Headline

இனி செல்போனுக்கு 11 இலக்க எண்கள்!




செல்போன் பயன்படுத்துவோர் மட்டுமல்ல... அவர்களுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும்கூட இன்று பெருகிவிட்டன.

நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 35 கோடி பேர் இன்றைக்கு செல்போன் உபயோகிக்கிறார்கள். இன்னும் இரு ஆண்டுகளில் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் செல்லும் கையுமாகவே காட்சி தருவார்கள் என்கிறது தொலைத் தொடர்புத் துறை.

இந்த வளர்ச்சி ஒரு நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது சென்போன் நிறுவனங்களுக்கு. இதுவரை 10 இலக்க எண்களைப் பயன்படுத்தி வரும் செல்போன் ஆபரேட்டர்களுக்கு 'நம்பர் தட்டுப்பாடு' ஏற்பட்டுவிட்டதாம்.

இந்த சிக்கலைத் தீர்க்க நாடு முழுவதும் செல்போன் ஆபரேட்டர்களுக்கு 11 இலக்க எண்களைத் தர தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் நிறுவனமான பிஎஸ்என்எல் அலுவலர் ஒருவர் நம்மிடம் கூறியதாவது:

அநேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் செல்போன் எண்கள் அனைத்தையும் 11 இலக்கத்துக்கு மாற்றிவிடும் முடிவில் உள்ளது தொலைத் தொடர்புத் துறை. வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரிலிருந்து இந்த மாறுதல்கள் ஆரம்பிக்கும். இதற்கான சுற்றறிக்கை ஏற்கெனவே வந்துவிட்டது என்றார்.

நன்றி
-தட்ஸ்தமிழ்

0 comments: