சூரசம்ஹாரத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். இதேபோல சென்னை வடபழனி உள்ளிட்ட கோவில்களிலும் இன்று சூர சம்ஹாரம் நடைபெறுகிறது.
இந்துக்கள் கடைப்பிடிக்கும் விரதங்களில் மிக முக்கியமானதாக மகா கந்த சஷ்டி விரதம் அமைந்து உள்ளது. முருகப் பெருமான் சூரபத்மனுடன் போரிட்டு சூரனை சம்ஹாரம் செய்ததைக் குறிப்பிடும் வகையில், ஐப்பசி மாதம் வளர்பிறையில் முருக பக்தர்கள் மகா கந்த சஷ்டி விரதத்தை தொடங்குகிறார்கள்.
கடந்த 18-ந் தேதி கந்த சஷ்டி விரதம் தொடங்கியது. சூரனை சம்ஹாரம் செய்த இடம் திருச்செந்தூர் என்பதால், சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் திருச்செந்தூரில் 6 நாட்கள் தங்கி கந்த சஷ்டி கவசம், பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் உள்பட முருகப்பெருமான் பாடல்களை பாராயணம் செய்து கடும் விரதம் மேற்கொள்கிறார்கள்.
மேலும் விரிவான தகவல் படிக்க
சீர்காழி கோவிந்தராஜன் & டி.எம்.ஸ்- ன் மனதை மயக்கும் முருகன் பாடல்
நன்றி
-தட்ஸ்தமிழ்
Headline
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்- வீடியோ
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வீடியோ பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.மிக்க நன்றி சகோதரரே!!
"Mrs.Menagasathia said...
வீடியோ பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.மிக்க நன்றி சகோதரரே!!"
வணக்கம் சகோதரி மேனகா
தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கு நன்றி !
Post a Comment