Headline

இலங்கை இராணுவம் நச்சுவாயு தாக்கி இறந்தவர்கள் படங்கள்

போராளி ஒருவர் மீது நேரடியாக எரி நச்சுக்குண்டு பட்டு அவரின் உடல் கருகியதை படத்தில் காணாலாம்


எரி நச்சுக்குண்டு பட்டு உடல் எரிந்த நிலையில் இறந்துகிடக்கும் போராளிகள்


விடுதலைப்புலிகளை புதுக்குடியிருப்பில் சுற்றி வளைத்திருப்பதாகவும் அவர்களை சரணடையுமாறும் சிறிலாங்கா இராணுவம் கூறியிருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால்; தற்பொழுது கிடைத்த தகவல் ஒன்றின்படி சுற்றிவளைப்பிற்குள் இருந்த புலிகள் கடுமையான எதிர்ச்சண்டை பிடித்துக் கொண்டிருந்தமையால் இராணுவத்திற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது.
அவ்வேளையில் தான் இராணுவம் ஒலிபெருக்கி மூலம் சரணடையுமாறு கேட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் எரி நச்சுக்குண்டை ஏவியிருக்கின்றார்கள்.

அதனால் அங்கு நின்ற போராளிகள் அவ் எரி நச்சுக்குண்டு பட்டு எரிந்த நிலையில் கீழே வீழ்ந்ததாகவும். பின் இராணுவம் முன்னேறிச்சென்று இவ்வீரர்களின் உடலங்களைக்க் கைப்பற்றியதாகவும் அறியமுடிகின்றது.

இவ் எரி நச்சுவாயுவை சுவாசித்து தப்பி வந்தவர்களில் சிலருக்கு மூச்சுத்திணறல், தலைச்சுற்று, வாந்தி போன்றன ஏற்பட்டதாகவும் கூறினார்கள்.

இராணுவத்தின் தொலைத்தொடர்பு உரைகளை ஒட்டுக் கேட்கப்பட்டபோது இவ் நச்சுக்குண்டை பாவிப்பதற்கு முன் வேறு சில அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டதாகவும், அவ்விடத்தில் நின்ற இராணுவத்திற்கு முகத்திற்கு அணியும் முகமூடி(மாஸ்க்) கொடுக்கப்பட்டதாகவும், இராணுவத்தை சற்று பின் நகர்த்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

மேலும் இவ் நடவடிக்கையால் இராணுவத்தினரும் மயக்கமுற்று பாதிக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

உலகிலே தடை செய்யப்பட்ட அயுதங்களை பாவித்தாவது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு சிறிலங்கா கொடிய அரசும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. அதற்கு சர்வதேசத்தின் ஆசியும் கிடைத்திருக்கின்றது.

நன்றி
தமிழ்வின்.காம்

1 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.