Headline

பழங்களை விரும்பி சாப்பிடுபவரா? நீங்கள் இனி தேவை எச்சரிக்கை !

Fruits Pictures, Images and Photos

சென்னை, செயற்கை முறையில் மாம்பழம், ஆப்பிள், வாழைப்பழங்களைப் ரசாயன முறையில் பழுக்க வைத்து சாப்பிடுவதில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


தானாய் பழுக்க வேண்டியதை தடியால் அடித்துப் பழுக்கவைப்பது என்தெல்லாம் பழமொழி. கால்சயிம் கார்பைட் தான் புதுமொழி. கடைகளில் விற்கப்படும் மாம்பழங்கள் பெரும்பாலும் கார்பைட் கற்களால் பழுக்கவைக்கப்பட்டதாகத்தான் இருக்கும். வியாபாரக் காரணங்களுக்காக அவர அவசரமாகப் பறிக்கப்படும் மாங்காய்களை இயற்கை முறையில் பழுக்க வைக்க சுமார் ஆறு நாட்கள் தேவைப்படும். ஆனால், அதுரை வியாபாரிகளால் லாபம் சம்பாதிக்காமல் இருக்க முடியுமா? அதனால்தான் திருவாளர் கார்பைடின் கைங்கர்யத்தில் பழுக்க வைக்கிறார்கள். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களைச் சாப்பிடுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற கோளாறுகள்தான் ஏற்படும் என்று சொல்லி வந்தார்கள். ஆனால், கார்பைட் கற்களில் உள்ள ஆர்சனிக் ரசாயனம் புற்றுநோயை ஏற்படுத்தும் எனச் சமீபத்தில் கண்டறிந்துள்ளார்கள். ஒரு மாம்பழத்தைப் பார்த்தே அது இயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்டதா இல்லையா என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். இயற்கையான முறைகளில் பழுக்கவைக்கப்பட்டதெனில் பழும் முழுவதும் ஒரே நிறமாக இருக்கும். கார்பைட் பழுத்தின் நிறம் ஆங்காங்கே அதிகமாகவும் சில இடங்களில் கறைவாகவும் இருக்கும். தவிர பழம் சூடானதாகவும் தோலில் மெல்லிய சுருக்கங்களும் இருக்கும். சுவையான மாம்பழம் என்ற வாங்கி சொந்தத் செலவில் சூன்யம் வைத்துக்கொள்ள வேண்டாம். கவனித்து வாங்குங்கள், கழுவி உண்ணுங்கள்.

பழக்கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பளபளா ஆப்பிள்கள் நம் கண்ணைப் பறிக்கும். பறிக்கப்பட்ட ஆப்பிள்கள் கெட்டுப்போகாமல் இருக்க அதன் மீது மெழுகுப் பூச்சு செய்யப்பட்டு பதப்படுத்தப்படுவது வழக்கமானதுதான். அப்படிப் பூசப்படும் மெழுகு தேன் கூடுகளில் இருந்தோ அல்லது தாவர எண்ணெய்களில் இருந்தோ தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது அரசின் கட்டுப்பாடு. ஆனால், அந்தக் கட்டுப்பாடுகள் காற்றில பறக்க விடப்பட்டு பலகாலம் ஆகிவிட்டது. இப்போதைய பளபளாவுக்குக் காரணம் பெட்ரோலியப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் மெழுகு பூசப்படுவதே. இத்தகைய மெழுகுப்பூச்சுக்கள் ஜீரணக் கோளாறுகளில் துவங்கி பல்வேறு கேடுகளை ஏற்படுத்தும். ‘தினம் ஒரு ஆப்பில் சாப்பிட்டால் மருத்துவரே தேவை இல்லை‘ என்பார்கள். மோசமான மெழுகு பூசப்பட்ட ஆப்பிளைச் சாப்பிடுவதாலேயே, மருத்துவரைத் தேட வேண்டி வரலாம். கவனம்.

மாம்பழங்கள் தவிர்த்து வாழைப்பழங்களும் கூட அரசாங்க விதிமுறைகளை மீறி செயற்கை முறையில் பழுக்கவைக்கப்படுகின்றன. இவ்வகை வாழைப்பழங்களின் காம்பு பச்சையாகவும் பழம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.

நன்றி
-சங்கம்
-விஜய் டி,வி

2 comments:

வால்பையன் said...

அவசியமான பதிவு தல!

puduvaisiva said...

"வால்பையன் said...
அவசியமான பதிவு தல!"

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாலு !