சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளில் 6,700 பேர் வரையில் 135 தனியான சிறப்பு தடுப்பு நிலையங்களில், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் கீழ்மட்ட உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மட்டுமே தமது தடுப்புக் காவலில் இருப்பதாக அறிவித்திருந்த சிறீலங்கா அரசு, அவர்களை மட்டுமே செஞ்சிலுவைச் சங்கம் பார்வையிட அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் விடுதலைப் புலிகளின் நீதி, நிருவாக, அரசியல் பிரிவைச் சேர்ந்த பல மூத்த உறுப்பினர்கள், மற்றும் தாக்குதல் பிரிவுகளில் இருந்த பல முக்கிய உறுப்பினர்களும் சிறீலங்கா அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றோ, அன்றி அவர்களது விபரங்களை வெளியிடவோ, சிறீலங்கா அரசு மறுத்து வருகின்றது.
நன்றி
-பதிவு
*Net photo
Headline
சிறைப்பிடிக்கப்பட்ட புலிகளைப் பற்றி - ICRC யின் கவலை
4 commentsதுபாய் காமடி - வீடியோ
8 commentsஅரசியல் தீர்வு பற்றி பேசுவதெல்லாம் ஏமாற்று வேலை - தியாகு
1 comments
இந்தியாவிற்கு வந்த சிறிலங்க அரசு குழுவுடன் இந்திய தரப்பு நடத்திய சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடப்படாத நிலையில் அது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலரும், தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியருமான தோழர் தியாகு அவர்கள் தமிழ் இணையத்தளம் ஒன்றிற்கு அளித்த நேர்காணல்:-
கேள்வி: இலங்கையில் இருந்து அதிபர் ராஜபக்சேவினுடைய சகோதரரும், அவருடைய பாதுகாப்பு ஆலோசகருமான பசில் ராஜபக்சே, பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சே, அதிபருடைய செயலர் லலித் வீரதுங்கா ஆகிய மூவரும் டெல்லிக்கு வந்துள்ளனர். அவர்கள் புதன் கிழமையன்று அயலுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன், தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். பிறகு நமது அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இந்தப் பேச்சுக்களில் என்ன பேசப்பட்டது என்பதோ அல்லது என்ன முடிவெடுக்கப்பட்டது என்பது குறித்து இன்று காலை வரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. ஆனால், ஒரு பத்திரிக்கையில் அவர்கள் பேசியது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது, இன்றுள்ள நிலையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்துவிட்டது. எனவே மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்றும், தாங்கள் வாழ்ந்துவந்த இடங்களில் இருந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாக செய்தி வந்துள்ளது. இதுகுறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?
தோழர் தியாகு: முதலில் யார் யார் பேசினார்கள் என்பதை நாம் நினைவில் வைத்து பார்க்க வேண்டும். அந்தப் பக்கத்தில் இருந்து டெல்லிக்கு வந்து பேசியிருப்பவர்கள் அவர்களுடைய பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சே, அவர்களுடைய அரசியல் ஆலோசகர் பசில் ராஜபக்சே. இன்னொருவர், சிறிலங்க அதிபரின் செயலராக இருக்கக் கூடிய லலித் வீரதுங்கா. இந்த மூன்று பெயர்களையும் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கு வந்து போகிற போது கடைசியாக கிருஷ்ணாவை பார்த்து விடை பெற்றுக் கொண்டார்கள் என்பதைத் தவிர, படத்திற்காக அவருடன் கையைக் குலுக்கினார்கள் என்பதைத் தவிர, முழுக்க முழுக்க பேச்சுவார்த்தையை நடத்தியவர்கள் யார் என்றால், இந்திய அரசினுடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், இந்திய அரசினுடைய அயலுறவுச் செயலர் சிவ்சங்கர மேனன். இந்திய அரசினுடைய பாதுகாப்புச் செயலர் விஜய் சிங். அங்கே மூன்று பேர், இங்கே மூன்று பேர். இந்த ஆறு பெயர்களையும் மறந்துவிடாதீர்கள். ஏனென்றால், இந்த ஆறு பேரில் யாரும் அமைச்சர்கள் அல்ல. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. அரசியல் தலைமை இல்லை இங்கே, இவர்களெல்லாம் அதிகார வர்க்கம் என்று வைத்துக் கொள்வோம்.
இவர்கள் அரசியல் தீர்வு பற்றி, ராணுவத்தை பாசறைக்கு திருப்பி அனுப்புவது பற்றி, அகதிகள் மறுவாழ்வு பற்றியெல்லாம் பேசியதாக மத்திய அரசின் வட்டாரங்கள் வழியாக செய்தி விடப்படுகிறது. அதாவது அயலுறவு வட்டாரங்கள். ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.
இவர்கள் பெயர்களை ஏன் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்கிறேன் என்றால், இந்த சுத்தமான யோக்கியர்கள் பெயர் இதற்கு முன்பு எப்படி வந்ததென்று நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.
இதே கோத்தபய ராஜபக்சே, போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு செய்தியை தெளிவாகச் சொன்னார். இதேபோல வட்டாரங்கள் அப்பொழுதும் ஒரு செய்தியைச் சொன்னார்கள். சிவ்சங்கர மேனனும், எம்.கே. நாராயணனும் பறந்து போனார்கள் கொழும்புவிற்கு, போரை நிறுத்துமாறு சொல்வதற்கு. அவர்களது கருத்து எங்களுக்கும் இணக்கமானதுதான் என்று அந்த வட்டாரங்கள், அதாவது இலங்கை அரசு. இதெல்லாம் அப்போது வந்த செய்திகள். பத்திரிக்கைகள் பரப்பிய செய்திகள். இந்த இடத்தில் கூட தலைப்பு வந்தது, போரை நிறுத்த இந்தியா கோரிக்கை, அவசரமாகச் செல்கிறார்கள். அவர்களும் சம்மதிக்கிறார்கள் என்பது போன்றெல்லாம் தோற்றம் காட்டினார்கள்.
அப்போதும் கோத்தபய ராஜபக்சே சொன்னார், அவர்கள் போரை நிறுத்த சொல்வதற்காக வரவும் இல்லை, நாங்களும் போரை நிறுத்துவதாக இல்லை. ஏனென்றால், நாங்கள் அன்றாட நிலவரங்களை, on a day to day basis இங்கே நடக்கிற ஒவ்வொன்றையும் அவர்களிடம் சொல்கிக் கொண்டிருக்கிறோம். அவர்களைக் கலந்து பேசிதான் அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்கிறோம். எங்களுக்குள் எந்தவிதமான மாறுபாடும் இல்லை. எனவேதான், அவர் என்ன சொன்னார் என்றால், ஏதோ இந்தியா தங்களை போரை நிறுத்தச் சொல்வது போலவும், இந்தியாவைக் கொண்டு போரை நிறுத்திவிடலாம் என்பது போலவும் பேசிக் கொண்டிருக்கிற தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று சரத் பொன்சேகா சொன்னார், நமக்கு நினைவிருக்கும்.
எனவே, வெளியில் வருகிற செய்திகளை வைத்து எல்லாம் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கணிக்க முடியாது. உண்மையிலேயே இவர்கள் பேச்சு நடத்தியதற்குப் பிறகு, அங்கு களத்தில் எடுக்கப்படுகிறத நடவடிக்கைகளை வைத்துதான் நாம் இங்கு என்ன பேசினார்கள் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
இவர்கள் போய் பேசிவிட்டு வந்ததற்குப் பிறகுதான் அங்கு போர் தீவிரமடைந்தது. போரில் புதிய கருவிகள் கையாளப்பட்டன. புதிய அழிவுகள் ஏற்பட்டன. போரெல்லாம் முடிந்ததற்குப் பிறகு இதே கோத்தபய ஒரு பேட்டி கொடுத்தார். “இந்தியாவிற்கும் எங்களுக்கும் எந்த பிணக்கும் இல்லை”. பார்க்கப் போனால், அங்கு மூன்று பேர், இங்கு மூன்று பேர். மொத்தம் ஆறு பேர் அடங்கிய குழுதான் ஒவ்வொன்றையும் வழி நடத்தியது. அந்த மூன்று பேர்தான் இந்த சுத்த யோக்கியர்கள்தான் இப்பொழுது வந்திருக்கிற மூன்று பேர். அதே மூன்று பேர்தான் இப்பொழுது பேச வந்திருக்கிறவர்கள். அவர்களும் அவர்களும் பேசினால் என்ன பேசுவார்கள் என்பதை எளிதாக யூகிக்க முடியும். அவர்களாக வாயைத் திறந்து நாங்கள் இன்னது பேசினோம் என்று இப்பொழுது சொல்ல மாட்டார்கள். எனவே இது எல்லாமே பொய். ஆனால், என்ன பின்னணியில் இந்த பேச்சு நடத்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், பாசறைக்கு ராணுவத்தை திரும்பிப் போகுமாறு இந்தியா வலியுறுத்தியது என்று அந்த செய்தி கூறுகிறது. எங்கிருக்கிறது பாசறை. போர்க் களத்தில் இருந்து திரும்பிப் போகுமாறு கேட்கவில்லை. தமிழ்நாடு சட்டமன்றம், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்றும், தமிழ்ப் பகுதிகளில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய போது இந்தியா இதனை கேட்கவில்லை.
அக்டோபர் 14ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் போட்டார்கள். எந்தக் கட்டத்திலும் அதையெல்லாம் கேட்காமல், போரெல்லாம் முடிந்த பிறகு, ஒரு லட்சம் மக்கள் அழிக்கப்பட்டதற்குப் பிறகு, போரின் இறுதி நாளில் மட்டும் 20 ஆயிரம் பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்று சுயேட்சையான ஆதாரங்கள் அடிப்படையில் டைம்ஸ் நாளிதழ் லண்டனில் இருந்து செய்தி வெளியிட்டிருக்கிறது. பெரிய இழப்பு, அழிவு ஏற்பட்டிருக்கிறது என்ற சொல்லை ஐ.நா. பயன்படுத்தியிருக்கிறது. இவ்வளவும் வந்ததற்குப் பிறகு, இப்ப பாசறைக்குத் திரும்பிப் போகச் சொல்வதென்றால் என்ன காரணம்? இது சும்மா பேச்சுக்காக செய்வது. அங்கே என்ன பாசறை இருக்கிறது. எங்கே திரும்பிப் போவது?
உண்மை என்னவெனில் கிளிநொச்சியிலும், முல்லைத் தீவிலும் பெரிய ராணுவ பாசறைகளை இந்திய உதவியுடன் அமைக்கும் வேலை அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கே மக்கள் இல்லாத அந்த இடத்தில் பாசறைகளை அமைத்ததற்குப் பிறகுதான் இவர்களை இந்த முகாம்களை விட்டு அங்கு செல்வதற்கு அனுமதிக்கப் போகிறார்கள். இந்த பாசறைகள் ஏன் தேவைப்படுகிறது என்றால், காசா பகுதியிலும், மேற்குக் கரையிலும் இஸ்ரேல் யூதக் குடியேற்றங்களை பாதுகாப்பதற்காக எப்படி தன்னுடைய ராணுவத்தைப் பயன்படுத்துகிறதோ, அதேபோல் தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி, அந்த சிங்கள குடியேற்றங்களை பாதுகாப்பதற்காகவும், தமிழர்களிடம் இருந்து வரும் எதிர்ப்பை ஒடுக்குவதற்காகவும்தான் சிங்கள அரசு ராணுவ பாசறைகளை, பெரிய ராணுவ முகாம்களை, பலாலி போன்ற ராணுவ முகாம்களை எல்லா தமிழர் பகுதிகளிலும் அமைக்கப் போகிறார்கள். இதை தடுத்தோ, எதிர்த்தோ இந்தியா இதுவரை ஏதும் செய்யவில்லை, செய்யப் போவதும் இல்லை. இதில் யாருக்கும் எந்தவிதமான ஐயப்பாடும் தேவையில்லை.
கேள்வி: தற்போது முகாம்களில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை அவர்களின் வாழ்விடங்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூட வலியுறுத்தியதாக அச்செய்தி கூறுகிறது?
தியாகு: அகதிகளை விரைவில் திருப்பி அனுப்புவது என்று சொல்கிறார்கள். முதலில் ஏன் இந்த முகாம்களை அவர்களது பிறந்த ஊர், வாழ்ந்த ஊருக்கு வெளியே கொண்டு சென்று அமைக்க வேண்டிய தேவை என்ன என்ற எழுகிறது. கண்ணி வெடி, கண்ணி வெடி அகற்றுதல் இதெல்லாம் சாக்கு. இந்த கண்ணி வெடிகளுக்கு மேல நடந்து போய்தானே அங்கு வாழ்ந்த மக்களை விரட்டி அடித்தீர்கள். அதற்கு மேல் ஏறிப்போய்தானே போர் நடத்தினீர்கள். அப்புறம் எங்கிருக்கிறது கண்ணி வெடி? கண்ணி வெடிகள் இருந்தென்றால், அந்தப் பகுதிகளில் மக்கள் முகாம் அமைக்க வேண்டாம். வேறு பகுதிகளில் அமைத்துக் கொள்ளலாமே. ஏன் அவர்களை முகாம்களில் அடைத்து வைக்க வேண்டும். அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? எந்த நாட்டு சட்டத்தின் படி இதெல்லாம் நடக்கிறது?
கேள்வி: 13வது திருத்தத்தை பலப்படுத்தி நடைமுறைப்படுத்துமாறு இந்தியா கோரிக்கை விடுத்ததாகக் கூட அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தியாகு: அரசியல் தீர்வு பற்றி பேசுவதெல்லாம் ஏமாற்று வேலை.
அதேபோல, 13வது திருத்தத்தை பலப்படுத்தி அவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் அப்படியென்று இவர்கள் வலியுறுத்தியதாகக் கூட சொல்கின்றனர்.
ஈழத் தமிழர் இனச் சிக்கலை நன்கு புரிந்து கொண்டவர்கள், இது தொடர்பான அரசியல் தீர்வு முயற்சிகளை கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒன்று நன்றாகத் தெரியும். அது என்னவென்றால், 13வது திருத்தம் மூலமாக தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படப் போவதில்லை. தமிழர்களுக்கான ஆட்சி உருவாக்குவதற்கான வழிவகை இல்லை. பெயரளவிற்கு சிங்கள ஆட்சி மொழி, தமிழையும் துணை ஆட்சி மொழியாக வைத்துக் கொள்வது, தமிழையும், ஆங்கிலத்தையும் வைத்துக் கொள்வது, இதுபோன்ற மீண்டும் ஏற்றத் தாழ்வான விதிமுறைகளைத்தான் கொண்டு வரப்போகிறார்கள். எந்தவித அதிகாரமும் இல்லாத ஒரு மாவட்ட பஞ்சாயத்தைப் போன்ற ஒரு மாகாண பஞ்சாயத்தை ஏற்படுத்துவதுதான் இந்த திட்டமெல்லாம். அதுதான் 13வது திருத்தமென்பது.
குறைந்தது இந்திய அதிகாரிகள் பேசும்போது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்தினார்களா? அப்படி வலியுறுத்தியிருப்பார்களென்றால் அது வடக்கு- கிழக்குப் பகுதிகளை இணைக்க கோருகிறது.
கேள்வி: இல்லை, அப்படி எதுவும் கோரப்படவில்லை.
தியாகு: அதுதான் முக்கியமானது. ஏனென்றால் 13வது திருத்தம் அவர்கள் கொண்டு வந்தது. ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்காக என்று சொல்லிக் கொண்டு அவர்கள் கொண்டு வந்தது. ஆனால், ஒப்பந்தத்திற்கும், 13வது திருத்தத்திற்கு வேறுபாடு இருக்கிறதா, இல்லையா என்பதை, வேறு யாரையும் வேண்டாம், இந்திய அரசிற்கு முழுக்க ஆதரவாக இருக்கிற சந்திரஹாசனை கேட்டாலே சொல்வார். எங்களுக்கு வேண்டியது 13வது திருத்தம் இல்லை. இந்திய-இலங்கை ஒப்பந்தம்தான் என்று அவர் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நுட்பமான வேறுபாடுகள், எம்.கே. நாராயணனுக்கோ, சிவசங்கர் மேணனுக்கோ, விஜய் சிங்கிற்கோ தெரியாது என்று மட்டும் நீங்கள் நினைத்துவிடாதீர்கள். அவர்களுக்கு இதெல்லாம் முக்கியமே இல்லை. இதெல்லாம் அவர்கள் மறைத்து வைத்திருக்கிற கொலைக் கருவிக்கு மேல் இருக்கிற பூச்சுகள். அதை மறைப்பதற்காகத்தான் இதையெல்லாம் பேசிகிறார்கள்.
இவர்களிடம் அவர்கள் வந்து பேச வந்ததனுடைய உண்மையான நோக்கத்தை இப்பொழுது சொல்கிறேன். இப்பொழுது 4வது ஈழப்போர் ஒரு கசப்பான முடிவிற்கு வந்துவிட்டது என்று புலிகள் அறிவித்துவிட்டார்கள். அது தமிழர்களுக்கு ஒரு தோல்வியில், நெருக்கடியில் முடிந்திருக்கிறது. ஏராளமான தமிழர்களை இழந்திருக்கிறார்கள், போராளிகள் மடிந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் மக்கள் சிறை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். உலகத் தமிழர்கள் எல்லாம் இதுகுறித்து கவலையடைந்திருக்கிறார்கள். நெருக்கடி அடைந்திருக்கிறார்கள். அந்த விடுதலைப் படையினுடைய தலைவர் என்ன ஆனாரோ என்ற கேள்விக்குறியுடன் நின்றுக் கொண்டிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்கட்டும்.
ஆனால், வரலாற்றுக் கண்ணோட்டத்தைப் பார்க்கிற போது, ஓர் விடுதலைப் போர் என்பது விடுதலை இலக்கை அடைவது வரை முடிவதில்லை. களங்கள் மாறிவரும், போர் முறைகள் மாறிவரும். ஆனால், போர் தொடர்ந்து நீடிக்கும். விடுதலைப் போராட்டத்திற்கு முடிவு கிடையாது. நம்மை பற்றியோ, வியட்நாமை பற்றியோ நாம் பேச வேண்டிய தேவையில்லை.
இதே ஈழம் தொடர்பாக, இந்த போர் நடந்து கொண்டிருந்த காலத்திலேயே, சென்ற ஆண்டு அநேகமாக நவம்பர், டிசம்பரில், கிளிநொச்சி வீழ்ச்சிக்கு முன்னதாக சரத் பொன்சேகா கூறியதை நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.
இந்த நிலப்பகுதி முழுவதையும் கைப்பற்றுவது என்பது ஒன்றும் முடியாத காரியமில்லை. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா நிலங்களையும் எங்களால் கைப்பற்ற முடியும். ஆனால், கைப்பற்றுவதன் மூலமாகவே பயங்கரவாதம் ஒழிந்துவிடும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆயிரம் புலிகள் மிச்சமிருந்தால் கூட அவர்கள் கெரில்லா முறைக்கு மாறிவிடுவார்கள். இந்த கெரில்லா தாக்குதல் நடத்தும்போது, மரபு வழி போரில் வெற்றி பெற்றதைப் போல நாங்கள் வெற்றி பெற முடியாது. அதை சமாளிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும். உண்மையிலேயே நான் அதைப் பற்றிதான் கவலைப்படுகிறேன் என்று பொன்சேகா சொன்னார்.
இரண்டாவது, கொழும்புவில் அமெரிக்கத் தூதராக இருந்து ஒய்வு பெற்றுச் சென்றவர் சென்னைக்கு வந்து ஒரு கூட்டத்தில் பேசினார். இந்த நிலங்களையெல்லாம் பிடித்து, புலிகளை போரில் தோற்கடிப்பதிலேயே இலங்கை அரசு குறியாக இருக்கிறது. அது தேவையற்றது. அப்படி செய்ய முடியாது. புலிகளை அப்படி அடியோடு தோற்கடிப்பது சாத்தியமான ஒன்று அல்ல. ஏனென்றால், எல்லா நிலங்களையும், ஒரு சதுர அங்குலம் கூட மிச்சமில்லாமல் பிடித்ததற்குப் பிறகும் அவர்கள் கெரில்லாப் போர் முறைக்கு மாறிவிடுவார்கள். மாறியதற்குப் பிறகு நீங்கள் அவர்களை ஒடுக்கிவிட முடியாது. இது நீண்ட காலம் நடக்கும். (ஏற்கனவே இந்தியாவிற்கு கிடைத்த அனுபவமெல்லாம் நமக்கு தெரியும்).
வெறும் 2,000 பொடியன்கள் என்று அழைத்த ராஜீவ் காந்தியினால், ஒரு லட்சம் படையினரை இறக்கியும் கூட அவர்களை ஒடுக்கவோ, அழிக்கவோ முடியவில்லை, இந்திய படைதான் புறமுதுகு காட்டி திரும்பி ஓடி வரவேண்டிய நிலை ஏற்பட்டது. இது பொன்சேகாவுக்கும் தெரியும், எல்லோருக்கும் தெரியும். மரபு வழி போர் என்பது எப்போதுமே அரசிற்கு பன்மடங்கு சாதகமானது. எப்போதுமே விடுதலைப் படைக்கு பாதகமானது. இதையெல்லாம் மீறி மரபு வழிப்போரில் புலிப்படை சாதனைகளைப் படைத்தது. கிளிநொச்சியை கைப்பற்றியது, ஜெயசிக்குருவை முறியடித்தது. ஆணையிறவைப் பிடித்தது. பூநகரியில் கிடைத்த வெற்றி இதெல்லாம் மிகப்பெரிய சாதனைகள்தான். ஆனால், அதற்கெல்லாம் ஒரு எல்லை இருக்கிறது என்பது தற்போது தெரிந்துவிட்டது.
அதுவும் இந்த உலகமயமாக்கல் ஒடுக்குமுறை என்ன செய்துவிட்டது என்று சொன்னால், பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் பல நாடுகளையும், பல நாடுகளினுடைய வளங்கள், சக்திகள், படை, அறிவு எல்லாவற்றையும் ஒன்று சேர்ந்து கொண்டு நசுக்குகிற போது, மக்கள் படையினால் அதை எதிர்த்து மரபு வழிப்போரில் நிற்க முடியவில்லை. ஆனால், கரந்தடிப் போர் அப்படி அல்ல. கரந்தடிப் போர் விடுதலை இயக்கங்களின் தாயகம். அங்கு அயலவன் வந்து ஒன்றும் செய்ய முடியாது.
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற
என்று வள்ளுவர் சொல்கிறார். ஆழ்ந்த நீர் தடாகத்திற்குள், நீர் பகுதிக்குள் முதலை வெற்றி பெறும், எதை எதிர்த்தும் வெற்றி பெறும். அது கரைக்கு வந்துவிட்டால் எதனிடமும் தோற்றுப் போகும். அதுபோலத்தான், விடுதலை இயக்கங்களுக்கு கரந்தடிப் போர் முறை என்பது. அவர்களுடைய தாய்த் தடாகம் அது. அது அவர்களுடைய நீர்நிலை. அதை வியட்நாமில் அமெரிக்கா அனுபவித்தது. இதே ஈழத்தில் இந்தியப் படை அனுபவித்தது. இப்பொழுது அந்தப் போர் மீண்டும் தொடங்கிவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு வந்துள்ளது.
இப்பொழுது அவர்கள் இன்னும் தொடங்கவில்லை. ஏனென்றால் இந்தப் போரில் மிச்சம் இருப்பவர்கள் மீண்டும் தங்களை அணி சேர்த்துக் கொண்டும், இந்தப் பகுதிகளை உடைத்துக் கொண்டு வெளியேறியவர்கள், அது வரப்போகிறது என்று தெரிந்து கொண்டு முன்கூட்டியே போய் வேறு இடங்களில் தங்கிக் கொண்டவர்கள், அது அம்பாறையில், மட்டக்களப்பில், யாழ்ப்பாணத்தில், வன்னிக் காட்டினுடைய பிற பகுதிகளில் போயிருக்கிறவர்கள், அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள், அமைப்பாக ஒன்று திரண்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத் தமிழர்களுடைய போராட்டங்கள், தமிழகத் தமிழர்களுடைய போராட்டங்கள், அவர்கள் நடத்துகின்ற விடுதலைக்கான போராட்டங்கள், இவற்றிற்கிடையே ஒரு இசைவு ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்படியொரு முறையான ஒழுங்கமைப்பு வந்து, திட்டமிட்டு மீண்டும் ஒரு கறந்தடிப் போரைத் துவங்குவதற்காக காத்திருக்கிறார்கள்.
அப்படி காத்திருப்பது இந்த அரசிற்கு மிக நன்றாகத் தெரியும். சிங்கள அரசிற்கும் தெரியும், இந்திய அரசிற்கும் தெரியும். இதை முறியடிப்பதற்கு இவர்கள் தொலைநோக்குடன் திட்டமிட ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக அண்மைக் காலத்தில் அங்கு சில நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. காட்டிலிருப்பவர்களையெல்லாம் தேடி அழிக்கிற முயற்சியில், Fleshing out, wiping out என்று சொல்லி ராணுவத்தைக் கொண்டு போய் இறக்கியிருக்கிறார்கள். அப்படி போன ராணுவத்தினர் பல இடங்களில் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
4 நாட்களுக்கு முன்பு மணலாற்றிற்கு அருகில் நெடுங்கேணியில் இப்படி தேடிச் சென்ற ராணுவத்தினரை புலிகள் தாக்கியதில் 150 படையினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த செய்திகளையெல்லாம் வெளியில் விடாமல் மறைத்து வைத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் பதறியடித்துக் கொண்டு இவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். எனவே, எப்படி காட்டுப் பகுதியில் இந்தப் போரை தொடர்ந்து கொண்டு செல்வது. கறந்தடிப் போரை எப்படி சமாளிப்பது. இதுபற்றிப் பேசுவதற்காகத்தான் இவர்கள் டெல்லிக்கு வந்தது. இதற்கான கருவிகள், இதற்கான ஆயுதங்கள், இதற்கான ஆலோசனைகள், இதற்கான படை உதவி, இதற்கான கருவிகள் பெறுவதற்காகத்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இதே பசில் ராஜபக்சே, பாகிஸ்தானுக்கும் இரண்டு முறை போனார். போருக்கு முன்னாடி ஒரு முறை போனார், போர் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு முறை போனார். ஏன் போனார்? பாகிஸ்தான் அரசு ஒன்றும் சுயாட்சி பற்றி, 13வது திருத்தம் பற்றி அல்லது ஒப்பந்தம் பற்றி ஏதாவது பேசப் போகிறதா? அதெல்லாம் ஒன்றுமே கிடையாது. அவர் எதற்குப் போனால் என்றால், ஒரு 25 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிற விமானத்தில் இருந்து கொண்டு கணினியின் துணையோடு, ஒரு மனிதன் நிலத்தில் இருக்கிறது அந்த இடத்தைப் புள்ளி வைத்து அங்கிருந்து தாக்கினால் சரியாக அங்கு சென்று தாக்கக்கூடிய பிரிசிஷன் பாமிங் என்ற அந்த குண்டு வீச்சு முறை, அதற்கான கருவி, அதை இயக்குவதற்கான வான் படை ஆள், இது எல்லாமே பாகிஸ்தானில் இருந்துதான் வரவழைக்கப்பட்டது. அந்த வான் படை ஆளைக் கொண்டுதான், அந்த முறையில்தான், சமாதானச் செயலகம் கிளிநொச்சியில் எங்கிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் அந்த இடத்தை குறிபோட்டு தமிழ்ச்செல்வனைக் கொன்றார்கள். அதுதான் அந்தப் போரில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது நமக்குத் தெரியும். தமிழ்ச்செல்வனைக் கொன்றது அப்படித்தான். அதற்கு இந்த பசில்தான் போய் பேச்சுவார்த்தை நடத்தி இந்தக் கருவிகளைப் பெற்றுக் கொண்டு வந்தார்.
அதேபோல், புதுக்குடியிருப்பில் போய் கடுமையாக இவர்கள் சிக்கிக் கொண்டிருந்தபோதுதான் மீண்டும் பசில் அங்கு போனார். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவர் அங்கு போய்தான், அதற்கான கருவிகள், மற்ற வழிமுறைகள், பாகிஸ்தானிய ராணுவ உதவிகளையெல்லாம் பெற்றுக் கொண்டு வந்தார். சீன டாங்கிகளும், பாகிஸ்தானிய விமானங்களும், இந்திய ராடார்களும், மூன்று நாடுகளுடைய ராணுவ அறிவுரைகளும், இதோடு ஈரான் மற்ற சில நாடுகளையெல்லாம் இணைத்துக் கொண்டுதான் இந்தப் போரை அவர்கள் நடத்தினார்கள்.
இதற்காகத்தான் அவர்கள் டெல்லிக்கு வந்தார்கள். இந்த கொலைத் திட்டத்தை, சதித்திட்டத்தை மறைப்பதற்காகத்தான் இந்த 13வது திருத்தம், ராணுவம் பாசறைக்கு போய்விட வேண்டும் என்று சொல்வதும், அப்படியே இந்தியா மிரட்டியது போல் பேசியது போலவும், இல்லையென்றால் நாங்கள் வந்து தலையிடுவோம். எப்ப தலையிடுவது? தலையிடுவதற்கான நேரம் இதுவா? கடைசி காலத்தில் எங்களை சுற்றி வளைத்துக் கொண்டு வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளால் எங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள், எங்கு பார்த்தாலும் குண்டு வெடிக்கிறது, இந்த உலகத்திற்கு கண்ணில்லையா? காதில்லையா? இதை தடுப்பதற்கு யாராவது வரமாட்டார்களா என்று கதறிக் கொண்டிருந்தார்கள். செஞ்சிலுவைச் சங்கம் கப்பலைக் கொண்டு போய் கடலோரத்தில் நிறுத்திக் கொண்டு, உணவை கொண்டுபோய் கொடுப்பதற்கு மறுக்கிறார்கள், நோயாளிகளை ஏற்றி வருவதற்கு அனுமதி மறுக்கிறார்கள் என்று சொன்னார்கள். முள்ளிவாய்க்காலில் கடைசியாக மிச்சமிருந்த அந்த மரத்தடி மருத்துவமனை கூட தொடர்ந்து மூன்று நாட்கள் பீரங்கிக் குண்டுகளால் தாக்கி அடியோடு தகர்த்தார்கள். செஞ்சிலுவைச் சங்கமே சொல்லியது, சிங்கள ராணுவம்தான் இந்த தாக்குதலை நடத்துகிறது, பீரங்கிக் குண்டுகளால் தாக்குகிறார்கள், கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று சொல்லிவிட்டு தாக்குகிறார்கள் என்ற போதெல்லாம் தலையிடாத இந்தியா, இப்போ போய் நான் தலையிடுவேன் என்று மிரட்டியதாம்! ராஜரீகமாக பேசினார்களாம். சொல்கிறார்கள். உதவி செய்வதற்கு நாங்களே வந்துவிடுவோம் என்று சொன்னார்களாம். அதெல்லாம் தேவையில்லை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று அவர்கள் கூறினார்களாம்.
உண்மையிலேயே தமிழர்களுக்கு சமத்துவ உரிமை கொடுப்பது என்றால், சிங்களவனுக்கு ஒரு பார்லிமெண்ட் இருக்கிற மாதிரி, தமிழனுக்கு ஒரு பார்லிமெண்ட் இருக்குமான்னு கேட்டாங்களா? சிங்களவர்களுக்கு ஒரு குடியரசுத் தலைவர் இருப்பது போல, தமிழர்களுக்கு ஒரு குடியரசுத் தலைவர் இருப்பாரான்னு கேட்டாங்களா? சிங்களவர்களுக்கு ஒரு படை இருப்பது போல், தமிழர்களுக்கு ஒரு படை இருக்கணும்னு கேட்டாங்களா? எதுவுமே இல்லாம சமத்துவம்னா, அப்ப என்ன அர்த்தத்துல சமத்துவம்?
எனவே இது எல்லாமே ஏமாற்று, மோசடி. நாம் வரிகளைப் படித்தால் மட்டுமே போதாது, வரிகளுக்குப் பின்னால் மறைந்திருக்கிற உண்மைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் இப்படிப்பட்ட மகா யோக்கியர்கள் கூடிப் பேசுகிறார்கள் என்றால், அவர்கள் ஏதோ தமிழர் நலன் பற்றி பேசுவார்கள் என்று யாரும் கனவிலும் நினைக்க வேண்டாம். மீண்டும் சூழ்ச்சித் திட்டங்கள் டெல்லிக்கும், கொழும்புவிற்கும் இடையே உருவாக்கப்படுகின்றன. அவற்றை முறியடிப்பதற்கு தமிழர்கள் விழிப்போடு இருக்க வேண்டும். அந்த விழிப்பின் அடையாளமாக போர்க் குற்றவாளிகளாக சிங்கள அரசுத் தலைவர்களையும், இந்திய அரசுத் தலைவர்களையும் உலக நீதிமன்றத்தில் கூண்டில் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழர்கள் வலியுறுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் அந்த அகதி முகாம்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு செய்ய வேண்டும். உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ள தமிழர்களை அவரவர் சொந்த ஊரிலேயே கொண்டு சென்று குடியமர்த்த வேண்டும் என்று நாம் வலியுறுத்த வேண்டும். இதையெல்லாம் இந்தியா வலியுறுத்தும் என்று எதிர்பார்ப்பதோ, அது வலியுறுத்த வேண்டும் என்று பேசிக் கொண்டிருப்பதோ அர்த்தமற்றது. இதுதான் இதிலிருந்து நமக்கு தெரியக்கூடிய செய்தி.
இதன் 2- ஆம் பகுதி திங்கட்கிழமை…
நன்றி
paristamil
ரணில் விக்கிரமசிங்கயின் அவசர வேண்டுகோள்
0 comments
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும். இன்றேல் தமிழ் மக்கள் இந்த பாராளுமன்றத்தில் நம்பிக்கை இழந்து விடுவதுடன் பாராளுமன்றத்தின் மீது நம்பிக்கை வைக்காத மற்றுமொரு குழு உருவாக வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பாராளுமன்றத்தினூடாக தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கையில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளனர். எனவே, கூட்டமைப்பினரை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பாராளுமன்ற உறுப்பினர்களாக சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும். அதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பாராளுமன்ற உறுப்பினர்களை சுதந்திரமாக உரிமையுடன் செயல்படுவதற்கு அனுமதிக்காவிடில் பாராளுமன்றம் ஊடாக தமது பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாதென்ற நிலைப்பாட்டிற்கும் முடிவுக்கும் தமிழ் மக்கள் வந்து விடுவர். அத்துடன், பாராளுமன்றத்தின் மீது நம்பிக்கை கொள்ளாத புதியதோர் குழு உருவாகக் கூடிய சூழ்நிலையும் ஏற்படும்
நன்றி
-சங்கதி
பிரபாகரன் திராவிட கழகமாக உருவெடுக்கும் - கொளத்தூர் மணி
0 comments
விடுதலைப் புலிகளின் முப்பத்து மூன்று வருடகால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாக கடந்த மே 18-ம் தேதி இலங்கை அரசு அறிவித்தது.
ஆனால் அதற்கு முன்பே அதே மே மாதம் 2-ம் தேதி இலங்கையில் போர் உச்சகட்ட நிலையில் இருந்த-போது, இலங்கைக்கு உதவுவதற்காக 92 வாகனங்களில் ராணுவத் தளவாடங்களையும், பீரங்கி டாங்கி-களை-யும்
இந்திய அரசு கொச்சின் வழியாக இலங்கைக்கு அனுப்புவதாகத் தகவல் பரவ, கோவையில் பெரியார் தி.க.வினரும், ம.தி.மு.க.-வினரும் அந்த வாகனங்-களை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற ஈழ ஆதரவாளர்கள், அந்த வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்தினர். இந்தச் சம்பவத்திற்காக பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட 250 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்-துறை, இதுவரை 75 பேரை கைது செய்துள்ளது. மற்றவர்களையும் தேடி வருகிறது. அது-மட்டுமல்லாமல் கையில் சிக்குபவர்-களையெல்லாம் கைது செய்து, இந்த வழக்கில் சேர்த்து வருவதாகவும் காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர் ஈழ ஆதரவாளர்கள்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கோவை மத்திய சிறையில் ராமகிருஷ்ணனைச் சந்தித்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள், இன்னும் போலீஸிடம் சிக்காமல் இருப்பவர்களை அடையாளம் காட்டும்படி மிரட்டியதாகவும் தகவல்கள் உள்ளன. ஈழத்திற்காகப் போராடி வந்தவர்கள், தற்போது ஈழ ஆதரவாளர்களுக்காகப் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும், அதுவும் தமிழக அரசிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘ஈழ ஆதரவாளர் விடுதலை கோரிக்கை மாநாடு’ கோவையில் நடந்தது. மாநாட்டில் கொளத்தூர் மணி, சீமான், ‘கற்றது தமிழ்’ ராம், பாவாணன், வழக்கறிஞர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கொளத்தூர் மணி பேசுகையில், “ஈழத்தில் சிங்கள அரசு இனவெறித் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்தே நாம் இங்கே பொங்கியெழ ஆரம்பித்துவிட்டோம். ஈழ மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு இந்திய அரசே துணை நிற்பதைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் முத்துக்குமார் தொடங்கி பதினைந்திற்கும் மேற்பட்ட ஈழ ஆதரவாளர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
ஈழம் அழிந்து வருவதைப் பொறுக்க முடியாமல் நாம் எல்லோரும் கொதித்துக் கொண்டிருந்த வேளையில், போர் உச்சகட்ட நிலையில் இருந்த-போது, எதற்கும் அஞ்சாமல் மத்திய அரசு தமிழகம் வழியாகவே இலங்கைக்கு ராணுவத் தளவாடங்களை அனுப்பியது. கோவை வழியாக ராணுவ வாகனங்கள் சென்றபோது, மானமுள்ள தமிழர்கள் ஒன்றுகூடி அந்த வாகனங்களை வழிமறித்தனர். ‘எங்கள் வரிப்பணத்தில் எங்கள் இனத்தையே அழிப்பதா!’ என்று மத்திய, மாநில அரசுகளை எச்சரித்தனர்.
மத்திய, மாநில அரசுகள் ஆற்ற வேண்டிய கடமையை அவர்கள் செய்யாததால், மக்களே செய்தனர். கடமையைச் சரியாகச் செய்த எங்களுக்குக் கிடைத்த பரிசு தேசிய பாதுகாப்புச் சட்டமா? இந்த அநீதியை இனியும் அனுமதிக்கக் கூடாது.
மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு, பெரியார் திராவிட கழகத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறது. அறிவிக்கட்டுமே! பெயரை மட்டும்தானே அவர்களால் தடை செய்யமுடியும்? அப்படி மத்திய அரசு தடை விதித்தால் பெரியார் திராவிட கழகம், பிரபாகரன் திராவிட கழகமாக உருவெடுக்கும்” என்றார் அதிரடியாக.
பலத்த எதிர்பார்ப்புக்கிடையில் மைக்கைப் பிடித்தார் சீமான். “இதுவரை ஈழ விடுதலைக்காகப் போராடினோம். ஆனால் இன்று ஈழ ஆதரவாளர்கள் விடுதலைக்காகப் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நான் என்ன பேசினேன் என்பதற்காக தமிழக அரசு என் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சியது என்பது எனக்குத் தெரியவில்லை. நான் பேசியது புதுவையில். ஆனால் வழக்கு பதிவு செய்யப்-பட்டது பாளையங்-கோட்டையில். பிரபாகரனை அண்ணன் என்று கூறியது குற்றமா? இத்தாலியில் பிறந்த சோனியாவை அன்னை என்று கூறும்போது, என் மண்ணில் பிறந்த பிரபாகரனை அண்ணன் என்று கூறுவது குற்றமாகத் தெரிகிறதா நம் தமிழக அரசுக்கு?
இலங்கையில் நடக்கும் படுகொலையைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. அதனால்தான் தமிழகத்தில் நாங்கள் போராடுகிறோம். இந்திய ராணுவமே எங்களுக்கு எதிராக வந்தாலும் வெறும் கையோடு அவர்களை விரட்டி அடிப்போம். தற்போது ஆஸ்திரேலியா, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிவிட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அவர்கள் வாழும் நாட்டின் பாராளுமன்றங்களின் முன் ஈழ விடுதலைக்காக ஆர்ப்பாட்டங்-களை நடத்துகிறார்கள். ஆனால் தமிழகத்தில் அதைப் பற்றிப் பேசக்கூட அனுமதி இல்லை. அது ஜனநாயக நாடா அல்லது இந்தியா ஜனநாயக நாடா?
ஈழத்திற்காகக் கதறினோம், கத்தினோம், புலம்பினோம். இது பிழையா? இதற்குக்கூட அனுமதி இல்லாத நாடு, என்ன நாடு? தமிழனாகப் பிறந்தது தப்பா? தமிழா இனி உனக்கு நாடில்லை. மத-மில்லை. ஜாதியும் இல்லை. இனி உனக்கென்று எதுவும் இல்லை. இனி தமிழனின் பொதுச் சொத்து சிறை மட்டும்தான். வேண்டுமென்றால் இனம் மாறிப்போய்விடு.
இந்திய தேசமே அழிந்துபோனாலும் பரவாயில்லை, ஒரு விடுதலைப் புலிகூட இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் மத்திய அரசே, ஈழத்தை அழித்துவிட்டு இந்தியாவை-யும் அழிக்க வருவான் சிங்களன்.
ஈழத்தில் போர் முடிந்துவிட்டது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் தமிழனுக்குச் சம உரிமை கிடைக்க வழி வகுக்கப்படும் என்று இலங்கை அரசு கூறுகிறது. பசிக்குச் சோறு தராத சிங்களனா, என் மக்களுக்குச் சம உரிமை தரப் போகிறான்.
பசியால் துடித்துக்கொண்டிருக்கும் என் மக்களுக்கு உணவு வழங்க ‘வணங்காமண்’ என்ற கப்பலை அனுப்பி வைத்தது சில நல்ல உள்ளங்கள். அதைக்கூட ஏற்க மறுக்கிறது ராஜபக்ஷே அரசு. சென்னை துறைமுகத்தில் நிற்கும் அந்தக் கப்பலை இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசும், மத்திய அரசும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் குண்டடி பட்டு செத்தது பத்தாதா, பசியிலும் சாக வேண்டும் என்று ஆசைப் படுகிறதா இந்த அரசுகள்?
ஐ.நா.சபையில் நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததில் இருந்தே தெரியவில்லையா, தமிழ்நாடு இந்தியாவில் இல்லை என்பது? ஒரு மனிதனின் மரணத்திற்கு ஆயிரம் திரைக்கதை எழுதுகிறது, இலங்கை அரசு. நம் இனத்தின் சூரியன் அழியாது. தமிழ் ஈழ தேசக் கொடியை ஏற்றாமல் பிரபாகரன் தலை சாயாது” என்று ஆவேசம் குறையாமலேயே பேசி முடித்தார் சீமான்.
நன்றி
-தமிழ்ஸ்கைநியுஸ்
ஆசிய மனித உரிமைப் பேரவையின் அதிர்ச்சி தகவல்!
0 comments
இலங்கை காவல் நிலையங்களில் பல்வேறு சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக ஆசிய மனித உரிமைப் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக பரவலகாக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும், அதனைவிடவும் காவல் நிலையங்களில் சித்திரவதைச் சம்பவங்கள் அதிகமாக பதிவாவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
குறிப்பாக மோதல் சம்பவங்கள் இடம்பெற்ற வடக்கு கிழக்கை விடவும் தெற்கில் அதிகளவு சித்திரவதை சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சித்திரவதைச் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டுமாயின் சித்திரவதைச் சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் உரிய முறையில் விசாரணை செய்து தண்டனை வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக காவல்துறை திணைக்களம் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆகியவற்றிலேயே அதிக குறைபாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களை விடவும் தற்போது காவல் நிலையங்களில் சித்திரவதை மற்றும் உரிமை மீறல் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக ஆசிய மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
சித்திரவதைகளினால் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு ஆசிய மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நன்றி
-உலக தமிழ்ச் செய்திகள்
மைக்கல் ஜாக்சனின் அரிய படங்கள்
0 commentsபிரபாகரனுக்கு பில்லி சூனியம் செய்த சோதிடர் கைது!!
0 comments
அரசாங்கம் விரைவில் கவிழும் எனவும் பிரபாகரனுக்கு பில்லி சூனியம் செய்து, தானே கொலை செய்ததாகவும் அரச தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் கூறிய பிரபல சோதிடர் ஒருவர் தற்போது நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று ஐ.தே.க. எம்.பியான தயாசிறி விஜயசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டுப்படைத் தலைமை அதிகாரி சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:
"பிரபாகரனை கோத்தபாயவோ, சரத் பொன்சேகாவோ கொலை செய்யவில்லை. தானே பில்லி சூனியம் செய்து அவரை கொன்றதாகவும் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்றும் அரச தொலைக்காட்சியின் ஊடாக ஆரூடம் கூறிய சோதிடருக்கே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது. சோதிடர் ஜனாதிபதியை கொலை செய்வதற்கு முயற்சி செய்தார் என்னும் குற்றச்சாட்டில் தடுப்பு உத்தரவின் பேரில் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சோதிடம் கூறிய சோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை இலங்கை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். இந்த ஆட்சியில் தான் சோதிடர் ஒருவருக்குக் கூட சோதிடம் கூற முடியாதுள்ளது. கிரகங்கள் நன்றாக இருந்தால் தான் ஒருவர் நன்றாக வாழ முடியும். அந்த வகையில் விமல் வீரவன்சவின் கிரகம் நன்றாக இருக்கிறது. அதனால் அவருக்கு நாளைக்கே அமைச்சு பதவி கூடக் கிடைக்கலாம்.
அவருக்கு அன்று கிரகங்கள் சரியாக இல்லாததால் தான் அவரால் சீகிரியாவுக்குச் செல்ல முடியவில்லை. பேராதனை பூங்காவுக்குச் செல்ல முடியவில்லை. ஆனால், தற்போது எங்கும் சென்று வரலாம். யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்ட போதிலும் தற்போதும் வீதிகள் மூடப்படுகின்றன. வீதியில் இரு பக்கங்களிலும் படை வீரர்கள் இருக்கின்றனர். பாதுகாப்பு வாகனங்கள் பின் தொடரவே செல்கின்றன. இவை யாவும் மக்களைத் துன்பப்படுத்த வைக்கும் செயற்பாடாகும் என்பது மட்டுமல்லாது இவை தவிர்க்கப்பட வேண்டிய விடயங்களுமாகும்."இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி
-வீரகேசரி
*net Photos
புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமியை கட்சியில் இருந்து நீக்கம்?
0 comments
புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.கவுக்கு துணை போனதாகக் கூறி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 27 பேர் காங்கிரசிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த புதுச்சேரி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டு வித்தியாசங்களை புதுச்சேரி காங்கிரஸ் ஒப்பிட்டு பார்த்தனர். இதில் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமியின் தொகுதியான தட்டாஞ்சாவடி, கதிர்காமம், இந்திரா நகர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை விட பா.ம.க வேட்பாளர் அதிக ஓட்டு பெற்றிருந்தார்.
இந்த தொகுதிகள் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமிக்கு ஆதரவான தொகுதிகள் என்பதால் காங்கிரஸ் கட்சிக்குத்தான் அதிக ஓட்டு விழுந்திருக்க வேண்டும். ஆனால் ரங்கசாமி மறைமுகமாக பாமகவை ஆதரித்து இருந்தால் மட்டுமே பா.ம.க அதிக ஓட்டு வாங்க முடியும் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைமை கருதியதாக கூறப்படுகிறது.
'வணங்கா மண்' கப்பலும் முதல்வரின் கடிதமும்!
0 comments
சிறிலங்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட நிவாரணக் கப்பலான 'கப்டன் அலி' ('வணங்கா மண்') தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைத் துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி கிடைக்காமல் கடந்த 10 நாட்களாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.
போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காகவே ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் நிவாரண நிதி திரட்டி, 884 தொன் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை சேகரித்தனர்.
இவற்றை பிரான்சில் இருந்து 'கப்டன் அலி' என்ற 'வணங்கா மண்' கப்பல் மூலம் கடந்த 7 ஆம் நாள் இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.
நிவாரணப் பொருட்களுடன் சென்ற கப்பலை சிறிலங்கா அரசு ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து, 'வணங்கா மண்' எங்கு செல்வது என தெரியாமல் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டு நிற்கின்றது.
தற்போது சென்னை அருகே 5 கடல் மைல் தூரத்தில் அனைத்துலக கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டு நிற்கின்றது.
இக்கப்பல் சென்னைத் துறைமுகத்துக்கு வரவேண்டுமானால், இந்திய மத்திய அரசின் முறையான அனுமதி பெறவேண்டும். அதற்கான அனுமதி கிடைக்காததால் துறைமுகத்துக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கப்பலில், 15 பணியாளர்களும் கப்பலில் இருந்த உணவுப் பொருட்களைக்கொண்டு நாட்களை நகர்த்திக்கொண்டுள்ளனர்.
மனித நேய அடிப்படையில், மத்திய அரசு தலையிட்டு நிவாரணக் கப்பல் சிறிலங்கா செல்ல மத்திய அரசு உதவ வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி, வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கிருஷ்ணாவுக்கு கடிதம் எழுதினார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதுடில்லி சென்று எம்.எஸ்.கிருஷ்ணா உள்ளிட்டோரை சந்தித்து வலியுறுத்தினார்.
நிவாரணக் கப்பல் சிறிலங்காவுக்கு அனுப்ப தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 'வணங்கா மண்' கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் நுழைய மத்திய அரசு அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் நுழையவில்லை.
இது தொடர்பாக சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:
நிவாரணக் கப்பல் இன்னும் அனைத்துலக கடற்பரப்பின் எல்லையில் தான் நிற்கிறது. மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றது.
சென்னை துறைமுகத்துக்குள் வரவில்லை. சென்னை துறைமுகத்துக்குள் வர வேண்டும் என்றால் கப்பலில் உள்ள சரக்குகளுக்கான முறையான சான்றிதழ், அனுமதி கடிதம் போன்ற ஆவணங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
இதற்குரிய முகவர் கப்பலில் இடம் கேட்டு வேண்டுகோள் கடிதம் கூட தரவில்லை. குடிநீரின்றி தவிக்கும் நிலை இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடந்த 16 ஆம் நாள் குடிநீர் வழங்கினோம். இது மனிதாபிமான அடிப்படையிலான உதவிதான்.
தேவைப்பட்டால் மருத்துவம் உள்ளிட்ட அவசியமான உதவிகளை செய்ய துறைமுகம் தயாராகவே உள்ளது என்றார்.
சென்னைக்கு அருகே 5 மைல் தூரத்துக்கு நிவாரணக்கப்பல் வந்து இன்றுடன் 11 நாட்கள் ஆகின்றது. ஏற்கனவே 7 ஆம் நாள் புறப்பட்ட இக்கப்பல் 15 நாட்களாக சுற்றிக்கொண்டுள்ளது. கப்பலில் குறித்த காலத்துக்குத்தான் உணவுப் பொருட்கள் இருக்கும்.
நாட்கள் ஆக, ஆக கப்பலில் உள்ள பணியாளர்கள் பசிக்கு உணவு கிடைக்காமல் திண்டாடும் அபாயம் உள்ளது.
இந்திய அரசு துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பு என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'தினமலர்' தெரிவித்துள்ளது.
நன்றி
-புதினம்
விஜயின் பிறந்த நாள் - படங்கள்
1 comments
இன்று விஜய் தனது 36 வது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடினார் அதனை தொடர்ந்து ஏழை மாணவர்களுக்கு இலவச இரு கம்ப்யூட்டர் மையங்களைத் திறந்து வைத்தார்.
பல ரசிகர்கள் இரத்தானம் செய்தனர், மற்றும் பல நல உதவிகளை வழங்கினார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் ரசிகர் மன்றத்தினர் செய்திருந்தனர்.
Birth day"s special song
Thanks photo tamilnow
நெருப்பின் புதல்வர்களாக அவர்கள் எழுந்து வருவார்கள்
0 comments
சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான மேலாதிக்கப் போட்டியில், ஈழத்தின் புதல்வர்கள் மடிந்து போய் விட்டார்கள் என்று மூத்த பத்திரிக்கையாளர் சோலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக 'குமுதம் ரிப்போர்டர்' இதழில் சோலை எழுதியுள்ள கட்டுரை..
இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தவரையில் நமது வெளிநாட்டுக் கொள்கை நடுநிலையுடன் இருந்தது. அதனைத் தங்கள் திசைக்கு இழுக்க அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் எடுத்த முயற்சிகள் முனை மழுங்கிப் போயின.
தென்னாப்பிரிக்க வெள்ளை இனவெறி அரசு அதன் மண்ணின் மைந்தர்களையே இரும்புக் கால்களால் நசுக்கி தாண்டவம் ஆடியது. அங்கே நசுக்கப்பட்ட மக்களுக்காக பண்டிட் ஜவகர்லால் நேரு குரல் கொடுத்தார். அதன் பின்னர் அன்னை இந்திரா குரல் கொடுத்தார். அங்கே இனப் படுகொலைக்கு எதிராக இந்தியா எழுந்து நின்றது.
அமைதி வழியில் போராடி தங்கள் உரிமைகளைப் பெற முடியவில்லை என்ற நிலை வந்த போதுதான் சிங்கள தேசத்தில் ஈழத் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு ஆயத்தமானார்கள். அன்னை இந்திராவும் அமரர் எம்.ஜி.ஆரும் இருந்த வரை அவர்கள் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாகவே இருந்தனர். கலைஞரும் கரம் கொடுத்தார்.
தனி ஈழம் மலர்ந்தால் இந்தியாவில் தமிழ்நாடும் தனி நாடாகும் என்று சிங்கள அதிபர்கள் காட்டிய பூச்சாண்டியை இந்திரா நம்பவில்லை. ஆனால், அவருக்குப் பின்னே வந்த அவருடைய மைந்தன் ராஜீவ் காந்தி நம்பினார்.
அதன் விளைவாக, ஈழம் பற்றிய இந்திய அரசின் பார்வை திசை மாறியது. போராளிகளை ஒடுக்க இந்திய ராணுவம் ஈழத்தில் இறங்கியது. ஆனால் சோதனைகளைத்தான் சந்தித்தது. அழைத்த ராணுவத்தை சிங்கள அரசே "சீக்கிரம் வெளியேறு" என்றது.
காரணம், இந்திய ராணுவத்தால் பிரபாகரனைக் கூட பிடிக்க முடியவில்லையே என்று சிங்கள இனவாதம் சீற்றம் கொண்டது. சிங்களம் ஒரே தேசம் - ஒரே மொழி - ஒரே இனம் - ஒரே மதம் என்ற அவர்களுடைய சித்தாந்தம் சிதையத் தொடங்கியது. ஆகவே, அவர்கள் தூக்கத்தைத் தொலைத்து விட்டார்கள்.
ஈழ மக்களின் விடுதலை இயக்கத்தை நசுக்குவதற்கு அவர்கள் கஜானாவைக் காலி செய்து ஆயுதங்கள் வாங்கிக் குவித்தனர். சீனமும், பாகிஸ்தானும் உதவ முன்வந்தன.
கூர்ந்து பார்த்தால் இந்துமாக்கடல் பிரதேசத்தில் தனது செல்வாக்கை, -ஆதிக்கத்தை நிலை நிறுத்த சீனம் தொடர்ந்து முயன்று வருவது தெரியும்.
இந்தியாவிற்கு எதிராக ஒரு பக்கம் பாகிஸ்தானுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறது என்றும் பாகிஸ்தான் இந்தியாவின் பகை நாடாகவே இருக்க வேண்டும் என்பது அதன் லட்சியம்.
காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கிறது. அந்த ஆக்கிரமிப்பை அங்கீகரிக்கும் முறையில் சீனத்து எல்லையிலிருந்து அந்த காஷ்மீரத்துக் கானகங்களுக்குள் விரிவான சாலை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
இப்போது இலங்கையைத் தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. எனவே, ஈழ மக்களின் நியாயத்தை உணர்ந்தாலும் அவர்களின் உரிமைப் போராட்டத்தை முறியடிக்க சிங்கள அரசிற்கு ஆயுத சேவை செய்கிறது.
இந்தியா என்ன செய்கிறது? இலங்கை சீனத்தின் செல்லப்பிள்ளையாகி விடக்கூடாது என்பதற்காக ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க எல்லா வழிகளிலும் உதவி செய்கிறது.
ஈழத் தமிழர்களும் இங்கே தாய்த் தமிழக மக்களும் ரத்த உறவுகள் என்பதனை இந்திய அரசு மறந்துவிட்டது. ஈழம் மயானமானாலும் தொடர் குண்டு வீச்சுக்களால் தமிழ் இனம் அழிந்தாலும் தப்பிப் பிழைத்த அரும்புகளையாவது காக்க வேண்டும் என்ற உணர்வு தமிழகத்தில் தலைதூக்கி நிற்கிறது. அங்கே பனை மரங்கள் கூட பஸ்பமாகி விட்டாலும் அதன் சாம்பலில் பிறக்கும் புதிய ஜீவன்கள் நெருப்பின் புதல்வர்களாக எழுந்து வருவார்கள்.
ஆனால், சிங்கள இனவாதத்திற்கு சீனத்திற்குப் போட்டியாக தாமும் உதவி செய்வதில்தான் இந்திய அரசு துடிப்பாக இருக்கிறது. அதே சமயத்தில் சீனத்தின் செல்வாக்கையாவது கட்டுப்படுத்த முடிந்ததா? இன்றைக்கு இலங்கையில் சீனம் இரண்டு கப்பற்படைத் தளங்களை அமைத்து வருகிறது.
இருபெரும் நாடுகளின் ஆதிக்கப் போட்டியில் சுண்டைக்காய் இலங்கை நன்றாகவே சுகம் கண்டு வருகிறது.
இறுதிப் போர் என்று அண்மையில் சிங்கள ராணுவம் ஈழத்தின் மிச்ச மீதங்களைக் கூட பாஸ்பரஸ் குண்டுகளால் எரித்தது. இதனை உலகமே கண்டித்தது. ஆனால் சீனமும் கண்டிக்கவில்லை. இந்தியாவும் கண்டுகொள்ளவில்லை.
ஐ.நா.மன்றத்தில் சிங்கள அரசு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்தியாவும் சீனமும் சிங்கள அரசிற்குத் துணையாக நின்றன. மனித இனப் படுகொலைகளைக் கண்டிக்க மறுத்தன. அந்தக் கொடுமையை உள்நாட்டுப் பிரச்சினை என்று இரத்தத் திரையிட்டு மறைத்தன.
இன்றைக்கு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை நிர்ணயிப்பது யார்?
நடைமுறையில் சீனம்தானா? அதனால்தான் இந்தியா அநியாயங்களுக்குத் துணை போகிறதா?
நமக்கு அண்மையிலுள்ள மியான்மர் (பர்மா) கடந்த முப்பது ஆண்டுகளாக ராணுவ சர்வாதிகாரத்தின் கோரக்கரங்களில் துடித்துக் கொண்டிருக்கிறது. ராணுவ ஆட்சியைத் தூக்கி எறிய மியான்மரின் இளைய தலைமுறை போராடுகிறது. மியான்மரின் தந்தை அவுங்சானின் புதல்வி சூயிகி பத்தாண்டுகளாக வீட்டுச் சிறையில் அடைபட்டிருக்கிறார்.
இந்திரா காந்தி ஆட்சிக்காலம் வரை மியான்மர் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இந்தியா கரம் உயர்த்தியது. மியான்மர் மாணவர்கள் சுதந்திரமாக டெல்லித் தலைநகரில் தங்கள் நியாயங்களை எடுத்துக் கூறி வந்தனர். இந்திய எல்லைக்குள் மியான்மர் மக்களின் விடுதலை இயக்க முகாம்கள் விடிவெள்ளிகளாகப் பூத்திருந்தன.
இந்தியா எந்த ராணுவ ஆட்சியையும் ஆதரித்ததில்லை. ஆனால், காலப்போக்கில் மியான்மரின் ராணுவ ஆட்சியை ஆதரிக்க ஆரம்பித்தோம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக கிரீடம் சூட்டப்பட்ட இந்தியா, மியான்மர் மக்களின் ஜனநாயகப் போராட்டப் பாதையை அடைத்தது. டெல்லியில் கேட்டுக் கொண்டிருந்த விடுதலை கீதம் கெடுதலை ஓலமாகக் கருதப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மியான்மர் ராணுவ ஆட்சியோடு மன்மோகன் சிங் அரசு நேசம் கொண்டிருக்கிறது. என்ன காரணம்? மியான்மர் சீனத்தின் செல்வாக்கு வட்டத்திற்குள் முடங்கி விடக் கூடாது என்று கருதுகிறது. வெற்றி பெற்றதா? இல்லை.
இன்றைக்கு தென்னிந்தியாவை நோக்கி மியான்மர் தீவில் சீனம் கப்பற் படைத்தளம் அமைத்தே விட்டது.
ஆம். மியான்மர் ராணுவ ஆட்சிக்கு ஒரு பக்கம் சீனா ஆதரவு தருகிறது. இன்னொரு பக்கம் இந்தியா தோள் கொடுக்கிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்க ராணுவத் தளங்களை எதிர்த்து ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ் இன்ன பிற நாடுகள் போராடின. தங்கள் மண்ணில் அத்தகைய தளங்களுக்கு இடமில்லை. ஏனெனில், அணுகுண்டுகள் மீது தலை வைத்துத் தங்களால் தூங்க முடியாது என்று அந்த நாடுகள் அறிவித்தன. அந்த நாடுகளின் போராட்டங்களுக்கு சீனம் ஆதரவு அளித்தது. ஆனால், இன்றைக்கு அதே சீனம் இலங்கையிலும் மியான்மரிலும் தனது கப்பற் படைத்தளங்களை அமைத்து வருகிறது.
இன்றைய சீனத் தலைமையின் போக்கு புரியாத புதிராக இருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு வெடிகுண்டுப் பற்களைக் கட்டிக் கொடுத்ததில் அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, சீனத்திற்கும் பங்கு உண்டு.
இலங்கையிலும் மியான்மரிலும் சீனம் செல்வாக்குப் பெறுவது தமது நலன்களுக்கு எதிரானது என்று கருதியே இந்திய அரசு ஈழ இனப் படுகொலையையும் மியான்மர் ராணுவ ஆட்சியையும் ஆதரித்து மவுன சாட்சியாக நிற்கிறது. இதே காரணத்திற்காக இப்போது நேபாள அரசியலையும் இந்தியா குழப்புகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
மன்னராட்சிக்கு முடிவு கட்ட நேபாள மக்கள் பல்லாண்டுகளாக மாவோயிஸ்டுகள் தலைமையில் போராடினார்கள். அப்போதெல்லாம் ஒரு பக்கம் சீனமும் இன்னொரு பக்கம் இந்தியாவும் மன்னராட்சிக்குத்தான் வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தன.
நேபாளத்திலும் எண்ணற்ற கட்சிகள். இரண்டொன்றைத் தவிர எல்லாமே அரண்மனை வாசலில்தான் பாடம் படித்துக் கொண்டிருந்தன. மாவோயிஸ்டுகள் தலைநகரையும் கைப்பற்றுவர் அரண்மனையையும் மியூசியம் ஆக்குவர் என்ற நிலை வந்த போதுதான் அந்தக் கட்சிகள் புரட்சிக்கு ஆதரவளித்தன. புரட்சியில் மட்டுமல்ல; அடுத்து வந்த தேர்தலிலும் மாவோயிஸ்டுகள் மகத்தான வெற்றி பெற்றனர். கூட்டணி அரசு அமைந்தது.
புஷ்பகமல் தகால் என்ற பெயர் கொண்ட மாவோயிஸ்டு தலைவர் பிரசண்டா பிரதமரானார். ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டத்தை அவர் செயல்படுத்தத் தொடங்கினார். பிரச்சினைகள் எழுந்தன. மன்னராட்சிக்கு விசுவாசமாக இருந்த ராணுவத் தளபதியை மாற்ற முயன்றார். அந்தத் தளபதியோ ஏற்கெனவே ஓய்வு பெற்று வீட்டிற்குப் போய் விட்ட ராணுவ அதிகாரிகளை மீண்டும் பதவியில் அமர்த்தினார். அதற்காகச் சொல்லப்பட்ட காரணம், ராணுவத்தை பிரசண்டா தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கிறார் என்பதுதான்.
பிரசண்டா பதவி விலகினார். இல்லை. நிர்ப்பந்திக்கப்பட்டார். பிரதமராகும் வரை அவரை அங்கீகரிக்காத சீனம் அவரை அங்கீகரித்தது. அதற்காக அவர் சீனத்தின் பக்கம் சாய்ந்துவிடவில்லை. ஆனால் அப்படிச் சாய்கிறார் என்று இந்தியாவிற்குச் சந்தேகம் வந்தது. அதன் விளைவாகத்தான் அவர் பதவி விலகினார். அதனை அவரே பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
இனி நேபாளத்திற்கு என்று அரசியல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக அரசமைப்பு சபைக்கான தேர்தல் நடைபெற வேண்டும். அந்தத் தேர்தலில் நேபாளி காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். அதன் தலைவர் சி.பி.கொய்ராலா பிரதமராக வேண்டும். இதுதான் இந்தியாவின் விருப்பம் என்று அண்மையில் நமது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கூறியதை இங்கே நினைவுகூர வேண்டும்.
அப்படி ஓர் நிலை வந்தால் என்ன நடைபெறும்? மீண்டும் மன்னராட்சி சிம்மாசனம் ஏறும். பெயரளவில் நாடாளுமன்றமும் நகர்ந்து கொண்டிருக்கும். ஏனெனில், கொய்ராலாக்கள் அரண்மனையின் கொல்லைப்புறத்திலிருந்தே ஆட்சி செய்து அனுபவப்பட்டவர்கள்.
பொதுவாக, சீனமும் இந்தியாவும் அண்டை நாடுகள் மீது மேலாதிக்கம் செலுத்த போட்டி போடுகின்றன என்ற கருத்து உருவாகி வருகிறது. அந்தப் போட்டியில் ஈழத்தின் புதல்வர்கள் மடிந்தார்கள். மியான்மரே ராணுவ முகாமாக உருமாறி இருக்கிறது. நேபாளத்தில் வாக்குப்பெட்டி மூலமே 40 சதவிகித மக்களின் ஆதரவைப் பெற்ற மாவோயிஸ்டுகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். சரித்திரத்தின் மீது ரத்தத் துளிகளைத் தெளிக்கிறார்கள். பார்ப்போம்.
நன்றி
-தட்ஸ்தமிழ்
எம் தலைவர் சாகவில்லை பாடல் - வீடியோ
0 comments
இன்று அதிர்வு தளத்தில் ஏற்றப்பட்ட இனிய இசையுடன் கூடிய வீடியா. அதிக நபர்களால் பார்கபட்டுள்ளது.
நன்றி
-அதிர்வு
source
youtube பார்க்க
தீவிர தொடர் விசாரனையில் தமிழினி
0 comments
தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் பிரிவுப் பொறுப்பாளராகப் பணி யாற்றியவர் என்று கூறப்படும் தமிழினி (சிவசுப்பிரமணியம் சிவாதை) நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
சந்தேகநபரான தமிழினி, வவுனியா அகதி முகாமில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விசாரணை நடவடிக்கைகளுக்கென தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்தது.
குறித்த சந்தேகநபர் கடந்த 1991ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவரெனவும் பின்னர் 1993ஆம் ஆண்டில் பூநகரி இராணுவ முகாம் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளோடு நெருங்கிய தொடர்புடையவர் என்பது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் குற்றப்புலனாவுப் பிரிவினர் தெரிவித்தனர்.
கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவரை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை நீதிவான் நிஷாந்த ஹப்பு ஆராய்ச்சி முன்னிலையில் வழங்கினார்.
நன்றி
-தமிழ்வின்
இன்று மின் அஞ்சலில் வந்த நகச்சுவை படம்
6 commentsபடத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது வைத்து கிளிக் செய்து பெரிதாக பார்கவும்.
பைப் மேல் பயணம் விபத்தை தவிர்க முன் பின் 20 அடி இடைவெளி அவசியம்
வீட்டை சுத்தி வெள்ளம் - டி.வி சீரியல் பார்க்கும் நல் உள்ளம்
இது ரயில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் இந்த போஸ்டரில் தான் மோதி நிறுத்துவார்கள்
நண்பா படகு ஆனது பழுது - டைடானிக் போஸ் கொடுப்போம் இப்பொழுது
இது என்ன? காதல் டிஸ்ஷா? இல்ல முத்த மழையின் மெஸ்சா
காக்கா "யோவ் இதுபோல ஓயர் இருந்தா நாங்க எங்க கூடு கட்டரத்து"
இது என்ன குழந்தை சரக்கு கடையா
தடை செய்யப்பட்ட ஆயுதங்களால் உண்டான இப் பேரழிவு
0 comments
தமிழ் மக்களுடைய இன்றைய நிலை ஒரு இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்டதல்ல. இன்னொரு கடற் கோளால் ஏற்பட்டதுமல்ல. ஒரு அரசாங்கம் தன்னுடைய மக்கள் மீது பெருமெடுப்பில் குண்டு வீச்சுக்களை நடாத்தியதாலும், பாரிய எறிகணைகள் கொண்டு தாக்குதல் நடாத்தியதாலும் சில தரப்புக்களுடைய அறிக்கைகளின்படி சட்டரீதியற்ற இரசாயன ஆயுதங்களைப் பாவித்ததாலும் ஏற்பட்டதே இப் பேரழிவு.
பேர்ளின், பாரிஸ் லண்டன் போன்ற இடங்களில் முன்னர் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவிருந்தவர்கள் கூட மனிதாபிமானச் சட்டங்களை மீறியது தொடர்பிலும், போர்க்குற்றங்களை இழைத்துள்ளமை தொடர்பிலும், இலங்கை மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இந்நாட்டின் சுயமரியாதையுள்ள எந்தவொரு புத்திஜீவியும், எந்தவொரு விமர்சகரும் இந்த மனிதாபிமான நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தே அக்கறைப்படுவர். நீங்களோ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டினை எதிரொலிக்கிறீர்கள் என வன்னியிலுள்ள முகாம்களிலுள்ள தமிழ் இளைஞர்களுக்கு கல்விச்சாதனங்கள் வழங்க சகவாழ்வு மன்றம் எனும் அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவர் குமார் ரூபசிங்ஹ நிதி உதவி கோரியிருந்ததை கண்டித்து கருத்துத் தெரிவிக்கும் போது பேராசிரியர் நீல்சன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் வன்னியிலுள்ள முகாம்களிலுள்ள தமிழ் இளைஞர்களுக்கு கல்விச்சாதனங்கள் வழங்க நிதி உதவி கோரியிருந்தமை குறித்து உங்கள் கோரிக்கைக்குப் பதிலளிக்க அனுமதியுங்கள்.
என்னுடைய நிலைப்பாட்டைத் தெளிவாக நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லி விடுகிறேன். நான் முற்று முழுதாக உங்களுடைய கோரிக்கையை நிராகரிக்கிறேன்.
2006 ஆம் ஏப்ரல் மாதம் சுவிஸ்லாந்து நாட்டின் சூரிச் நகரில் இடம் பெற்ற ஒரு மாநாட்டில் உங்களுடையது உட்பட பல குரல்கள் சமாதானம் தொடர்பாகவும், பேச்சுவார்த்தை தொடர்பாகவும் ஒலித்ததை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஆயுதப் போராட்டம் தோல்வியுற்றதை அடுத்து விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்பட்டதையடுத்து இந்தக் கதையாடல்கள் எல்லாம் தொலைவுக்குச் சென்று விட்டன. இப்போது உங்களுடைய பங்களிப்பை நீங்கள் எவ்வாறு செய்யப் போகிறீர்கள் என்று நான் ஆச்சரியப்படுகிறேன்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமாகவும், இனவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று இலட்சம் பேர் தொடர்பாகவும் சர்வதேச ஊடகங்கள் கேள்வியெழுப்பியுள்ளன.
நீங்களோ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டினை எதிரொலிக்கிறீர்கள். தற்காலிகமாக இடம் பெயர்ந்த மூன்று இலட்சம் மக்கள் நலன்புரி முகாம்களில் இருக்கிறார்கள் என்று. இது ஒரு ஓர்வலியன் மொழி. யுதார்த்தத்தை தலைகீழாக மாற்றிக் காட்டும் முயற்சி. இம்முகாம்களைச் சுற்றி முட்கம்பிகள் இடப்பட்டிருக்கின்றன. முகாம்களினுள் செல்வதற்கும் வெளியேறுவதற்கும் இராணுவம் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சுதந்திரமான கண்காணிப்பாளர்கள் முகாம்களைப் பார்வையிடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்செல்வது தடுக்கப்பட்டிருக்கிறது.
கலக எதிர்ப்பு, நலன்புரி முகாம்கள். இடைத்தங்கல் முகாம்கள். புனர்வாழ்வு முகாம்கள் எனப்பல புதிய சொற்றொடர்களை அரசாங்கம் கையாள்கிறது. இவையெல்லாம் இனவாதக் கொள்கைகளே.
சந்தேகத்திற்கிடமில்லாமல் மக்கள் புலிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதாக நீங்கள் குறிப்படும் போது பிந்துனுவேவ மற்றும் செம்மணியை மட்டுமல்ல ஐநாவினாலும் மற்றும் மனித உரிமை நிறுவனங்களாலும் பல தசாப்தமாக நீடித்துவருவதாகப் பலமுறை சுட்டிக்காட்டப்பட்ட சட்டரீதியற்ற ஆட்கடத்தல்கள், படுகொலைகள், பெருமளவிலான மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகள் என்பவற்றையும் மறந்து விட்டீர்கள் என்று தோன்றுகிறது.
தங்களுடைய சொந்த அனுபவத்திற்குப் புறம்பாக 2007 ஜுலை நடுப்பகுதியில் கிழக்கை விடுவித்த போது ஏற்பட்ட சம்பவங்கள் குறித்தும் இந்த மக்கள் அறிந்திருக்கக் கூடும். ஐசிஎஸ்இன் அறிக்கையின்படி கிழக்கு விடுவிக்கப்பட்டதற்குப் பின்னர் அரசாங்கம் கூறியது போல அது கிழக்கின் உதயமாக அமையாமல் அரசியல் ஸ்திரமற்ற தன்மை, பயங்கரமான வன்முறைகள், நிலப்பறிப்பு, அடக்குமுறை என்பனவற்றின் விளைநிலமாக அது மாறிப் போயுள்ளது.
இவ்வுதாரணங்கள் இலங்கை அரசாங்கத்தால் அங்குள்ள சிறுபான்மை இன மக்கள் மொழி, கல்வி, அரச வேலைவாய்ப்புக்கள், திட்டமிட்ட குடியேற்றங்கள் என்பவற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்பதை எடுத்தியம்புகின்றன.
இந்தப்பின்னணிகளுக்குப் பின்னால் உங்கள் கோரிக்கையை வைத்துப் பார்க்கிற போது இலங்கை அரசாங்கத்தின் இனவாதக் கொள்கையை சட்டரீதியானதாக்கும் தன்மை அதில் தெரிகிறது.
பதிலாக சிங்கள மக்களை சோவனிசத்திற்கெதிராக அணிதிரட்டல், ஜனநாயக வேசமிடும் சர்வாதிகார அரசை அம்பலப்படுத்தல், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த முயற்சி செய்தல், பங்குபற்றும் அரசியல் முறைமையை உருவாக்குதல், சட்டத்திலிருந்து தப்பிப்பதற்கு இடங்கொடாமை என்பவற்றுக்காக உங்கள் குரல் ஒலித்திருக்க வேண்டும் எனவும் பேராசிரியர் நீல்சன் தெரிவித்துள்ளார்.
நன்றி
-உலக தமிழ்ச் செய்திகள்
தடுப்பு முகாம்கள் ஒரு "தேசிய வெட்கக் கேடு" - மனித உரிமைகள்
0 comments
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 300,000 பொதுமக்களை விடுவிக்குமாறு அரசாங்கத்தை பல்வேறு தரப்புகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், இலங்கை அரசினால் நடத்தப்பட்டு வருகின்ற இந்த தடுப்பு முகாம்கள், "தேசிய வெட்கக் கேடு" என அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
சர்வதேச சட்டங்களை மீறி, ஒரு வருடத்திற்குள் அதிகமாக தடுப்பு முகாம்களை நிறுவி, மோதல்களால் பாதிக்கப்பட்ட பொது மக்களை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.
அங்குள்ள ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரையும், தமிழீழ விடுதலைப் புலிகளாக அரசாங்கம் கருதுவதாக அதன் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் பொது மக்கள் அனைவரையும் மீள் குடியேற்றுவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் முகாம்களில் உள்ள விடுதலைப் புலி போராளிகளை அடையாளம் கண்டு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அரசாங்கத்தினால் நிவாரணக் கிராமங்கள் என அழைக்கப்படும் இடங்களிலும் பொது மக்களுக்கான நடமாட்ட சுதந்திரம் மீறப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மோதல்களினால் இடப்பெயர்வுகளுக்கு உள்ளாக்கப்பட்ட 300,000 தமிழ் பொது மக்களை சட்ட விரோதமாக தடுத்து வைத்திருக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
முகாம்களில் உள்ள பொது மக்கள் தாம் தங்குவதற்கு வேறு இடங்கள் இன்றி முகாம்களில் வசிப்பதில்லை எனவும், அங்கிருந்து அவர்கள், வெளியேற அரசாங்கம் அனுமதிக்காத நிலையிலேயே முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் முகாம்களில் அதிகரித்த சன நெரிசல் காரணமாக, முகாம்கள் பொது மக்கள் தங்குவதற்கான வசதியான சூழ்நிலையை கொண்டிருக்கவில்லை எனவும் எதிர்கால பருவ பெயர்ச்சி மழை காரணமாக மிகவும் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து வாழ விரும்பும் பொது மக்களை, சட்டத்தையும் மனித உரிமைகளையும் மீறி அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாகவும் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளமையையும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி
-தமிழ்செய்தி
* Net photo