அறுத்தெரிவோம் வாரீர் முள்வேலி சிறைகளை இயக்குநர் சீமான் ஆண்ட தமிழினம் அடைபட்டுக்கிடக்குது முள்வேலி சிறைக்குள் அறுத்தெரிவோம் வாரீர் நாம் தமிழர் என அழைக்கிறார் இயக்குநர் சீமான்
பத்திரிக்கையாளர் சந்திப்பு
பகுதி - I
பகுதி - II
பகுதி - III
Headline
அறுத்தெரிவோம் வாரீர் முள்வேலி - சீமான் பேச்சு - வீடியோ
0 comments''நான் ராவணனின் பரம ரசிகன்'' - கமலின் - வீடியோ
5 comments
வீடியோ காண இங்கே கிளிக் செய்யவும்
இராவணன் காலத்திலிருந்தே தமிழர்களுக்கு தங்கள் பெருமை பேசத்தெரியாது. அதை மற்றவர் சொன்னால்தான் தெரியும்...’ என்றார் நடிகர் கமலஹாசன்.
நடிகை ஷோபனாவின் ‘மாயா ராவண்’ நாட்டிய நாடக டிவிடி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தவர் கமல்ஹாஸன். நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, ஏதோ போன ஜென்மத்துக்குப் போய் வந்த மாதிரி இருக்கு என்று கமெண்ட் அடித்தார்.
முதல் டிவிடியை கமல்ஹாசன் வெளியிட கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார்.
தனது வாழ்த்துரையில் கமல் கூறுகையில்,
கலையும், கமர்ஷியலும் எண்ணையும் தண்ணீரும் மாதிரி. எப்போதும் ஒட்டாது. ஆனால் நல்ல சமையல்காரர்களுக்கு அது சாத்தியம். ஷோபனா ஒரு நல்ல சமையல்காரராக இருக்கிறார். முன்பு போல சிக்கலான நிலை இப்போது இல்லை. உலக மார்கெட் விரிந்து கிடக்கிறது. சேர்க்க வேண்டிய விதத்தில் சேர்த்தால்இந்தக் கலை எங்கு வேண்டுமானாலும் சென்றடையும்.
நான் ராவணனின் பரம ரசிகன். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள் . அவர்கள் ஹீரோவையும் ரசிப்பார்கள். ஆண்ட்டி ஹீரோவையும் ரசிப்பார்கள்.
ஹீரோவாக நடிப்பவர்களையும், வில்லன்களாக நடிப்பவர்களையும் வேறுபடுத்தி பார்க்கும் பழக்கம் தமிழர்களிடம் இல்லை, யாருடைய நடிப்பு, மிக உயர்வாக இருக்கிறதோ அவருக்கு நிச்சயம் தமது கைதட்டல்களை கொடுப்பார்கள்.
ராவணன் காலந்தொட்டே எங்களுக்கு (தமிழருக்கு) பெருமை பேச தெரியாது. எங்களின் பெருமைகளை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும். அதுகூட முழுசாகத் தெரிந்துவிடும் என்றும் சொல்லிவிட முடியாது…
நடனம் எனக்கு போன ஜென்மம் போல இருக்கிறது. பயிற்சி இல்லாதவன் கலை பற்றி பேச அருகதையற்றவன். ஆனால் அதை மதிக்கிற பண்பு, பணிவு இருக்கிறது. தமிழர்களுக்கு விளம்பரம் செய்யத் தெரியாது. ஆனால் பாராட்ட நன்றாக தெரியும். திறமைகள் புதைந்து கிடக்கின்றன. தோண்டி எடுத்தால் வைரமாக ஜொலிக்கும்.
இங்கு சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை. அந்த நிலை இன்றும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும். வர்த்தகமும், கலையும் கலப்பது கடினம்.
ராவணனைப் போல் ‘மாயா நரகாசுரனை’யும் ஷோபனா வெளிக் கொண்டு வர வேண்டும் என்றார்.
நன்றி
சிவாஜி டிவி
தட்ஸ்தமிழ்
கடலூரில் பதற்றம் - காங் - கொடி எரிப்பு
0 comments
கடலூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உருவ படம் மற்றும் அக்கட்சியின் கொடி ஒன்று எரிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட கலெக்டர் அலுவலகம் அருகில் இருக்கும் தங்களது கட்சி அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இன்று காலை சுதந்திர தினத்தை கொண்டாட வந்த கடலூர் காங்கிரசார் அதிர்ச்சியடைந்தனர். அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கட்சிக் கொடி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் படம் ஆகியவை தீ வைத்து கொளத்தப்பட்டிருந்தன.
அந்த இடத்தில் புலி படம் பொறித்த தமிழ் ஈழக்கொடி ஒன்றும் கிடந்தது. இதனால் ஈழ ஆதரவாளர்கள் யாராவது இதை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி
-தட்ஸ்தமிழ்
*net photo
கட்டிங் பிரியர்களுக்காக ஐஸ் பார்
0 commentsஜப்பான் ரஜினி ரசிகரின் நடனம் - வீடியோ
7 comments
ஜப்பான் நாட்டின் ஒரு தொலைக்காட்சி நடத்தும் நடன போட்டியின் போது அந்த நாட்டின் நபர் ஒருவர் நமது ரஜினி நடித்த முத்து படத்தில் இடம் பெற்ற "ஒருருவன் ஒருருவன் முதலாளி " என்ற பாடலை பாடியும் நடனம் ஆடியும் அன் நாட்டு மக்கள் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
கட்டிங் நடனம்
சிங்கை சிங்கம் நண்பர் கிரிக்கு இப்பதிவு சமர்பணம்
ஜாக்கி சேகர் vs டோண்டு ராகவன்
7 comments
இன்று நண்பர் ஜாக்கி அவர்கள் நன்றி கூறி வெளியிட்ட பதிவில் அவருடைய நெட் கனெக்ஷன் சரிவர கிடைக்காததால் ஏற்பட்ட மனவேதனையை அந்த பதிவில் தெரியப்படுத்தி இருந்தார்.
இதனால் அவர் போட வேண்டிய பதிவை அவரின் பெண் டிரைவில் மூலம் ஏற்க்கனவே நோட் பேடில் சேமித்து வைத்ததை பிரவுசிங் சென்டரில் இருந்து போஸ்ட் செய்ததாக எழுதி இருந்தார்
அதற்கு பின்னோட்டம் மூலம் திரு டோண்டு ராகவன் அவர்கள் எப்படி தீர்வு
காண்பது கூறி இருந்தார்.
அதை எப்படி செய்வது என்ற விளக்கமே இப்பதிவு.
1.முதலில் போட வேண்டிய புதிய பதிவை தயாரித்தவுடன்
2. PUBLISH POST மேல் உள்ள Post Options என்றதை கிளிக் செய்யவும்
post date and time
3.இப்போது நம் பதிவை எந்த நாளில் எந்த நேரத்தில் வெளியிட வேண்டும் என்று அதில் மாற்றம் செய்தால் அந்த மாற்றத்திற்கேற்ப பதிவு தானகவே அந்த நாளில் பதிவு வெளிவரும்.
4.// //எந்த நாளில் எந்த நேரத்தில் வெளியிட வேண்டும் என்று அதில் மாற்றம் செய்தால் அந்த மாற்றத்திற்கேற்ப பதிவு தானகவே அந்த நாளில் பதிவு வெளிவரும்.//
அதுதானே முக்கிய கட்டம்!
கீழே போஸ்ட் ஆப்சனை கிளிக் பண்ணினால் தொடர்ந்து நேரம் மற்றும் தேதி காலம், லேபிளுக்கு கீழே தோன்றும். அதில் மாற்றவேண்டும்! //
அதில் மாற்றிய பின் பப்ளிஷ் போஸ்ட் என்ற பட்டனை அமுக்க வேண்டும்.
நாம் கொடுத்தது சரியாக வந்துள்ளதா எனப் பார்க்க, edit post கிளிக் செய்துப் பார்த்தால் அதில் schduled என்றும் வரும்.
மேலும் இதில் முதலில் மாதம், பின் தேதி, பின் வருடம் என்று இருக்கும் (MM/dd/yyyy) என்ற பார்மெட்டில் இருக்கும். அதையும் கவனித்து மாற்ற வேண்டும்.
பதிவின் குறையை நிறைவு செய்ய விளக்கம் தந்த திரு இராகவன் நைஜிரியாக்கு நன்றிகள்
நமீதாவின் ஜகன் மோகினி சூட்டிங் - வீடியோ
2 commentsகே.பியின் கைது பற்றி - கருணா
0 comments
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், செல்வராசா பத்மநாதனை கைது செய்திருக்க முடியாது என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் உயிருடன் இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தால், அடுத்த கணமே அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி, பத்மநாதனை விடுதலை செய்திருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், உலக நாடுகள் பத்மநாதனை கைது செய்ய இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பத்மநாதன் ஆயுதக் கடத்தல் தவிர்த்து, போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது, விநாயகமூர்த்தி முரளிதரன் பதில் சொல்ல தடுமாறியமையை அவதானிக்க முடிந்தது.
அந்த கேள்விக்கு சம்பந்தம் இல்லாத பதில்களை வழங்கிய முரளிதரன், கருத்தை மாற்றி தப்பிக்க முயன்றதை தொலைக்காட்சியில் நேரடியாக காண முடிந்தது.
நன்றி
- தமிழ்வின்
மருமகளை மாமியார் அடிப்பது தவறில்லை - நீதிபதி எஸ்.பி. சின்ஹா
2 comments
"மருமகளை மாமியார் காலால் உதைப்பது வன்கொடுமை ஆகாது" என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறி இருக்கிறது. "மாமியார் என்னை காலால் எட்டி உதைத்தார். தன் மகனிடம் கூறி என்னை விவாகரத்து செய்து விடுவதாக மிரட்டினார். கணவரும் நாத்தனார்களும் கொடுமைப்படுத்தினர். அவர்களை தண்டிக்க வேண்டும்" என்று கீழ் நீதிமன்றத்தில் மருமகள் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், மாமியாருக்கும் கணவருக்கும் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கணவர் மேல் முறையீடு செய்தார்.
அதை நீதிபதிகள் எஸ்.பி. சின்ஹா, சிரியாக் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வழங்கிய தீர்ப்பு
மருமகளை மாமியாரோ நாத்தனாரோ உதைப்பது, விவாகரத்து செய்து விடுவேன் என்று மிரட்டுவது, மனைவிக்கு எதிராக மகனிடம் குற்றம்சாட்டுவது, போன்ற செயல்களை வன்கொடுமையாக கருதி இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498-ஏ யின் கீழ் தண்டனை வழங்க முடியாது. அதே நேரம், திருமணத்தின் போது மணமக்களுக்கு பரிசாக அளிக்கப்பட்ட பொருட்களை மாமியார் எடுத்துக் கொண்டால் அது நம்பிக்கை மோசடியாக கருதப்பட்டு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 406 படி தண்டிக்கலாம்.
நன்றி
-பரந்தன்
கொலைக் குழுக்களே படுகொலைக்கும் காணமல்போதல்களுக்கும் காரணம்
0 comments
என்னதான் மறுக்கின்றபோதும் சிறிலங்காப் படையினரும் அரசைச் சேர்ந்தவர்களும் முழுத் தமிழர்களையும் எதிரிகளாகவே பார்க்கின்றனர் என்று சரத் குமார என்கிற சிங்கள ஊடகவியலாளர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
உலக பொதுவுடமைவாதிகள் இணையத்தளத்தில் இலங்கையின் இன்றைய கள நிலவரம் குறித்து எழுதியுள்ள கட்டுரையின் விபரம் வருமாறு:
உள்நாட்டில் கடும் எதிர்ப்பு - குறிப்பாக தமிழர்களிடம் இருந்து எதிர்ப்புத் - தெரிவிக்கப்படுகின்றபோதும் இறுதிக்கட்டப் போரின்போது சிறைப்பிடிக்கப்பட்ட 3 லட்சம் தமிழ் மக்களையும் அரசு தொடர்ந்து முகாம்களில் தடுத்து வைத்திருக்கப்போகிறது.
அந்த மக்களை விடுவிக்குமாறு அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் முன்வைத்த கோரிக்கையை, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச புறந்தள்ளி விட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஜூலை மாதம் 17 ஆம் நாள் அறிக்கைப்படி, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் அரச படையினரின் பாதுகாப்பில் உள்ள 30 முகாம்களில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 621 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வவுனியாவுக்கு அருகில் உள்ள மெனிக் பாம் முகாமில் உள்ளனர்.
முகாம்களில் உள்ள தமிழ்மக்களை 3 வருடங்களுக்குத் தடுத்து வைக்க அரச படையினர் திட்டமிட்டிருந்தது. இருந்தாலும், அனைத்துலக விமர்சனங்களையடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் இந்த வருட இறுதிக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார்.
இப்போது அந்த வாக்குறுதி மெல்லச் சரிகிறது. மீள்குடியமர்வைத் தாமதப்படுத்துவதற்கு புதிய காரணங்களை அரசு கண்டுபிடிக்கிறது. கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டி உள்ளன என்றும் கடைசி விடுதலைப் புலிச் சந்தேகநபர் கூட முகாம்களில் இருந்து அகற்றப்பட வேண்டியவராக உள்ளார் என்றும் அது கூறுகிறது.
ஜூலை மாதம் 30 ஆம் நாள் கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய, தடுப்பு முகாம்களின் புதிய பொறுப்பதிகாரியான மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க, முகாம்களில் இன்னும் பல ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் உள்ளனர் என்றார்.
முகாம்களில் படையினர் சல்லடை போட்டு நடத்திவரும் சோதனைகள் முடிவடையும்போது, புலிகளின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 796 இல் இருந்து 20 ஆயிரம் வரைக்கும் உயரும் என்றும் அவர் கூறினார்.
புலிகளின் புதுப்பிக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அச்சத்தை அதிகரிப்பதற்காக, தற்கொலைப் படையினராகப் பயிற்சி அளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களும் முகாம்களில் இருக்கின்றனர் என்று ரட்னாயக்க தெரிவித்தார்.
பாதுகாப்புச் செயலாளரும் அரச தலைவரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச கடந்த வார இறுதியில் 'சண்டே ஐலண்ட்' வார ஏட்டுக்கு வழங்கிய நேர்காணலில் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்.
நன்கு பயிற்சி பெற்ற புலி உறுப்பினர்களை முகாம்களில் இருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் அந்த நேர்காணலில் கூறினார். அத்துடன், இந்த நடவடிக்கை விடுதலைப் புலிகள் தமது இயக்கத்தை மீளக்கட்டியெழுப்ப எடுக்கும் முயற்சியின் ஒரு பகுதி என எந்தவிதமான சான்று ஆதாரங்களையும் வழங்காமலேயே அவர் மேலும் குறிப்பிட்டார்.
முகாம்களில் இருக்கும் விடுதலைப் புலிகளை அடையாளம் காண்பதற்கு முன்பாகவே அவர்களை விடுவிக்க வேண்டும் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.
கோத்தபாயவின் இந்தக் கருத்தானது, அரசின் ஜனநாயக விரோதச் செயல்களை எதிர்க்கும் எவரையும் "விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கிறார்கள்" என்று முத்திரை குத்தும் நோக்கத்தைக் கொண்டது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் முன்னர் இருந்த பகுதிகளில் அரச படையினர் தமது ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்தும் வரையில் தமிழ் மக்களை முகாம்களில் வைத்திருப்பதே அரசின் உண்மையான நோக்கம் தவிர அவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக அல்ல என்பதை கோத்தபாயவின் கருத்து வலியுறுத்துகின்றது.
என்னதான் அவர்கள் மறுக்கின்றபோதும் படையினரும் அரசைச் சேர்ந்தவர்களும் முழுத் தமிழர்களையும் எதிரிகளாகவே பார்க்கின்றனர்.
விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழ் மக்களைத் தாம் விடுவித்துவிட்டதாகக் கூறும் அரசின் கருத்தை கேலிக்கு உள்ளாக்குகிறது, தமிழ் மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் செயல். இந்த முகாம்களுக்குள் அரச படையினர் துன்புறுத்தல் மற்றும் மிரடல் உள்ளிட்ட தமது கொடுங்கோல் ஆட்சியை நிலைநாட்டியுள்ளனர்.
முகாம்களில் இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதுடன், அவர்களின் உறவினர்களுக்குக்கூட தகவல் சொல்லப்படாமல் எங்கோ இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.
விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களோ சட்டப்பூர்வமான பிரதிநிதித்துவமோ இன்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
கோத்தபாயவின் நேர்காணலில், கடந்த இரு மாதங்களில் முகாம்களைவிட்டு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தப்பிச் சென்றுவிட்டனர் என்று தெரிவித்திருப்பதுதான் மிகக் கொடுமையானது. தடுப்பு முகாம்கள் முட்கம்பிகளால் சுற்றி அடைக்கப்பட்டுள்ளதுடன் படையினரின் கடுமையான காவலும் இருக்கிறது.
மக்கள் 'தப்பிச் சென்றார்கள்' என்பதைவிட அவர்களில் பெரும்பாலனவர்கள் 'காணாமல்' போகச் செய்யப்பட்டார்கள் என்பது போன்றே தெரிகிறது. கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக, படையினரின் ஆசீர்வாதத்துடன் இயங்கும் அரச ஆதரவு கொலைக் குழுக்களே ஆயிரக்கணக்கான படுகொலைகளுக்கும் காணமல்போதல்களுக்கும் காரணம்.
முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் தமிழ் மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று, அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஜூலை 28 ஆம் நாள் சிறிலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
"போருக்கு மத்தியில் அகப்பட்டுக்கொண்ட லட்சக்கணக்கான மக்கள் இவ்வாறு முகாம்களில் முடக்கப்பட்டிருப்பது கொடுமையானது. அவர்கள் இதுவரை பட்டதெல்லாம் போதாதா? நாட்டின் ஏனைய பகுதிகளில் வசிப்பவர்களைப் போன்றே அவர்களுக்கும் தமது சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான உரிமை இருக்கிறது" என்று அந்த அமைப்பின் ஆசியப் பிராந்திய இயக்குநர் பிறட் அடம்ஸ் தெரிவித்திருந்தார்.
"போர் காரணமாகத் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறிய அநேகமாக அனைவரும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து ஒரு சிறு தொகையினர் மட்டுமே, குறிப்பாக மூத்தவர்கள் மட்டுமே வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ளவர்கள் மருத்துவத் தேவைக்காக மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் பின்னர் மருத்துவமனை செல்லவேண்டி இருந்தால் படையினரின் பாதுகாப்புடனேயே செல்ல முடியும்." என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது.
கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, எந்த ஊடகமும் தடுப்பு முகாம்களுக்குச் செல்வதை ராஜபக்ச அரசு தடுத்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கைப்படி, முகாம்களில் பணியாற்றும் மனிதாபிமானப் பணியாளர்கள் - அரசின் கவனத்திற்கு வராமல் முகாம்களின் நிலை பற்றிய எந்தவொரு தகவலையும் வெளியிடக்கூடாது என - நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதனை நிராகரிப்பவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். அல்லது அவர்களின் கடவுச்சீட்டு அனுமதி நீடிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
- புதினம்