Headline

நமீதாவின் புத்தாண்டு (2010) ஆசைகள்

4 comments

என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !!! வாழ்க வளமுடன் !!!


இந்தப் புத்தாண்டிலாவது, கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கும் தன்
உடம்பைக் குறைத்து சிக்கென்று ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை நமீதா.

ஒவ்வொரு ஆண்டும் பிரசவ வைராக்கியம் மாதிரி நடிகர் நடிகைகளும் தங்கள் சபதங்களை பட்டியல் போடுவார்கள். அது நிறைவேறியதா இல்லையா என்று யோசித்துப் பார்ப்பதற்குள் அடுத்த புத்தாண்டு வந்துவிடும். பாவம் அவர்கள் என்ன செய்வார்கல்...!

இதோ அப்படி நமீதா போடும் 2010 சபதம்...

"இந்த நியூ இயர்ல நான் எடுக்கும் முதல் உறுதி, இனி எந்த விருந்துக்கும் போவதில்லை என்பதுதான்.

புத்தாண்டு முதல் யோகாவில் அதிகமாய் ஈடுபட்டு உடம்பை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன்.

சைவ உணவுக்கு மாறவேண்டும் என்பதும் என் விருப்பமாக உள்ளது. இந்த சிக்கனை விடுவதுதான் பெரும் சவாலாக உள்ளது. ஆனாலும் முயற்சிக்கப் போகிறேன்.

நிறைய நேரங்களை குடும்பத்தினருடன் செலவிடப் போகிறேன்.

ஷாப்பிங் போவதை குறைத்துக் கொள்வேன்..." என்றார்.

அவரது ஆசைகள் நிறைவேற வாழ்த்துவோம்!

நன்றி
-சிவாஜிடிவி

காமடி


இனி ரேஷன் கார்டுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

2 comments


புதிய ரேஷன் கார்டுகளுக்கு இனி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்துகிறது தமிழக அரசின் உணவுத்துறை.

தமிழகம் முழுக்க போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசு பல லட்சம் கார்டுகளைப் பிடித்தது. இவற்றில் சந்தேகத்துக்கிடமான கார்டுகளின் எண்களை இணையதளத்தின் மூலம் சரிபார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

போலி ரேஷன் கார்டு நீக்கும் பணி மற்றும் கார்டுகளுக்கு கால நீட்டிப்பு வழங்கும் பணி நடந்து வந்ததால், புதிய கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இன்னும் பல லட்சம் மக்கள் ரேஷன் கார்டு பெறாமல் உள்ளதால் அவர்களுக்கு புதிய கார்டுகள் வழங்கும் பணியை மீண்டும் துவங்குமாறு அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.
இதைத் தொடர்ந்து புதிய கார்டுகள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

புதிய ரேஷன் கார்டுகளுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இணைய தளத்தில் விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களைப் பிரிண்ட் அவுட் எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதுவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி இல்லாமல் இருந்தது. புது கார்டுகள் கேட்டு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், இனி ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தமிழக அரசின் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இனி ரேஷன் கடைகளில் காய்கறி வாங்கலாம்

மேலும் செய்திக்கு தட்ஸ்தமிழ்

நன்றி
-தட்ஸ்தமிழ்

கவுண்டர் கலக்கல் காமடி


அதிக மக்கள் பார்த இவர்கள் திருமண - வீடியோ

0 comments




இதுவரை யூடிப்பில் 37 இலட்சம் மக்கள் பார்த்து சாதனையை படைத்து உள்ளது JK-ன் திருமண வீடியோ.

மேலும் இன்று வரை யூடிப்பில் தொடர்ந்து முதலிடம் மக்களால் வாக்கு அளித்து ஆதாரவு தந்துள்ளனர்.

நண்பரின் திருமணந்தில் அனைவருக்கும் ஒரு புதுமையை செய்ய நினைத்த மணமகளின் 11 நண்பர்கள் அவர்களின் மனைவி மற்றும் பெண் நண்பர்கள் இணைந்து மணமக்கள் மாதா கோயிலில் உள் நுழையும் போது நல்ல இசையுடன் பாடலுக்கு நடனம் ஆடியபடி பார்வையாளர்களுக்கு மகிழ்சியை தருகின்றனர்.



இவர்கள் திருமணத்தை சிலர் கலாய்த்து உருவாக்கிய காமடி புது வீடியோ


இந்திய குடிவரவுத் துறையால் சிவாஜிலிங்கம் நாடு கடத்தப்பட்டார்

0 comments


தமிழகத்தின் தஞ்சையில் நேற்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி சென்ற இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் இந்திய குடிவரவுத் துறையால் அனுமதி மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கம் நேற்று அதிகாலை 3.00 மணிக்கு விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார். ஆனால் அவரை விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதி மறுத்த குடிவரவுத் துறை அதிகாரிகள், அவரை தடுத்து வைத்தனர்.

சிறிது நேரத்தில் திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டனர். அங்கிருந்து சிவாஜிலிங்கம் கொழும்பு வர வேண்டும். ஆனால் நேற்று இரவுவரை இவர் கொழும்பு வந்து சேரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

என்ன காரணத்திற்காக சிவாஜிலிங்கத்தை நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தனர் என்று குடி யேற்றத்துறை அவருக்குத் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் சரத் பொன்சேகாவிற்கும், மகிந்த ராஜபக்சவிற்கும் கடும் போட்டி நிலவும் நிலையில், வெற்றி பெறுவதற்கு தமிழர்களின் வாக்குத் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் தனி வேட்பாளராக சிவாஜிலிங்கம் களமிறங்கியிருப்பது தேர்தலில் அளிக்கப்படும் தமிழர்களின் வாக்குகளை அவர் பெறும் வாய்ப்புள்ளதால் தங்கள் வெற்றி பாதிக்கப்படும் என்று அவர்கள் கருதுகின்றனர்.


நன்றி
- வீரகேசரி


கணணியில் இருந்து உங்கள் கண்ணை பாதுகாக்க - பயிற்ச்சி

7 comments


தொடர்ந்து பல மணி நேரம் நாம் கணணியை பயன்படுத்துகிறோம் இதனால் நம் கண்களில் பல பாதிப்பை அவை தறுகிறது அவற்றில் சில

1.கண் எரிச்சல்
2.கண்ணில் வறச்சி
3.கண்ணைச்சுற்றி கருவலைம்
4.சிறு கண்கட்டிகள்
5.தொடர்ந்து படிப்பதினால் வரும் தலை வலி
6.கண் அழுத்தம்
7.தூக்கம் இன்மை

எனவே உங்கள் கண்களுக்கு பாதுகாப்பு மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் இப் பயிற்சிகளை நீங்கள் தினம் செய்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம்.










ரெடி 1 2 3 . . . காமடி


கணிணியை தாக்கும் புது வகை வைரஸ் உஷார்!

2 comments



நண்பர்களை ஒருங்கினைக்கும் மைபேஸ், டியுட்டர், பேஸ்புக் போன்ற இனையதளங்களில் கிருஸ்மஸ் மற்றும் புது வருடத்தை கணக்கில் கொண்டு புது வகை வைரஸ் Koobface -னால் அதிக அளவில் பலர் பாதிக்கப்பட்டுயுள்ளர்.

இவ் வகை வைரஸ் மேற்குறிய தளங்களில் புதுவருட மற்றும் கிருஸ்மஸ் வாழ்த்துகளை யுடிப் வீடியோ லிங்கின் பெயரில் இந்த வைரஸ்சை இனைத்துள்ளர். அவற்றை தெரியாமல் நீங்கள் கிளிக் செய்யும் போது இந்த வகையான வைரஸ் சில நிமிடங்களில் உங்கள் கணிணியை பரவி செயலிழக்க செய்யும் எனவே வாழ்த்து என்ற பெயரில் உள்ள எந்த தளத்துக்கு செல்லும் லிங்கையும் கிளிக் செய்யாதீர்.


உச்சா காமடி


நவீன வடிவமைப்பில் அழகிய பென் டிரைவுகள் - படங்கள்

0 comments



இன்றைய கணிணி உலகில் அவசிய பொருளாக அனைவராலும் பயன்படுத்தும் பென் டிரைவ்கள் பல வண்ண வடிவமைப்புகளில் இளம் வயதினரை கவரும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளன அவற்றில் சில.



நாய் வடிவ பென் டிரைவ் :-) + 18


கிருஸ்மஸ் கேக் செய்முறை - வீடியோ

2 comments

பக்குவமான முறையில் மிக சுவையான கிருஸ்மஸ் கேக் வகைகள் செய்முறை வீடியோ தொகுப்பு.
devils food cake Pictures, Images and Photos







கேக் காமடி


சன் டிவி புதிய தொடருக்கு புதுமுக நடிகர் - நடிகை தேவை !

4 comments


சக வலை பதிவரும் பன்முக வித்தகருமான திரு க. தங்கமணி பிரபு
அவர்களின் நேற்று வெளியீட்ட பதிவின் மறு பதிப்பு.


பிரியமுள்ள நண்பர்களே,

சன் டிவிக்காக எனது நண்பர் சிவா இயக்கும் தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு இம்மாத மத்தியில் தொடங்கவுள்ளது.

மேற்படி தொடரில் நானும் ஒரு பங்காற்றுகிறேன்.

இந்த தொடரில், இயக்குனர் சிவா புதுமுக நடிகர் நடிகையரை அறிமுகப்படுத்தவுள்ளார். நடிகர் நடிகையர் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன.

ஆர்வமுள்ள சென்னை மற்றும் அதன் சுற்றுப்புரத்தில் உள்ளவர்கள் அல்லது சென்னைக்கு இதன் பொருட்டு இடம் மாற முடிந்தவர்கள் மின்னஞ்சல் மூலம் இயக்குநரை தொடர்பு கொள்ளவும்.

உங்களால் இயலுமானால், இணையம் மற்றும் வலைப்பூக்கள் தொடர்பில்லாத உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை தெரிவியுங்கள்.

மின்னஞ்சல் முகவரி: dir1siva@yahoo.co.in

இம்முயற்சியில் ஈடுபடும் தோழர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நன்றி
- க. தங்கமணி பிரபு


நல்ல நட்பும் - நல்ல உறவும் வாழ்வில் தொடர சிறு ரகசியம்

0 comments



உங்களிடம் ஒரு கேள்வி, உங்கள் உறவு வட்டம் பெருகி வருகிறதா, சுருங்கி வருகிறதா, அல்லது பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி எப்போதும்போல் இருக்கிறதா?

இந்தக் கேள்விக்குச் சட்டென்று பதில் சொன்னால் பெரும்பாலும் அதில் உண்மைக் கலப்பு இராது. சுருங்கிக் கொண்டே வருகிறது என்பதுதான் பலர் விஷயங்களில் உண்மை.

இங்கே ஒன்றைச் சொல்லியாக வேண்டும். நம் வசதிகளோ செல்வாக்கோ நாம் ஒப்பிடும் காலத்தில் பெருகியிருந்தால் நம் வட்டமும் பெரிதாகிவிடும். இதைக் கணக்கில் சேர்ப்பது செயற்கையே. இந்த வருகைக்கு முன்னால் இருந்த வட்டம் அப்படியே இருக்கிறதா என்பதுதான் ஆழ்ந்து ஆராயப்பட வேண்டும்.

நம்மையறியாமல் நம்மிடமிருந்து சிலர் விலகிப் போய்க் கொண்டே இருக்கிறார்கள். கேட்டேன். உதவவில்லை; எங்கள் இல்லத்து நிகழ்ச்சிக்கு அழைத்தோம். வரவில்லை “ஏன்” வாழ்த்துக்கூட அனுப்பவில்லை. முன்புபோல் பிரியமாக இல்லை. நிறையவே மாறிவிட்டார். கோபமாக வருத்தப்படும்படியாகப் பேசிவிட்டார் ஆகிய இந்த நான்கு மனக்குறைகளே நம்மிடமிருந்து பிறர் விலகிப் போகக் காரணம்.

ஒரு கண்ணாடிக் கலைப் பொருளை உருவாக்க ஒரு கலைஞனுக்கு எவ்வளவோ நேரம் ஆகிறது. அதனைப் போட்டு உடைப்பவனுக்குச் சில விநாடிகள்தாம். நட்பும் உறவும் இப்படித்தான். இதை வலுப்பெறச் செய்ய எத்தனையோ சம்பவங்களும், ஆண்டுகளும் ஆகின்றன. ஆனால் உடைவதற்கும் விலகுவதற்கும் ஒரு வாக்கியமோ, ஒரு சிறு சம்பவமோ போதுமானதாக இருக்கிறது.

நம் வட்டத்திலிருந்து திடீரெனக் காணாமல் போகிறவர்கள்; இடைவெளி காக்கிறவர்கள் ஆகியோரைத் தேடி அலசுங்கள். பட்டியல் இடுங்கள். ‘பார்த்து நாளாச்சி; பேசிப் பலகாலம் ஆச்சு. பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்; சும்மா பேசலாம்’னு கூப்பிட்டேன் என ஆரம்பியுங்கள். ‘ஏதும் வருத்தமா? ஏன் இந்த வெற்றிடம்’ என்று கேளுங்கள்.

“போனாப் போறான். விலகிப் போனா எனக்கென்ன நஷ்டம், அவனுக்குத்தான் நஷ்டம்” என்கிற கொள்கையை விட்டுவிட்டு எல்லோரும் நமக்கு வேண்டும் என நினையுங்கள். ஓரிரு வாய்ப்புகளை உருவாக்குங்கள். அதற்குப் பிறகும் அவர்கள் முறுக்கிக் கொண்டு போனால், போகட்டும்!

நன்றி
-தமிழ்வாணன்.காம்


ஜீவாவின் பசுமையான கல்லூரி நட்பு காட்சி


கமல்​ஹா​சன் வெளியீட்ட" உயிர் உறவு உண்மை" குறும்​ப​ட நிகழ்ச்சி - வீடியோ

0 comments


உலக எய்ட்ஸ் தினத்தை முன்​னிட்டு உத​ய​நிதி ஸ்டா​லி​னின் மனைவி கிருத்​திகாஉத​ய​நிதி,​ இயக்​கு​நர்​கள் மிஷ்​கின்,​ சசி​கு​மார் ஆகி​யோர் மூன்று குறும்​ப​டங்​களை இயக்​கி​யி​ருந்​த​னர்.

உயிர்,​ உறவு,​ உண்மை எனப் பெய​ரி​டப்​பட்ட இந்​தக் குறும்​ப​டங்​க​ளின் வெளி​யீடு சென்​னை​யில் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது.

குறும்​பட சி.டி.க்களை துணை முதல்​வர் மு.க.ஸ்டா​லின் வெளி​யிட நடி​கர் கமல்​ஹா​சன் பெற்​றுக்​கொண்​டார். விழா​வில் கமல்​ஹா​சன் பேசி​ய​சிய நிகழ்ச்சி வீடியோ தொகுப்பு.

வீடியோவை கான இங்கே கிளிக் செய்யவும்



நன்றி
-சிவாஜிடிவி


குறும்பட போட்டி பரிசு ரூ 10,000 /-

0 comments


தென் திசை திரைப்பட இயக்கத்தின் முதலாம் ஆண்டு விழாவினை முன்னிட்டும், தென் திசை குறும்பட திருவிழா நடத்தவிருக்கிறது. இதற்கான குறும்படங்கள் கீழ்காணும் விதிமுறைக்குட்பட்டு வரவேற்கப்படுகிறது.

பரிசுகள்:

மொத்தப் பரிசுத் தொகை: 10,000

நிபந்தனைகள்:

* குறும்படங்கள் எந்த உள்ளடக்கத்திலும் அடங்கியிருக்கலாம்.

* குறும்படங்கள் 30 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.

* படங்கள் 1.1.2008 ஆண்டுக்கு பிறகு எடுக்கப்பட்டவனாக இருக்க வேண்டும்.

* தேர்வு செய்யப்படாத படங்கள் திருப்பி அனுப்ப இயலாது.

* போட்டி முடிவு தொடர்பாக நடுவர் குழு தீர்ப்பே இறுதியானது.

* போட்டியின் முடிவுகள் டிசம்பர் 18.19 அன்று நடைபெறும் குறும்பட திருவிழாவில் அறிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும். தேர்வு பெற்ற குறும்படங்கள் திரையிடப்படும்.

* படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 12.12.2009

* நுழைவுக் கட்டணம் ரூபாய். 200/- பணவிடையாக (M.O) கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

* மேலே கண்ட விதிகளை ஏற்றுக் கொண்டு படத்தின் உரிமையாளர், படம் குறித்த விபரம், ஏற்கனவே பரிசு பெற்றிருந்தால் அது பற்றிய விபரம், மற்றும் இயக்குனரின் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

க. வீரமணி (தேவிமகன்)
1/192, மீனாட்சி நகர்,
செவ்ராஷ்டிரா காலனி
சக்கிமங்கலம் (அஞ்சல்)
மதுரை - 625 020.

அலைப்பேசி: தேவிமகன் - 9952266992

சுரேன் - 9843061319

(நிபந்தனைகள் குறித்தோ, போட்டிக் குறித்தோ ஏதோனும் ஐயங்கள் இருப்பின் போட்டியை நடத்தும் அமைப்பினரை தொடர்பு கொள்ளவும். போட்டி தொடர்பாக தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.)

நன்றி
-சங்கமம் லைவ் செய்திகள்


கவுண்டர் சிரிப்பு