Headline

வீட்டு வாடகை செலுத்தாத ஐஏஎஸ் அதிகாரிகள்



மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஐஏஎஸ் அதிகாரிகள், அதிகாரிகள், ஊழியர்களுக்கு தமிழக அரசு வாடகைக்கு வீடு ஒதுக்குகிறது.

இப்போது குடியிருப்பவர்கள் பலரும் சரியாக வாடகை செலுத்தாமல் உள்ளனர். அந்த வகையில் அரசுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வரவேண்டி உள்ளது.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரங்கமணி, ரூ.11.53 லட்சம் பாக்கி வைத்துள்ளார். அவர் ஓய்வூதியத்தில் இருந்து 43 தவணைகளில் வசூல் செய்ய அரசு உத்தரவிட்டும் ரூ.20,000 மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் பீலா ராஜேஷ் ரூ.7.78 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளார். இதில் சமீபத்தில் ரூ.52,000 வசூல் செய்யப்பட்டது.

பொதுத்துறை கூடுதல் செயலாளராக இருக்கும் வீரசண்முகமணியின் வாடகை பாக்கி ரூ.7.76 லட்சம். இதில் கடந்த டிசம்பர் மாதம் ரூ.13,000 வசூலிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை செயலாளர் பிரபாகர ராவின் வாடகை பாக்கி ரூ.11.16 லட்சம். இதில் கடந்த டிசம்பர் மாதம் ரூ.18,600 மட்டும் வசூலாகி உள்ளது.

மத்திய நிதித்துறை இணை செயலாளர் சக்திகாந்ததாஸ் வாடகை பாக்கி ரூ.7.90 லட்சம். இவரிடம் எதுவுமே வசூலிக்கப்படவில்லை.

இப்படி ஐஏஎஸ் அதிகாரிகளின் வாடகை பாக்கி ரூ.45.32 லட்சமாக உள்ளது. அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்களின் வாடகை பாக்கி ரூ.30.91 லட்சம். இதுபோல் தமிழகம் முழுவதும் அரசுக்கு வரவேண்டிய வாடகை ரூ.1 கோடியை தாண்டிவிட்டது. இதையடுத்து, வாடகை பாக்கி உள்ள அதிகாரிகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நன்றி
நக்கீரன்

2 comments:

கிரி said...

இந்திய உருப்பட வாய்ப்பே இல்ல

puduvaisiva said...

"இந்திய உருப்பட வாய்ப்பே இல்ல"

இன்ன கிரி இப்படி சொல்லிட்டிங்க நம்ப டி.ஆர் நாளைதான் கூட்டணி பத்தி முடிவு செய்யறார். அவர் மட்டும் வெற்றி அடைந்தா இந்தியா நிலை தலை கீழா மாறும்.

:-)))))))))))))