Headline

நல்ல நட்பும் - நல்ல உறவும் வாழ்வில் தொடர சிறு ரகசியம்



உங்களிடம் ஒரு கேள்வி, உங்கள் உறவு வட்டம் பெருகி வருகிறதா, சுருங்கி வருகிறதா, அல்லது பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி எப்போதும்போல் இருக்கிறதா?

இந்தக் கேள்விக்குச் சட்டென்று பதில் சொன்னால் பெரும்பாலும் அதில் உண்மைக் கலப்பு இராது. சுருங்கிக் கொண்டே வருகிறது என்பதுதான் பலர் விஷயங்களில் உண்மை.

இங்கே ஒன்றைச் சொல்லியாக வேண்டும். நம் வசதிகளோ செல்வாக்கோ நாம் ஒப்பிடும் காலத்தில் பெருகியிருந்தால் நம் வட்டமும் பெரிதாகிவிடும். இதைக் கணக்கில் சேர்ப்பது செயற்கையே. இந்த வருகைக்கு முன்னால் இருந்த வட்டம் அப்படியே இருக்கிறதா என்பதுதான் ஆழ்ந்து ஆராயப்பட வேண்டும்.

நம்மையறியாமல் நம்மிடமிருந்து சிலர் விலகிப் போய்க் கொண்டே இருக்கிறார்கள். கேட்டேன். உதவவில்லை; எங்கள் இல்லத்து நிகழ்ச்சிக்கு அழைத்தோம். வரவில்லை “ஏன்” வாழ்த்துக்கூட அனுப்பவில்லை. முன்புபோல் பிரியமாக இல்லை. நிறையவே மாறிவிட்டார். கோபமாக வருத்தப்படும்படியாகப் பேசிவிட்டார் ஆகிய இந்த நான்கு மனக்குறைகளே நம்மிடமிருந்து பிறர் விலகிப் போகக் காரணம்.

ஒரு கண்ணாடிக் கலைப் பொருளை உருவாக்க ஒரு கலைஞனுக்கு எவ்வளவோ நேரம் ஆகிறது. அதனைப் போட்டு உடைப்பவனுக்குச் சில விநாடிகள்தாம். நட்பும் உறவும் இப்படித்தான். இதை வலுப்பெறச் செய்ய எத்தனையோ சம்பவங்களும், ஆண்டுகளும் ஆகின்றன. ஆனால் உடைவதற்கும் விலகுவதற்கும் ஒரு வாக்கியமோ, ஒரு சிறு சம்பவமோ போதுமானதாக இருக்கிறது.

நம் வட்டத்திலிருந்து திடீரெனக் காணாமல் போகிறவர்கள்; இடைவெளி காக்கிறவர்கள் ஆகியோரைத் தேடி அலசுங்கள். பட்டியல் இடுங்கள். ‘பார்த்து நாளாச்சி; பேசிப் பலகாலம் ஆச்சு. பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்; சும்மா பேசலாம்’னு கூப்பிட்டேன் என ஆரம்பியுங்கள். ‘ஏதும் வருத்தமா? ஏன் இந்த வெற்றிடம்’ என்று கேளுங்கள்.

“போனாப் போறான். விலகிப் போனா எனக்கென்ன நஷ்டம், அவனுக்குத்தான் நஷ்டம்” என்கிற கொள்கையை விட்டுவிட்டு எல்லோரும் நமக்கு வேண்டும் என நினையுங்கள். ஓரிரு வாய்ப்புகளை உருவாக்குங்கள். அதற்குப் பிறகும் அவர்கள் முறுக்கிக் கொண்டு போனால், போகட்டும்!

நன்றி
-தமிழ்வாணன்.காம்


ஜீவாவின் பசுமையான கல்லூரி நட்பு காட்சி

0 comments: