சென்னை மாங்காடு காமாட்சி அம்மன் நகரைச் சேர்ந்த சாத்தையா வயது 55 என்பவர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் பரபரப்பு புகார் தெரிவித்தார்.
நான் குவைத்தில் வேலை பார்த்து லட்சக்கணக்கில் சம்பாதித்தேன். தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். எனது செல்போனுக்கு சிலமாதங்களுக்கு முன்பு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில், இங்கிலாந்து நாட்டின் “பி ஓல்டு நோக்கியா ட்ரஸ்ட்” நடத்திய பரிசு குலுக்கலில் உங்கள் செல்போன் நம்பருக்கு 5.5 பவுண்டு (ரூ.12 1/2 கோடி) பரிசு விழுந்துள்ளது. உங்களிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் என்று இ-மெயில் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.
சம்பந்தப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொண்டபோது பரிசு தொகையை பெற ரூ.50 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தவேண்டும் என்றனர். அதன்படியே அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் பணம் செலுத்தினேன். அதே போல பணத்தை கொண்டு வர சுங்கவரி செலுத்த வேண்டும், அனுமதி பெற வேண்டும் என்று ரூ.13 லட்சம் வரை வங்கி கணக்கில் கட்ட சொன்னார்கள். அவ்வளவு பணத்தையும் சிறிது சிறிதாக கட்டினேன். பரிசு பணம் வந்தபாடில்லை.
பரிசு தருவதாக சொன்ன நபரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினேன். அவர் பெயர் ஹாரீஸ் ஹாட். இங்கிலாந்தில் இருப்பதாகவும், எங்கள் நிறுவன ஊழியர் பணத்துடன் உங்கள் வீட்டிற்கு வருவார் எனக்கூறினார். அதன்படி வெளிநாட்டு வாலிபர் ஒருவர் வீட்டிற்கு வந்து பெரிய பார்சல் ஒன்றை தந்துவிட்டு சென்றார். அதை திறந்து பார்த்தால் உள்ளே ரூபாய் நோட்டு அளவில் கத்தரிக்கப்பட்ட கருப்பு நிற காகிதங்கள் இருந்தது. 40 கட்டுகளாக கட்டி வைத்திருந்தனர்.
சம்பந்தப்பட்ட செல்போனில் தொடர்பு கொண்டபோது அதில் புதுவிதமான ரசாயன திரவத்தை ஊற்றினால் அவை அனைத்தும் நல்ல ரூபாய் நோட்டாக மாறும். காகிததாளின் மதிப்பு ரூ.12 1/2 கோடியாகும். எனவே ரசாயன திரவம் வாங்கி அனுப்புவதற்கு ரூ,32 லட்சம் பணம் கட்டுங்கள் என்றார். சம்பந்தப்பட்ட நபர் என்னை மோசடி செய்ய எண்ணுகிறார். எனவே அவரிடம் இருந்து நான் கட்டிய ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்தை மீட்டுத்தர வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் புகாரில் கூறியிருந்தார்.
தனிப்படை போலீசார் செல்போன் மூலம் துப்பு துலக்கினர். சாத்தையாவுடன் செல்போனில் பேசிய நபர் சென்னை மாடம்பாக்கம் அடுத்த ராஜ கீழ்ப்பாக்கம் பகுதியில் இருந்து பேசி வருவதை கண்டுபிடித்தனர். அவர்களின் அங்க அடையாளத்தின்படி அங்குள்ள ஒரு பங்களா வீட்டில் தங்கியிருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த டேவிட் வில்சன் என்ற ஓரிபாஜி (வயது 30). என்ற வாலிபரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 1 1/2 லட்சம் அமெரிக்க டாலர், ரசாயன திரவப்பாட்டில்கள், கருப்பு காகித கட்டுக்கள், லேப்டாப் கம்ப்யூட்டர் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
வெளிநாட்டில் இருந்து தனது கூட்டாளி ஹாரீஸ் ஹாட் என்பவர் மூலமாக மோசடி தொழில் செய்து வருவதை ஒப்புக்கொண்டார். கூட்டாளியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய தனிப்படை போலீசாரை கமிஷனர் ஜாங்கிட் பாராட்டினார். செல்போன் மூலமாக யாராவது பரிசு விழுந்துள்ளது என ஆசைவார்த்தை கூறினால் உடனடியாக போலீசில் புகார் செய்யுங்கள். மக்கள் யாரும் இதுபோன்ற அறிவிப்புகளை நம்பி ஏமாறாதீர்கள் என புறநகர் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்
நன்றி
-மாலை மலர்
& Net photos
Headline
சென்னையில் பரபரப்பு நைஜீரிய நபரின் போலி பரிசு மோசடி உஷார்...
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இப்படியும் ஒரு அடி முட்டாளா!
"கிரி said...
இப்படியும் ஒரு அடி முட்டாளா!"
வாங்க கிரி
குவைத்தில் வேலை பார்த்து சேர்த்த பணத்தை இப்படி ஒரு மோசடியில் இழந்தது வருத்தமான செய்திதான்.
கிரி ஏமாத்த ஆள் இருக்கும் வரை இதுபோல நிகழ்வுகள் நடக்கத்தான் செய்வும்.
//கிரி ஏமாத்த ஆள் இருக்கும் வரை இதுபோல நிகழ்வுகள் நடக்கத்தான் செய்வும்.//
’ஏமாற’ என்று சொல்லுங்கள்,சிவா.அதுதான் சரி.
ஷண்முகப்ரியன் said...
//கிரி ஏமாத்த ஆள் இருக்கும் வரை இதுபோல நிகழ்வுகள் நடக்கத்தான் செய்வும்.//
’ஏமாற’ என்று சொல்லுங்கள்,சிவா.அதுதான் சரி."
வணக்கம் ஷண்முகப்ரியன் சார்
பிழையை சரி செய்து விட்டேன் நன்றி
♠புதுவை சிவா♠ said...
"கிரி said...
இப்படியும் ஒரு அடி முட்டாளா!"
வாங்க கிரி
குவைத்தில் வேலை பார்த்து சேர்த்த பணத்தை இப்படி ஒரு மோசடியில் இழந்தது வருத்தமான செய்திதான்.
கிரி ஏமாற ஆள் இருக்கும் வரை இதுபோல நிகழ்வுகள் நடக்கத்தான் செய்வும்.
Post a Comment