தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், செல்வராசா பத்மநாதனை கைது செய்திருக்க முடியாது என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் உயிருடன் இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தால், அடுத்த கணமே அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி, பத்மநாதனை விடுதலை செய்திருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், உலக நாடுகள் பத்மநாதனை கைது செய்ய இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பத்மநாதன் ஆயுதக் கடத்தல் தவிர்த்து, போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது, விநாயகமூர்த்தி முரளிதரன் பதில் சொல்ல தடுமாறியமையை அவதானிக்க முடிந்தது.
அந்த கேள்விக்கு சம்பந்தம் இல்லாத பதில்களை வழங்கிய முரளிதரன், கருத்தை மாற்றி தப்பிக்க முயன்றதை தொலைக்காட்சியில் நேரடியாக காண முடிந்தது.
நன்றி
- தமிழ்வின்
Headline
கே.பியின் கைது பற்றி - கருணா
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment