Headline

''நான் ராவணனின் பரம ரசிகன்'' - கமலின் - வீடியோ


வீடியோ காண இங்கே கிளிக் செய்யவும்


இராவணன் காலத்திலிருந்தே தமிழர்களுக்கு தங்கள் பெருமை பேசத்தெரியாது. அதை மற்றவர் சொன்னால்தான் தெரியும்...’ என்றார் நடிகர் கமலஹாசன்.

நடிகை ஷோபனாவின் ‘மாயா ராவண்’ நாட்டிய நாடக டிவிடி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தவர் கமல்ஹாஸன். நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, ஏதோ போன ஜென்மத்துக்குப் போய் வந்த மாதிரி இருக்கு என்று கமெண்ட் அடித்தார்.

முதல் டிவிடியை கமல்ஹாசன் வெளியிட கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார்.

தனது வாழ்த்துரையில் கமல் கூறுகையில்,

கலையும், கமர்ஷியலும் எண்ணையும் தண்ணீரும் மாதிரி. எப்போதும் ஒட்டாது. ஆனால் நல்ல சமையல்காரர்களுக்கு அது சாத்தியம். ஷோபனா ஒரு நல்ல சமையல்காரராக இருக்கிறார். முன்பு போல சிக்கலான நிலை இப்போது இல்லை. உலக மார்கெட் விரிந்து கிடக்கிறது. சேர்க்க வேண்டிய விதத்தில் சேர்த்தால்இந்தக் கலை எங்கு வேண்டுமானாலும் சென்றடையும்.

நான் ராவணனின் பரம ரசிகன். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள் . அவர்கள் ஹீரோவையும் ரசிப்பார்கள். ஆண்ட்டி ஹீரோவையும் ரசிப்பார்கள்.

ஹீரோவாக நடிப்பவர்களையும், வில்லன்களாக நடிப்பவர்களையும் வேறுபடுத்தி பார்க்கும் பழக்கம் தமிழர்களிடம் இல்லை, யாருடைய நடிப்பு, மிக உயர்வாக இருக்கிறதோ அவருக்கு நிச்சயம் தமது கைதட்டல்களை கொடுப்பார்கள்.
ராவணன் காலந்தொட்டே எங்களுக்கு (தமிழருக்கு) பெருமை பேச தெரியாது. எங்களின் பெருமைகளை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும். அதுகூட முழுசாகத் தெரிந்துவிடும் என்றும் சொல்லிவிட முடியாது…

நடனம் எனக்கு போன ஜென்மம் போல இருக்கிறது. பயிற்சி இல்லாதவன் கலை பற்றி பேச அருகதையற்றவன். ஆனால் அதை மதிக்கிற பண்பு, பணிவு இருக்கிறது. தமிழர்களுக்கு விளம்பரம் செய்யத் தெரியாது. ஆனால் பாராட்ட நன்றாக தெரியும். திறமைகள் புதைந்து கிடக்கின்றன. தோண்டி எடுத்தால் வைரமாக ஜொலிக்கும்.

இங்கு சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை. அந்த நிலை இன்றும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும். வர்த்தகமும், கலையும் கலப்பது கடினம்.

ராவணனைப் போல் ‘மாயா நரகாசுரனை’யும் ஷோபனா வெளிக் கொண்டு வர வேண்டும் என்றார்.

நன்றி
சிவாஜி டிவி
தட்ஸ்தமிழ்

5 comments:

வினோத் கெளதம் said...

tala

unga phone number kodunga.
illana intha numberu mudincha call pannunga 9790016527

வினோத் கெளதம் said...

tala

unga phone number kodunga.
illana intha numberu mudincha call pannunga 9790016527

Jackiesekar said...

கமல் நல்லா சொல்லி இருக்கின்றார்..

puduvaisiva said...

" jackiesekar said...
கமல் நல்லா சொல்லி இருக்கின்றார்.."

வருகைக்கு நன்றி ஜாக்கி

puduvaisiva said...

"வினோத்கெளதம் said...
tala

unga phone number kodunga.
illana intha numberu mudincha call pannunga 9790016527"

நன்றி வினோத்
புதுவை வந்ததும் நிச்சயம் தொடர்பு கொள்கிறேன்.