Headline

அமைதிப் பேரணி சென்ற தமிழர்கள் மீது அவுஸ்திரேலியாவில் சிங்களவர்கள் தாக்குதல் - வீடியோ
அவுஸ்திரேலியாவின் விக்டோறிய மாநிலத்தின் மெல்பேர்ண் நகரில் தமிழர்களின் அமைதியான ஊர்தி பேரணி மீது சிங்கள மக்கள் காத்திருந்து - திட்டமிட்டு - நடத்திய அகோரத் தாக்குதலில் 5 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். தமிழர்களின் 7-க்கும் அதிகமான ஊர்திகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.
மெல்பேர்ணில் இன்று சனிக்கிழமை பிற்பகல் தமிழ் இளையோர் அமைப்பினால் ஊர்தி பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏற்கனவே காவல்துறையினரிடம் அனுமதி பெறப்பட்டதன் பிரகாரம் தமிழ் மக்களின் ஊர்தி பேரணி திட்டமிடப்பட்ட வீதிகளின் ஊடாக அமைதியாக சென்று கொண்டிருந்தது.

இந்த ஊர்திகளில்

"அவுஸ்திரேலியாவே தமிழ் மக்களை காப்பாற்று"

"சிறிலங்கா அரசே படுகொலைகளை நிறுத்து"

"விடுதலைப் புலிகள் எமது சுதந்திர போராட்ட வீரர்கள்"

போன்ற பல்வேறு வகையான பதாகைகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றை விட சகல ஊர்திகளிலும் தமிழீழத் தேசியக் கொடியும் தமிழீழத் தேசியத் தலைவரின் படங்களும் ஓட்டப்பட்டிருந்தன.

இப்பேரணியின் ஒர் அங்கமாக மெல்பேர்ண் வான்பரப்பில் ''சிறிலங்காவே தமிழ் மக்களை கொல்வதை நிறுத்து" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகை வானுர்தியும் பறப்பில் விடப்பட்டது.

பேரணி மெல்பேர்ண் நகரின் மையத்தின் ஊடாக சென்று கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத வகையில் சிங்களவர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகின.

மெல்பேர்ண் நகரில் விக்டோறிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக ஒரு பேரணியை ஏற்பாடு செய்து, அங்கு குழுமியிருந்த சிங்களவர்களே, பிற்பகல் 1:30 நிமிடமளவில் தமிழர்கள் மீது இவ்வாறு தாக்குதல்களை நடத்த தொடங்கினர்.

பேரணியில் சென்று கொண்டிருந்த தமிழர்களின் ஊர்திகளை இடைமறித்து நகரவிடாமல் நிறுத்திவிட்டு - அவற்றின் மீது கூட்டம் கூட்டமாக ஏறி தடிகள் பொல்லுகளால் சிங்களவர்கள் அகோரமாகத் தாக்கத் தொடங்கினர்.

தமிழீழத் தேசியக் கொடிகளை பறித்து கிழித்து கால்களில் போட்டு மிதித்தனர்.

பதாகைகளை பறித்து கிழித்து எறிந்தனர்.

ஊர்தியின் கதவுகளை திறந்து, உள்ளே இருந்தவர்களை தாக்கி அவர்கள் மீது காறியும் உமிழ்ந்தனர்.

தமிழீழத் தேசியக் கொடியை பறிக்கும்போது அதனை தரமறுத்த தமிழர்களை சிங்களவர்கள், கைகளை ஊர்தியின் ஜன்னலுடன் சேர்த்து வைத்து தாக்கினர்.

தமிழர்களின் ஒளிப்படக் கருவிகளும் பறித்து உடைக்கப்பட்டன.

சுமார் 50-க்கும் அதிகமான தமிழீழத் தேசியக் கொடிகள், தாக்குதலை நடத்திய காடையர்களால் பறித்துச் செல்லப்பட்டன.

இந்த சரமாரியான தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட பல தமிழர்கள் காயங்களுக்கு உள்ளாகினர்.

5 தமிழர்கள் கடும் இரத்தக்காயங்களுக்கு உள்ளாகியதுடன், அவர்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக நோயாளர் காவூர்தியில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தமிழர்களின் சுமார் 7-க்கும் அதிகமான ஊர்திகள் அடித்து நொருக்கப்பட்டு பாரிய சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டன.

பெருந்திரளாக வந்து திடீரென சிங்களவர்கள் முற்றுகையிட்டுத் தாக்கிய போதும் தமிழர்கள் எந்த வன்முறைகளிலும் ஈடுபடாது - பொறுமையாக - அவுஸ்ரேலிய காவல்துறையினருக்கு சங்கடங்களைக் கொடுக்காத வகையில், தமது பேரணியை தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய காவல்துறையினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தம்மாலான சகல நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டனர்.

பிற்பகல் 4:30 நிமிடமளவில் பேரணி சென்று சேருவதற்கு திட்டமிட்டப்பட்டிருந்த இடத்தை சென்றடைந்தது.

மெல்பேர்ண் வாழ் தமிழ் உறவுகளின் மீது தொடுக்கப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவத்தை திரித்து, தம்மை விடுதலைப் புலி பயங்கரவாதிகள் தாக்க வந்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய சிங்கள அமைப்புக்கள் அதில் வெற்றியும் கண்டன.

ஆனால், உண்மை நிலவரம் தொடர்பாக மெல்பேர்ண் தமிழ் இளையோர் அமைப்பு அவுஸ்திரேலிய ஊடகங்களை தொடர்பு கொண்டு முழு ஆதாரங்களுடன் சம்பவத்தை விளக்கி, பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகளையும் வழங்கியுள்ளது.

இதேவேளையில் நொருக்கப்பட்ட ஊர்தி உரிமையாளர்கள் மற்றும் தாக்கப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் சென்று முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தாம் துரித விசாரணை செய்வதாக காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

காவலர்களின் எச்சரிக்கையும் மதிக்காமல் தமிழர்களை தாக்க காத்திருக்கும் சிங்கள நாய்கள்


நன்றி புதினம்.காம்

0 comments: