தமிழினத் தலைவராகக் கூறப்படுகிறார் கருணாநிதி. ஆனால் இப்போது அவர் தமிழின துரோகியாகி விட்டார் என்று கடுமையாக சாடியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
சிதம்பரம் தொகுதி பாமக வேட்பாளர் பொன்னுச்சாமியை ஆதரித்து அங்கு நடந்த பாமக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசினார் டாக்டர் ராமதாஸ்.
பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக பெரும் அலை வீசுகிறது. புதுவை உள்பட 40 இடங்களிலும் திமுக பெரும் தோல்வியைச் சந்திக்கும். திமுகவினர் வெறும் பணத்தை நம்பியுள்ளனர். திருமங்கலம் தேர்தலில் நடந்தது போல் இந்த தேர்தலிலும் பணத்தை கொடுத்து செயல்பட எண்ணியுள்ளனர்.
திமுக அணிக்கு எதிராக அலைவீச ஆரம்பித்துவிட்டது. இது செயல்வீரர்கள் கூட்டத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் தெரிகிறது. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் பெரிதும் துரோகம் செய்துவிட்டது. அதற்கு திமுக துணை போயுள்ளது.
தமிழினத் தலைவர் என்ற பெயர் போய் தமிழினத் துரோகி என்று சொல்லும் அளவிற்கு நிலை மாறியுள்ளது. கருணாநிதி நினைத்திருந்தால் இலங்கைப் பிரச்சனையை நிறுத்தி இருக்க முடியும்.
கருணாநிதிக்கு கொடுத்த தமிழின துரோகி என்ற பட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென்றால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகி தனியாக போட்டியிட வேண்டும். அப்படி தனியாக போட்டியிட்டால் 40 தொகுதிகளிலும் திமுக தோல்வியடையும். காங்கிரசை விட்டு தனியாக வந்தால் ஆட்சி பறிபோய்விடும் என்ற பயம்.
நீலிக் கண்ணீர் வடிக்கும் கருணாநிதி..
இலங்கைப் பிரச்சனையில் நீலி கண்ணீரும், கபடம் நாடகமும் ஆடி வருகிறார் முதல்வர் கருணாநிதி.
எல்லா இடங்களிலும் திமுகவினர் தில்லுமுல்லு செய்ய ஆரம்பித்துவிட்டனர். எனவே அனைத்து தொகுதிகளுக்கும் மத்திய அரசின் தேர்தல் பார்வையாளர்கள் உடனே வரவேண்டும்.
திமுகவின் தேர்தல் பிரச்சாரமும், முதல்வர் பிரச்சாரமும் தரம் தாழ்ந்து போய்விட்டது. ஆங்கில பத்திரிகைகளில் எடுத்த கருத்துக் கணிப்பில் சிறப்பாக செயல்படும் முதல்வர்கள் பட்டியலில் கருணாநிதி 16வது இடத்தில் உள்ளார். தமிழக அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து போய்விட்டது.
சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் ஏழைகளின் நிலத்தை பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்த்து அரசு தரகு வேலை செய்கிறது. வேலை வாய்ப்புயில்லாத பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 52 லட்சம் இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். தமிழ்நாட்டு ஆறுகளில் மணல் இல்லை. வெளி மாநிலத்தவர்களுக்கு திமுகவினர் விற்றுவிட்டனர்.
இலங்கைப் பிரச்சனையில் அடிமை போல் உள்ளேன் என்று கருணாநிதி கூறியுள்ளார். 40 தொகுதிகளிலும் அதிமுக, பாமக வெற்றி பெற்று கருணாநிதியை அடிமைத் தனத்திலிருந்து மீட்டுவிடுவோம்.
தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பில்லை என்று மத்திய உளவுத் துறை அறிக்கை அனுப்பியுள்ளது.
திருமாவளவன் தவறான கூட்டணியில் சேர்ந்துள்ளார். தமிழக சட்டசபையில் திமுகவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால் பாமக அதை ஆதரிக்கும் என்றார்.
சிதம்பரம் மீது தாக்குதல்
இதற்கிடையே ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேர்தல் என்றதும் இப்போது ப.சிதம்பரத்திற்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை நினைவுக்கு வரத் தொடங்கியிருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடு குறித்து பாமக விமர்சிப்பது நியாயமா? என்றும் அமைச்சரவைக் கூட்டத்திலோ அல்லது வேறு பொருத்தமான இடத்திலோ கருத்து வேறுபாடுகளைத் தெரிவித்திருக்கலாமே என்றும் உபதேசம் செய்திருக்கிறார்.
ஆட்சியில் இடம் பெற்றிருந்தாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை ஒருபோதும் பாமக விட்டுக் கொடுத்ததில்லை.
இலங்கைத் தமிழர்களை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டிய பெற்றோர்கள் என்ற முறையிலும், தமிழர்களின் தொடக்கத் தாயகம் என்பதாலும், இனப் படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் நேரடியாக தலையிடுவதற்கான உரிமையும், கடமைப் பொறுப்பும், சட்டத் தகுதியும் இந்தியாவுக்கு இருக்கிறது என்பதை பிரதமரிடமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடமும் பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது.
நேரில் சந்தித்தும், கடிதங்கள் வாயிலாகவும், இதனை வற்புறுத்தியிருப்பதுடன், மக்களவையிலும், பாமக உறுப்பினர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஆக்கப்பூர்வமாக செயல்பட்ட பாமக மீது சிதம்பரம் இப்போது தேர்தலுக்காக வீண் பழி சுமத்த முற்பட்டிருக்கிறார்.
இலங்கைத் தமிழர் சிக்கல், கடந்த 4 ஆண்டுகள் 11 மாதங்களில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதப் பொருள்களில் ஒன்றாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறதா? எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தால் எந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது? விவாதப் பொருளாக என்ன விவாதிக்கப்பட்டது? அந்த விவாதத்தில் சிதம்பரத்தின் பங்களிப்பு என்ன?
இந்தச் சிக்கல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கே ஒருபோதும் வரவில்லை என்றால் ஏன் வரவில்லை? அமைச்சரவைக் கூட்டத்தில் இதை விவாதப் பொருளாகக் கொண்டு வருவதற்கு பொறுப்பான அமைச்சகம் எது? சம்பந்தப்பட்ட அமைச்சகம் ஏன் அதைச் செய்யத் தவறியது?
இலங்கைத் தமிழர் இனப் படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் நேரடியாகத் தலையிடுவதற்கான உரிமையும், கடமைப் பொறுப்பும், சட்டத் தகுதியும் இந்தியாவுக்கு இருக்கிறது. இந்த உரிமை எப்போதேனும் பயன்படுத்தப்பட்டுள்ளதா? இதுபற்றி அமைச்சரவைக் கூட்டத்திலாவது விவாதிக்கப்பட்டிருக்கிறதா?
இல்லை என்றால், தமிழகத்தைச் சேர்ந்த மிகவும் மூத்த மந்திரியும், நிதித்துறை, உள்துறை போன்ற முதன்மையான பதவிகளை ஏற்றவரும், அரசின் கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் அமைச்சரவைக் குழுக்களில் இடம் பெற்றவருமான சிதம்பரம் இதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்?
இலங்கை மீது சீனாவும், பாகிஸ்தானும் ஆதிக்கம் செலுத்தி வருவதால் அதன் மீது `செல்வாக்கு செலுத்தக்கூடிய ஆற்றல்' இந்தியாவுக்கு இல்லை என்று சிதம்பரம் சொல்லவில்லையா? இதன் மூலம் இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முழுத் தோல்வி என்று அவர் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லையா?
இந்தக் கொள்கையை வகுத்து, நிர்வகிப்பது யார்?- மத்திய அமைச்சரவையா? வெளியுறவு அமைச்சகமா? அல்லது குறுகிய கண்ணோட்டம் உடைய, பிறர் மீது நம்பிக்கையற்ற அதிகாரிகளா? மிகவும் மூத்த மந்திரி என்ற முறையில் சிதம்பரம் இதுபற்றி எப்போதாவது கவனம் செலுத்தியது உண்டா?
இலங்கைத் தமிழர் சிக்கல், வெகு தொலைவில் உள்ள இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் நாடாளுமன்றங்களில் எல்லாம் வாதிட்டு, விவாதிக்கப்படும் போது, அண்டை நாடான இந்தியாவின் நாடாளுமன்றத்தில் இதை அரசாங்கமோ, காங்கிரஸ் கட்சியோ ஏன் முன் வைத்து விவாதிக்கவில்லை? மக்களவையில் வினா நேரத்துக்குப் பிறகு பாமக உறுப்பினர்கள் மூலமாக இந்தச் சிக்கல் குறுகிய நேரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதும் கூட, சிதம்பரம் எங்கே போயிருந்தார்?
வெகு தொலைவில் இருக்கும் அமெரிக்காவில் நாடாளுமன்றக் குழு இலங்கைத் தமிழர்களின் மனிதப் பேரழிவு சிக்கல் குறித்து விசாரிக்கும் போது, இந்தச் சிக்கல் ஏன் ஒரு போதும் இந்திய நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவுக்கு கொண்டு செல்லப்பட்டு விவாதிக்கப்படவில்லை?
தொடர்ச்சியாகக் கோரிக்கைகள், மனுக்கள், சட்டப் பேரவைத் தீர்மானங்கள், அனைத்துக் கட்சித் தீர்மானங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழுக்கள், முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தூதுக்குழு, இப்படியெல்லாம் முறையிட்டும்கூட, இலங்கைத் தமிழர் சிக்கலில் அக்கறை இல்லாமலும், ஈடுபாடு இல்லாமலும் இந்திய அரசு அமைதியாக இருந்து வருகிறது.
உண்மையில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசும் அதன் படைகளும் நடத்திவரும் இனப்படுகொலைக்கும், இனவெறிப் போருக்கும் இந்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது என்ற கடுமையான குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
என்ன சொல்லப் போகிறார் சிதம்பரம்..
இலங்கைப் படைகளுக்குப் போர்ப் பயிற்சி அளித்தல், போர்க் கருவிகள் வழங்கிப் பராமரித்தல், ரேடார் இயக்குதல், விமானம் மூலம் வேவு பார்த்துக் கண்காணித்தல், உளவுத் தகவல்களை வழங்குதல், கடற்படை மூலம் முற்றுகை முதலியவை அதில் அடங்கும். இந்திய அரசு இவை எதையும் மறுக்கவில்லை. இதுபற்றி சிதம்பரம் என்ன சொல்கிறார்?
இப்படியெல்லாம் சிதம்பரத்தை நோக்கி எண்ணற்ற கேள்விகளை எழுப்ப முடியும். இவற்றுக்கெல்லாம் சிதம்பரம் என்ன பதிலளிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
நன்றி
-தட்ஸ்தமிழ்
Headline
ராமதாஸ் கடும் தாக்கு - கருணாநிதி தமிழின துரோகியாகிவிட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் ஈழம் பித்தலாட்ம் வேலை அனைவருக்கும் தெரியும்.

மசாற்ற தங்கத்தையா துரோகி என்பது?
பொறுத்தது போதும் மனோகரா பொங்கி எழு
கருத்துக்கு நன்றி அனானி அவர்களே
Post a Comment