Headline

ஈழத்தமிழருக்காக நாளை சென்னையில் பொதுக்கூட்டம்!


‘ஈழம் இனி நாம் செய்ய வேண்டியது என்ன?' தமிழர் ஒருங்கிணைப்பு நடத்தும் பொதுக்கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (09.06.09) சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற உள்ளது.

இக் கூட்டத்திற்குத் தோழர் சிவ.காளிதாசன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்) தலைமை தங்குகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் பழ.நல்.ஆறுமுகம் வரவேற்புரை வழங்குகிறார்.

தோழர் தியகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் பெ.மணியரசன் (தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி), தோழர் கொளத்தூர் மணி (பெரியார் திராவிடர் கழகம்), தோழர் அன்பு தனசேகரன் (பெரியார் திராவிடர் கழகம்), தோழர் நாதிகன் கேசவன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்) ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

தோழர் தமிழ்க் கனல் (தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி) நன்றியுரை ஆற்றுகிறார். பொதுக்கூட்டத்தில் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ளுமாறு தமிழர் ஒருங்கிணைப்பு கேட்டுக்கொள்கிறது.

நன்றி
-சங்கதி

0 comments: