''தமிழ்ப் பகை சக்திகளை முறியடிப்போம்'' என்ற முழக்கத்துடன் வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முடிவெடுக்க தமிழகம் தழுவிய ஒரு கலந்துரையாடல் கூட்டத்திற்கு பழ. நெடுமாறன் அழைப்பு விடுத்திருந்தார்.
04.04.2009 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திருச்சி சுமங்கலி மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழகமெங்கும் இருந்து பல் வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள், முற்போக்கு இயக்கங்கள், பெரியார் அமைப்புகள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், மகளிர், மாணவர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் அமைப்புகள், கலை உலகினர் மற்றும் பிற அமைப்புகள் என நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1 :
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ப் பகை சக்திகளை முறியடிக்க வேண்டிய அவசரமும், அவசியமும் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் இனத்தை முற்றிலுமாக அழித்து ஒழிக்கும் வெறியுடன் சிங்களப் பேனவாத அரசு தனது முழுப் படை வலிமையைப் பயன்படுத்தி போரை நடத்தி வருகிறது. அப்பாவித் தமிழ் மக்கள் அன்றாடம் நூற்றுக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோக்கையை வலியுறுத்தும் வகையில் பல்வேறுப் போராட்டங்களை நடத்தியப் பிறகும் சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியப் பிறகும் இந்திய பிரதமரைச் சந்தித்து அனைத்துக் கட்சியினரும் முறையிட்ட பிறகும் இந்திய அரசு உய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
அதே வேளையில் சிங்கள அரசுக்கு தேவையான ஆயத உதவி, நிதி உதவி, இராணுவத் தொழில்நுட்ப உதவி போன்றவற்றை தொடர்ந்து அளித்து இந்த போரை இந்திய அரசே பின்னின்று நடத்துகிறது என்பதே அப்பட்டமான உண்மை. இதனை தடுத்து நிறுத்த தமிழக அரசு எதையும் செய்யவில்லை. தமிழக மக்களை ஏமாற்ற சில கண் துடைப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுகின்றது.
மேற்கண்ட சூழ்நிலையில் இந்திய அரசைத் தலைமை தாங்கி நடத்தும் காங்கிரசுக் கட்சியும், தமிழக அரசைத் தலைமை தாங்கி நடத்தும் தி. மு. க. வும் மீண்டும் கரம் கோர்த்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முன் வந்துள்ளன.
காங்கிரசு - தி. மு. க. அணியை முற்றிலுமாகத் தோற்கடிப்பதன் மூலம் மட்டுமே ஈழத்தமிழர்களின் நலன்களை மட்டுமல்ல தமிழக மக்களின் நலன்களையும் நம்மால் பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்து காங்கிரசு - தி. மு. க கூட்டணிக்கு எதிராக வாக்குகளை சிதறாமல் அளிக்குமாறு தமிழக மக்களை இக்கூட்டம் வேண்டிக் கொள்கிறது.
தீர்மானம் 2 :
ஈழத் தமிழர் பிரச்னை முற்றிலுமாகத் தீர்வதற்குத் தமிழீழத் தனிநாடு அமைவது ஒன்றே வழி என்பதை ஏற்றல்,
விடுதலைப் புலிகளின் மீதுள்ள தடையை நீக்க வலியுறுத்தல்,
தமிழ் ஈழப் போராட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தல்,
மேற்கண்ட மூன்று கோக்கைகளையும் ஏற்கும் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதத்து வெற்றி பெற வைக்க இக்கூட்டம் முடிவு செய்கிறது.
தீர்மானம் 3 :
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசியதாகக் குற்றம் சாட்டி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், நாஞ்சில் சம்பத் ஆகியோரையும் பொய்யானக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையில் நீண்ட காலமாக அடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள், மாணவர்கள் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
நன்றி
பதிவு.காம்
Headline
பழ. நெடுமாறனின் அதிரடி தீர்மானங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment