குறைகளை கேட்க குறைந்தது ஒரு கமிட்டி கூட போடாதது வருத்தம் அளிக்கிறது என்றார் எஸ்வி சேகர்.
நன்றி
-தட்ஸ்தமிழ்
இலங்கைக்கு இந்தியா ஆதரவளித்தால் - டி.ராஜா
0 comments
இலங்கையின் உள்விவகாரங்களில் அனைத்துலக நாடுகள் தலையிடக்கூடாது எனும் தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் முன்வைக்கவுள்ளதனை இந்தியா ஆதரிக்கக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையின் உள்விவகாரங்களில் அனைத்துலக நாடுகள் தலையிடக்கூடாது எனும் தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் முன்வைக்கவுள்ளதனை இந்தியா ஆதரிக்கக்கூடாது.
அதனை இந்தியா ஆதரித்தால் அது தமிழ் மக்களை கைவிட்டதாகவே கொள்ளப்படும். சிறிலங்காவுக்கு எதிரான போர் குற்றச்சாட்டுக்களை ஏனைய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முன்வைப்பதற்கு எதிராகவே சிறிலங்கா இந்த தீர்மானத்தை முன்வைக்க உள்ளது.
இறுதியாக நடைபெற்ற போரில் பாரிய போரியல் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சிறிலங்கா மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
சிறிலங்காவுக்கு இந்தியா ஆதரவளித்தால் அது சிறிலங்கா அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆதரிப்பதாகவே கொள்ளப்படும் என்றார் அவர்.
சிறிலங்கா தொடர்பான சிறப்பு விவாதம் ஒன்றை ஐ.நா.வின் மனித உரிமை ஆணைக் குழு நாளை மேற்கொள்ள உள்ளது.
47 அங்கத்துவர்களை கொண்ட சபையின் 17 அங்கத்துவ நாடுகளின் வேண்டுகோள்களைத் தொடர்ந்தே இந்த விவாதம் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி
-புதினம்
கவிஞர் தாமரை அவர்களின் பரபரப்பான பேட்டி - வீடியோ
1 comments
சிவாஜி டிவி மூலம் தாமரை அவர்கள் வழங்கிய உணர்ச்சி மிக்க நேர்காணல்
ஈழதமிழர் மீது நடத்தப்படும் தாக்குதலை எதிர்த்து சீறி பாயும் கேள்வி கனைகள்.
பாகம் 1 லிருந்து 8 பாகம் கொண்டது.
பேட்டி பார்க்க இதை கிளிக் செய்யவும்.
நன்றி
-சிவாஜி டிவி
"பிரபாகரனைப் பிடித்து நாடுகடத்தமாட்டார்களா" - பிரணாப் முகர்ஜி
0 comments
புலிகளின் தலைவர் பிரபாகரனை இலங்கை அரசாங்கம் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடுகடத்தாதா என தாம் ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்த்து காத்திருந்ததாக பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். நீயூ டெல்லி டெலிவிசன் என்றழைக்கப்படும் NDTV க்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்திரா காங்கிரஸின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜின் இக் கருத்துக்கள் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. இலங்கையில் சமாதானம் மலரவேண்டும் எனக் கூறி பல தடவை விஜயம் மேற்கொண்ட முகர்ஜி, மற்றும் ராஜீவ் காந்தியின் கொலையை மன்னித்துவிட்டதாக கூறும் காங்கிரஸ் தரப்பினர் மத்தியில் கபடநாடகத்தில் ஈடுபட்டிருந்திருக்கிறார் முகர்ஜி. தமிழர் விரோதப் போக்கை கடைப் பிடிக்கும் காங்கிரசிற்கு தமிழ் நாடு தகுந்த பதிலடிகொடுக்கும் என்பதில் ஜயமில்லை.
நன்றி
அதிர்வு.காம்
news.webindia123.com
spot.lk
நல்ல செய்தி விரைவில் கிடைக்கும்: பா.நடேசன் நம்பிக்கை!
0 comments
தமிழ்நாட்டு மக்கள் எதிர்வரும் புதன்கிழமை (13.05.09) நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தெளிவான செய்தியை தெரிவிப்பார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வலுவான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்தியாவில் இருந்து வெளியாகும் 'த வீக்' ஆங்கில இதழின் ஊடகவியலாளர் கவிதா முரளிதரனுக்கு பா.நடேசன் வழங்கிய நேர்காணலின் தமிழ் வடிவம் வருமாறு:
தற்போதைய நிலமை தொடர்பாக நீங்கள் தெரிவிக்கும் கருத்து என்ன?
உலகின் சில பெரிய சக்திகளின் துணையுடன் இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்த முயல்வது, இந்தத் தீவில் அமைதியையும், உறுதித்தன்மையையும் ஏற்படுத்தாது. எமது மக்களின் உரிமைகள் பெறப்படும் வரை எமது போராட்டம் தொடரும்.
இப்போது - தமிழ் மக்கள் சிறிலங்கா அரசின் விரைவுபடுத்தப்பட்ட இன அழிப்பு போருக்கு இலக்காக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா அரசு தமிழ் மக்களை அவர்களின் தாயகத்தில் இருந்து தொடர்ந்து வெளியேற்றி வருவதன் தொடர்ச்சியே இது.
விடுதலைப் புலிகளின் தலைவருக்கு சுகவீனம், விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுவிட்டனர் என வெளியாகும் தகவல்கள் உண்மையா?
இன்றைய போரானது பல மட்டங்களில் நடைபெற்று வருகின்றது. தமிழீழ மக்களின் மனிதாபிமான அவலங்களுக்கு இந்திய மக்களிடத்தில் இருக்கும் ஆதரவை மழுங்கடிக்கும் செயல்களில் சில ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. களமுனை தகவல்களை பொறுத்தவரையில் கூட, இராணுவத்தால் பரப்பப்படும் வதந்திகளுக்கு சில ஊடகங்கள் நம்பகத்தன்மையை ஊட்ட முனைகின்றன.
இலங்கையின் தற்போதைய நிலமையில் இந்திய தேர்தலின் தாக்கம் எவ்வாறு இருக்கும்?
வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் - ஈழத் தமிழ் மக்கள் இந்திய மக்களின் மிக நெருங்கிய நண்பர்களே. யார் ஆட்சி அமைத்தாலும் இது உறவு எப்போதுமே இப்படித்தான் இருக்கும். ஆனால் தற்போது வன்னியில் எற்பட்டுள்ள மனிதப் பேரவலத்தை இன்றைய இந்திய மத்திய அரசு புறக்கணித்து வருவது வேதனையானது.
இதற்கிடையில் - இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் வலுவான இராணுவ ஒத்துழைப்பு உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. தமிழ் மக்களின் அரசியல் அவாக்களை நிறைவுசெய்யும் ஒரு மாற்றத்தை இந்த தேர்தல் கொண்டுவரும் என நாம் நம்புகின்றோம்.
இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற கருணாநிதியின் வாதத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?
நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டு மக்கள் தான் தமிழீழ மக்களின் நம்பிக்கையும், பலமும். தமிழக மக்கள் இதனை நன்கே அறிவார்கள். காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசு சிறிலங்கா அரசுக்கு இராணுவ ஒத்துழைப்புக்களை வழங்கி அதன் தமிழின அழிப்பு போருக்கு உதவி வருவதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
எதிர்வரும் மே 13 ஆம் நாள் நடைபெறப்போகும் தேர்தலில் ஈழத்தமிழ் மக்களோடு தாம் சேர்ந்திருக்கும் செய்தியை தமிழக மக்கள் தெளிவாகத் தெரிவிப்பார்கள் என்பது எனது வலுவான நம்பிக்கை.
தனி ஈழம் தான் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என செல்வி ஜெ. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். உங்களின் பார்வை என்ன?
இதனைத்தான் ஈழத் தமிழ் மக்களும் உலகு எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களும் கேட்பதற்கு வேண்டி நின்றார்கள். தற்போது ஜெயலலிதா அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் சிறிலங்கா அரசிற்கும், அனைத்துலக சமூகத்திற்கும் தெளிவான செய்தியை வழங்கியிருக்கும். அதாவது, ஈழத் தமிழ் மக்கள் தனித்து விடப்படவில்லை என்பதே அந்த தகவல்.
ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து உங்களின் கருத்து என்ன?
ஈழத் தமிழ் மக்கள் சந்தித்துவரும் அழிவுகள் கடந்த சில மாதங்களாக மோசமடைந்து வருகின்றன. தி.மு.க.வும், கலைஞர் கருணாநிதியும் தமிழ் மக்களின் மீது அக்கறை உள்ளவர்கள் தான். ஆனால், அறிக்கைகளும், பேச்சுக்களும், தேர்தல் வாக்குறுதிகளும் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்துவிடவில்லை. இதுவரை காலத்தில் - தன்னால் ஆக்கபூர்வமான காரியங்களைச் செய்திருக்க முடியும் என்பது கலைஞருக்கு நன்றாகவே தெரியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
போர் நிறுத்தம் வேண்டி கருணாநிதி மேற்கொண்ட உண்ணாநிலைப் போராட்டம் தொடர்பான உங்களின் பார்வை என்ன?
ஏப்ரல் 27 ஆம் நாள் இரவில் இருந்து மறுநாள் காலை வரை சிறிலங்கா இராணுவம் 5,000-க்கும் அதிகமான பீரங்கிக் குண்டுகளை மக்கள் வாழும் 'பாதுகாப்பு வலய' பகுதி மீது வீசித் தாக்கியது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் இதில் கொல்லப்பட்டுள்ளதுடன், 1,500-க்கும் அதிகமானோர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஆகவே, இது தொடர்பில் நான் வேறு எதுவும் கூறுவதற்கு இல்லை.
தமிழ் மக்களை சிறிலங்கா இன அழிப்புக்கு உட்பட்டுத்துவதாக பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ் பொப் பாடகி எம்.ஐ.ஏ. வெளிப்படையாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?
அவர் எமது மண்ணின் குழந்தை, உலகு எங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழ் மக்களில் மிகவும் திறமையுள்ள இளம் உறுப்பினர்களில் ஒருவர். அவர் தொடர்பாக நாம் பெருமையடைகின்றோம். அவரின் ஆதரவு ஈழத் தமிழ் மக்களுக்கு பலம் சேர்க்கும் வலுவான காரணிகளில் ஒன்று.
சிறிலங்கா அரசின் வலிமை மிக்க எல்லா பிரச்சார சாதனங்களும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை அழிப்பதிலேயே முனைப்பாக செயற்படுகின்றன. இருந்த போதும் மனிதநேயம் கொண்ட அவரின் இதயம் தான் தமிழ் மக்கள் படும் துன்பம் தொடர்பாக அவரை பயமின்றி பேசவைத்துள்ளது என்றார் பா.நடேசன்.
நன்றி
-புதினம்
சிதம்பரத்தின் மீது மரக்கட்டை வீச முயற்ச்சி!
3 comments
காரைக்குடி அருகே இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்ட கூட்டத்தில் “தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களை வாழ்த்தியும், இலங்கை பிரச்சனைக்கு முடிவு என்ன, இலங்கைத் தமிழர்களுக்கு பதில் சொல்” என்றும் இளைஞர் ஒருவர் முழக்கமிட்டதால், அங்கிருந்த மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது.
முழக்கமிட்ட வாலிபர் சிதம்பரத்தை நோக்கி மரக்கட்டை ஒன்றைத் தூக்கி எறிந்த போதிலும், அது அவர் மீது படாத போதிலும் சிதம்பரம் பதற்றமடைந்திருந்தார்.
சிவகங்கை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ப.சிதம்பரம் தனது பரப்புரையை தொடங்கி உரையாற்றிக் கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து 35 அகவையுடைய சாயல்ராம் என்ற குற்றிப்பிட்ட நபரை தமிழ்நாடு காவல்துறையினர் மடக்கிப்பிடித்துக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தமிழின உணர்வாளர் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் அவர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நன்றி
-பதிவு.காம்
இந்திய அரசுக்கு வைகோ பகிரங்க சவால்!!!
0 comments
இலங்கையில் போரை நிறுத்து என்று இந்தியா வலியுறுத்தியது உண்டா? ஒரு முறை கூட சொல்லவில்லை. இந்திய அரசு, இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் குறித்து பேசினேன் என்று சொல்லட்டும் நான் அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன். என ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
வடசென்னை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனை ஆதரித்து ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சென்னை பெரவள்ளூரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளில் இருந்தும் மே 16-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். மக்கள் அளிக்கும் இந்த தீர்ப்பு இந்தியாவின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கும்.
நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த இடத்தில்தான் தியாகி முத்துகுமாரின் உடல் வைக்கப்பட்டு இருந்தது. இந்த வழியாக தான் அவரின் இறுதி ஊர்வலம் சென்றது. என் வாழ்வில் பார்த்திராத மக்கள் சோகத்தை அன்று பார்த்தேன். இதுவரையில் இலங்கை தமிழர்களுக்காக 16 பேர் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள்.
இலங்கையில் இன்றும் போர் நடந்து வருகிறது. அங்கு போர் நிறுத்தப்படவில்லை. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இலங்கையில் போரை நிறுத்து என்று இந்தியா வலியுறுத்தியது உண்டா? ஒரு முறை கூட சொல்லவில்லை. இந்திய அரசு, இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் குறித்து பேசினேன் என்று சொல்லட்டும் நான் அரசியலை விட்டே விலகி கொள்கிறேன். எல்லாம் பொய், பித்தலாட்டம்.
தமிழர்களை அழிக்க சோனியாகாந்தி முயற்சி செய்து வருகிறார். இலங்கையில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கீறி சிசுக்களை எடுத்து தெருவில் வீசுகின்றனர். இந்த கொடிய செயல்களை அவர்கள் நிறுத்த சொல்லவில்லை. தமிழர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இது பற்றி வெளியே பேசக்கூடாதா?
எங்கள் அணி வெற்றி பெற்றால் தனி ஈழம் அமைப்போம் என்று சகோதரி ஜெயலலிதா கூறியிருக்கிறார். அவர் சொன்னால் கண்டிப்பாக செய்வார்.
இலங்கை தமிழர்களுக்காக நாங்கள் எத்தனையோ தியாகங்களை செய்திருக்கிறோம். விடுதலைபுலிகளிடம் நாங்கள் பணம் வாங்குவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
ஈழத்தமிழர்களுக்காக பாடுபடும் எங்களை பார்த்தா சொல்வது? ஒரு துறவியை போல் வாழும் பழ.நெடுமாறனை பார்த்தா அப்படி சொல்வது?
பிரபாகரனை நெருங்க முடியாது. விடுதலைப்புலிகளை யாராலும் அழிக்க முடியாது. நல்ல ஆட்சியை மலர செய்து ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்போம்.
ராஜீவ்காந்தி அரசு ஊழலாலே கவிழ்ந்தது. இப்போதும் காங்கிரஸ் ஆட்சியில் அது தானே நடந்து வருகிறது என்று பேசினார்.
நன்றி
-தமிழ்வின்
கருணாநிதியின் குடும்ப அரசியல் முடிவு பற்றி - அன்புமணி
0 comments
முதல்வர் கருணாநிதியின் குடும்ப ஆட்சி மே 13-ந் தேதியுடன் முடிவுக்கு வந்துவிடும் என்று பாமகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதியின் குடும்ப ஆட்சி மே 13-ந் தேதியுடன் முடிவுக்கு வந்துவிடும் என்று பாமகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் தன்ராஜை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் நேற்று தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற் கொண்டார்.
சின்னசேலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்துக்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு எம்எல்ஏ தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் குணசேகர் வரவேற்றார். எம்எல்ஏக்கள் செந்தமிழ் செல்வன், காவேரி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அய்யப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:- கருணாநிதி தலைமையில் நடைபெறும் குடும்ப அரசியலை வருகிற 13-ந் தேதியுடன் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இலங்கையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். கை, கால் இழந்து கொடூரமாக கிடக்கும் காட்சி மிகவும் பரிதாபத்துக்குரியது.
காலையில் டிபன் சாப்பிட்டுவிட்டு மதியம் உணவு சாப்பிட வீட்டுக்கு சென்றவர் உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தினார். போர் நிறுத்தம் செய்யப் பட்டதாக கருணாநிதி கூறிய அன்றே, 272 தமிழர்களை ராஜபக்ஷே கொன்று குவித்தார். தி.மு.க. ஆட்சியில் மணல் கொள்ளை, அரிசி கொள்ளை மண்ணெண்ணை கொள்ளை சர்க்கரை கொள்ளை நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட 2 ஏக்கர் நிலம், இலவச கலர் டி.வி. எரிவாயு அடுப்பு யாருக்காவது கிடைத்தா? இல்லை.
நான் மத்திய மந்திரியாக இருந்தபோது தமிழகத்தின் சுகாதாரத்துக்காக ரூ.4 ஆயிரம் கோடியை ஒதுக்கினேன். இதில் ரூ. 2,500 கோடி கிராமப்புற சுகாதாராத்துக்காக ஒதுக்கினேன் கிராமத்தில் மருத்துவ வசதியை ஏற்படுத்த டாக்டர் பட்டம் முடித்தவர்கள் ஒரு வருடம் கிராமங்களில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்று சட்டம் இயற்றினேன்.
இதை எதிர்த்த கருணாநிதி, மருத்துவ மாணவர்களை தூண்டிவிட்டு அந்த சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்தார். இவ்வாறு கருணாநிதியின் மீது ஏற்பட்டுள்ள வெறுப்பு, கோபம், ஆத்திரத்தை வருகிற 13-ந் தேதி நடைபெறும் தேர்தலில் திமுக அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
கள்ளக்குறிச்சியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தன்ராஜை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். தமிழகம் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெலலிதாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அவர் யாரை நோக்கி கைகாட்டுகிறாரோ அவர்தான் பிரதமர். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நகர செயலாளர் பாபு ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர். வைத்தியலிங்கம் பாமக மாவட்ட செயலாளர் பச்சையப்பன் , நகராட்சி தலைவர் அழகுவேல் முன்னாள் எம்.எல்.ஏ க்கள் கலிதீர்த்தான் . காசாம்பு பூமாலை பா.ம.க. மாவட்ட அமைப்பு செயலாளர் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
நன்றி
-செய்தி.காம்
தனி ஈழம் அமைத்து கொடுப்பேன் ஜெயலலிதா பேச்சு - வீடியோ
0 comments
இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்திய தேசத்திற்கு விரோதமான செயல் அல்ல என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள திருப்பூரில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கைத் தமிழர் பிரச்சினையில், எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றி வந்த கருணாநிதி, இன்று ஒரு உண்ணாவிரத காட்சியையும் அரங்கேற்றி முடித்திருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையை நடத்துவதே இந்திய இராணுவம் தான் என்ற குற்றச்சாட்டை உலகெங்கும் இருக்கும் தமிழர்களும், பல்வேறு அமைப்புகளும் தெரிவித்து வரும் நிலையில், கருணாநிதி இன்று நடத்திய உண்ணாவிரத நாடகம் யாருடைய கவனத்தை ஈர்க்க? அல்லது யாரை ஏமாற்ற? உறுதியான நடவடிக்கை எடுக்கிறோம் என்று மத்திய அரசு தனக்கு வாக்குறுதி அளித்ததால், உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக கருணாநிதி கூறி இருக்கிறார்.
என்ன உறுதியான நடவடிக்கை? எப்போது அந்த நடவடிக்கை? இத்தனை நாளாக ஏன் இல்லை அந்த நடவடிக்கை?.
இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்திய தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இந்திய இராணுவம் தங்களுக்கு இந்தப் போரில் என்னென்ன உதவிகளைச் செய்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.
இலங்கையின் வடபகுதியில் போர் நடைபெறும் இடங்களில் உள்ள விமானத் தளங்களை இந்திய இராணுவம் தான் செப்பனிட்டுத் தந்தது. தற்காப்பு ஆயுதங்கள் அனைத்தும் இந்திய இராணுவத்தால் தரப்பட்டன. போர் பகுதியில் உளவு வேலைகளை செய்யத் தேவையான நவீன கருவிகள் எல்லாம் இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு கொடுத்தது.
வடக்கு இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பற்றிய அடிப்படை பூகோள தகவல்கள், அதாவது Geographical விவரங்கள் இலங்கை இராணுவத்திடம் இவ்வளவு காலமும் இல்லாமலேயே இருந்தது. அதனால் தான் தமிழர் பகுதிகளில், அதாவது வவுனியா, முல்லைத்தீவு, வன்னிக் காடுகள் போன்ற பகுதிகளில் இலங்கை இராணுவத்தால் இவ்வளவு காலமும் முன்னேறிச் செல்ல முடியவில்லை.
இப்பொழுது, இந்தப் போரில் தான் இலங்கை இராணுவம் இந்திய இராணுவம் அளித்த புலனாய்வு உதவியோடு தமிழர் பகுதிகளைப் பற்றிய பூகோள விவரங்களைப் பெற்று முன்னேறிச் சென்றிருக்கிறது. இலங்கை இராணுவத்தின் எல்லா முன்னேற்றத்திற்கும் இந்திய இராணுவத்தின் உதவி தான் அடிப்படை என்பது உலகறிந்த உண்மை.
இந்தியாவில் இலங்கை இராணுவ வீரர்கள் படை பயிற்சி பெற்றார்கள் என்று இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு இந்தப் போரை நடத்த அளித்த ஒவ்வொரு உதவியையும் பட்டியலிட்டு தெரிவித்தார் கோத்தபாய ராஜபக்ச.
இலங்கை இராணுவத்திற்கு இந்தியா இராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது. ஆயுதங்களையும் அளிக்கக் கூடாது என்று நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறி வந்திருக்கிறேன். பல பத்திரிகைகளில், என்னுடைய வேண்டுகோள் வெளியானது.
பல பத்திரிகைகள் இலங்கை அரசுக்கு இந்திய அரசு செய்யும் இராணுவ உதவிகளை புலனாய்வு செய்து கண்டுபிடித்து செய்தி வெளியிட்டன. அப்போதெல்லாம், மத்திய அரசிடம் இராணுவ உதவிகளை இலங்கைக்கு செய்யாதீர்கள் என்று வலியுறுத்தாத கருணாநிதி, இன்றைக்கு லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் அரசு முகாம்களில் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில், இந்த உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது?.
இலங்கைப் போரில் மத்திய அரசின் ஈடுபாடு இன்று எல்லோருக்கும் தெரிந்துவிட்ட நிலையில், தேர்தல் களத்தில் காங்கிரசோடு கைகோர்த்து நின்றால், தனக்கு ஏற்படப்போகும் அவமானகரமான தோல்வியை நினைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்ப கருணாநிதி இன்றைக்கு ஒரு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.
இலங்கைத் தமிழர்களை காக்க தனி ஈழம் தான் ஒரே தீர்வு. தனி ஈழம் அமைத்தே தருவேன் என்று நான் பேசியதற்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச, இந்திய அரசு தங்களுக்குச் செய்த உதவிகளையெல்லாம் பட்டியலிட்ட போது, கருணாநிதி அதைக் கண்டுகொள்ளவில்லையே! ஏன்?.
வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி, இந்தியாவில் இருந்து தூதுவர்களை ராஜபக்சவுடன் பேச்சு நடத்த கடந்த வாரம் அனுப்பினார்களே, அவர்கள் ஏன் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யவில்லை? போரை நடத்துவதே இவர்கள் தானே!
எனவே தான் சொல்லுகிறேன், போரை நடத்தும் அரசாங்கம் கருணாநிதி பங்கேற்றிருக்கும் இந்திய மத்திய அரசாங்கம். இன்றைக்கு திடீரென்று கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது தமிழக மக்களை ஏமாற்றத் தான்.
தேர்தல் களத்தில் ஈழப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவாகி இருப்பதால், மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க கருணாநிதி நடத்திய மோசடி செயல் திட்டம் தான் இந்த உண்ணாவிரதம்.
இன்று அதிகாலை 4:00 மணியில் இருந்து தமிழர்கள் வாழும் பகுதிகள் மீது இலங்கை இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 6:00 மணி நேரம் நடைபெற்ற அந்தக் கொடூரத் தாக்குதலை இந்த உண்ணாவிரத நாடகம் உலகின் பார்வையில் இருந்து மறைத்துவிட முடியாது.
மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய உதவிகளை இந்த நேரத்தில் கூட இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்காக அறிவிக்கவில்லை. சார்க் அமைப்பின் சக உறுப்பு நாடான இலங்கையை தனது செல்வாக்கைக் கொண்டு நிர்பந்தித்திருக்க வேண்டிய இந்தியா, தமிழர் நலனில் பாரா முகமாக இவ்வளவு காலமும் இருந்துவிட்டது. அந்தக் களங்கத்தைப் போக்க கருணாநிதி நடத்தும் இந்த நாடகம் ஈழத் தமிழர்களுக்கு எந்தப் பயனையும் தராது.
மாறாக, கருணாநிதி மத்திய அரசை நிர்ப்பந்தித்து உடனடியாக இலங்கைத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய்யட்டும். இந்தியாவில் இருந்து யாரையெல்லாம் அனுப்பி இலங்கையில் மக்களுக்கு உதவ முடியுமோ அவர்களையெல்லாம் அனுப்பட்டும். இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்துத் தருவேன் என்று பிரகடனம் செய்ததற்காக என் மீது சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்சவின் இராணுவச் செயலாளர் கடும் கோபம் கொண்டு பதில் அளித்திருக்கிறார்.
இலங்கையில் இல்லாமல் வேறு எங்காவது ஜெயலலிதா ஈழம் அமைக்கட்டும் என்று கோத்தப்பாய ராஜபக்ச கூறி இருக்கிறார். ஈழத் தமிழர்கள் அவர்கள் மண்ணிலேயே ஈழம் காண்பார்கள். அவர்கள் அன்னை பூமி அது. அவர்களது உரிமை பூமி அது.
இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி ஈழம் அமைப்பேன். அங்கு இப்போது அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக எல்லா உதவிகளையும் செய்வது நாங்கள் அமைக்க இருக்கும் மத்திய அரசின் தலையாய கடமையாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னதைப் பற்றி காங்கிரஸ் மத்திய மந்திரி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கபில்சிபில், இது தேச விரோத கருத்து, தேசவிரோத செயல், பொறுப்பற்ற செயல் என்று கூறி இருக்கிறார்.
கபில்சிபிலுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தனி ஈழம் அமைப்போம், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொன்னது எந்த இந்திய சட்டத்திற்கு எதிரானது? இந்தியாவை துண்டாடி தனி ஈழம் அமைப்போம் என்று நான் சொல்லவில்லையே!
இலங்கையில் தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என்று தானே நான் சொன்னேன். அது எப்படி தேச விரோதச் செயலாகும். எந்த சட்டத்தில் அப்படி சொல்லக்கூடாது என்று இருக்கிறது. கபில்சிபிலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நான் சொல்லிக் கொள்வேன். தேசபக்தியில் எனக்கு நீங்கள் யாரும் பாடம் சொல்லித் தர தேவையில்லை. நான் அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் தேசியவாதி தான். எனது தேசப்பற்றில் குறை கண்டுபிடிக்க முடியாது. களங்கம் கற்பிக்க முடியாது.
கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் முடிந்த பிறகு, இலங்கை அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இலங்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் போர்நிறுத்தம் போர் விமானங்களை இனிமேல் பயன்படுத்தமாட்டார்களாம். பெரிய பீரங்கிகளை பயன்படுத்தமாட்டார்களாம். பெரிய துப்பாக்கிகளை பயன்படுத்தமாட்டார்களாம்.
இலங்கைத் தமிழர்கள் செத்துமடிவார்கள் என்பதற்காக அதை எல்லாம் நிறுத்தி வைத்துவிட்டார்களாம். ஆனால், அங்கே விடுதலைப் புலிகள் இலங்கைத் தமிழர்களை பிடித்து வைத்து இருக்கிறார்களாம். ஆகவே, விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக சிறிய ரக துப்பாக்கிகளை மட்டும் பயன்படுத்த போகிறார்களாம். இது என்ன நாடகம்? இது என்ன கேலிக்கூத்து? இதை எப்படி போர் நிறுத்தம் என்று சொல்ல முடியும்? இந்த அறிவிப்பை பார்த்து கருணாநிதி அவசர அவசரமாக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இந்தக் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
தன்னலம் மிகுந்த குடும்ப ஆட்சி, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஏற்பட்டுள்ள தீமைகளையும், அவலங்களையும், நீங்கள் எல்லாம் வேறு வழியின்றி, வேதனையோடு தாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றார் அவர்.
நன்றி
புதினம்.காம்
போருக்கு ஆயுத உதவி செய்வது இந்தியாதான் முகர்ஜி - வீடியோ
2 comments
சிங்கள் ராணுவத்திற்கும் , தனி நாடு கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும் கடந்த 30 வருடங்களாக நடந்து வரும் போரில் சில சமயம் ராணுவத்திற்கு பின்னடைவும் சில சமயம், விடுதலைபுலிகளுக்கு பின்னடைவும் ஏற்பட்டு கொண்டு இருந்தது. ஆனால் கடந்த வருடம் ஆரம்பத்தில் சிங்கள அரசாங்கம், ஒரு தலை பட்சமாக போர் நிறுத்த அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு விடுதலை புலிகளின் மீது போர் தொடுத்தது,
கடந்த வருடம் சனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்கை இரண்டு தரப்பிற்கு கடுமையான இழப்புகளை அடுத்து, விடுதலை புலிகளின் பெருவாரியான இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியது.
சிங்கள ராணுவத்தினை வழி நடத்துவது இந்தியாதான், அதற்கு பொருளாதார உதவி, ஆயுதம், போர் நுணுக்கம், உளவுத்துறை உதவி, போர் வீரர்கள் என பல விதத்தில் சிங்கள அரசுக்கு இந்திய உதவி செய்ததாக பத்திரிக்கையிலும் , தமிழக அரசியல் வாதிகள் கூறிவந்தனர்.
ஆனால் இதை டில்லி வாலாக்களும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்தனர். சில சமயங்களில் இந்தியாவின் பாதுகாப்பு மந்திரியான A.K அந்தொனியும் இந்தியா சிங்கள ராணுவத்திற்கு உதவில்லை , என்று கூறியிருந்தார். மேலும் இராணுவ அதிகாரிகள் தமிழகம் வரும் போதெல்லாம், ராணுவத்தை கொடுத்து உதவில்லை என்று அறிக்கைவிட்டு சென்றனர். இந்த நிலையில் சிங்கள ராணுவத்தில் இந்திய வீரர்கள் உள்ள தகவலை பல ஆங்கில பத்திரிக்கைகள் வெளியிட்டன.
(In the current war against Tamils in Sri Lanka, the Indian Army is the leader of assaults in the war zones of Sri Lanka.
The Sri Lankan army seems to following the lead of Indian Army closely under heavey guidance to root out Tamils and LTTE alike in the Tamils regions of Sri Lanka. * thanks nowpublic.com)
இதனை அடுத்து வெளியுறவு துறையும், பாதுகாப்பு துறையும் சேர்ந்து ஒப்பந்த படி நாங்கள் ஆலொசனைகள் தான் வழங்கினோம், கனரக ஆயுதங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்று சொல்லி வந்தது.
தற்சமயம் புலிகளை மிகவும் குறைந்த பரப்பளவிற்கு நெருக்கிவிட்டது. மேலும் உலக அளவில் நெருக்கடிக்கு இந்தியா , சிங்கள அரசாங்கம் இரண்டுமே ஆளாகிவிட்டது.
இந்த ஒரு சூழ்நிலையில் சிங்கள் ராணுவத்தில் இந்தியாவின் பங்கு பற்றி என்.டி.டி.விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரனாப் முகர்ஜி பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
சிங்கள ஆரசாங்கம் எங்களது நன்பர்கள், அவர்களுக்கு உதவ வேண்டியது எங்களது கடமை, மேலும் தெற்காசியாவில் தீவிரவாத செயல்களை அடக்கும் பணியில் நாங்களும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு உண்டு. போராளிகளால் இந்தியாவிற்கும் அச்சுருத்தல்கள் உண்டு இதன் காரணமாக நாங்கள், ஆயித உதவிகள் வழங்கி வந்தோம்.இதனிடையில் புலிகளுக்கு சில அமைப்புகள் பெரிய அளவில் கனரக ஆயிதங்கள், மற்றும் தொழில் நுட்ப உதவிகள் வழங்குவது பற்றி எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனால் சிங்களராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதோடு, எங்களுக்கு(இந்தியாவிற்கும்) எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இந்த காரணத்தினால் இந்தியா நேரடியாக போராளிகளுடன் போரிடவேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது. நாங்கள் தீவிரவாத செயல்களை முடக்கு ஒரு நடவடிக்கையாகத்தான் இந்த போரைவழிநடத்தினோம். ஆப்கான் மற்றும் ஈராக்கில் அமேரிக்க ராணுவம் மூக்கை நுழைக்கம் என்றால் நாங்கள் எங்கள் அருகில் உள்ள நட்பு நாட்டின் தீவிரவாத செயல்களை நிறுத்த தீவிரநடவடிக்கைகளின் ஏன் ஈடுபடக்கூடாது
இவ்வாறு என்.டி.டி.விக்கு அளித்த ஒரு பேட்டியில் பிரனாப் முகர்சி சிங்கள போரில் இந்திய பங்கு பற்றி கூறினார்.
நன்றி
-வன்னிநெட்
"தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு" ஜெயலலிதாவின் பேச்சு - ஒலி வடிவம்
2 comments
சேலத்தில் பிரச்சாரக்கூட்டத்தில் "தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு" என்று சூளுரைத்த ஜெயலலிதாவின் உரை
இதுவரை இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டு தனி தமிழ் ஈழ மாநிலம் அமைக்க அதிமுக பாடுபடும் என்று கூறி வந்தார் ஜெயலலிதா. ஆனால் முதல் முறையாக தனி தமிழ் ஈழம் அமைக்க அதிமுக பாடுபடும், உருவாக்கியே தீரும் என்பது மிகப் பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.
இலங்கை பிரச்சினை சாதாரணமானது - ராகுல்காந்தி
7 comments
அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி இன்று கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘’விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது அப்பாவிகளை கொல்லும் இயக்கமாகும். அந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அது ஒரு தீவிரவாத இயக்கமாகும்.
முன்னாள் பிரதமரும் எனது தந்தையுமான ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது விடுதலைப்புலிகள்தான். அப்பாவி மக்களை அவர்கள் கொன்று வருகிறார்கள்.
இலங்கை பிரச்சினை மிகவும் சாதாரண ஒரு பிரச்சினை ஆகும். இலங்கை தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும். அவர்களுக்கு உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும்.
அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படக்கூடாது. இதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களின் உரிமைகள் கிடைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பாடுபடும். அவர்களின் துயரை துடைப்பதுதான் எங்களின் தலையாய கடமை, இதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபடும்’’ என்று தெரிவித்தார்.
நன்றி
-நக்கீரன்
நாஞ்சில் சம்பத் விடுதலை!!!
0 comments
மதிமுகவின் கொள்கை பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத், கடந்த மாதம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை பார்ப்பதற்காக அவரது மனைவி சிறைக்கு சென்றபோது அனுமதி மறுக்கப்பட்டது. இதை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்நிலையில் நாஞ்சில் சம்பத்தின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது கணவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் வைகோ நேரில் ஆஜராகி இரண்டு முறை வாதாடினார். இன்றும் அவர் நேரில் ஆஜராகி வாதாடினார். அப்போது, தேர்தல் பிரச்சார நேரத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார் நாஞ்சில் சம்பத். அவரை கைதில் எந்தவித நியாயமுமில்லை என்று வாதிட்டார்.
இவ்விவாதத்தை நன்கு கேட்டறிந்த நீதிபதி, நாஞ்சில் சம்பத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது. அவரை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.
நன்றி
- நக்கீரன்
ராமதாஸ் கடும் தாக்கு - கருணாநிதி தமிழின துரோகியாகிவிட்டார்
26 comments
தமிழினத் தலைவராகக் கூறப்படுகிறார் கருணாநிதி. ஆனால் இப்போது அவர் தமிழின துரோகியாகி விட்டார் என்று கடுமையாக சாடியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
சிதம்பரம் தொகுதி பாமக வேட்பாளர் பொன்னுச்சாமியை ஆதரித்து அங்கு நடந்த பாமக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசினார் டாக்டர் ராமதாஸ்.
பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக பெரும் அலை வீசுகிறது. புதுவை உள்பட 40 இடங்களிலும் திமுக பெரும் தோல்வியைச் சந்திக்கும். திமுகவினர் வெறும் பணத்தை நம்பியுள்ளனர். திருமங்கலம் தேர்தலில் நடந்தது போல் இந்த தேர்தலிலும் பணத்தை கொடுத்து செயல்பட எண்ணியுள்ளனர்.
திமுக அணிக்கு எதிராக அலைவீச ஆரம்பித்துவிட்டது. இது செயல்வீரர்கள் கூட்டத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் தெரிகிறது. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் பெரிதும் துரோகம் செய்துவிட்டது. அதற்கு திமுக துணை போயுள்ளது.
தமிழினத் தலைவர் என்ற பெயர் போய் தமிழினத் துரோகி என்று சொல்லும் அளவிற்கு நிலை மாறியுள்ளது. கருணாநிதி நினைத்திருந்தால் இலங்கைப் பிரச்சனையை நிறுத்தி இருக்க முடியும்.
கருணாநிதிக்கு கொடுத்த தமிழின துரோகி என்ற பட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென்றால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகி தனியாக போட்டியிட வேண்டும். அப்படி தனியாக போட்டியிட்டால் 40 தொகுதிகளிலும் திமுக தோல்வியடையும். காங்கிரசை விட்டு தனியாக வந்தால் ஆட்சி பறிபோய்விடும் என்ற பயம்.
நீலிக் கண்ணீர் வடிக்கும் கருணாநிதி..
இலங்கைப் பிரச்சனையில் நீலி கண்ணீரும், கபடம் நாடகமும் ஆடி வருகிறார் முதல்வர் கருணாநிதி.
எல்லா இடங்களிலும் திமுகவினர் தில்லுமுல்லு செய்ய ஆரம்பித்துவிட்டனர். எனவே அனைத்து தொகுதிகளுக்கும் மத்திய அரசின் தேர்தல் பார்வையாளர்கள் உடனே வரவேண்டும்.
திமுகவின் தேர்தல் பிரச்சாரமும், முதல்வர் பிரச்சாரமும் தரம் தாழ்ந்து போய்விட்டது. ஆங்கில பத்திரிகைகளில் எடுத்த கருத்துக் கணிப்பில் சிறப்பாக செயல்படும் முதல்வர்கள் பட்டியலில் கருணாநிதி 16வது இடத்தில் உள்ளார். தமிழக அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து போய்விட்டது.
சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் ஏழைகளின் நிலத்தை பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்த்து அரசு தரகு வேலை செய்கிறது. வேலை வாய்ப்புயில்லாத பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 52 லட்சம் இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். தமிழ்நாட்டு ஆறுகளில் மணல் இல்லை. வெளி மாநிலத்தவர்களுக்கு திமுகவினர் விற்றுவிட்டனர்.
இலங்கைப் பிரச்சனையில் அடிமை போல் உள்ளேன் என்று கருணாநிதி கூறியுள்ளார். 40 தொகுதிகளிலும் அதிமுக, பாமக வெற்றி பெற்று கருணாநிதியை அடிமைத் தனத்திலிருந்து மீட்டுவிடுவோம்.
தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பில்லை என்று மத்திய உளவுத் துறை அறிக்கை அனுப்பியுள்ளது.
திருமாவளவன் தவறான கூட்டணியில் சேர்ந்துள்ளார். தமிழக சட்டசபையில் திமுகவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால் பாமக அதை ஆதரிக்கும் என்றார்.
சிதம்பரம் மீது தாக்குதல்
இதற்கிடையே ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேர்தல் என்றதும் இப்போது ப.சிதம்பரத்திற்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை நினைவுக்கு வரத் தொடங்கியிருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடு குறித்து பாமக விமர்சிப்பது நியாயமா? என்றும் அமைச்சரவைக் கூட்டத்திலோ அல்லது வேறு பொருத்தமான இடத்திலோ கருத்து வேறுபாடுகளைத் தெரிவித்திருக்கலாமே என்றும் உபதேசம் செய்திருக்கிறார்.
ஆட்சியில் இடம் பெற்றிருந்தாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை ஒருபோதும் பாமக விட்டுக் கொடுத்ததில்லை.
இலங்கைத் தமிழர்களை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டிய பெற்றோர்கள் என்ற முறையிலும், தமிழர்களின் தொடக்கத் தாயகம் என்பதாலும், இனப் படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் நேரடியாக தலையிடுவதற்கான உரிமையும், கடமைப் பொறுப்பும், சட்டத் தகுதியும் இந்தியாவுக்கு இருக்கிறது என்பதை பிரதமரிடமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடமும் பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது.
நேரில் சந்தித்தும், கடிதங்கள் வாயிலாகவும், இதனை வற்புறுத்தியிருப்பதுடன், மக்களவையிலும், பாமக உறுப்பினர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஆக்கப்பூர்வமாக செயல்பட்ட பாமக மீது சிதம்பரம் இப்போது தேர்தலுக்காக வீண் பழி சுமத்த முற்பட்டிருக்கிறார்.
இலங்கைத் தமிழர் சிக்கல், கடந்த 4 ஆண்டுகள் 11 மாதங்களில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதப் பொருள்களில் ஒன்றாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறதா? எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தால் எந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது? விவாதப் பொருளாக என்ன விவாதிக்கப்பட்டது? அந்த விவாதத்தில் சிதம்பரத்தின் பங்களிப்பு என்ன?
இந்தச் சிக்கல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கே ஒருபோதும் வரவில்லை என்றால் ஏன் வரவில்லை? அமைச்சரவைக் கூட்டத்தில் இதை விவாதப் பொருளாகக் கொண்டு வருவதற்கு பொறுப்பான அமைச்சகம் எது? சம்பந்தப்பட்ட அமைச்சகம் ஏன் அதைச் செய்யத் தவறியது?
இலங்கைத் தமிழர் இனப் படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் நேரடியாகத் தலையிடுவதற்கான உரிமையும், கடமைப் பொறுப்பும், சட்டத் தகுதியும் இந்தியாவுக்கு இருக்கிறது. இந்த உரிமை எப்போதேனும் பயன்படுத்தப்பட்டுள்ளதா? இதுபற்றி அமைச்சரவைக் கூட்டத்திலாவது விவாதிக்கப்பட்டிருக்கிறதா?
இல்லை என்றால், தமிழகத்தைச் சேர்ந்த மிகவும் மூத்த மந்திரியும், நிதித்துறை, உள்துறை போன்ற முதன்மையான பதவிகளை ஏற்றவரும், அரசின் கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் அமைச்சரவைக் குழுக்களில் இடம் பெற்றவருமான சிதம்பரம் இதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்?
இலங்கை மீது சீனாவும், பாகிஸ்தானும் ஆதிக்கம் செலுத்தி வருவதால் அதன் மீது `செல்வாக்கு செலுத்தக்கூடிய ஆற்றல்' இந்தியாவுக்கு இல்லை என்று சிதம்பரம் சொல்லவில்லையா? இதன் மூலம் இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முழுத் தோல்வி என்று அவர் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லையா?
இந்தக் கொள்கையை வகுத்து, நிர்வகிப்பது யார்?- மத்திய அமைச்சரவையா? வெளியுறவு அமைச்சகமா? அல்லது குறுகிய கண்ணோட்டம் உடைய, பிறர் மீது நம்பிக்கையற்ற அதிகாரிகளா? மிகவும் மூத்த மந்திரி என்ற முறையில் சிதம்பரம் இதுபற்றி எப்போதாவது கவனம் செலுத்தியது உண்டா?
இலங்கைத் தமிழர் சிக்கல், வெகு தொலைவில் உள்ள இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் நாடாளுமன்றங்களில் எல்லாம் வாதிட்டு, விவாதிக்கப்படும் போது, அண்டை நாடான இந்தியாவின் நாடாளுமன்றத்தில் இதை அரசாங்கமோ, காங்கிரஸ் கட்சியோ ஏன் முன் வைத்து விவாதிக்கவில்லை? மக்களவையில் வினா நேரத்துக்குப் பிறகு பாமக உறுப்பினர்கள் மூலமாக இந்தச் சிக்கல் குறுகிய நேரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதும் கூட, சிதம்பரம் எங்கே போயிருந்தார்?
வெகு தொலைவில் இருக்கும் அமெரிக்காவில் நாடாளுமன்றக் குழு இலங்கைத் தமிழர்களின் மனிதப் பேரழிவு சிக்கல் குறித்து விசாரிக்கும் போது, இந்தச் சிக்கல் ஏன் ஒரு போதும் இந்திய நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவுக்கு கொண்டு செல்லப்பட்டு விவாதிக்கப்படவில்லை?
தொடர்ச்சியாகக் கோரிக்கைகள், மனுக்கள், சட்டப் பேரவைத் தீர்மானங்கள், அனைத்துக் கட்சித் தீர்மானங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழுக்கள், முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தூதுக்குழு, இப்படியெல்லாம் முறையிட்டும்கூட, இலங்கைத் தமிழர் சிக்கலில் அக்கறை இல்லாமலும், ஈடுபாடு இல்லாமலும் இந்திய அரசு அமைதியாக இருந்து வருகிறது.
உண்மையில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசும் அதன் படைகளும் நடத்திவரும் இனப்படுகொலைக்கும், இனவெறிப் போருக்கும் இந்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது என்ற கடுமையான குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
என்ன சொல்லப் போகிறார் சிதம்பரம்..
இலங்கைப் படைகளுக்குப் போர்ப் பயிற்சி அளித்தல், போர்க் கருவிகள் வழங்கிப் பராமரித்தல், ரேடார் இயக்குதல், விமானம் மூலம் வேவு பார்த்துக் கண்காணித்தல், உளவுத் தகவல்களை வழங்குதல், கடற்படை மூலம் முற்றுகை முதலியவை அதில் அடங்கும். இந்திய அரசு இவை எதையும் மறுக்கவில்லை. இதுபற்றி சிதம்பரம் என்ன சொல்கிறார்?
இப்படியெல்லாம் சிதம்பரத்தை நோக்கி எண்ணற்ற கேள்விகளை எழுப்ப முடியும். இவற்றுக்கெல்லாம் சிதம்பரம் என்ன பதிலளிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
நன்றி
-தட்ஸ்தமிழ்
பழ. நெடுமாறனின் அதிரடி தீர்மானங்கள்
0 comments
''தமிழ்ப் பகை சக்திகளை முறியடிப்போம்'' என்ற முழக்கத்துடன் வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முடிவெடுக்க தமிழகம் தழுவிய ஒரு கலந்துரையாடல் கூட்டத்திற்கு பழ. நெடுமாறன் அழைப்பு விடுத்திருந்தார்.
04.04.2009 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திருச்சி சுமங்கலி மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழகமெங்கும் இருந்து பல் வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள், முற்போக்கு இயக்கங்கள், பெரியார் அமைப்புகள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், மகளிர், மாணவர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் அமைப்புகள், கலை உலகினர் மற்றும் பிற அமைப்புகள் என நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1 :
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ப் பகை சக்திகளை முறியடிக்க வேண்டிய அவசரமும், அவசியமும் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் இனத்தை முற்றிலுமாக அழித்து ஒழிக்கும் வெறியுடன் சிங்களப் பேனவாத அரசு தனது முழுப் படை வலிமையைப் பயன்படுத்தி போரை நடத்தி வருகிறது. அப்பாவித் தமிழ் மக்கள் அன்றாடம் நூற்றுக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோக்கையை வலியுறுத்தும் வகையில் பல்வேறுப் போராட்டங்களை நடத்தியப் பிறகும் சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியப் பிறகும் இந்திய பிரதமரைச் சந்தித்து அனைத்துக் கட்சியினரும் முறையிட்ட பிறகும் இந்திய அரசு உய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
அதே வேளையில் சிங்கள அரசுக்கு தேவையான ஆயத உதவி, நிதி உதவி, இராணுவத் தொழில்நுட்ப உதவி போன்றவற்றை தொடர்ந்து அளித்து இந்த போரை இந்திய அரசே பின்னின்று நடத்துகிறது என்பதே அப்பட்டமான உண்மை. இதனை தடுத்து நிறுத்த தமிழக அரசு எதையும் செய்யவில்லை. தமிழக மக்களை ஏமாற்ற சில கண் துடைப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுகின்றது.
மேற்கண்ட சூழ்நிலையில் இந்திய அரசைத் தலைமை தாங்கி நடத்தும் காங்கிரசுக் கட்சியும், தமிழக அரசைத் தலைமை தாங்கி நடத்தும் தி. மு. க. வும் மீண்டும் கரம் கோர்த்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முன் வந்துள்ளன.
காங்கிரசு - தி. மு. க. அணியை முற்றிலுமாகத் தோற்கடிப்பதன் மூலம் மட்டுமே ஈழத்தமிழர்களின் நலன்களை மட்டுமல்ல தமிழக மக்களின் நலன்களையும் நம்மால் பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்து காங்கிரசு - தி. மு. க கூட்டணிக்கு எதிராக வாக்குகளை சிதறாமல் அளிக்குமாறு தமிழக மக்களை இக்கூட்டம் வேண்டிக் கொள்கிறது.
தீர்மானம் 2 :
ஈழத் தமிழர் பிரச்னை முற்றிலுமாகத் தீர்வதற்குத் தமிழீழத் தனிநாடு அமைவது ஒன்றே வழி என்பதை ஏற்றல்,
விடுதலைப் புலிகளின் மீதுள்ள தடையை நீக்க வலியுறுத்தல்,
தமிழ் ஈழப் போராட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தல்,
மேற்கண்ட மூன்று கோக்கைகளையும் ஏற்கும் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதத்து வெற்றி பெற வைக்க இக்கூட்டம் முடிவு செய்கிறது.
தீர்மானம் 3 :
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசியதாகக் குற்றம் சாட்டி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், நாஞ்சில் சம்பத் ஆகியோரையும் பொய்யானக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையில் நீண்ட காலமாக அடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள், மாணவர்கள் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
நன்றி
பதிவு.காம்