Headline

நடிகர் ஜுனியர் என்.டி.ஆருக்கு படுகாயம்


தெலுங்கு தேசம் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக விளங்குபவர், ஜுனியர் என்.டி.ஆர். இவர், மறைந்த என்.டி. ராமராவின் பேரன்.

இவர், தெலுங்கு தேசம் கட்சிக்காக, கடந்த 12-ந் தேதி பிரசாரத்தை தொடங்கினார்.

தெலுங்கு புத்தாண்டு விழாவை, தனது குடும்பத்தினருடன் கொண்டாட அவரும், அவரது நண்பரும், நடிகருமான ராஜீவ் கனகலாவும் காரில் நேற்று இரவு, ஐதராபாத் நோக்கி வந்து கொண்டு இருந்த போது, மோதே என்ற இடத்தில் வந்தபோது, ரோட்டை விட்டு இறங்கி கவிழ்ந்து விட்டது.

இந்த விபத்தில், ஜுனியர் என்.டி.ஆருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருடன் காரில் இருந்த ராஜீவ் கனகலாவும் காயம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து, இருவரும் ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜுனியர் என்.டி.ஆருக்கு சிறிய ஆபரேஷன் செய்யப்பட்டது. ஜுனியர் என்.டி.ஆரை, தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம்கட்சி பாராளுமன்ற தலைவர் எர்ரன் நாயுடு, மற்றும் தலைவர்கள் பார்த்து, உடல் நலம் விசாரித்தனர்.

நன்றி
நக்கீரன்

0 comments: