Headline

Showing posts with label ஈழப் போராட்டம். Show all posts
Showing posts with label ஈழப் போராட்டம். Show all posts

சானல் 4-ல் வெளியான புதிய பேர் குற்ற - வீடியோ

4 comments


Flash News லண்டனில் தமிழர்களின் போராட்டத்தின் எழுச்சியின் காரணமாக ராஜபக்சேவின் பேச இருந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேச்சு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் விரிவான தகவலுக்கு சானல் 4

Channel4[used] Pictures, Images and Photos
இலங்கை அதிபர் ராஜபக்சே லண்டன் சென்றுள்ள நிலையில், இலங்கை ராணுவம் தமிழர்களை கொன்று குவித்தது பற்றிய கொடூரமான புதிய வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.



Thanks channel4

போர்க்குற்றவா‏ளியுமான மஹிந்தவை பிரிட்டனில் கைது செய்வதற்கு நீங்கள் செய்யவேண்டியவை மின்னஞ்சல்...

நன்றி கே.ஆர்.பி.செந்தில்


அவர்கள் அகதிகள் இல்லை - தியாகு

0 comments



1.முந்தைய பகுதி

2ஆம் பகுதி

கேள்வி : நீங்கள் சொன்னது போல, போரினால் இடம் பெயர்ந்த ஈழத் தமிழ் மக்களை அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்த வேண்டும். மற்றொன்று, அவர்களுடைய உரிமைப் போராட்டத்தை இதற்குமேல் முன்னெடுப்பதற்கு பல்வேறு நாடுகளில் நடந்து கொண்டிருக்கிற முயற்சிகளுக்கிடையே, இங்கே உள்ள அகதிகளை அங்கே திருப்பி அனுப்புவதற்கான ஒரு திட்டமும் தீட்டப்பட்டுள்ளதாகவும், இங்கு இருக்கக்கூடிய இலங்கை தூதரக அதிகாரிகள் சில முகாம்களுக்குப் போய் உங்களில் யார் யாரெல்லாம் தயாராக இருக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். எனவே, இங்கிருக்கக்கூடிய அகதிகளைக் கூட வற்புறுத்தி அந்த நாட்டிற்கு அனுப்பக்கூடிய ஒரு முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தியாகு: முதலில், இது மக்கள் எழுச்சியின் மூலமாக தடுக்கப்பட வேண்டும். சட்டப்படியும் தடுக்கலாம். ஏனென்றால், சர்வதேச சட்டங்களுக்கு முரணானது இந்த முயற்சி. எந்த அகதியையும் அவர் விருப்பத்திற்கு புறம்பாக அந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது. அப்படி அனுப்புவதென்றால், தலாய் லாமாவை திபெத்திற்கு என்றைக்கோ அனுப்பியிருக்கலாம் அல்லது அவரோடு வந்தவர்களையெல்லாம் அனுப்பியிருக்கலாம். அவர்களையெல்லாம் தங்கவைத்து ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள். செய்யட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர்கள் தாய்நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் சூழல் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் விடுதலை கூட கேட்கவில்லை. சுயாட்சி அதிகாரம்தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். விடுதலை கேட்கிற சக்திகள் வேறு இருக்கிறார்கள். அதுபோல எத்தனையோ நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கே வந்து அரசியல் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். தங்கியிருக்கிறார்கள். இதேபோல, வேறு நாடுகளிலும் போய் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எனவே ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் அகதிகளாக இல்லை, நம்முடைய உடன்பிறப்புகளாகவே தங்கியிருப்பதற்கும், வாழ்வதற்கும் முழு உரிமை உண்டு. தமிழ்நாடு முழுவதும் எந்தெந்த இனத்தவரோ வந்து பங்கு போட்டு ஊரைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இருக்கிற உரிமை தமிழ் பேசுகிற மனிதர்களுக்கு இல்லை என்று சொன்னால் அது மிகவும் அநியாயம்.


ஆனால், நாம் சந்தேகப்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. ஒரு காரணத்தை நான் தெளிவாகச் சொல்கிறேன். தமிழக அரசு மறுக்க வேண்டும் இதை. மறுத்தால்தான் அதை நாம் நம்ப வேண்டும். எந்த தனியார் கல்லூரிகளிலும் ஈழ மாணவர்களைச் சேர்க்க வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல தனியார் கல்லூரிகளில் இதைச் சொல்கிறார்கள். ஏனென்றால், நாங்கள் அவர்களை திரும்பி அனுப்பப் போகிறோம். அவர்களை கல்லூரிகளில் சேர்க்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். இங்கு அகதிகள் முகாம்களுடைய நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்பது உண்மை. இதெல்லாம் எதற்கு என்றால், திருப்பி அனுப்புகிற நிர்ப்பந்தத்தை உண்டு பண்ணுவதற்குத்தான். அதிலும் குறிப்பாக, இந்த அகதிகளிலேயே சிறப்பு முகாம்கள் என்று சொல்லி குறிப்பிட்ட போராளி அமைப்புகளோடு தொடர்புடையவர்கள், உதவியவர்கள் என்று சொல்லி சிறப்பு முகாமில் சில பேரை அடைத்து வைத்திருக்கிறார்கள். அதுவொரு ஆண்டுக்கணக்கில்லாத ஆயுள் தண்டனை. எந்த குற்றச்சாற்றும் கிடையாது. ஆனால் அவர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். இவர்களை திருப்பி அனுப்புவதாக இருந்தால் அவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும். அங்கே மற்ற மனிதர்களுக்கே ஆபத்து நிச்சயம். அதற்கும் மேல், இவர்களைப் பொறுத்தவரைக்கும் குறிப்பிட்ட போராளிக் குழுக்கள், விடுதலைக்கு உதவியவர்களை கொண்டுபோய் நாங்கள் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று சிங்கள அரசு கேட்கிறது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், விடுதலை இயக்கம் என்று சொன்னால், அது மக்களின் ஆவலில் இருந்து பிறக்கிற ஒரு இயக்கம். எனவே ஒடுக்குமுறை இருக்கிற இடத்தில் விடுதலை வேட்கை பிறக்கும். அந்த வேட்கைதான் இப்படிப்பட்ட போராளிகளை தோற்றுவிக்கும் என்பதை புரிந்துகொள்வதற்கு பதிலாக, புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களையெல்லாம் ஒழித்துவிட்டால், விடுதலை இயக்கத்தை ஒழித்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள். எனவே அந்த இயக்கத்தை ஆணி வேர், சல்லி வேர் பார்த்து அடியோடு பிடுங்கி எறிய வேண்டும் என்ற வெறித்தனமான பிடிவாதம் அந்த அரசிற்கு இருக்கிறது.
ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ஏற்கனவே புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த காலத்தில், சகலதரப்பட்ட மக்களுக்கும் அவர்கள் ராணுவ பயிற்சி கொடுத்தார்கள். படையில் சேர்பவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் பொதுவாக கட்டுப்பாடு, ஒழுங்கு என்ற முறையில். அப்படி செய்யும் போது அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், தானி ஓட்டுநர்களுக்கெல்லாம் பயிற்சி கொடுத்தார்கள். அந்த பயிற்சி கொடுத்ததற்குப் பிறகு என்ன செய்தார்கள் என்றால், வானொலி, தொலைக்காட்சியில் எல்லாம் தோன்றி தாங்கள் பயிற்சி பெற்றது, அதனால் கிடைத்த நன்மை பற்றியெல்லாம் இவர்கள் பேட்டி கொடுத்தார்கள். இதையெல்லாம் எடுத்து பத்திரமாக உளவுத்துறை சேர்த்து வைத்துக் கொண்டார்கள். புலிகள் கையில் இருந்து யாழ்ப்பாணம் கையைவிட்டுப் போன பிறகு அந்த தானி ஓட்டுநர்கள் யார் யாரெல்லாம் பேட்டி கொடுத்தார்களோ, பிடித்துக் கொண்டுபோய் சித்ரவதை செய்து கொலை செய்துவிட்டார்கள். இது நடந்தது. அவர்களுக்கு அந்த கதி என்றால், சாதாரண மக்கள், அந்த இயக்க உறுப்பினர்களோ, அவர்களோடு சேர்ந்து போருக்கெல்லாம் போய்விடவில்லை. பயிற்சி பெற்றுக் கொண்டார்கள், அவ்வளவுதான். சிங்கப்பூரில் எல்லோருக்கும் கட்டாய ராணுவ பயிற்சி என்ற ஒரு திட்டம் இருக்கிறது. ஓராண்டோ, இரண்டாண்டோ பயிற்சி பெற்றுவிட்டு மீண்டும் பழைய வேலைக்கு வந்துவிடுவார்கள். அதனால் ராணுவத்தோடு சேர்ந்துவிடுவதில்லை. பல நாடுகளில் இந்த முறை இருக்கிறது. அந்த மாதிரிதான். ஆனால் அவர்களையெல்லாம் கொன்றுவிட்டார்கள். அப்படி இருக்கும் போது இவர்களையும் அனுப்பினால் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அவர்களாக யாராவது விரும்பினால் போகட்டும். யாருக்கும் தடையில்லை. ஆனால், அவர்கள் யாருமே விரும்பவில்லை என்பதுதான் உண்மை. அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்றால், வீட்டில் உட்கார்த்திருந்தவர்களையெல்லாம் அகதி முகாமில் கொண்டு சென்று அடைத்து வைத்துவிட்டு, இங்கு அகதியாக வந்தவர்களையெல்லாம் கொண்டுபோய் வீட்டில் விட்டுவிடுகிறோம் என்று சொன்னால் எப்படி நம்புவது என்று கேட்கிறார்கள். கொழும்பு தூதரகத்தில் இருந்து போய் அகதி முகாம்களில் பார்க்கிறார்கள். நீங்கள் எல்லாம் வாங்க. வீட்டுக்கே போய்விடலாம், போர் முடிந்துவிட்டது என்று சொல்கிறார்கள். ஏற்கனவே வீட்டில், அவனவன் வயலில் வேலை பார்த்துக் கொண்டு, மீன் பிடித்துக் கொண்டு, உழவு பார்த்துக்கொண்டு, பள்ளிக்கூடம் நடத்திக் கொண்டிருந்தவர்களையெல்லாம் அடித்து, துரத்திக் கொண்டு

சென்று வேலி அடைத்து முகாம்களுக்குள் அடைத்துவைத்துவிட்டு, உங்களை கொண்டு சென்று வீட்டில் உட்கார வைக்கிறோம் என்று சொன்னால் என்ன அர்த்தம்? முதலில் அதை செய்து காட்டுங்கள். பிறகு எங்களிடம் வாருங்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

எனவே அவர்களை எந்த வகையிலும் நிர்ப்பந்திக்கக்கூடாது, நெருக்கடி கொடுக்கக்கூடாது. சர்வதேச அளவில் ஏதிலியர்களுக்காக இருக்கக்கூடிய சட்டங்கள், ஒப்பந்தங்களின் படி அவர்கள் அனைத்து உரிமைகளோடும் தமிழ்நாட்டில் நடத்தப்பட வேண்டும். இதற்கு எச்சரிக்கையாக இருந்து நாமும் போராட வேண்டும். அவர்களும் போராட வேண்டும். சட்டப்படியும் அதை தடுக்க வேண்டும்.

நன்றி
-பாரிஸ்தமிழ்


சிறைப்பிடிக்கப்பட்ட புலிகளைப் பற்றி - ICRC யின் கவலை

4 comments

ICRC Pictures, Images and Photos

சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளில் 6,700 பேர் வரையில் 135 தனியான சிறப்பு தடுப்பு நிலையங்களில், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் கீழ்மட்ட உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மட்டுமே தமது தடுப்புக் காவலில் இருப்பதாக அறிவித்திருந்த சிறீலங்கா அரசு, அவர்களை மட்டுமே செஞ்சிலுவைச் சங்கம் பார்வையிட அனுமதி வழங்கியுள்ளது.

Raver Arrest Pictures, Images and Photos

ஆனால் விடுதலைப் புலிகளின் நீதி, நிருவாக, அரசியல் பிரிவைச் சேர்ந்த பல மூத்த உறுப்பினர்கள், மற்றும் தாக்குதல் பிரிவுகளில் இருந்த பல முக்கிய உறுப்பினர்களும் சிறீலங்கா அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றோ, அன்றி அவர்களது விபரங்களை வெளியிடவோ, சிறீலங்கா அரசு மறுத்து வருகின்றது.

நன்றி
-பதிவு

*Net photo


அரசியல் தீர்வு பற்றி பேசுவதெல்லாம் ஏமாற்று வேலை - தியாகு

1 comments


இந்தியாவிற்கு வந்த சிறிலங்க அரசு குழுவுடன் இந்திய தரப்பு நடத்திய சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடப்படாத நிலையில் அது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்த் தேசிய ‌விடுதலை இய‌க்க‌த்‌தி‌ன் பொது‌‌ச் செயல‌ரு‌ம், தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியருமான தோழ‌ர் தியாகு அவர்கள் தமிழ் இணையத்தளம் ஒன்றிற்கு அளித்த நேர்காணல்:-

கேள்வி: இலங்கையில் இருந்து அதிபர் ராஜபக்சேவினுடைய சகோதரரும், அவருடைய பாதுகாப்பு ஆலோசகருமான பசில் ராஜபக்சே, பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சே, அதிபருடைய செயலர் லலித் வீரதுங்கா ஆகிய மூவரும் டெல்லிக்கு வந்துள்ளனர். அவர்கள் புதன் கிழமையன்று அயலுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன், தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். பிறகு நமது அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இந்தப் பேச்சுக்களில் என்ன பேசப்பட்டது என்பதோ அல்லது என்ன முடிவெடுக்கப்பட்டது என்பது குறித்து இன்று காலை வரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. ஆனால், ஒரு பத்திரிக்கையில் அவர்கள் பேசியது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது, இன்றுள்ள நிலையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்துவிட்டது. எனவே மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்றும், தாங்கள் வாழ்ந்துவந்த இடங்களில் இருந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாக செய்தி வந்துள்ளது. இதுகுறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

தோழ‌ர் தியாகு: முதலில் யார் யார் பேசினார்கள் என்பதை நாம் நினைவில் வைத்து பார்க்க வேண்டும். அந்தப் பக்கத்தில் இருந்து டெல்லிக்கு வந்து பேசியிருப்பவர்கள் அவர்களுடைய பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சே, அவர்களுடைய அரசியல் ஆலோசகர் பசில் ராஜபக்சே. இன்னொருவர், சிறிலங்க அதிபரின் செயலராக இருக்கக் கூடிய லலித் வீரதுங்கா. இந்த மூன்று பெயர்களையும் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கு வந்து போகிற போது கடைசியாக கிருஷ்ணாவை பார்த்து விடை பெற்றுக் கொண்டார்கள் என்பதைத் தவிர, படத்திற்காக அவருடன் கையைக் குலுக்கினார்கள் என்பதைத் தவிர, முழுக்க முழுக்க பேச்சுவார்த்தையை நடத்தியவர்கள் யார் என்றால், இந்திய அரசினுடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், இந்திய அரசினுடைய அயலுறவுச் செயலர் சிவ்சங்கர மேனன். இந்திய அரசினுடைய பாதுகாப்புச் செயலர் விஜய் சிங். அங்கே மூன்று பேர், இங்கே மூன்று பேர். இந்த ஆறு பெயர்களையும் மறந்துவிடாதீர்கள். ஏனென்றால், இந்த ஆறு பேரில் யாரும் அமைச்சர்கள் அல்ல. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. அரசியல் தலைமை இல்லை இங்கே, இவர்களெல்லாம் அதிகார வர்க்கம் என்று வைத்துக் கொள்வோம்.

இவர்கள் அரசியல் தீர்வு பற்றி, ராணுவத்தை பாசறைக்கு திருப்பி அனுப்புவது பற்றி, அகதிகள் மறுவாழ்வு பற்றியெல்லாம் பேசியதாக மத்திய அரசின் வட்டாரங்கள் வழியாக செய்தி விடப்படுகிறது. அதாவது அயலுறவு வட்டாரங்கள். ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.

இவர்கள் பெயர்களை ஏன் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்கிறேன் என்றால், இந்த சுத்தமான யோக்கியர்கள் பெயர் இதற்கு முன்பு எப்படி வந்ததென்று நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.

இதே கோத்தபய ராஜபக்சே, போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு செய்தியை தெளிவாகச் சொன்னார். இதேபோல வட்டாரங்கள் அப்பொழுதும் ஒரு செய்தியைச் சொன்னார்கள். சிவ்சங்கர மேனனும், எம்.கே. நாராயணனும் பறந்து போனார்கள் கொழும்புவிற்கு, போரை நிறுத்துமாறு சொல்வதற்கு. அவர்களது கருத்து எங்களுக்கும் இணக்கமானதுதான் என்று அந்த வட்டாரங்கள், அதாவது இலங்கை அரசு. இதெல்லாம் அப்போது வந்த செய்திகள். பத்திரிக்கைகள் பரப்பிய செய்திகள். இந்த இடத்தில் கூட தலைப்பு வந்தது, போரை நிறுத்த இந்தியா கோரிக்கை, அவசரமாகச் செல்கிறார்கள். அவர்களும் சம்மதிக்கிறார்கள் என்பது போன்றெல்லாம் தோற்றம் காட்டினார்கள்.

அப்போதும் கோத்தபய ராஜபக்சே சொன்னார், அவர்கள் போரை நிறுத்த சொல்வதற்காக வரவும் இல்லை, நாங்களும் போரை நிறுத்துவதாக இல்லை. ஏனென்றால், நாங்கள் அன்றாட நிலவரங்களை, on a day to day basis இங்கே நடக்கிற ஒவ்வொன்றையும் அவர்களிடம் சொல்கிக் கொண்டிருக்கிறோம். அவர்களைக் கலந்து பேசிதான் அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்கிறோம். எங்களுக்குள் எந்தவிதமான மாறுபாடும் இல்லை. எனவேதான், அவர் என்ன சொன்னார் என்றால், ஏதோ இந்தியா தங்களை போரை நிறுத்தச் சொல்வது போலவும், இந்தியாவைக் கொண்டு போரை நிறுத்திவிடலாம் என்பது போலவும் பேசிக் கொண்டிருக்கிற தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று சரத் பொன்சேகா சொன்னார், நமக்கு நினைவிருக்கும்.

எனவே, வெளியில் வருகிற செய்திகளை வைத்து எல்லாம் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கணிக்க முடியாது. உண்மையிலேயே இவர்கள் பேச்சு நடத்தியதற்குப் பிறகு, அங்கு களத்தில் எடுக்கப்படுகிறத நடவடிக்கைகளை வைத்துதான் நாம் இங்கு என்ன பேசினார்கள் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

இவர்கள் போய் பேசிவிட்டு வந்ததற்குப் பிறகுதான் அங்கு போர் தீவிரமடைந்தது. போரில் புதிய கருவிகள் கையாளப்பட்டன. புதிய அழிவுகள் ஏற்பட்டன. போரெல்லாம் முடிந்ததற்குப் பிறகு இதே கோத்தபய ஒரு பேட்டி கொடுத்தார். “இந்தியாவிற்கும் எங்களுக்கும் எந்த பிணக்கும் இல்லை”. பார்க்கப் போனால், அங்கு மூன்று பேர், இங்கு மூன்று பேர். மொத்தம் ஆறு பேர் அடங்கிய குழுதான் ஒவ்வொன்றையும் வழி நடத்தியது. அந்த மூன்று பேர்தான் இந்த சுத்த யோக்கியர்கள்தான் இப்பொழுது வந்திருக்கிற மூன்று பேர். அதே மூன்று பேர்தான் இப்பொழுது பேச வந்திருக்கிறவர்கள். அவர்களும் அவர்களும் பேசினால் என்ன பேசுவார்கள் என்பதை எளிதாக யூகிக்க முடியும். அவர்களாக வாயைத் திறந்து நாங்கள் இன்னது பேசினோம் என்று இப்பொழுது சொல்ல மாட்டார்கள். எனவே இது எல்லாமே பொய். ஆனால், என்ன பின்னணியில் இந்த பேச்சு நடத்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், பாசறைக்கு ராணுவத்தை திரும்பிப் போகுமாறு இந்தியா வலியுறுத்தியது என்று அந்த செய்தி கூறுகிறது. எங்கிருக்கிறது பாசறை. போர்க் களத்தில் இருந்து திரும்பிப் போகுமாறு கேட்கவில்லை. தமிழ்நாடு சட்டமன்றம், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்றும், தமிழ்ப் பகுதிகளில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய போது இந்தியா இதனை கேட்கவில்லை.

அக்டோபர் 14ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் போட்டார்கள். எந்தக் கட்டத்திலும் அதையெல்லாம் கேட்காமல், போரெல்லாம் முடிந்த பிறகு, ஒரு லட்சம் மக்கள் அழிக்கப்பட்டதற்குப் பிறகு, போரின் இறுதி நாளில் மட்டும் 20 ஆயிரம் பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்று சுயேட்சையான ஆதாரங்கள் அடிப்படையில் டைம்ஸ் நாளிதழ் லண்டனில் இருந்து செய்தி வெளியிட்டிருக்கிறது. பெரிய இழப்பு, அழிவு ஏற்பட்டிருக்கிறது என்ற சொல்லை ஐ.நா. பயன்படுத்தியிருக்கிறது. இவ்வளவும் வந்ததற்குப் பிறகு, இப்ப பாசறைக்குத் திரும்பிப் போகச் சொல்வதென்றால் என்ன காரணம்? இது சும்மா பேச்சுக்காக செய்வது. அங்கே என்ன பாசறை இருக்கிறது. எங்கே திரும்பிப் போவது?

உண்மை என்னவெனில் கிளிநொச்சியிலும், முல்லைத் தீவிலும் பெரிய ராணுவ பாசறைகளை இந்திய உதவியுடன் அமைக்கும் வேலை அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கே மக்கள் இல்லாத அந்த இடத்தில் பாசறைகளை அமைத்ததற்குப் பிறகுதான் இவர்களை இந்த முகாம்களை விட்டு அங்கு செல்வதற்கு அனுமதிக்கப் போகிறார்கள். இந்த பாசறைகள் ஏன் தேவைப்படுகிறது என்றால், காசா பகுதியிலும், மேற்குக் கரையிலும் இஸ்ரேல் யூதக் குடியேற்றங்களை பாதுகாப்பதற்காக எப்படி தன்னுடைய ராணுவத்தைப் பயன்படுத்துகிறதோ, அதேபோல் தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி, அந்த சிங்கள குடியேற்றங்களை பாதுகாப்பதற்காகவும், தமிழர்களிடம் இருந்து வரும் எதிர்ப்பை ஒடுக்குவதற்காகவும்தான் சிங்கள அரசு ராணுவ பாசறைகளை, பெரிய ராணுவ முகாம்களை, பலாலி போன்ற ராணுவ முகாம்களை எல்லா தமிழர் பகுதிகளிலும் அமைக்கப் போகிறார்கள். இதை தடுத்தோ, எதிர்த்தோ இந்தியா இதுவரை ஏதும் செய்யவில்லை, செய்யப் போவதும் இல்லை. இதில் யாருக்கும் எந்தவிதமான ஐயப்பாடும் தேவையில்லை.

கேள்வி: தற்போது முகாம்களில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை அவர்களின் வாழ்விடங்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூட வலியுறுத்தியதாக அச்செய்தி கூறுகிறது?

தியாகு: அகதிகளை விரைவில் திருப்பி அனுப்புவது என்று சொல்கிறார்கள். முதலில் ஏன் இந்த முகாம்களை அவர்களது பிறந்த ஊர், வாழ்ந்த ஊருக்கு வெளியே கொண்டு சென்று அமைக்க வேண்டிய தேவை என்ன என்ற எழுகிறது. கண்ணி வெடி, கண்ணி வெடி அகற்றுதல் இதெல்லாம் சாக்கு. இந்த கண்ணி வெடிகளுக்கு மேல நடந்து போய்தானே அங்கு வாழ்ந்த மக்களை விரட்டி அடித்தீர்கள். அதற்கு மேல் ஏறிப்போய்தானே போர் நடத்தினீர்கள். அப்புறம் எங்கிருக்கிறது கண்ணி வெடி? கண்ணி வெடிகள் இருந்தென்றால், அந்தப் பகுதிகளில் மக்கள் முகாம் அமைக்க வேண்டாம். வேறு பகுதிகளில் அமைத்துக் கொள்ளலாமே. ஏன் அவர்களை முகாம்களில் அடைத்து வைக்க வேண்டும். அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? எந்த நாட்டு சட்டத்தின் படி இதெல்லாம் நடக்கிறது?

கேள்வி: 13வது திருத்தத்தை பலப்படுத்தி நடைமுறைப்படுத்துமாறு இந்தியா கோரிக்கை விடுத்ததாகக் கூட அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தியாகு: அரசியல் தீர்வு பற்றி பேசுவதெல்லாம் ஏமாற்று வேலை.

அதேபோல, 13வது திருத்தத்தை பலப்படுத்தி அவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் அப்படியென்று இவர்கள் வலியுறுத்தியதாகக் கூட சொல்கின்றனர்.

ஈழத் தமிழர் இனச் சிக்கலை நன்கு புரிந்து கொண்டவர்கள், இது தொடர்பான அரசியல் தீர்வு முயற்சிகளை கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒன்று நன்றாகத் தெரியும். அது என்னவென்றால், 13வது திருத்தம் மூலமாக தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படப் போவதில்லை. தமிழர்களுக்கான ஆட்சி உருவாக்குவதற்கான வழிவகை இல்லை. பெயரளவிற்கு சிங்கள ஆட்சி மொழி, தமிழையும் துணை ஆட்சி மொழியாக வைத்துக் கொள்வது, தமிழையும், ஆங்கிலத்தையும் வைத்துக் கொள்வது, இதுபோன்ற மீண்டும் ஏற்றத் தாழ்வான விதிமுறைகளைத்தான் கொண்டு வரப்போகிறார்கள். எந்தவித அதிகாரமும் இல்லாத ஒரு மாவட்ட பஞ்சாயத்தைப் போன்ற ஒரு மாகாண பஞ்சாயத்தை ஏற்படுத்துவதுதான் இந்த திட்டமெல்லாம். அதுதான் 13வது திருத்தமென்பது.

குறைந்தது இந்திய அதிகாரிகள் பேசும்போது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்தினார்களா? அப்படி வலியுறுத்தியிருப்பார்களென்றால் அது வடக்கு- கிழக்குப் பகுதிகளை இணைக்க கோருகிறது.

கேள்வி: இல்லை, அப்படி எதுவும் கோரப்படவில்லை.

தியாகு: அதுதான் முக்கியமானது. ஏனென்றால் 13வது திருத்தம் அவர்கள் கொண்டு வந்தது. ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்காக என்று சொல்லிக் கொண்டு அவர்கள் கொண்டு வந்தது. ஆனால், ஒப்பந்தத்திற்கும், 13வது திருத்தத்திற்கு வேறுபாடு இருக்கிறதா, இல்லையா என்பதை, வேறு யாரையும் வேண்டாம், இந்திய அரசிற்கு முழுக்க ஆதரவாக இருக்கிற சந்திரஹாசனை கேட்டாலே சொல்வார். எங்களுக்கு வேண்டியது 13வது திருத்தம் இல்லை. இந்திய-இலங்கை ஒப்பந்தம்தான் என்று அவர் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நுட்பமான வேறுபாடுகள், எம்.கே. நாராயணனுக்கோ, சிவசங்கர் மேணனுக்கோ, விஜய் சிங்கிற்கோ தெரியாது என்று மட்டும் நீங்கள் நினைத்துவிடாதீர்கள். அவர்களுக்கு இதெல்லாம் முக்கியமே இல்லை. இதெல்லாம் அவர்கள் மறைத்து வைத்திருக்கிற கொலைக் கருவிக்கு மேல் இருக்கிற பூச்சுகள். அதை மறைப்பதற்காகத்தான் இதையெல்லாம் பேசிகிறார்கள்.

இவர்களிடம் அவர்கள் வந்து பேச வந்ததனுடைய உண்மையான நோக்கத்தை இப்பொழுது சொல்கிறேன். இப்பொழுது 4வது ஈழப்போர் ஒரு கசப்பான முடிவிற்கு வந்துவிட்டது என்று புலிகள் அறிவித்துவிட்டார்கள். அது தமிழர்களுக்கு ஒரு தோல்வியில், நெருக்கடியில் முடிந்திருக்கிறது. ஏராளமான தமிழர்களை இழந்திருக்கிறார்கள், போராளிகள் மடிந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் மக்கள் சிறை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். உலகத் தமிழர்கள் எல்லாம் இதுகுறித்து கவலையடைந்திருக்கிறார்கள். நெருக்கடி அடைந்திருக்கிறார்கள். அந்த விடுதலைப் படையினுடைய தலைவர் என்ன ஆனாரோ என்ற கேள்விக்குறியுடன் நின்றுக் கொண்டிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்கட்டும்.

ஆனால், வரலாற்றுக் கண்ணோட்டத்தைப் பார்க்கிற போது, ஓர் விடுதலைப் போர் என்பது விடுதலை இலக்கை அடைவது வரை முடிவதில்லை. களங்கள் மாறிவரும், போர் முறைகள் மாறிவரும். ஆனால், போர் தொடர்ந்து நீடிக்கும். விடுதலைப் போராட்டத்திற்கு முடிவு கிடையாது. நம்மை பற்றியோ, வியட்நாமை பற்றியோ நாம் பேச வேண்டிய தேவையில்லை.

இதே ஈழம் தொடர்பாக, இந்த போர் நடந்து கொண்டிருந்த காலத்திலேயே, சென்ற ஆண்டு அநேகமாக நவம்பர், டிசம்பரில், கிளிநொச்சி வீழ்ச்சிக்கு முன்னதாக சரத் பொன்சேகா கூறியதை நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

இந்த நிலப்பகுதி முழுவதையும் கைப்பற்றுவது என்பது ஒன்றும் முடியாத காரியமில்லை. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா நிலங்களையும் எங்களால் கைப்பற்ற முடியும். ஆனால், கைப்பற்றுவதன் மூலமாகவே பயங்கரவாதம் ஒழிந்துவிடும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆயிரம் புலிகள் மிச்சமிருந்தால் கூட அவர்கள் கெரில்லா முறைக்கு மாறிவிடுவார்கள். இந்த கெரில்லா தாக்குதல் நடத்தும்போது, மரபு வழி போரில் வெற்றி பெற்றதைப் போல நாங்கள் வெற்றி பெற முடியாது. அதை சமாளிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும். உண்மையிலேயே நான் அதைப் பற்றிதான் கவலைப்படுகிறேன் என்று பொன்சேகா சொன்னார்.

இரண்டாவது, கொழும்புவில் அமெரிக்கத் தூதராக இருந்து ஒய்வு பெற்றுச் சென்றவர் சென்னைக்கு வந்து ஒரு கூட்டத்தில் பேசினார். இந்த நிலங்களையெல்லாம் பிடித்து, புலிகளை போரில் தோற்கடிப்பதிலேயே இலங்கை அரசு குறியாக இருக்கிறது. அது தேவையற்றது. அப்படி செய்ய முடியாது. புலிகளை அப்படி அடியோடு தோற்கடிப்பது சாத்தியமான ஒன்று அல்ல. ஏனென்றால், எல்லா நிலங்களையும், ஒரு சதுர அங்குலம் கூட மிச்சமில்லாமல் பிடித்ததற்குப் பிறகும் அவர்கள் கெரில்லாப் போர் முறைக்கு மாறிவிடுவார்கள். மாறியதற்குப் பிறகு நீங்கள் அவர்களை ஒடுக்கிவிட முடியாது. இது நீண்ட காலம் நடக்கும். (ஏற்கனவே இந்தியாவிற்கு கிடைத்த அனுபவமெல்லாம் நமக்கு தெரியும்).

வெறும் 2,000 பொடியன்கள் என்று அழைத்த ராஜீவ் காந்தியினால், ஒரு லட்சம் படையினரை இறக்கியும் கூட அவர்களை ஒடுக்கவோ, அழிக்கவோ முடியவில்லை, இந்திய படைதான் புறமுதுகு காட்டி திரும்பி ஓடி வரவேண்டிய நிலை ஏற்பட்டது. இது பொன்சேகாவுக்கும் தெரியும், எல்லோருக்கும் தெரியும். மரபு வழி போர் என்பது எப்போதுமே அரசிற்கு பன்மடங்கு சாதகமானது. எப்போதுமே விடுதலைப் படைக்கு பாதகமானது. இதையெல்லாம் மீறி மரபு வழிப்போரில் புலிப்படை சாதனைகளைப் படைத்தது. கிளிநொச்சியை கைப்பற்றியது, ஜெயசிக்குருவை முறியடித்தது. ஆணையிறவைப் பிடித்தது. பூநகரியில் கிடைத்த வெற்றி இதெல்லாம் மிகப்பெரிய சாதனைகள்தான். ஆனால், அதற்கெல்லாம் ஒரு எல்லை இருக்கிறது என்பது தற்போது தெரிந்துவிட்டது.

அதுவும் இந்த உலகமயமாக்கல் ஒடுக்குமுறை என்ன செய்துவிட்டது என்று சொன்னால், பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் பல நாடுகளையும், பல நாடுகளினுடைய வளங்கள், சக்திகள், படை, அறிவு எல்லாவற்றையும் ஒன்று சேர்ந்து கொண்டு நசுக்குகிற போது, மக்கள் படையினால் அதை எதிர்த்து மரபு வழிப்போரில் நிற்க முடியவில்லை. ஆனால், கரந்தடிப் போர் அப்படி அல்ல. கரந்தடிப் போர் விடுதலை இயக்கங்களின் தாயகம். அங்கு அயலவன் வந்து ஒன்றும் செய்ய முடியாது.

நெடும்புனலு‌ள் வெல்லும் முதலை அடு‌ம்புன‌லி‌ன்
நீங்கின் அதனைப் பிற

என்று வள்ளுவர் சொல்கிறார். ஆழ்ந்த நீர் தடாகத்திற்குள், நீர் பகுதிக்குள் முதலை வெற்றி பெறும், எதை எதிர்த்தும் வெற்றி பெறும். அது கரைக்கு வந்துவிட்டால் எதனிடமும் தோற்றுப் போகும். அதுபோலத்தான், விடுதலை இயக்கங்களுக்கு கரந்தடிப் போர் முறை என்பது. அவர்களுடைய தாய்த் தடாகம் அது. அது அவர்களுடைய நீர்நிலை. அதை வியட்நாமில் அமெரிக்கா அனுபவித்தது. இதே ஈழத்தில் இந்தியப் படை அனுபவித்தது. இப்பொழுது அந்தப் போர் மீண்டும் தொடங்கிவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு வந்துள்ளது.

இப்பொழுது அவர்கள் இன்னும் தொடங்கவில்லை. ஏனென்றால் இந்தப் போரில் மிச்சம் இருப்பவர்கள் மீண்டும் தங்களை அணி சேர்த்துக் கொண்டும், இந்தப் பகுதிகளை உடைத்துக் கொண்டு வெளியேறியவர்கள், அது வரப்போகிறது என்று தெரிந்து கொண்டு முன்கூட்டியே போய் வேறு இடங்களில் தங்கிக் கொண்டவர்கள், அது அம்பாறையில், மட்டக்களப்பில், யாழ்ப்பாணத்தில், வன்னிக் காட்டினுடைய பிற பகுதிகளில் போயிருக்கிறவர்கள், அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள், அமைப்பாக ஒன்று திரண்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத் தமிழர்களுடைய போராட்டங்கள், தமிழகத் தமிழர்களுடைய போராட்டங்கள், அவர்கள் நடத்துகின்ற விடுதலைக்கான போராட்டங்கள், இவற்றிற்கிடையே ஒரு இசைவு ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்படியொரு முறையான ஒழுங்கமைப்பு வந்து, திட்டமிட்டு மீண்டும் ஒரு கறந்தடிப் போரைத் துவங்குவதற்காக காத்திருக்கிறார்கள்.

அப்படி காத்திருப்பது இந்த அரசிற்கு மிக நன்றாகத் தெரியும். சிங்கள அரசிற்கும் தெரியும், இந்திய அரசிற்கும் தெரியும். இதை முறியடிப்பதற்கு இவர்கள் தொலைநோக்குடன் திட்டமிட ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக அண்மைக் காலத்தில் அங்கு சில நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. காட்டிலிருப்பவர்களையெல்லாம் தேடி அழிக்கிற முயற்சியில், Fleshing out, wiping out என்று சொல்லி ராணுவத்தைக் கொண்டு போய் இறக்கியிருக்கிறார்கள். அப்படி போன ராணுவத்தினர் பல இடங்களில் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

4 நாட்களுக்கு முன்பு மணலாற்றிற்கு அருகில் நெடுங்கேணியில் இப்படி தேடிச் சென்ற ராணுவத்தினரை புலிகள் தாக்கியதில் 150 படையினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த செய்திகளையெல்லாம் வெளியில் விடாமல் மறைத்து வைத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் பதறியடித்துக் கொண்டு இவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். எனவே, எப்படி காட்டுப் பகுதியில் இந்தப் போரை தொடர்ந்து கொண்டு செல்வது. கறந்தடிப் போரை எப்படி சமாளிப்பது. இதுபற்றிப் பேசுவதற்காகத்தான் இவர்கள் டெல்லிக்கு வந்தது. இதற்கான கருவிகள், இதற்கான ஆயுதங்கள், இதற்கான ஆலோசனைகள், இதற்கான படை உதவி, இதற்கான கருவிகள் பெறுவதற்காகத்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இதே பசில் ராஜபக்சே, பாகிஸ்தானுக்கும் இரண்டு முறை போனார். போருக்கு முன்னாடி ஒரு முறை போனார், போர் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு முறை போனார். ஏன் போனார்? பாகிஸ்தான் அரசு ஒன்றும் சுயாட்சி பற்றி, 13வது திருத்தம் பற்றி அல்லது ஒப்பந்தம் பற்றி ஏதாவது பேசப் போகிறதா? அதெல்லாம் ஒன்றுமே கிடையாது. அவர் எதற்குப் போனால் என்றால், ஒரு 25 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிற விமானத்தில் இருந்து கொண்டு கணினியின் துணையோடு, ஒரு மனிதன் நிலத்தில் இருக்கிறது அந்த இடத்தைப் புள்ளி வைத்து அங்கிருந்து தாக்கினால் சரியாக அங்கு சென்று தாக்கக்கூடிய பிரிசிஷன் பாமிங் என்ற அந்த குண்டு வீச்சு முறை, அதற்கான கருவி, அதை இயக்குவதற்கான வான் படை ஆள், இது எல்லாமே பாகிஸ்தானில் இருந்துதான் வரவழைக்கப்பட்டது. அந்த வான் படை ஆளைக் கொண்டுதான், அந்த முறையில்தான், சமாதானச் செயலகம் கிளிநொச்சியில் எங்கிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் அந்த இடத்தை குறிபோட்டு தமிழ்ச்செல்வனைக் கொன்றார்கள். அதுதான் அந்தப் போரில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது நமக்குத் தெரியும். தமிழ்ச்செல்வனைக் கொன்றது அப்படித்தான். அதற்கு இந்த பசில்தான் போய் பேச்சுவார்த்தை நடத்தி இந்தக் கருவிகளைப் பெற்றுக் கொண்டு வந்தார்.

அதேபோல், புதுக்குடியிருப்பில் போய் கடுமையாக இவர்கள் சிக்கிக் கொண்டிருந்தபோதுதான் மீண்டும் பசில் அங்கு போனார். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவர் அங்கு போய்தான், அதற்கான கருவிகள், மற்ற வழிமுறைகள், பாகிஸ்தானிய ராணுவ உதவிகளையெல்லாம் பெற்றுக் கொண்டு வந்தார். சீன டாங்கிகளும், பாகிஸ்தானிய விமானங்களும், இந்திய ராடார்களும், மூன்று நாடுகளுடைய ராணுவ அறிவுரைகளும், இதோடு ஈரான் மற்ற சில நாடுகளையெல்லாம் இணைத்துக் கொண்டுதான் இந்தப் போரை அவர்கள் நடத்தினார்கள்.

இதற்காகத்தான் அவர்கள் டெல்லிக்கு வந்தார்கள். இந்த கொலைத் திட்டத்தை, சதித்திட்டத்தை மறைப்பதற்காகத்தான் இந்த 13வது திருத்தம், ராணுவம் பாசறைக்கு போய்விட வேண்டும் என்று சொல்வதும், அப்படியே இந்தியா மிரட்டியது போல் பேசியது போலவும், இல்லையென்றால் நாங்கள் வந்து தலையிடுவோம். எப்ப தலையிடுவது? தலையிடுவதற்கான நேரம் இதுவா? கடைசி காலத்தில் எங்களை சுற்றி வளைத்துக் கொண்டு வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளால் எங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள், எங்கு பார்த்தாலும் குண்டு வெடிக்கிறது, இந்த உலகத்திற்கு கண்ணில்லையா? காதில்லையா? இதை தடுப்பதற்கு யாராவது வரமாட்டார்களா என்று கதறிக் கொண்டிருந்தார்கள். செஞ்சிலுவைச் சங்கம் கப்பலைக் கொண்டு போய் கடலோரத்தில் நிறுத்திக் கொண்டு, உணவை கொண்டுபோய் கொடுப்பதற்கு மறுக்கிறார்கள், நோயாளிகளை ஏற்றி வருவதற்கு அனுமதி மறுக்கிறார்கள் என்று சொன்னார்கள். முள்ளிவாய்க்காலில் கடைசியாக மிச்சமிருந்த அந்த மரத்தடி மருத்துவமனை கூட தொடர்ந்து மூன்று நாட்கள் பீரங்கிக் குண்டுகளால் தாக்கி அடியோடு தகர்த்தார்கள். செஞ்சிலுவைச் சங்கமே சொல்லியது, சிங்கள ராணுவம்தான் இந்த தாக்குதலை நடத்துகிறது, பீரங்கிக் குண்டுகளால் தாக்குகிறார்கள், கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று சொல்லிவிட்டு தாக்குகிறார்கள் என்ற போதெல்லாம் தலையிடாத இந்தியா, இப்போ போய் நான் தலையிடுவேன் என்று மிரட்டியதாம்! ராஜரீகமாக பேசினார்களாம். சொல்கிறார்கள். உதவி செய்வதற்கு நாங்களே வந்துவிடுவோம் என்று சொன்னார்களாம். அதெல்லாம் தேவையில்லை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று அவர்கள் கூறினார்களாம்.

உண்மையிலேயே தமிழர்களுக்கு சமத்துவ உரிமை கொடுப்பது என்றால், சிங்களவனுக்கு ஒரு பார்லிமெண்ட் இருக்கிற மாதிரி, தமிழனுக்கு ஒரு பார்லிமெண்ட் இருக்குமான்னு கேட்டாங்களா? சிங்களவர்களுக்கு ஒரு குடியரசுத் தலைவர் இருப்பது போல, தமிழர்களுக்கு ஒரு குடியரசுத் தலைவர் இருப்பாரான்னு கேட்டாங்களா? சிங்களவர்களுக்கு ஒரு படை இருப்பது போல், தமிழர்களுக்கு ஒரு படை இருக்கணும்னு கேட்டாங்களா? எதுவுமே இல்லாம சமத்துவம்னா, அப்ப என்ன அர்த்தத்துல சமத்துவம்?

எனவே இது எல்லாமே ஏமாற்று, மோசடி. நாம் வரிகளைப் படித்தால் மட்டுமே போதாது, வரிகளுக்குப் பின்னால் மறைந்திருக்கிற உண்மைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் இப்படிப்பட்ட மகா யோக்கியர்கள் கூடிப் பேசுகிறார்கள் என்றால், அவர்கள் ஏதோ தமிழர் நலன் பற்றி பேசுவார்கள் என்று யாரும் கனவிலும் நினைக்க வேண்டாம். மீண்டும் சூழ்ச்சித் திட்டங்கள் டெல்லிக்கும், கொழும்புவிற்கும் இடையே உருவாக்கப்படுகின்றன. அவற்றை முறியடிப்பதற்கு தமிழர்கள் விழிப்போடு இருக்க வேண்டும். அந்த விழிப்பின் அடையாளமாக போர்க் குற்றவாளிகளாக சிங்கள அரசுத் தலைவர்களையும், இந்திய அரசுத் தலைவர்களையும் உலக நீதிமன்றத்தில் கூண்டில் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழர்கள் வலியுறுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் அந்த அகதி முகாம்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு செய்ய வேண்டும். உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ள தமிழர்களை அவரவர் சொந்த ஊரிலேயே கொண்டு சென்று குடியமர்த்த வேண்டும் என்று நாம் வலியுறுத்த வேண்டும். இதையெல்லாம் இந்தியா வலியுறுத்தும் என்று எதிர்பார்ப்பதோ, அது வலியுறுத்த வேண்டும் என்று பேசிக் கொண்டிருப்பதோ அர்த்தமற்றது. இதுதான் இதிலிருந்து நமக்கு தெரியக்கூடிய செய்தி.

இதன் 2- ஆம் பகுதி தி‌ங்க‌ட்‌கிழமை…

நன்றி
paristamil


இறுதி யுத்த நாளில் நடந்தது என்ன ?

0 comments


வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிகுந்த பாதுகாப்புடன் அவரது தளபதிகள் வெளியேற்றிவிட்டதாகவும், அவருடன் முக்கியமான தலைவர்கள் சென்றுள்ளதாகவும் அருட்தந்தை ஜெகத் கஸ்பர்ராஜ் நக்கீரன் இதழில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

இறுதிநாளில் யுத்தத்தை நிறுத்த கனிமொழி எம்பி, சுப வீரபாண்டியன் ஆகியோருடன் தானும் முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக நடேசன் மற்றும் புலித்தேவன் சமாதானம் பேசச் சென்றது இந்திய அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒருவர் அளித்த உறுதிமொழியின்பேரில்தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெகத் கஸ்பர்ராஜ் எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி:

ராஜபக்சேக்களுக்கு லாவணி பாடும் ஆனந்தசங்கரிகளே… இருக்கிறவரை ஏதேனும் நாற்காலியில் இருந்துவிட்டுப் போங்கள். தங்க முலாம் பூசிய கக்கூஸ் வாளிகளுக்கும் கருணை செய்து ஓய்வூதியம் தர வேலுப்பிள்ளை பிரபாகரன் விரைவில் வருவான். உங்களுக்காக வரவில்லையென்றாலும் முல்லைத்தீவு முற்றுகையின் கடைசி நாள் நடந்த மன்னிக்க முடியா துரோகத்திற்கு நீதி செய்யவேனும் அவன் வருவான்.

கடைசி நாளில் -அதாவது கடந்த சனிக்கிழமை நடந்தது இதுதான்.

வேலுப்பிள்ளை பிரபாகரனும் எதிர்காலத்தில் போராட்டத்தையும் இயக்கத்தையும் மீள் கட்டமைப்பு செய்வதற்கு முக்கியமானவர்களான சில தளபதியர்களும் பாதுகாப்பாக அகன்றபின் களத்தின் இறுக்கம் தணிகிறது.

இறுதி யுத்தம்… என்ன நடந்தது?

கை ஒடிந்து, கால் முறிந்து, உடலின் சில பகுதிகள் சிதைந்து ரத்தம் வழிந்தே பாதி செத்துப் போன சுமார் 12,000 அப்பாவி மக்களையும், அவ்வாறே காயமுற்ற சுமார் 3,000 போராளிகளையும் எப்படியேனும் அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவினை விடுதலைப்புலிகள் எடுக்கிறார்கள். கடற்புலித் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டு காயமுற்ற மக்களையேனும் பாதுகாப்பாய் வெளியேற்ற 48 மணி நேர சண்டை நிறுத்தம் வேண்டுகிறார்.

மதுரை தமிழரோ உணர்வாளர் சுப.வீ. என்ற சுப.வீரபாண்டியன் அவர்களை மன்றாட சுப.வீ. அவர்கள் கனிமொழி அவர்களின் கருணையை கேட்கிறார். கனிமொழி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான ஒருவரோடு பேச ‘அதிகாரப்பூர்வமற்ற’, ஆனால் யதார்த்தமான முடிவொன்று தரப்பட்டது.

“விடுதலைப் புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாபன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக உள்ளோம் என்ற முடிவினை எழுத்துப்பூர்வமாய் தொலைநகல் (பேக்ஸ்) வழி உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவையெல்லாம் இந்தியா பார்த்துக் கொள்ளும்”.

இரவு 10 மணி ஆயிற்று.

இந்தக் கட்டத்தில் நானும் இணைந்தேன். லண்டனிலுள்ள எனது நண்பர்கள் மூலம் செல்வராஜா பத்மநாபன் அவர்களுக்கு தகவல் சொல்லப்பட அவரும் மின்னல் வேகத்தில் இயங்கினார்.

“இந்தியாவிடமே நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம். அது சாத்தியமில்லையென்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்” என்ற முடிவை விடுதலைப் புலிகள் இரவு 11.50-க்குத் தெரிவித்தார்கள். கனிமொழி தயக்கத்துடன் காங்கிரஸ்பெரியவரை தொடர்பு கொள்ள அவரும் விழித்தே இருந்தார். “கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது” என்கிறார் அப்பெரியவர்.

மக்களை காக்க வேண்டி இலங்கை ராணுவத்திடமே ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவினை சனி நள்ளிரவு புலிகள் எடுத்தார்கள். ஞாயிறு காலை கொழும்பு இந்திய தூதரகத்தின் உதவியுடன் இலங்கைத் தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் கஜன் பொன்னம்பலம், ராஜபக்சேவோடு பேச்சுவார்த்தைகள் நடத்த முடிவொன்று ஏற்படுகிறது.

“முல்லைத்தீவு களத்தில் நிற்கும் புலிகளின் தளபதிகள் வெள்ளைக்கொடி பிடித்துக் கொண்டு இலங்கை தளபதிகளிடம் வரட்டும். ஆயுதங் ஒப்படைப்பது, காயமுற்றோரை அப்புறப்படுத்துவது தொடர்பான நடைமுறை ஒழுங்குகளை அவர்களே கலந்து பேசி முடிவு செய்யட்டும்’ என்பதாக அந்த ஏற்பாடு.

இம்முடிவினை ராஜபக்சே அலுவலகம் ராணுவத் தலைமைக்கும், முல்லைத் தீவு கட்டளைத் தளபதிகளுக்கும் அறிவிக்கிறது. இந்த ஏற்பாடுகள் முடியவே ஞாயிறு இரவாகி விடுகிறது.

ராஜபக்சேவுடன் நடந்த விவாதங்களையும் முடிவுகளையும் கஜன் என்ற கஜேந்திரன் பொன்னம்பலம், செல்வராஜா பத்மநாபனுக்குத் தெரிவிக்க முல்லைத்தீவு களத்தில் நின்ற விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனுடன் இவற்றை திங்கள் அதிகாலை 2.30 மணிக்கு விவாதிக்கிறார் பத்மநாபன்.

வெள்ளைக் கொடிகளுடன் வந்தவர்களை சுட்டுத்தள்ளிய இன வெறியர்கள்…

யுத்தம் 500 மீட்டர் அருகில் வந்த போதும் கூட உலகோடு உரையாடும் செயற்கைக்கோள் வசதிகளை விடுதலைப்புலிகள் கொண்டிருந்தார்கள் என்பது ஒரு ராணுவ அரசியல் இயக்கமாக எத்துணை ஆழமாக வளர்ந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றாகத் தெரிந்தது.

விடிந்ததும் நடேசன், சிறப்புத் தளபதி ரமேஷ் -இவர் முன்பு கருணாவின் துணை தளபதியாக இருந்தவர், புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் மூவரும் வெள்ளைக் கொடி ஏந்தி சிங்களத் தளபதியர்களை சந்திக்கச் செல்வதாய் ஏற்பாடு.

வெடிபொருள் புகை கவிந்த முல்லைத் தீவு பரப்பு விடிந்தது. வெள்ளைக் கொடி ஏந்தி மூவரும் நடந்தார்கள். சிங்களத் தளபதியர்களின் கூடாரம் அருகே வந்தார்கள். ஏன், என்னவென்ற பேச்சின்றி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பின்னர்தான் தெரிய வந்தது அவர்களைச் சுட்டுக் கொல்லும் உத்தரவை ராஜபக்சேவின் சகோதரனும் ராணுவ அமைச்சருமான கோத்தபய்யா ராஜபக்சே பிறப்பித்திருந்த சதி.

சர்வதேச போர்க் குற்றம்…

வெள்ளைக் கொடியேந்தி சரணடையவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ வருகிறவர்களுக்குத் தீங்கிழைப்பது யுத்தக் குற்றம். அனைத்துலக சட்டதிட்டங்கள் இதனை கடுமையாக வலியுறுத்துகின்றன. ஆனால் சிங்கள இனவெறி பிடித்தாடும் கோத்தபய்யாவை பொறுத்தவரை தமிழருக்காகப் பேச எவருமே உயிரோடு இருக்கக்கூடாது.

நடேசனும், புலித்தேவனும் சரணடைந்து கைது செய்யப்பட்டாலும் அவர்கள் யுத்தக் கைதிகளாகவே நடத்தப்பட வேண்டும். நாளை அனைத்துலக ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் போது புலிகள் தரப்பிலும் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென உலக நாடுகள் நிச்சயம் வலியுறுத்தும். அத்தகு சூழலில் தகுதியோடு தமிழரை பிரதிநிதித்துவப்படுத்த எவருமே இருக்கக்கூடாதென்பதுதான் கோத்தபய்யாவின் கணக்கு. முக்கிய செய்தி என்னவென்றால் இந்தியா சொல்வதையோ, அண்ணன் ராஜபக்சே சொல்வதையோ கேட்பதற்கு கோத்தபய்யா தயாராக இல்லை என்பதுதான்.

புல்டோஸர்கள் ஏற்றி மக்களைக் கொன்ற சிங்களர்கள் ராணுவம்...

கொடுமை அத்தோடு முடியவில்லை காயமுற்று பாதி உயிரோடு முனகிக் கிடந்த பத்தாயிரத்திற்கும் மேலான அப்பாவி மக்களை புல்டோசர்கள், செயின் புளக்-கள் ஏற்றிக் கொன்றுவிட்டு ஆதாரங் கள் ஏதுமின்றி அதிநவீன ரசாயனக் கலவைகள் ஊற்றி எரித்திருக்கிறார்கள். அவ்வாறே காய முற்றிருந்த சுமார் 3,000 போராளிகளையும் கருணை இரக்கமின்றி சுட்டுக் கொன்று வெறி தீர்த்திருக்கிறார்கள். வேறெதற்கும் இல்லையெனினும் கோத்தபய்யாவிற்கு நீதி சொல்லவேனும் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவான், நிச்சயமாய் வருவான்.

மரணத்தில் நிழலில் வளர்ந்த அதிசயப் பிறவி பிரபாகரன்

மரணத்தின் நிழலில் வளர்ந்த அதீதப் பிறவி பிரபாகரன் . மாத்தையா அவரது வாகனத்திற்கு அடியிலேயே வெடிகுண்டு பொருத்தினார். ஆனால் வெடிக்கவில்லை. ஏன் வெடிக்கவில்லை என்பதற்கு மனித அறிவு சார்ந்த விளக்கம் எதுவுமில்லை. சாவகச்சேரி நகர் வளைவு திறக்கும் நிகழ்வின் போது அவரோடு மூத்த தளபதிகள் யாவரதும் கதை முடிக்க மாத்தையா ஏற்பாடு செய்திருந்தார்.

விழாவுக்குப் புறப்படும் போது மோசமான வயிற்று நோவு வர விழாவிற்கு அவர் வரவில்லை. வந்திருந்தால் அன்றே அவர் வரலாறு முடிந்திருக்கும். திருநெல்வேலி தாக்குதலின் போது அவரது துப்பாக்கியில் ரவை தீர்கிறது. குனிந்து ரவை நிரப்புகிறார். புறத்தே மின்னல் தெரிகிறது. சக தோழர்களின் பறக்கிற ரவைகள் என நினைக்கிறார். காலையில் பார்த்தால், தான் குனிந்தபோதுதான் நின்ற இடத்திலேயே எதிரியின் ரவைகள் பாய்ந்து வந்திருக்கின்றன. அக்கணம் குனிந்திராவிட்டால் அன்றே அவர் முடிந்திருப்பார்.

“கடவுள் காத்து வருகிறார் எனக் கருதலாமா?” என 2002-ல் அவரிடம் கேட்டேன்.

“இன்னும் நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறதென இயற்கை நினைக்கிறது போலும்…” என்றார்.

தமிழர்களே, நண்பர்களே, முல்லைத்தீவில் கதை முடியவில்லை. புதிய கதை தொடங்குகிறது. உலகத் தமிழினம் இனி நடக்கப் போவது புதிய தடங்களில்…

நன்றி
-தட்ஸ்தமிழ்


"என்னுடன் உங்களுக்கு இருக்கும் கடைசி தொடர்பு இதுவாக இருக்கலாம்"

0 comments


கடந்த இரண்டரை வருடங்களாக - உலகப் பெரும் சக்திகள் சிலவற்றின் துணையுடன் - சிறிலங்கா நடத்திவரும் தமிழின அழிப்பு போர் அதன் இறுதிக் கட்டத்தை இன்று திங்கட்கிழமை காலை அடைந்திருப்பதாக - தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னமும் மிஞ்சியிருக்கும் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் இருந்து 'புதினம்' செய்தியாளர் செய்மதி தொலைபேசி மூலம் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
இதுவே தான் மேற்கொள்ளும் இறுதி தொலைபேசி அழைப்பாக இருக்கக்கூடும் எனவும், இனி என்ன நடக்குமோ தெரியாது எனவும் குறிப்பிட்டுவிட்டு, தனது கடைசிச் செய்திக் குறிப்பு இது எனக் குறிப்பிட்ட 'புதினம்' செய்தியாளர் சொன்னவை அவரது வார்த்தைகளிலேயே:

பீரங்கிக் குண்டுகள் நாலாபுறங்களிலும் இருந்து வந்து எங்கள் மீது வீழ்ந்து வெடிக்கின்றன.



கனரக மற்றும் சிறுரக துப்பாக்கி சன்னங்கள் எல்லாப் பக்கத்தில் இருந்தும் சீறி வருகின்றன.

தாக்குதல் நிகழும் இந்த பகுதிக்குள் இன்னமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர்.

காயப்பட்டு வீழ்ந்து தூக்கி எடுக்க யாருமற்றுக் கிடப்போரின் மக்களின் மரண ஓலங்களே எங்கும் கேட்கின்றன.

விடுதலைப் புலிகளின் பக்கத்தில் இருந்து குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதிர்த் தாக்குதல்கள் ஏதுமற்ற நிலையிலும் - சிறிலங்கா படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நான்கு பக்கங்களாலும், சகலவிதமான நாசகார ஆயுதங்களைப் பாவித்தும் மேற்கொண்டவாறு மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.

கொல்லப்பட்டு வீழ்ந்த மக்கள் எல்லோரினது உடலங்களும் நாலா புறமும் சிதறிக்கிடக்கின்றன.

திரும்பிய பக்கம் எல்லாம் பிணக்குவியல்களாகவே இருக்கின்றன. கொல்லப்பட்டோரது உடலங்கள் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக அகற்றப்படாத காரணத்தினால் அந்த பகுதி எங்கும் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது.

இன்றைய இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுடன் இங்குள்ள மக்கள் அனைவருமே சிறிலங்கா படையினருக்கு இரையாகிவிடுவர்.



படுகாயமடைந்தவர்கள் இந்தப் பகுதி எங்கும் விழுந்து கிடந்து அலறுகின்றனர்.

படு மோசமான காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சையளிக்க எந்த வழியுமற்ற நிலையில் கதறும் பொதுமக்கள் மக்கள் - அங்கே இருக்கும் போராளிகளிடம் தம்மை சுட்டுக்கொன்றுவிடுமாறு மன்றாடுகின்றனர்.

அதேபோல - காயமடைந்து, சிகிச்சைக்கு வழியற்றுக் கிடக்கும் போராளிகள் தமக்கு 'சையனைட்' வில்லைகளைத் தந்துவிடுமாறு கதறுகின்றனர்.

பதுங்கு குழிகளுக்குள் இருந்தபோதே கொல்லப்பட்டுவிட்ட மக்களின் உடலங்களுக்கு மேலேயே, உயிரோடு எஞ்சியிருக்கும் மக்கள் பாதுகாப்புக்காய் பதுங்க வேண்டிய அவலம் நிலவுகின்றது.



இவ்வாறு கூறிய எமது செய்தியாளர், கடைசியாக - "இப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் மனிதப் பேரவலம் கண்முன்னால் நிகழ்ந்துகொண்டிருக்கும் போது, ஆயுதப் போராட்டத்தையே விட்டுவிடுகின்றோம் என விடுதலைப் புலிகள் சொல்லிவிட்ட பின்பு - யாராவது வந்து எம்மை காப்பாற்ற மாட்டார்களா என மக்கள் இங்கு ஏங்கித் தவிக்கும் போது - மனித உயிர்களைக் காப்பதற்காகவேனும் இந்த உலகம் ஏன் எதனையும் செய்யாதிருக்கின்றது?" என்று தழுதழுத்த குரலில் கேள்வி எழுப்பினார்.

2003 ஆம் ஆண்டில் இருந்து 'புதினம்' நிறுவனத்தின் வன்னிச் செய்தியாளராய்ப் பணிபுரிந்து - உண்மையான செய்திகள் மட்டுமே வெளிவர உழைத்து - 'புதினம்' நிறுவனத்தின் இரத்தமும், சதையுமாக இயங்கிய அந்த செய்தியாளர், கடைசியாக - "என்னுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு இதுதான் கடைசியாகவும் இருக்கலாம் என்றே நினைக்கின்றேன்" என்று கூறினார்.

நன்றி
-புதினம்
*net photo


தளபதி சூசையின் அபாய அறிவிப்பு!!!

0 comments


காயமடைந்த 25 ஆயிரம் மக்கள் மரணமாகும் நிலையில் இருப்பதாக அபாய அறிவிப்பொன்றை கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். நான்கு பக்கமும் இருந்து கடுமையான தாக்குதல் நடத்தப்படுவதாகவும் மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், உடனடியாக அங்கிருந்து காயமடைந்த மக்களை வெளியேற்றுவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. மனித உரிமை அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டபோதும் நடவடிக்கைக எவையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


வன்னியில் இருந்து இன்று கேணல் சூசை வழங்கிய கருத்து

நன்றி
-சங்கதி


இப்பொழுதும் புலிகள் பலமிழக்கவில்லை - இளந்திரையன்

2 comments


மக்கள் பாதுகாப்பு வலயம்' அமைந்துள்ள பகுதிகள் மீது முழுமையான உச்ச ஆயுத வலுவைப் பயன்படுத்தி சிறிலங்கா படையினர் பொதுமக்களை படுகொலை செய்வதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று சனிக்கிழமை இராசையா இளந்திரையன் வழங்கிய சிறப்பு நேர்காணலின் விபரம் வருமாறு:

உங்களைப் பற்றி வெளிவந்த வதந்திகள் குறித்து முதலில் தெளிவுபடுத்த முடியுமா?

நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த போர்க்காலத்தில் மிகவும் முக்கியமான பணிகளில் நான் ஈடுபட வேண்டியிருந்தது. தற்போது மீண்டும் உங்களுடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

தற்போதைய களநிலவரம் குறித்து கூற முடியுமா?

களத்தில் மிகவும் தீவிரமான சூழ்நிலைதான் காணப்படுகிறது.

களத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு நிற்பது என்பதைவிட, தருணம் கிடைக்கும்போது எல்லாம் பொதுமக்களை படுகொலை செய்வது என்ற கொலைவெறியோடு சிங்களப் படையினர் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

சுதந்திரமான நிலத்தில் சிங்களவர்களுக்கு அடிமைப்படாத வாழ்க்கை வாழ்வதை விரும்பி எமது போராட்டத்தோடு இணைந்து நிற்கின்ற மக்கள், சாவிற்கும் பட்டினிக் கொடுமைக்கும் மத்தியில் தமிழினத்தின் தலையை நிமிரவைத்துக்கொண்டு இங்கு இருக்கின்றனர்.

இந்த மக்களை பாதுகாப்பதற்காக எமது போராளிகள் மிகவும் தீரமுடன் - முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் அர்ப்பணிப்புடன் - தலைவரின் வழிகாட்டலில் மிகவும் திறமையாகப் போராடி வருகின்றனர்.

மிகவும் குறுகிய பகுதிக்குள் புலிகளையும் மக்களையும் படையினர் நெருக்கியிருப்பது எதனைக் காட்டுகிறது?

நிலம் குறுகிவிட்டதை வைத்துக்கொண்டு நாம் தோல்விகளைச் சந்தித்திருக்கிறோம், பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். அப்படி கூறுவது பொருத்தமற்றது. நாம் நிலத்தை இழந்திருப்பினும் பலத்தை இழக்கவில்லை.

சிங்களவர்கள் இன்னமும் வெற்றியீட்டவில்லை, தமிழர்கள் இன்னமும் தோல்வியடையவில்லை. அதனையும் நான் கூறிவைக்க விரும்புகிறேன்.

இப்போதுள்ள சூழ்நிலை நெருக்கடிமிக்கதுதான். போராளிகளைப் போன்றே மக்களும் இந்த போரை எதிர்கொண்டுள்ளனர். பசிக்கொடுமை என்ற கொடிய நிலையை முன்னிறுத்தி ராஜபக்சவும் அவரது படைகளும் கொடிய போரை திட்டமிடப்பட்ட வகையில் நடாத்திக்கொண்டிருக்கின்றன.

எனினும் நாம் போராடுவதற்கான மன உறுதியை இழக்கவில்லை.

கனரக ஆயுதங்களை களத்தில் படையினர் பயன்படுத்தவில்லை என்று சிறிலங்கா படைத்தரப்பில் கூறப்படுவது உண்மையானதா?

இத்தகைய கருத்துக்களை சிங்களத்தரப்பில் இருந்துவரும் ஒரு கேலிக்கூத்தாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில், சிறிலங்கா படையினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவது ஐக்கிய நாடுகள் சபையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து படையினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கூறியிருக்கிறார்.

இங்கே முழுமையான உச்ச ஆயுதவலுப் பயன்பாட்டுடன்கூடிய போரைத்தான் சிறிலங்கா அரசாங்கம் நடத்திக்கொண்டிருக்கிறது.

களத்தில் சிறிலங்கா படையினரின் பலம் குறித்து?

மாவிலாற்றில் இருந்து இன்றுவரை நாங்கள் போரிட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம். சிங்களப் படைகள் நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தாலும் எமது தரப்பில் இன்னமும் போரிடும் ஆற்றல் நிற்கவில்லை. சிங்களப் படைகள் முன்னேறி வந்த ஒவ்வொரு அங்குலத்திற்கும் பலத்த இழப்புகளைச் சந்தித்தன. பல டிவிசன்கள் நொந்து நூலாகி பின்களத்தில் ஓய்வில் விடப்பட்டுள்ளன, பற்றாலியன் கணக்கில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஓரிரு படையணிகளை முன்னே வைத்தே சிறிலங்கா அரசாங்கம் போரை தற்போது முன்னெடுத்து வருகிறது.

விடுதலைப் புலிகள் தமது வலிந்த தாக்குதல் திறனை இழந்திருப்பதாக கூறப்படுகிறதே?

வலிந்த தாக்குதலை செய்யமுடியாத வகையில் புலிகள் பலமிழக்கவில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். அத்தகையதொரு தாக்குதலை செய்யவேண்டுமா, இல்லையா என்ற முடிவு தலைமையால் எடுக்கப்படுவது. எனவே அத்தகையதொரு சூழ்நிலை வரும்போதே புலிகள் தமது வலிந்த தாக்குதலை நடத்துவர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து தற்போதைய நிலையில் அனைத்துலக ரீதியில் பரப்பப்படும் கருத்துக்கள் குறித்து?

அவசரப்பட்ட - பக்கச்சார்பான - முடிவை அனைத்துலகம் பரப்புரை செய்வதாகவே தோன்றுகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது இன்று உலகம் முழுவதும் பரந்திருக்கும் ஒரு பாரிய விடயம். எங்களின் விடுதலை சித்தாந்தம் என்பது இன்று உலகத் தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற விடயம். பக்கச்சார்பான கருத்துக்களை சில ஊடகங்கள் தூக்கிப்பிடிப்பதால்தான் இத்தகையதொரு தோற்றப்பாட்டு நிலை ஏற்படுகிறது.

தரையால் மூன்று பக்கத்தால் படை நடவடிக்கைகள் இடம்பெறும்போது நான்காவது பக்கமான கடலில் கடற்புலிகளின் பலம் தற்போது எப்படியிருக்கிறது?

கடந்த வாரம் இண்டு தடவைகள் கடல்வழியாக தரையிறங்க சிறிலங்கா படை முயற்சி மேற்கொண்டது. கடற்புலிகள்தான் அந்த முயற்சியை வழிமறித்து நின்றார்கள். அந்த மோதல்களில் கடற்படையினர் பலர் உயிரழந்துள்ளனர். குறிப்பாக சிறப்பு படையணியைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். சிறப்பு படையணியைச் சேர்ந்த இரண்டாவது நிலை கட்டளை அதிகாரியும் இதில் உயிரிழந்திருக்கிறார்.

கடல்பகுதியில் சிறிலங்கா கடற்படை அத்துமீறாத வகையில் கடற்புலிகள் இப்போதும் காவல் காத்து வருகின்றனர்.

மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் புலிகள் பீரங்கிகளை வைத்திருந்து தாக்குதல்களை நடத்துவதாகக் கூறப்படுகிறதே?

சிறிலங்கா படையினர் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' என்ற ஒன்றை தாங்களே அறிவித்து, அங்கே மக்களை வருமாறு கூறினர். அங்கு சென்ற மக்கள் மீது உலகில் மிக மோசமான ஆயுதங்கள் எனக்கூறப்படும் கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள், இராசாயன விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் மூலம் தாக்குதல்களை நடத்துகின்றனர்.

ஆனால், 'மக்கள் பாதுகாப்பு வலயம்' என்று கூறப்படும் பகுதியில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களையோ அல்லது தமது சேனைகளையோ வைத்திருக்கவில்லை. மாறாக, மக்களை பாதுகாப்பதற்காக எல்லைகளில் நின்று போராடிக்கொண்டிருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் பலத்தை அழித்திருப்பதாக, தளபதிகளை அழித்திருப்பதான பரப்புரைகளால் புலம்பெயர் வாழ் மக்களிடையே ஒருவித சோர்வு ஏற்பட்டுள்ளமை குறித்து?

"சத்தியத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் சத்தியமே வெல்லும்" என ஒரு பழமொழி இருக்கிறது. இழப்புக்கள் ஏற்படுவது உண்மை. ஆனால் இந்த போராட்டம் எத்தனை நாட்களானாலும், எத்தனை ஆண்டுகளானாலும், ஏன் தலைமுறைகளானாலும் தொடரும்.

நாம் அடிமை வாழ்வு வாழப் போவதும் இல்லை, அதனை ஏற்றுக்கொள்ளப் போவதும் இல்லை, மண்டியிடப் போவதும் இல்லை.

உலகத் தமிழர்கள் அனைவரும் எம்முடன் நிற்கும்வரை -

வன்னி மக்கள் பசிக்கொடுமைக்கு மத்தியிலும் எம்முடன் நிற்கும்வரை - எமது போராட்டம் வீறுநடை போடும். தலைவர் அதனை வென்று முடிப்பார் என்ற நம்பிக்கையை நான் கூறுகிறேன்.

களத்தில் படையினருக்கு ஏற்படும் இழப்புகள் குறித்த தகவல்களை புலிகள் வெளியிடாமல் தவிர்த்து வருவதற்கான காரணம் என்ன?

ஒவ்வொரு எறிகணைக்கும் பொதுமக்கள் செத்து மடிகின்ற கொடூரம் இங்கே நடக்கின்றபோது - பசியாலும் பஞ்சத்தாலும் இங்கே குழந்தைகள் வாடுகின்றபோது - நாங்கள் இறந்த சிங்களவர்களின் உடல்களை எண்ணிக்கொண்டிருப்பதைவிட வாழ வேண்டிய எமது மக்களின் நிலையில் கவனம் செலுத்த வேண்டிய காரணத்தினால்தான் மக்கள் குறித்த செய்திகளையே நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

ஊடகங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து என்ன கூறுகிறீர்கள்?

ஊடகங்கள் பெரும்பணியை இங்கே ஆற்ற வேண்டியுள்ளது. அவை பக்கச்சார்பின்றி உண்மையைச் சொல்ல வேண்டும், ஊடக தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும், நியாயத்திற்கு குரல்கொடுக்க வேண்டும்.

உதாரணமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இங்குள்ள மக்கள் குறித்து தெரிவிக்கும்போது அவர்களை போரில் சிக்கியுள்ள மக்கள் என்றே கூறுகிறது. அது தவறு. அவர்கள் அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுகின்ற மக்கள். மக்கள் இங்கே படுகொலை செய்யப்படும்போது போரில் சிக்கி உயிரிழப்பதாகவே கூறுகிறார்கள். இது தவறு. சிங்களப் படைகளால் அவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இதனை ஊடகங்கள்தான் வெளிக்கொணர வேண்டும்.

சிறிலங்கா படைத்தரப்போடு மட்டும் மோதவில்லை என்று புலிகள் கூறி வருகின்றனர். இது குறித்து?

சிங்களப் படையினர் தனியே எம்முடன் மோதி இருப்பார்கள் ஆயின் சூழ்நிலை எப்பொதோ வேறுவிதமாக அமைந்திருக்கும் என்பதை மட்டும் கூறிக்கொள்கிறேன்.

புலம்பெயர் வாழ் தமிழ்மக்களுக்கு அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு சொல்வதற்கு எங்களிடம் செய்திகள் இல்லை. ஆனால் எமது உளமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்தான் உள்ளன. வன்னியில் உள்ள சிறிய குழந்தைகளினதும் மனதை தளராமல் வைத்திருக்கும் முதியவர்களினதும் அன்பை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு சொல்லுங்கள்.

எமது மண் விடிய வேண்டும் என்பதற்காக புலம்பெயர் தமிழ் மக்கள் நடத்துகின்ற போராட்டம்தான் இங்கே எம்முடைய கால்களை உறுதிப்படுத்தி எம்மை நிமிர்ந்து நடக்க வைத்திருக்கின்றது என்றார் இளந்திரையன்.

நன்றி
-புதினம்


புலித்தேவன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0 comments


மோதல்களின் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் உயிரிழந்து வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் எஸ்.புலித்தேவன் தெரிவித்துள்ளார்.
மோதல்களின் காரணமாக நாள்தோறும் நூற்றுக் கணக்கான பொது மக்கள் உயிரிழப்பதாகவும் காயமடைவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வன்னியில் சிக்கியுள்ள அப்பாவிப் பொதுமக்களது நிலைமை குறித்து சர்வதேச இராஜதந்திரிகள் தொடர்ந்தும் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் உணவு விநியோகத்தை முடக்கி வருவதாக புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு ஒரு உணவுக் கப்பலே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சுமார் 33 மெற்றிக் தொன் எடையுடைய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த உணவுத் தொகுதி ஒருநாளைக்கே போதுமானதென சுட்டிக்காட்டப்படுகிறது.

நன்றி
-தமிழ்வின்


பழ.நெடுமாறனின் எச்சரிக்கை!!!

0 comments


இலங்கையில் போர் நிறுத்தத்தை இந்திய அரசு வலியுறுத்த மறுத்து வருவதின் பின்னணியில் 'றோ' இருப்பது அம்பலமாகியிருக்கின்றது என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் படுகொலை செய்ய 'றோ' உளவுத்துறைச் சதித் திட்டம் தீட்டியுள்ளது என மிக நம்பகமானத் தகவல் கிடைத்திருக்கிறது.

போர் நிறுத்தத்தை இந்திய அரசு வலியுறுத்த மறுத்து வருவதின் பின்னணி இதுதான் என்பது அம்பலமாகியிருக்கின்றது.

கடந்த காலத்திலும் பல முறை பிரபாகரனை ஒழித்துவிட 'றோ' உளவுத்துறை செய்த பல முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதைப் போலவே இம்முறையும் இச்சதித் திட்டத்தை விடுதலைப் புலிகள் முறியடிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே, இச்சதியில் ஈடுபட்டுள்ள 'றோ' அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பிரதமர் மன்மோகன் சிங் முன்வர வேண்டும்.

இல்லாவிட்டால் இந்தச் சதிக்கு அவரும் உடந்தை என்ற முடிவுக்குத் தமிழ் மக்கள் வர நேரிடும். இதன் விளைவாக வரலாறு காணாத வகையில் பெரும் கொந்தளிப்பு தமிழகத்தில் ஏற்படும் என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி
- புதினம்.காம்


பெண்கள் கைதால் கொந்தளிப்பான சூழல் நிலவியது.!!!

2 comments

/>
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 5 பெண்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து மருத்துவமனையில் மருத்துவத்திற்குச் சேர்த்துள்ளனர். காலை நேரத்தில் தங்களை கைது செய்ய வந்த காவல்துறையினருடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிங்கள இனவெறி படையினரால் நச்சுக்குண்டுகள் வீசி கொல்லப்பட்டு வரும் அப்பாவித் தமிழ் மக்களை பாதுகாக்கவும், உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படுத்தவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 20 பேர் கடந்த 13 ஆம் நாள் முதல் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கைத் தமிழருக்காக உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமாரன் இல்லம் அருகே கொளத்தூரில் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடக்கிய இவர்கள், காவல்துறையின் கெடுபிடி காரணமாக ம.தி.மு.க. தலைமையகமான தாயகத்திற்கு வந்து அங்கு தொடர்ந்து உண்ணாநிலை மேற்கொண்டு வருகின்றனர்.
/>

10 ஆவது நாளாக நேற்றும் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்தது.

கைது

நேற்றுக் காலை 5:30 நிமிடமளவில் மத்திய சென்னை காவல்துறை இணை ஆணையர் ரவிக்குமார், துணை ஆணையர் கணேசமூர்த்தி, உதவி ஆணையர்கள் இளங்கோ, சிறீதர்பாபு உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் தாயகம் அருகே குவிக்கப்பட்டனர்.

எழும்பூர் ஆதித்தனார் வளைவில் இருந்து இராஜரத்தினம் விளையாட்டுத்திடல் வரையிலான சாலையில் போக்குவரத்தை நிறுத்தினர். காலை 6:00 மணியளவில் தாயகத்திற்குள் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்தனர். இதனை அறிந்த ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜீவன், எழும்பூர் பகுதிச் செயலாளர் நிசார் உள்ளிட்ட அந்தக் கட்சியினர் அங்கு விரைந்து வந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.




பின்னர் காவல்துறை அதிகாரிகள் உண்ணாநிலை இருந்த பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்போவதாக கூறினர். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உயிர் போனாலும் பரவாயில்லை, போர் நிறுத்தம் வரும்வரை இந்த இடத்தை விட்டு செய்யமாட்டோம் என்று அவர்கள் உறுதியாகக் கூறினர்.

இதனையடுத்து கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி›மருத்துவமனை முதல்வர் கனகபை மற்றும் மருத்துவர்கள் உண்ணாநிலை இருந்த பெண்களை மருத்துவ ஆய்வு செய்தனர். அவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.


ஆனால், அந்தப் பெண்கள் மருத்துவமனைக்கு வரமாட்டோம் என்று உறுதியாகக் கூறிவிட்டனர். அப்போது அவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சித்தனர். இதனால் காவல்துறை அதிகாரிகளுக்கும் உண்ணாநிலை இருந்த பெண்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறிது நேரம் கொந்தளிப்பான சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து திருவான்மியூரையடுத்த பாலவாக்கத்தைச் சேர்ந்த தங்கமணி (வயது 45), கொளத்தூரைச் சேர்ந்த ஜெயமணி (வயது 42), லோகநாயகி (வயது 45), திருவண்ணாமலையைச் சேர்ந்த மதி (வயது 32), தேனியைச் சேர்ந்த சித்ராதேவி (வயது 43) ஆகியோரை காவல்துறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக கைது செய்து ஊர்தியில் ஏற்றிச் சென்றனர்.


பின்னர் அவர்களை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 5 பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 15 பேர் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி
- புதினம்.காம்
-வக்தா.டிவி


அவர் வருகைக்கு மிரளும் இலங்கை அரசு

0 comments

பிரித்தானிய அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

பிரித்தானிய பிரதமரின் சிறப்பு பிரதிநிதி டெஸ் பிரவுன் ஐநாவில் இலங்கை விவகாரம் குறித்து விவாதம் ஒன்றை நடத்துவதற்கு அனுப்பப்பட்டமையை தமது அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐநாசபை மூலம் இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த பிரித்தானியா முயற்சிப்பதாகவும் எனினும் அது நடைமுறைச்சாத்தியமற்றது என்றும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தமது அரசாங்கம் ஐநாவின் யுத்த நிறுத்த கோரிக்கையினை திட்டவட்டமாக நிராகரித்துள்ளதாகவும் எனவே இனி ஒரபோதும் ஐநா யுத்த நிறுத்தம் குறித்து தமது அரசாங்கத்தை கோர முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

புpரித்தானிய பிரதமர் கோடன் பிரவுனின் சிறப்பு பிரதிநிதியான டெஸ் பிரவுன் தழிழ் அமைப்புகளால் நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்று வருவதாகவும் அவ்வாறனவரை சிறப்பு பிரதிநிதியாக தம்மால் அங்கீகரிக்க முடியாது என்றும் அரசாங்க பேச்சாளார் தெரிவித்துள்ளார்.

நன்றி
பதிவு.காம்


விடுதலைப் புலிகளின் புதிய எச்சரிக்கை!!!

19 comments

இலங்கை அரசாங்கத்தின் யுத்த முன்நகர்வுகள் தொடருமேயானால் வன்னியில் மிகப் பாரிய மனிதப் பேரவலம் இடம்பெறுவதனை தவிர்க்க முடியாதென தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று தெரிவித்துள்ளனர்.


யுத்த வெற்றிகளின் மூலம் தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்தை தடுத்து நிறுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபோதும் பயனளிக்காதென புலிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தமது சுதந்திரப் போராட்டம் பல்வேறு வழிகளில் தொடரும் எனவும், யுத்த வெற்றிகளின் மூலம் இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கும் சமாதானம் ஒருபோதும் கிட்டாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை இடம்பெற்று வரும் யுத்தம் தொடர்பில் ஐக்கிய அமெரிக்காவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கதென விடுதலைப் புலிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச சமூகங்களின் அறிவுரைகளை கேட்டு இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை விரைவில் அமுல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எந்த நேரத்தில் சமாதான நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தயார் நிலை இருப்பதாக வன்னி விடுதலைப் புலி தலைமையகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

16.04.2009ம் திகதி இலங்கை மனிதாபிமான நிலைமை குறித்து அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை மெத்தச் சரியானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று காலம் முதல் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவே போராட்டம் நடத்தப்படுவதகாவும், உரிமைக் குரல் கொடுத்த பெரும் எண்ணிக்கையிலான தமிழர்களை இலங்கை அரசாங்கங்கள் கொன்று குவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



சிவிலியன் நிலைகள் மீது நடத்தப்படும் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமென புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்;ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் உள்ள தமிழ் மக்கள் இhணுவம் மற்றும் துணை இராணுவக் குழுக்களினால் தவணை முறையில் துன்புறுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் தமது நியாயமான கோரிக்கைகளுக்கு தகுந்த பதில் கொடுக்காவிட்டால் சுதந்திரப் போராட்டம் தொடரும் என தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்ட முறைகள் மாறுப்பட்டாலும் பல்வேறு வழிகளில் போராட்டம் தொடரும் எனவும், யுத்த நிறுத்தப்படாது இராணுவ வெற்றிகள் மீது நம்பிக்கை கொண்டால் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவது முடியாத காரியமாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி
குளோபல் தமிழ் நியுஸ்


ரேடார் மூலம் கண்டுபிடித்த ராணுவத்தினர்!!

0 comments


அம்பலவன் பொக்கனை, வலைஞர் மடம், மாத்தளன், இரட்டை வாய்க்கால், இடைக்காடு, முள்ளிவாய்க் கால் ஆகிய ஆறு கிராமங்களும் கடல் பார்த்துக்கிடக்க... அதனைச் சுற்றிய ஐந்து முனைகளில் 40 ஆயிரம் சிங்கள ராணுவ வீரர்கள் குறி பார்த்து நிற்க...

மூன்று லட்சம் தமிழ் மக்கள் வானம் பார்த்து நல்ல செய்தி வராதா என்று நிர்க்கதியாக, நிராதரவாக அலைய... 'இன்னும் ஒரு வாரம்தானாமே' என்று கொழும்பு சந்தோஷக் காற்றைப் பரவவிட... தமிழ் ஈழம் தனது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டு இருப்பது நிஜமா?
தமிழர்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே நிர்மாணித்துக்கொள்ளும் தனித் தமிழீழமா அல்லது ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சியா என்ற கேள்வி அப்புறம். அந்தப் பூமியில் உயிரை மட்டும் மிச்சமாக வைத்து காலம் கடத்திய கூட்டம், சில சொச்சமாவது மிஞ்சுமா என்ற கேள்விதான் ஐ.நா. வரை கேட்கிறது. யார் சொன்னாலும் கேட்கும் மனநிலையில் சிங்கள அரசாங்கம் இல்லை. இலங்கையைத் துண்டாடும் 'பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தமாக' ஆரம் பிக்கப்பட்ட மகிந்தாவின் தாக்குதலில், கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 77 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் சொல்கிறார்.


'புலிகளைத்தான் கொல்கிறோம், பயங்கரவாதிகளைத்தான் தாக்குகிறோம், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தப் போகிறேன்' என்று மகிந்தா சொல்வதன் அர்த்தம்... யாருமில்லாத மயான அமைதியா?

கடந்த அக்டோபர் 14-ம் தேதி 'போர் நிறுத்தம் தேவை' என்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு தீர்மானம் நிறை வேற்றினார் முதல்வர் கருணாநிதி. அன்று முதல் இந்த வாரம் வரை மட்டும் 8 ஆயிரம் தமிழர்கள் குண்டு போட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். 15 ஆயிரம் பேர் ஊனமானார்கள். புலிகளைச் சண்டை போட்டுக் கொல்ல முடியாமல் வானத் தில் இருந்து குண்டுகள் போட்டு மக்களைக் கொல்வதை ஐ.நா. சபையில் ஆரம்பித்து அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அத்தனையும் சொன்ன பிறகும் சாவும் நிற்கவில்லை... சண்டையும் நிற்கவில்லை.

கடந்த 8-ம் தேதி மட்டும் 189 பேர் கொல் லப்பட்டார்கள். போர் சூழ்ந்த புதுக்குடியிருப்புப் பகுதியில் இயங்கும் தொடக்கச் சுகாதார நிலையத்தில் பால் மாவு வாங்க நின்றிருந்த தமிழ்க் குடும்பங்கள் தலையிலும் குண்டு இறங்கியது. கற்பகநாதன் கஜீபன் என்ற ஒன்றரை வயதுக் குழந்தையும், யோசேப் மார்த்தம்மா என்ற 76 வயது பாட்டியும் பலியானார்கள். ஆர்ட்டிலறி எறிகணைகள், பல்குழல் வெடிகணை, மோட்டார் பீரங்கி, ஆர்.பி.ஜி. உந்துகணை, தொலை தூரத் துப்பாக்கி. ஆகிய ஐந்தும்தான் ஆரம்பத்தில்! கிளஸ்டரும் வெள்ளை பாஸ்பரஸூம் சில மாதங்களுக்கு முன் வந்தன. இப்போது... ரசாயன குண்டுகள். இதற்கு 'ஷாக்கிங் ஏஜென்ட்' என்று பெயராம்!

கடந்த 4-ம் தேதி மிகப் பெரிய தாக்குதலுக்குப் புலிகள் திட்டமிட்டு ஓர் இடத்தைத் தாண்டி இன்னோர் இடத் துக்கு இடம்பெயர்ந்துகொண்டு இருந்ததாகவும், அதை ரேடார் மூலம் கண்டுபிடித்த ராணுவத்தினர், அந்த இடத்தை நோக்கி இந்த ரசாயனப் புகையைக் கிளப்பியதாகவும் தகவல். புலிகள் அமைப்பின் கட்டளைத் தளபதிகளாக இருந்த தீபன், விதுஷா உள் ளிட்ட 127 பேர் இறந்துபோனார்கள். இதே தாக்கு தலில் 1,300 தமிழர்களும் பலியாகி இருக்கிறார்கள். தமிழர்களை இனி ஒட்டுமொத்தமாகக் கொல்லத் திட்டமிட்டிருக்கும் முறை இதுதான்.

"இந்த வகையான ரசாயனக் குண்டுத் துகள்கள் தோலில் பட்டதும், அந்த இடத்தில் கொப்புளம் வரும். உடனே அவை வெடிக்கும். உடம்பு முழுக்க இது போன்ற கொப்புளங்கள் வந்து வெடித்து ரசாயனங்கள் உள்ளே போய் உயிரைப் பறிக்கும்.

முன்பெல்லாம் ரசாயனக் குண்டுகளின் புகைகள் மூச்சுக்காற்று வழியாக உடம்புக்குள் போய் உயிரைப் பறித்துவிடுவதாக இருந்தது. ஆனால், அதிலிருந்து தப்பிக்க மாஸ்க் வந்துவிட்டது. அதையும் புலிகள் பயன்படுத்துகிறார்கள். எனவேதான் இப்போது தோலைத் தாக்கும் ரசாயன மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன" என்று தகவல்கள் சொல்லப்படுகின்றன. இந்த ரசாயன குண்டுகள் பயன்படுத்தப்படுவது குறித்து இலங்கை மனித உரிமை அமைப்புகள் தங்கள் கவலைகளைத் தெரிவித்துள்ளன.

பூநகரில் ஆரம்பித்து புதுக்குடியிருப்பு வரை சிங்கள ராணுவத்துக்கு இத்தனை பெரிய வெற்றியை வாங்கிக் கொடுத்தது 58, 59-வது படைப் பிரிவுகள்தான். அதிகமான அளவு பயிற்சியும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இதில் இருந்தார்கள். ஆனால், மூன்று தாக்கு தல்களில் இதில் இருந்த 3,500 பேரைப் புலிகள் கொன்றுவிட்டதாகவும்... எனவே, ராணுவத் தரப்பு இனி போரில் வெல்ல முடியாத நிலை யில் ரசாயன குண்டுகளையே நம்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ரசாயனங்களை அதிகமாகப் பயன்படுத்தும்போது சாவுகளின் எண்ணிக்கை அதிகமாகும். இந்த ஐந்து கிராமங்களையும் குறிவைத்துத் தாக்கும்போது அங்கு வாழும் 3 லட்சம் மக்களின் கதியும் அதோ கதிதான்.

புதுக்குடியிருப்புக்கு தென்மேற்கு, வடக்குப் பகுதியில் புலிகள் அமைப்பு மையம்கொண்டு இருப்பதாக நினைத்து, ராணுவம் தாக்குதலைத் தொடுத்து வருகிறது. ஆனால், அது முழு உண்மைஅல்ல என்ற தகவல் இப்போது சொல்லப்படுகிறது. 'பூநகரியை ராணுவம் பிடித்ததுமே புலிகள் அமைப்பு 50, 100 பேர்களாகப் பிரிந்து, தமிழ்ப் பகுதியின் காடுகளுக்குள் பரவிவிட்டனர். யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்புக் காடுகளுக்குள் இவர்கள் ஐக்கியமாகிவிட்டார்கள். மரபுவழி ராணுவ மாக இருந்தவர்கள் மீண்டும் கெரில்லாப் படை யாகப் பிரிந்துவிட்டார்கள். எனவே, புலிகள் அமைப்பை முழுமையாகத் துடைத்தெடுக்கப் போவதாகச் சொல்லி, சிங்கள ராணுவம் செய்யப் போவது தமிழ் மக்களைத் துடைத்தெறிவதாகத்தான் இருக்கும்' என்று செய்திகள்.

"அங்கிருப்பவர்களை அப்பாவி மக்களாக மட்டும் சொல்ல முடியாது. அவர்களும் ஏதோ ஒரு விதத்தில் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள்தான். அவர்கள் காட்டுக்குள் இருந்து தப்பித்து வந்தாலும், பொது மன்னிப்பு வழங்க மாட்டோம்" என்று ராணுவச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. எனவே, ராணுவத்தின் பார்வையில், ஒன்றரை வயது கஜீபனும் 76 வயது மார்த்தம்மாவும் பயங்கரவாதிகள்தான். மக்கள் இப்போது அடர்ந்த பனைமரங்களுக்கு மத்தியில் டென்ட் அடித்தும், மேற்கூரை இல்லாமலும் பொழுதைக் கடத்துகிறார்கள். வெப்பக் காலத்தில் நிழலற்ற பனைமரத்துக்குக் கீழே வாழ்வதன் அவஸ்தை அவர்களுக்கு மட்டும் தெரியும். எல்லோருக்கும் ரசாயனக் குண்டு வீசாமலேயே கை, கால்களில் கொப்புளங்கள் வெடித்திருக்கின்றன. சோறு பொங்கிய தண்ணீரும், பருப்பு வேக வைத்த தண்ணீரும்தான் உணவு. பகல் முழுவதும் வெப்பக் காற்றில் உடல் கருக, நள்ளிரவோ பயங்கரமானதாக இருக்கிறது. துக்கம் தொண்டையை அடைப்பதால் தூக்கமில்லை. மிதமிஞ்சிய முழிப்பு அதிகாலையில் கண்ணை மயக்கும்போது, வெடிச் சத்தம் பலரை அப்படியே கொல்கிறது. சிலரை முழிக்க வைத்து அழச் சொல்கிறது.

இப்படியாக எழுதப்படும் இலங்கை வரலாற்றில்...

அரையாண்டுக்கு முன்னால் கிளர்ந்த அகிம்சைப் போராட்டம் பயனற்றுப்போனது. இளைஞர்கள் பலர் ஆயுதம் தூக்கினார்கள். அப்பாவி ஆண்களும் பெண் களும் கொல்லப்பட்டார்கள். ஒரு லட்சம் அபலைகள் தாய்த் தமிழகத்துக்குத் தப்பி வந்து, சிறுகுடிசைகளில் வசிக்க ஆரம்பித்தார்கள். மூன்று லட்சம் பேர் விட்டால் போதும் என்று வெளிநாடுகளுக்குத் தப்பிப் போனார்கள். யாழ்ப்பாணம் பகுதி மக்கள் ஊரடங்கு உத்தரவால் அமுக்கப்பட்டார்கள். கிழக்கு மக்கள் எந்த வசதியும் இல்லாமல் இரண்டாம் தரக் குடிமக்கள் ஆனார்கள்.

கொழும்புத் தமிழர்கள் அடையாளம் அனைத்தையும் இழந்து சிங்கள மக்களாக உருமாறினார்கள். 30 ஆயிரம் புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மடிந்து போனார்கள். ஆறு காலப் பூசை நடந்த கோயிலில் மணியடிக்க ஆளும் இல்லை; மனமுருகி வணங்கப் பக்தனும் இல்லை. விவசாய நிலங்கள் வீடுகளாக்கப்பட்டு சிங்களர்கள் குடியேற்றப்பட்டார்கள். சைவப் பெயர்கள் அனைத்தும் சிங்களம் ஆக்கப்பட்டன. கடலுக்கு மீன் பிடிக்க மட்டுமல்ல, காற்று வாங்கவும் யாரும் வரவில்லை. வடக்கு மாகாணத்தில் ஒரு லட்சம் பேர் கொல்லப் பட்டார்கள்; இரண்டு லட்சம் பேர் மனநிலை பாதிக் கப்பட்ட நிலையில் கம்பி வேலிக் கொட்டடிக்குள் அடைக்கப்பட்டார்கள்.

கடலுக்கு அடுத்த பக்கத்தில் எட்டுக் கோடித் தமிழ் மக்கள் செய்வதறியாது கையைப் பிசைந்துகொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்!

-----நன்றி:விகடன்----
-----நன்றி செய்தி.காம்
நன்றி nowpublic.com


விடுதலைப் புலிகளின் புதிய அறிவிப்பு!!!

0 comments

உடனடியாகவும் நிரந்தரமாகவும் போர் நிறுத்தத்தை அறிவித்து தமிழர்களின் அவலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுமாயின் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண தாங்கள் தயாராக உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்த 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்து நிரந்தர போர் நிறுத்தத்திற்கு தயார் என்று விடுதலைப் புலிகள் விடுத்த கோரிக்கையை சிறிலங்க அரசு நிராகரித்துவிட்ட நிலையில்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கைத் தீவில் தமிழ் தேசத்திற்கு தொடர்ந்து இழைக்கப்பட்ட அநீதியின் விளைவாகப் பிறந்த வரலாற்றுப் பூர்வமான விடுதலைப் போராட்டத்தையே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்கொண்டு வருகிறது. வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநியாயங்களுக்கு எதிராகவே தமிழீழ விடுதலைப்புலிகள், ஆயுதம் ஏந்திப் போராடினர்.எங்களுடைய இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான நியாயமான தீர்வை சர்வதேச சமூகம் வழங்குமென்றால் அந்த ஆயுத போராட்டத்திற்கான அவசியம் இருக்காது” என்று அந்த அறிக்கையில் பத்மநாதன் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் அனுபவித்துவரும் மானுட அவலத்திற்கு உடனடியாகவும் நிரந்தரமாகவும் போர் நிறுத்தம் அறிவித்து முற்றுப் புள்ளி வைக்குமானால், அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தையின் மூலம் தமிழர்களின் உரிமையை போராடி பெற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தயாராகவே உள்ளது என்பதை சர்வதேச சமூகத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் பத்மநாதன் கூறியுள்ளார்.

நிரந்தர போர் நிறுத்தத்தை நிராகரித்த இலங்கை அரசாங்கம், 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி, தம்மால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தின் மீது ஆரம்பித்துள்ளது.இதன் போது படையினர் நகர்வுகளை தடுக்க தமிழீழ விடுதலைப்புலிகள் பாரிய தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து படையினர் ஆயிரக்கணக்கான எறிகணைகளையும் குண்டுகளையும் ஏவி பல பொதுமக்களை கொன்றும் ஆயிரக்கணக்கானோரை காயப்படுத்தியும் உள்ளனர்.


தமிழர்களின் அவலத்திற்கு முடிவுகட்ட நாகரீக உலகின் பிரதிநிதிளாக முன்னி்ன்று கொடை நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், நோர்வே ஆகியன இந்தியாவுடன் இணைந்து வலியுறுத்தி உடனடியாக நிரந்தர போர் நிறுத்தம் செய்ய வழிகாண வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள பத்மநாதன், போரின் மூலம் இனப் பிரச்சனைக்கு முடிவையோ அல்லது இலங்கையிலும் அல்லது தெற்காசிய மண்டலத்திலும் நிலைத் தன்மையையோ உருவாக்கிட இயலாது என்றும் கூறியுள்ளார்.


வன்னியில் இடம்பெறுகின்ற மக்களின் அவலங்களை சர்வதேசம் அறிந்திருந்தும் அதனை தடுப்பதில் முனைப்புக்காட்டவில்லை எனவும் பத்மநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நன்றி
தமிழ்வின்


தோழி மாயாவின் நிகழ்ச்சியை தடை செய்ய சதி!!

3 comments





வின்பரை அம்மையார் வழிநடத்தும் ‘ஒபரா’ எனப்படும் உலகப்புகழ் பெற்ற செவ்வி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒரு வாய்ப்பளிக்குமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்து, ஈழத்தமிழ் மக்களின் மனிதாபிமான பிரச்சினைகளை சர்வதேச கவனத்திற்கு கொண்டு வர முயற்சிக்கும் 4 தமிழ் இளைஞர்கள், கனடாவின் டொறொண்டோவில் இருந்து, சிகாகோ நகர் வரை நடைபயணத்தை

தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்!




இந்நிலையில் இவ் ஒபரா நிகழ்ச்சியில் மேற்குலகின் பிரபல இசை நட்சத்திரமும், இலங்கை தமிழ் பெண்ணுமான மாயா அருள் பிரகாசம் கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒஸ்கார் விருதுகளை அள்ளிக்குவித்த ஸ்லம்டோக் மில்லியர் திரைப்படத்திலும், ஏ.ஆர் ரகுமானின் இசையில் இவர் பாடிய ஒரு பாடல் படுபிரபல்யம் ஆனது! இவர் இலங்கை தமிழ் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இன ஒடுக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக மாயா அருள் பிரகாசம் அண்மையில் பகிரங்க அறிவிப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் இவ் ஒபரா நிகழ்ச்சியில் கலந்து கொள்வாராயின், சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலை பற்றி அனைத்துலக வெளிச்சத்திற்கு கொண்டு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாயா அருள் பிரகாசத்தின் இச்செவ்வியை ஒளிபரப்பு செய்யக்கூடாது என சிறீலங்கா அரசிற்கு ஆதரவு தெரிவிக்கும்,அமெரிக்காவில் வாழ் இலங்கையர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகப்பயங்கர வாத அமைப்புக்களில் ஒன்றான தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவான வகையில் மாயா செயற்பட்டு வருவதாக எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நன்றி
பாரிஸ்தமிழ்.காம்

டிஸ்கி
நண்பர்களே அவர் நிகழ்ச்சி மாபெறும் வெற்றி அடைய அவருக்கு உங்கள் மேலான ஆதரவை அவருடைய MIA தளத்தில் சென்று பதியும்மாறு தோழமையுடன் அன்பு வேண்டுகோள். நன்றி!!!


விடுதலைப்புலிகள் புதிய சங்கேத சொற்களால் - ராணுவம் பீதி!!!

0 comments


photo file copy

தமிழீழ விடுதலைப் புலிகளின் அணி ஒன்று கொக்குத்தொடுவாய் பகுதியில் தரையிறங்கியிருக்கலாம் எனவும் இந்த அணியின் நகர்வின் போதே அலம்பில் பகுதியில் கடற்சமர் இடம்பெற்றதாகவும் 'லக்பிம' வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 'லக்பிம' ஆங்கில வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

முல்லைத்தீவு கடற்கரையில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் கடந்த சனிக்கிழமை (04.04.09) இரவு 11:45 நிமிடமளவில் கடற்புலிகளின் 15 படகுகளை அவதானித்துள்ளனர்.

இந்த படகுகள் வெல்லாமுனையில் இருந்து முல்லைத்தீவுக்கு வடக்காக நோக்கிச் சென்று கொண்டிருந்தன.

படகுகள் மீது வயர் மூலம் வழிநடத்தப்படும் ஏவுகணை தாக்குதலை நடத்தியிருந்தது. இதன் போது இரு படகுகள் சேதமடைந்த போதும் ஏனைய படகுகள் ஏவுகணையின் தூரவீச்சில் இருந்து விலகிச் சென்றுள்ளன.

அதன் பின்னர் நாயாறு கடற்பரப்பில் நின்ற கடற்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு பெரும் கடற்சமர் இடம்பெற்றிருந்தது.

முதற்கட்ட சமரின் பின்னர் கடற்புலிகளின் படகுகள் திருகோணமலை நோக்கிச் செல்வதாக கடற்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதால் அவர்கள் திருகோணமலை நோக்கி தமது கவனத்தை திருப்பியிருந்தனர்.

ஆனால் விடுதலைப் புலிகளின் படகுகள் கொக்குத்தொடுவாயில் தரையிறங்க முயற்சித்தன.

கொக்குத்தொடுவாயில் இறங்கி இராணுவ அணிகளை பின்புறமாக தாக்குவதே விடுதலைப் புலிகளின் உத்தி.

இதனிடையே வேறு ஒரு நோக்கத்திற்காக விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் ஜெயம் 100-க்கும் அதிகமான போராளிகளுடன் 20 படகுகள் சகிதம் கடற்கரையில் நின்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெயத்தின் அணியின் நோக்கம் என்ன என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. எனினும் ஏதோ ஒரு சிறப்பு திட்டத்துடன் அவர்கள் அங்கு வந்திருந்தது உறுதியானது.

ஜெயத்தின் கட்டளைகளுக்கு அமைவாக செயற்படுமாறு அவர்களுக்கு பணிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெயத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ள போதும், விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்பு சாதனங்கள் அதிகளவில் இயங்கியதை இராணுவத்தின் புலனாய்வுபிரிவு அவதானித்துள்ளது.

எனினும் விடுதலைப்புலிகள் புதிய சங்கேத சொற்களை பயன்படுத்தியதனால் அதன் அர்த்தங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.

மேலும் ஒரு பாரிய கடல் நடவடிக்கை ஒன்றை அவர்கள் அன்று மேற்கொண்டிருக்கலாம் என தெரிகின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி
புதினம்.காம்