க்யூபா மீதான தடைகளை படிப்படியாக தளர்த்த அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு பல ஆண்டுகளாக சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து வரும் கம்யூனிஸ நாடு கியூபா. உலகம் முழுக்க அமெரிக்காவை தங்களின் நட்புக்குரிய எஜமானராக ஏற்றுக் கொண்டாலும், க்யூபா மட்டும் தொடர்ந்து தனது அடையாளத்தைத் தொலைக்காமல் இருந்து வருகிறது.
இதனால் கியூபா நாட்டின் மீது பொருளாதார தடை உள்பட பல்வேறு தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அதிபர் பதவிக்கான தேர்தல் பிரசாரத்தின் போது, கியூபா மீதான தடைகளை தளர்த்தப் போவதாக அறிவித்திருந்தார் ஒபாமா.
அதன்படி அமெரிக்காவில் வசிக்கும் கியூபா நாட்டினர் தங்கள் சொந்த நாட்டுக்கு செல்வதற்கு இருந்த தடையை ரத்து செய்யவும், அவர்கள் கியூபா நாட்டுக்கு பணம் அனுப்புவதற்கு இருந்த தடையை ரத்து செய்யவும் ஒபாமா கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் வெள்ளை மாளிகை அறிக்கை கூறுகிறது.
அதேநேரம் கியூபாவுடன் உள்ள வர்த்தக தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும், அதை ரத்து செய்யும் எண்ணம் இல்லை என்றும் அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
நன்றி
-தட்ஸ்தமிழ்
Headline
தடைகளை விலக்க ஒபாமா முடிவு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment