Headline

பன்றிக் காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிப்பு !


மெக்சிகோவில் மெள்ள துளிர்விட்ட பன்றிக்காய்ச்சலுக்கு உலகெங்கிலும் 141 பேர் இன்றுவரை பலியாகியுள்ளனர். அதிஉயர் மருத்துவக் கட்டுப்பாடுகள், உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் கூட உலகம் முழுவதும் 74 நாடுகளுக்கு பரவியுள்ளது இந்த நோய்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்தது.


ஆசியா, ஐரோப்பா ,அமெரிக்கா நாடுகளில் பரவியுள்ள பன்றிக்காய்ச்சல் குறித்தும் அதன் தீவீரம் குறித்தும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் உலகளாவிய தொற்று நோயாக பன்றிக்காய்ச்சலை அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். ஆறாம் கட்ட எச்சரிக்கைக் குறியையும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது .

இந்நிலையில் தமிழகத்தின் கோவையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு தம்பதியரும், அவர்களின் குழந்தையும் உடல் நலம் தேறிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு

அதேவேளை, ஸ்விட்சர்லாந்தின் புகழ்பெற்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனமான 'நோவார்ட்டிஸ் ஏஜி', H1N1 (ஸ்வைன்ப்ளூ) எனப்படும் இந்தப் பன்றிக் காய்ச்சலுக்கு முதன் முதலாகத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.

உலக நாடுகள் பலவற்றையும் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது நோவார்ட்டிஸ் நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பு.


பொதுவாக இதுபோன்ற தடுப்பு மருந்துகள் வளர்ந்த கருமுட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும். ஆனால் ஸ்வைன் ப்ளூ தடுப்பு மருந்து மட்டும் செல்களிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக நோவார்ட்டிஸ் அறிவித்துள்ளது.

பன்றி்க் காய்ச்சலை உலகளாவிய தொற்று நோயாக நேற்றுத்தான் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.


இதனைத் தொடர்ந்து புதிய தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் ஏற்கனவே ஈடுபட்டிருந்த பல நிறுவனங்கள் அந்த முயற்சிகளைத் துரிதப்படுத்தின. இவற்றில் முதல் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதில் நோவார்டிஸ் வெற்றி பெற்றுள்ளது. நோவார்ட்டிஸின் ஜெர்மன் தொழிற்சாலையில் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல மில்லியன் டோஸ் மருந்துகளை அதிவிரைவில் உற்பத்தி செய்யும் வசதி கொண்டது இந்த தொழிற்சாலை என்பதால் உலகம் முழுக்க தடுப்பு மருந்து விநியோகிப்பது எளிதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

விரைவில் இந்த மருந்தை சோதனை செய்யவுள்ள நோவார்ட்டிஸிடம், அமெரிக்கா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகள் லட்சக்கணக்கான டோஸ் தடுப்பு மருந்துகளுக்கு 'ஓர்டர்' கொடுத்துள்ளன.



நன்றி
-வீரகேசரி

4 comments:

வால்பையன் said...

வைரஸுக்கு மருந்தில்லை என்றார்களே!

puduvaisiva said...

"வால்பையன்
வைரஸுக்கு மருந்தில்லை என்றார்களே!"

வாங்க வாலு

பெரும் முயற்சிக்கு இடையே இதை கண்டுபிடித்திருகிறார்கள். இது பாராட்ட வேண்டிய சேவை.

sezhiya said...

ஜெயமூர்த்தி கண்டுபிடிச்ச மருந்தா?
பன்னிய காப்பாத்துமா?

puduvaisiva said...

//sezhiya said...
ஜெயமூர்த்தி கண்டுபிடிச்ச மருந்தா?
பன்னிய காப்பாத்துமா?//


செழியா
உன்னோட புதிய வண்டியை ரோட்டுல ஒழுங்க ஓட்டினா பன்னியை காப்பாத்தலாம்.

:-))))))))))))