Headline

உயிரை பனையம் வைத்து ஒரு கிரிவலம் தமிழகத்தில்



முசிறி வட்டம், தா.பேட்டை ஒன்றியம், அஞ்சலம் ஊராட்சி அருகே அமைந்துள்ள தலைமலை கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கிரிவலம் நடைபெற்றது.

இங்கு சஞ்சீவிராயர், பூதேவி, ஸ்ரீதேவி, ஸ்ரீ வெங்கடாசலபதி, கோதண்டராமன், அலமேலுமங்கை, கிருஷ்ணர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களின் சன்னிதிகள் அமைந்துள்ளன.

hanuman Pictures, Images and Photos

ராமனுக்கு, ராவணனுக்கும் இடையே நடைபெற்ற போரில் லட்சுமணன் மயக்கமடைந்த நிலையில், அவரைக் காபாற்ற அனுமன் சஞ்சவி மலையை பெயர்த்து எடுத்துச் சென்றபோது, அதிலிருந்து உதிர்ந்து விழுந்த மலையின் தலைமை பகுதி என்பதால் அது தலைமலை என்று அழைக்கப்படுகிறது.

தரை மட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக் கோயில் சன்னதியைச் சுற்றி 3 அங்குல விளிம்பில் 3 ஆயிரம் அடி பள்ளத்தின் அருகே எந்த பிடிமானமும் இன்றி பக்தர்கள் கிரிவலம் சுற்றி தங்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

மேலும், புரட்டாசி மாதத்தை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன.

கிரிவலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் கோயிலை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள நண்பர் "என்னார்" வலைக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.


நன்றி
- தினகரன்
-24துனியா

ராக்கட் வேகத்தில் பறக்கும் சித்தர்

0 comments: