Headline

நாளை தமிழர்களுக்கு பாரிய ஆச்சரியம் ஒன்று ஏற்படும்


கொல்லப்பட்டதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை உலகமே எதிர்பார்த்திருப்பதாக இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நாளை தமிழர்களுக்கு பாரிய ஆச்சரியம் ஒன்று ஏற்படும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கே பத்மநாதனுக்கு ஆதரவான குழுவுக்கும், எதிரான குழுவுக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருடம் இந்த நாளை யுத்தத்தில் பலியான தலைவர்களை நினைவு கூரும் வகையில் விமரிசையாக அனுஷ்ட்டிக்க ஏற்கனவே கே. பத்மநாதனுக்கும், மற்றுமொரு தலைவரான நெடியவனுக்கும் இடையில் நோர்வேயில் இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், கே. பத்மநாதன் கைது செய்யப்பட்ட ஒருசில தினங்களில் கே. பி. க்கு எதிரான குழுவின் தலைவர் நெடியவன் தலைமறைவானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நாளை மறுநாள் விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் அனுஷ்ட்டிக்கப்படுகின்ற போதும், அவர்களின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதில் குழப்பத்துடன் உள்ளது.

இதற்கு காரணம் கே. பத்மநாதன், பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த போதும், நெடியவன் இதனை மறுதலித்து அவ்வாறான அறிவிப்பை வெளியிடுவதை தவிர்த்தார்.
இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டால் இயக்கத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் துச்சமாக்கப்படும் என்ற அடிப்படையிலேயே அது தவிர்க்கப்பட்டது.

இதன் காரணமாக பிரபாகரனின் பிறந்தநாள் வரையில் அதனை இரகசியமாக பேணி, நாளை அதனை வெளியிட நெடியவனும் அவரது குழுவினரும் திட்டமிட்டனர்.
இதன் பின்னர் புலிகளின் அடுத்த காய் நகர்த்தலை மேற்கொள்ள அவர்கள் தீர்மானித்திருந்தனர்.

அவர்கள் அனைவரும் பிரபாகரன் நாளை தமது முகத்தை காட்டுவார் எனவும், நாளை மறுநாள் மாவீரர் தின உரையை நிகழ்த்துவார் எனவும் நம்புகின்றனர்.

இதே நம்பிக்கையை தமிழகத்தின் அரசியல் தலைவர்களான நெடுமாறன் மற்றும் வைகோ ஆகியோர் கொண்டுள்ளமையும் இதற்கான காரணமாக கொள்ளலாம்.

தமிழீழத் தலைவர் நாளை மறுநாள் அதாவது 27ம் திகதி எங்கிருந்தேனும் தமது மாவீரர் நாள் உரையை நிகழ்த்துவார் என நெடுமாறன் நம்பிக்கை வெளியிட்டார்.
அது தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், தற்போது தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை தெளிவாக விளங்குகிறது.

அதற்கு காரணம் பிரபாகரன் இருக்கும் போது, ஒருவாரத்துக்கு முன்னதாக மாவீரர் தின ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். இந்த நிலையில் இந்தவருடம் விடுதலைப்புலிகளுக்கு சார்பான இணையத்தளங்கள் மாவீரர் வாரம் தொடர்பான எந்த அறிவித்தலையும் விடுக்கவில்லை.

எனவே புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது சந்தேகத்திற்கு இடமானதாக இருந்தாலும் ஒரு சில நம்பிக்கைகைகள் நிலவத்தான் செய்கின்றன.

இந்த நிலையில் உலகமே எதிர்பார்த்துள்ள நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களில் யாரை யார் ஆச்சரரியப்படுத்துவர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


நன்றி
- kavishan.blogspot.com


நாளை பிரபாகரன் பிறந்த நாள்: பெரும் ஆச்சரியம் நிகழும்
- நக்கீரன்

0 comments: