Headline

ஈழ தமிழரைவிட மோசமான நிலையில் தமிழக பிராமணர்கள்


"எனக்கு யாராவது பணம் கொடுத்து உதவி பண்ணத் தயாரா இருந்தா பிராமணர்களுக்காக கட்சி நடத்தத் தயார்", என்று நடிகரும் அதிமுக சார்பில் எம்எல்ஏவாகி இப்போது தனித்து இயங்குபவருமான எஸ்வி சேகர் கூறினார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்

இப்போது எந்தக் கட்சியையும் சாராதவனாகவே நான் உள்ளேன். பல கட்சிகளில் சேருமாறு என்னை அழைத்தார்கள். ஆனால் எனக்கு உடன்பாடில்லை.

இப்போது பிராமண சமுதாயத்துக்கு தொண்டு செய்ய புதிய கட்சியைத் துவங்குமாறு பலர் வற்புறுத்தி வருகிறார்கள்.

நான் தலைமை ஏற்க தயார். ஆனால் கட்சி நடத்துவது சாதாரணமா... அதற்கு தலை இருந்தால் மட்டும் போதாது. பெரிய அளவு பணமும் ஆள் பலமும் தேவை. அதை சமுதாயத்தில் உள்ளவர்கள் செய்து கொடுத்தால் கட்சி ஆரம்பிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. யாராவது பணம் கொடுத்து கட்சி ஆரம்பிக்க பக்கபலமா இருந்தா நான் ரெடி.

புதுக் கட்சிக்கு 'அகில இந்திய ஆர்ய முன்னேற்ற கழகம்', மற்றும் 'ஆர்ய முன்னேற்ற கழகம்' என இரு பெயர்களைத் தேர்வு செய்து வைத்துள்ளோம். கட்சி தொடங்குவதா? இல்லையா? என்பதை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவு செய்து விடுவோம். ஆதரவாளர்களுடன் கலந்து பேசிக்கொண்டு இருக்கிறேன்.

ஈழ தமிழரைவிட மோசமான நிலையில் பிராமணர்கள்:

பிராமணர்கள் என்றாலே, அவங்களுக்கென்ன உயர்ந்த சாதிக்காரர்கள் என்ற உணர்வு பலருக்கும். உண்மையில் பிராமணர்கள் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளனர். அவர்களுக்கும் இட ஒதுக்கீடு அவசியம்.

தமிழக பிராமணர்கள் ஈழத் தமிழர்களை விடமோசமான நிலையில்தான் உள்ளனர். இலவச கலர் டி.வி. பெட்டிகூட எங்களுக்கு தர மறுக்கிறார்கள். புது கட்சி துவங்கினால் அது ஆர்யர்கள் முன்னேறத்துக்காகவும், ஆர்ய-திராவிட ஒற்றுமைக்காகவும் பாடுபடுவதாக இருக்கும்.

பிராமணர்கள் கட்சி ஆரம்பிப்பதும், ஆரம்பிக்காததும் தமிழக அரசியல் கட்சிகள் கையில் உள்ளது. ஒவ்வொரு கட்சியும் தலா 5 தொகுதிகளை பிராமணர்களுக்கு ஒதுக்க முன்வந்தால் நாங்கள் ஏன் கட்சி தொடங்கப் போகிறோம்.

தந்தை பெரியார் சொன்னது போல் எல்லா சமூகத்தினருக்கும் சமமான பங்களிப்பு வேண்டும். பிராமணர்களுக்காக நான் துவங்கிய அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. மீண்டும் சொல்கிறேன், பண பலமும், ஆட்கள் பலமும் சரியாக அமைந்தால் கட்சி துவங்குவேன்.

12 தொகுதிகளில் ஜெயிக்க கூடிய அளவு நாங்கள் பலம் வாய்ந்தவர்களாக உள்ளோம். குறைந்தது 5 எம்.எல்.ஏக்களாவது எங்கள் சமூகத்தின் சார்பில் சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும். அதற்கு ஆதரவான கட்சிகளுடன் இணக்கமாக செல்வோம்.

எங்களிடம் 20 லட்சம் ஓட்டுக்கள் உள்ளன. போன தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளின் வெற்றி வித்தியாசமே 15 லட்சம் ஓட்டுகள்தான். பிராமணர் ஓட்டுக்களை ஆதரவு ஓட்டுக்களாக மாற்ற திமுக எந்த முயற்சியும் எடுக்காமல் உள்ளது. அதிமுக ஏற்கெனவே அந்த ஆதரவை இழந்துடுச்சி.

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் பிராமணர்களுக்கும், உள்ஒதுக்கீடு வேண்டும். இந்த விஷயத்தில் எங்கள் குறைகளை கேட்க குறைந்தது ஒரு கமிட்டி கூட போடாதது வருத்தம் அளிக்கிறது என்றார் எஸ்வி சேகர்.

நன்றி
-தட்ஸ்தமிழ்

10 comments:

Anonymous said...

ஏன்டா பாடு கோவில பிட்சை எடுக்கிற நாய்களே,உங்களை பத்தி தெரியாத

Anonymous said...

/தமிழக பிராமணர்கள் ஈழத் தமிழர்களை விடமோசமான நிலையில்தான் உள்ளனர்./

ஆமா அவனுங்கள மாமிங்கள மயிலாப்பூரு கேம்பிலையும் மாமாங்கள மந்தவெளி கேம்புலயும் அடைச்சி வெச்சிருக்கானுங்க தமிழனுங்க. டேய் கேப்மாரி என்ன எழவு ஒளறருரதுன்னே இல்லியாடா?

கிரி said...

//தமிழக பிராமணர்கள் ஈழத் தமிழர்களை விடமோசமான நிலையில்தான் உள்ளனர். இலவச கலர் டி.வி. பெட்டிகூட எங்களுக்கு தர மறுக்கிறார்கள்//

அங்கே அவனவன் சாப்பிட்டிற்க்கே வரிசையில் நிற்க்கிறான் ..இவங்க கலர் டிவி பற்றி பேசிட்டு இருக்காங்க....என்ன கொடுமை சார் இது

♠புதுவை சிவா♠ said...

அனானி நண்பர்களே
உங்கள் கோபம் வேகத்தை கொஞ்சம் குறையுங்கள்.

♠புதுவை சிவா♠ said...

வாங்க கிரி
//தமிழக பிராமணர்கள் ஈழத் தமிழர்களை விடமோசமான நிலையில்தான் உள்ளனர். இலவச கலர் டி.வி. பெட்டிகூட எங்களுக்கு தர மறுக்கிறார்கள்//

அங்கே அவனவன் சாப்பிட்டிற்க்கே வரிசையில் நிற்க்கிறான் ..இவங்க கலர் டிவி பற்றி பேசிட்டு இருக்காங்க....என்ன கொடுமை சார் இது"

கிரி அவர்கள் வாழ்வில் எப்போதும் சுகம் என்ற நிலையில் உள்ளனர்
பிறர்படும் இன்னல்களை பார்க்கவோ, கேட்கவோ விரும்பாதவர்கள்
எனவேதான் s.v.சேகர் பதில் இது போல் உள்ளது.

Anonymous said...

அப்போ இப்படி செய்யலாம். தமிழாக பிராமணர்களை ஈழஅத்துக்கு அனுப்பிவிட்டு, அங்கிருக்கும் தமிழ்ர்களை தமிழ்நாட்டுக்கு வரவழைக்கலாம். citizen exchange திட்டம்.
அத்துடன் எல்லாருடைய பிரச்சினையும் தீர்ந்து விடும்.
-aathirai

Anonymous said...

/உங்கள் கோபம் வேகத்தை கொஞ்சம் குறையுங்கள்./

ஏன்யா கோபத்தை குறைக்கணும்? இந்த லூசுத்தனமான பேச்சுக்கெல்லாம் இந்த மாரி அடக்கி வாசிக்கரதே ரொம்ப பெரிசு. நீரு கொறைச்சு நாயனம் ஊத சொல்லறீரு.

அருண்சங்கர் said...

பிராமண நண்பர்கள் எல்லாம் ஆபாச வார்த்தைகள் பேச தயங்குவதனாலும், வம்பை கண்டால் விலகி இருப்பதனாலும், முக்கியமாக அவர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதனாலும் தான் எல்லோரும் அவர்களை நாயை அடிப்பது போல் அடிக்கிறார்கள். இதோ உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள் - "அனானி நண்பர்களே உங்கள் கோபம் வேகத்தை கொஞ்சம் குறையுங்கள்." என்று எவ்வளவு சாத்வீகமாக கூறியிருக்கிறீர்கள். இவ்வாறு "நண்பர்களே" என்று அன்பாக அழைத்து கூறும் விதத்திலா அவர்கள் பிராமணர்களை பற்றி எழுதுகிறார்கள். இந்த "தே..." பசங்களை எல்லாம். மன்னிக்கவும் இது உங்கள் இடம் என்பதால் நான் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன். எனக்கும் பிராமணர்களை Support பண்ண முழுமையாக மனம் வர மாட்டேன்கிறது. பிராமணர்களுக்குள் ஒற்றுமை கிடையாது. பிராமணனுக்கு பிராமணன்தான் எதிரி என்னும் நிலை என்று ஒழியுமோ அன்றுதான் இந்த அனானி அநாதை, பன்னாடை, பொறுக்கி பசங்க எல்லாம் மூடிட்டு இருப்பாங்க.

அருண்சங்கர் said...

அய்யா சிவா அவர்களே, மீண்டும் வந்ததற்கு மன்னிக்கவும். உங்களது எழுத்துக்களில் தந்தை பெரியார் சொன்னார், தாத்தா பெரியார் சொன்னார் என்றெல்லாம் எழுதினால் இந்த நாய்களெல்லாம் அதை பார்த்து மயங்காது. பிராமணன் இப்படி எல்லாரையும் அனுசரித்து போய் தான் (மற்ற பிராமணனை தவிர) அவனை எல்லோரும் இப்படி விமர்சிக்கிறார்கள். நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் இந்த பெரியாரைஎல்லாம் ஒரு மேற்கோளாக காட்ட உமக்கு எப்படி மனம் வந்தது? அவனே ஒரு பன்னாடை. நானும் ஒரு காலத்தில் சாத்வீகத்தை நம்பியவந்தான். நம்மை எதிர்த்தால் நமது வீச்சு அதை போன்ற பல மடங்கு இருக்க வேண்டும். ஏற்கனவே பிராமணன் பொழப்பு நாறுது. இதுல இந்த ஜெயந்திரன், விஜயேந்திரன் இவர்கள் வேற... ஒரு கவுண்டன் மாதிரி சாதி ஒற்றுமை வேணுமையா.

♠புதுவை சிவா♠ said...

நண்பர் அருண்சங்கருக்கு வணக்கம்

சாதி என்ற தீ தான் நம்முடைய மிக பெரிய பலவீனம்.

நம் ஒற்றுமையை சிதைக்க ஆங்கிலையர்களால் அக் காலத்தில் வாழ்ந்த சில விஷமிகளால் வகுத்து கொடுத்த பாடம்.

தந்தை பெரியாரின் மீது முரண்பாடு உள்ளவர்கள் கூட அவரின்
பல கருத்துக்களையும் சமூதாய சீர்திருத்தத்தையும் ஏற்று கொண்டுள்ளனர்.

அது காலத்தின் கட்டாயம் ஆனால் இன்று அவரால் இன காணப்பட்ட அந்த இயக்கம் சொத்துக்களை பாதுகாக்க தன் பிள்ளையையே தலைவனா ஆக்குது.

ஆதிகார நாற்காளியில் அமரும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வாழும் சமூகத்துக்கு ஒரு சாட்சியாக இருக்க வேண்டும்.

சிலபேர் அதில் மதி மயங்கி அத்த பதிவிக்கே கலங்கம் செய்கின்றன
இந்த நிலையை அனைத்து மதங்களிலும் இன்று பார்கிறோம்.

சாதியால்,மொழியால் வேண்டாம் ஒரு சக மனிதனை நேசிக்கும் பண்புகள் வளரவேண்டும்.

நண்பரே தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.