ஓடும் ரயிலில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. கழிப்பறை துவாரம் வழியாக தவறி கீழே விழுந்த அந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. குழந்தையை காப்பாற்ற ரயிலில் இருந்து குதித்த தாயும் தப்பினார்.
ஜார்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து பீகார் மாநிலம் சாப்ராவுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் போலோ நாத் என்பவர் மனைவி ரிங்குவுடன் பயணம் செய்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரிங்குவுக்கு நள்ளிரவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அந்த பெட்டியில் நிறைய ஆண்கள் இருந்ததால், கழிப்பறைக்கு ரிங்கு சென்றார். சிறிது நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தையின் முகத்தை ரிங்கு பார்ப்பதற்குள் கழிப்பறையில் இருந்த துவாரம் வழியாக அந்த குழந்தை தண்டவாளத்தின் நடுவே தவறி விழுந்துவிட்டது.
ரயிலில் இருந்து குழந்தை விழுந்துவிட்டதே என்று அலறியபடி கழிப்பறையைவிட்டு ரிங்கு வெளியே ஓடிவந்தார். வெளியே நின்றிருந்த போலோ நாத் அபாய சங்கிலியை பிடித்து இழுக்கச் சென்றார். அப்போது, குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஓடும் ரயிலில் இருந்து ரிங்கு குதித்துவிட்டார். இதற்கிடையே அபாய சங்கிலியை போலோநாத் இழுத்ததால் 2 கி.மீ. தூரம் சென்று ரயில் நின்றது. பயணிகள் இறங்கி ஓடிவந்து பார்த்தபோது, ரிங்குவும், குழந்தையும் காயத்துடன் கிடந்தனர். அவர்களை மீட்டு ரயிலுக்கு தூக்கி வந்தனர். மேற்குவங்க மாநிலம் புரூலியா ரயில் நிலையத்துக்கு ரயில் வந்ததும் அவர்களை தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரிங்குவுக்கும், குழந்தைக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த சிசுவும், குழந்தையை காப்பாற்ற பாய்ந்த தாயும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது உலக அதிசயங்களில் ஒன்று என்று டாக்டர்கள் கூறினர்.
நன்றி
-தினகரன்
சும்மா ஜாலிக்கு
Headline
மெய் சிலிர்க்க வைத்த தாய் பாசம் - மருத்துவர்கள் வியப்பு !
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வீரத்தாய் தான்!
"வால்பையன் said...
வீரத்தாய் தான்!"
வாங்க வாலு
உண்மையில் இது வீரமிக்க பாச உணர்வுதான் ஆனால் இங்கே
"தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்த தாய், பாட்டி கைது செய்யப்பட்டனர். - தின மலர் 09/10/2009"
என்ற செய்தியை படிக்கும் போது வருத்தமாக இருக்குது.
Post a Comment