அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Headline
சானல் 4-ல் வெளியான புதிய பேர் குற்ற - வீடியோ
4 comments
Flash News லண்டனில் தமிழர்களின் போராட்டத்தின் எழுச்சியின் காரணமாக ராஜபக்சேவின் பேச இருந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேச்சு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் விரிவான தகவலுக்கு சானல் 4
இலங்கை அதிபர் ராஜபக்சே லண்டன் சென்றுள்ள நிலையில், இலங்கை ராணுவம் தமிழர்களை கொன்று குவித்தது பற்றிய கொடூரமான புதிய வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
Thanks channel4
போர்க்குற்றவாளியுமான மஹிந்தவை பிரிட்டனில் கைது செய்வதற்கு நீங்கள் செய்யவேண்டியவை மின்னஞ்சல்...
நன்றி கே.ஆர்.பி.செந்தில்
மத்திய அமைச்சர் ராசா ராஜினாமா???
0 comments
மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ராசா வகித்த பதவியை திமுக அமைச்சர்களுக்கு
கொடுக்கக்கூடாது:ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
மேலும் விரிவான செய்திக்கு நக்கீரன்
நன்றி நக்கீரன்
என்.டி.டி.வி வழங்கும் ஈழத்தமிழரின் - Blood on Water - வீடியோ
6 comments
“Blood on Water” எனும் தலைப்பில் வட இந்திய தொலைக்காட்சியான என்.டி.டி.வி ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டார்கள்.
அதில் இறுதி யுத்தத்திற்கு பின் தமிழர்களின் நிலையும் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் மேற்க் கொள்ளும் தக்குதலை முதல் முறையாக பதிவு செய்து உள்ளனர்.
இந்த ஆவணப்படத்தில் உண்மைக்குப் புறம்பான பல தகவல்கள் என்.டி.டி.வி வெளியிடப்பட்டுள்ளது என்று அதை வாபஸ் பெறுமாறு இந்தியாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் பிரசாத் காரியவசம் இந்திய தொலைக்காட்சி சேவைக்கு எழுத்து மூலம் வேண்டுகேள் விடுத்துள்ளார்.
பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது ஏன்? டி.ராஜேந்தரின் பரபரப்பு பேச்சு - வீடியோ
6 commentsடி.ராஜேந்தர் மன வேதனையுடன் மைய, மாநில அரசுகளின் நிலையை கண்டித்து உணர்ச்சி மிக்க பேச்சு
1.டி.ராஜேந்தர் வீடியோவை கான தயவு செய்து இங்கு கிளிக் செய்யவும்
2.விமான நிலையத்தில் நடந்த வைகோ vs போலீஸ் - வீடியோ
நன்றி
-ஈழம்வெப்
-குறள்டிவி
Breaking News ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய முடிவா??? - வீடியா
4 comments
"நக்சலைட்டுகள் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குறைபாடு எனது அலுவலகத்துக்கு உண்டு என்று கூறுவதில் எனக்கு தயக்கம் இல்லை. தண்டேவாடா தாக்குதலுக்கு முழுப் பொறுப்பையும் நான் ஏற்கிறேன்"
நான் டெல்லி திரும்பிய உடன் பிரதமரைச் சந்தித்து கடிதத்தை அவரிடம் அளித்தேன் மற்றும் தண்டேவாடா நிகழ்வுக்கு முழுப் பொறுப்பையும் நான் ஏற்பதாக ஒப்புக்கொண்டுள்ளேன் என்ற தகவலைதெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய ப.சிதம்பரம் முன் வந்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேகுவாரா காதலியின் புரட்சி முழக்கம் - புகழ்பெற்ற - வீடியோ
0 commentsஅர்ஜென்டைனாவில் பிறந்து வளர்ந்த சேகுவாரா, கொரில்லா தாக்குதலை உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களின் புரட்சி நாயகனாக திகழ்ந்தவர்.
சேகுவாராவின் இறப்புக்கு பின் அவரின் உடலைகானும் அவரின் காதலி வருத்தம்முடன் கையில் கைகுழந்தையுடன் மீண்டும் மக்களை புரட்சி பாதைக்கு அழைக்கும் விதமாக அமைக்கப்பட்ட இப் பாடல் இன்று வரை உலக அளவில் பலரது பாராட்டையும்,புகழையும் பெற்றது.
பாடலை கேளுங்கள் புரட்சியின் அதிர்வு அலைகள் உங்கள் மனதில் மோதுவதை நீங்கள் உணர்வீர்கள்.
பாடலை எழுதியவர் குபான் இசை கார்லஸ் பியூபால் ஆண்டு 1967
இந்த வீடியோ பாடலில் நடித்த பிரன்ச் நடிகை நத்தாலி கார்டோன்.
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே…! - சேகுவேரா.
தந்தை பாசத்திற்காக ஒரு மாயாஜால கின்னஸ் சாதனை - வீடியோ
3 comments
இன்று வரை மாயாஜால நிகழ்ச்சியின் முடிசூடா மன்னர் டேவிட் காப்பபர்ஃபீல்ட் - ன் பல சகச நிகழ்ச்சிகள் கின்னஸ் புகழ் பெற்றவை. இவர் செய்யும் மாயாஜால காட்சிகள் அனைத்தும் மக்கள் நிறைந்த அரங்குகள் அல்லது பொதுமக்கள் நிறைந்த பொது இடங்கள்.
அவருக்கு புகழ்சேர்த்த இரு நிகழ்ச்சிகள் அந்த வீடியோ தொகுப்பு உங்களுக்காக.
நிகழ்ச்சி - I
நிகழ்ச்சி பார்வையாளர் ஒருவர் அவர் தந்தை பிரிந்து பல வருடம் ஆகிறது மேலும் அவர் இப்பொழுது ஹாவாய் தீவில் வசிப்பதாக கூறுகிறார். ஹாவாய் தீவு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து பல நூறுமயில் தொலைவில் உள்ளது இருந்த போதும்
அவரின் ஆசையை நிறைவு செய்ய மக்கள் முன் அவரை ஒரு தூணி முடிய அறையில் இருந்து அவர் தந்தை வாழும் ஹாவாய் தீவுக்கு அழைத்து செல்கிறார் இவை அனைத்தும் நேரடி ஒளிபரப்பின் மூலம் மக்கள் பார்கிறார்கள் பின்பு இவர் மட்டும் அந்த தீவில் இருந்து நிகழ்ச்சி அரங்குக்கு வருகிறார்.
நிகழ்ச்சி - II
லேசரால் துண்டான உடலை கையில் எடுத்து வரும் மெய்சிலிர்கும் காட்சி
ஜப்பானை நோக்கி நகர தொடங்கிய சுனாமி - வீடியோ
2 comments
சுனாமி தற்பொது ஜப்பானை தாக்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன
ஆனால் எழும் அனைகளின் உயரம் குறைந்த அளவாக உள்ளது இதனால் தற்பொழுது எவ்வித சேதத்தையும் அவைகள் ஏற்படுத்த வில்லை ஆனால் சுனாமி உயரமான அனைகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் அரசு துறைகள் அனைத்தும் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் இடுபட்டுள்ளன.
தடை இல்லா சான்றிதழ்க்கு வழங்க ரூ 2 கோடி லஞ்சமா ???
2 comments
போஸ்ட் ஆபீஸ் கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.2 கோடி லஞ்சம் கேட்டு அதில் பெரும் பகுதியை பெற்றபோது, மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மஞ்சித் சிங் பாலியை சி.பி.ஐ. அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.
மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக இருந்து வந்தவர் மஞ்சித் சிங் பாலி. தானே மாவட்டம் மிரா பயண்டர் என்ற இடத்தில் தனியார் பில்டிங் கான்டிராக்டர் ஒருவர் தனக்கு சொந்தமான 21,600 சதுர அடி (9 கிரவுண்ட்) நிலத்தில் 5,400 சதுர அடி நிலத்தை போஸ்ட் ஆபீஸ் கட்டுவதற்கு தர ஒப்புக் கொண்டார். தனியாரிடம் இருந்து தபால் துறைக்கு நிலம் வாங்கினால், அந்த நிலத்துக்கு தபால் துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.
மகாராஷ்டிரா தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் என்ற முறையில் மஞ்சித் சிங் பாலிதான் தடையில்லா சான்றிதழ் தர வேண்டும்.
இந்நிலையில், மிரா பயண்டர் பகுதியின் முன்னாள் கவுன்சிலரான ரீட்டா ஷா என்பவர் மஞ்சித் சிங் பாலியை கடந்த மாதம் சந்தித்து தடையில்லா சான்றிதழை விரைவில் வழங்க வேண்டும் என்று கோரினார்.
இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, தனியார் ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வரும் அருண் டால்மியா, அவரது மகன் ஹர்ஷ் டால்மியா ஆகியோர் ரீட்டா ஷாவை தொடர்பு கொண்டு போஸ்ட் ஆபீஸ் நிலத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தெற்கு மும்பையில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு வரும்படி கேட்டுக் கொண்டனர்.
ரீட்டா ஷா அங்கு சென்றபோது, தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.1.5 கோடி மஞ்சித் சிங் பாலிக்கும் ரூ.50 லட்சம் தங்களுக்கும் ஆக மொத்தம் ரூ.2 கோடி லஞ்சமாக கொடுக்குமாறு ஹர்ஷ் மற்றும் அருண் டால்மியா கோரினர். தங்களை மஞ்சித் சிங் பாலிதான் இது தொடர்பாக பேசுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.
சி.பி.ஐ. வலைவிரிப்பு:
இதைத் தொடர்ந்து சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்பு பிரிவிடம் ரீட்டா ஷா புகார் செய்தார். மஞ்சித் சிங் பாலியை பிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் வலை விரித்தனர். அதன்படி, ஹர்ஷ் மற்றும் அருணிடம் ரீட்டா ஷா நேற்று முன்தினம் லஞ்சமாக ரூ.2 கோடி கொடுத்தார்.
அதை எடுத்துக் கொண்டு தெற்கு மும்பையில் கொலாபாவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இருவரும் சென்றனர். அங்கு மஞ்சித் சிங்கிடம் ரூ.1.5 கோடியை கொடுத்தனர். அப்போது, மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் மஞ்சித் சிங் பாலியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இடைத்தரகர்களாக செயல்பட்ட ஹர்ஷ் டால்மியா, அருண் டால்மியா ஆகியோரும் கைதாயினர்.
மும்பை, டெல்லியில் சோதனை:
இதைத் தொடர் ந்து மும்பை, பரிதாபாத், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள மஞ்சித் சிங்கின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
1. மும்பை வீட்டில் இருந்து ரூ.34 லட்சம்
2. 10,722 அமெரிக்க டாலர்கள்
3. 3,050 இங்கிலாந்து பவுன்ட்ஸ்
4. 3,470 யூரோ
தொகையை கைப்பற்றினர். வெளிநாட்டு பணம் பெருமளவில் கைப்பற்றப்பட்டுள்ளதால் இது குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மஞ்சித் சிங் பாலி, இந்திய அஞ்சல் பணியின் 1978ம் ஆண்டு பிரிவு அதிகாரியாவார். அஞ்சல் துறையின் 10 மூத்த அதிகாரிகளுள் ஒருவர்.
கடந்த 60 ஆண்டுகளில் ரூ.2 கோடி அளவுக்கு பெரும் தொகையை லஞ்சமாக வாங்கியதற்காக உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி
-தினகரன்
mumbaimirror.com
சக்கரை நோயாளிகளே உஷார் ஒரு ஷாக் ரிப்போட்
0 comments
நூற்றுக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் தற்போது “அவந்தியா” என்ற மாத்திரையை சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் அந்த மாத்திரை தேவையில்லாத வகையில் இருதய நோய்களையும், மாரடைப்பையும் ஏற்ப படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
எனவே, அந்த மாத்திரையை விற்பனை செய்ய தடை விதித்து அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள் ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அவந்தியா மாத்திரைக்கு பதிலாக “ஆக்டாஸ்” என்ற மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் மாரடைப்பை ஏற்படுத்தக்கூடியது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த மாத்திரை சாப்பிட்டவர்களில் மாதந்தோறும் 500 பேர் மாரடைப்பு மற்றும் இருதய பாதிப்பினால் பாதிக்கப்படுவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அவந்தியா மாத்திரை விற்பனையாளர்கள் இதை மறுத்துள்ளனர். இந்த மாத்திரைகள் மாரடைப்பை ஏற்படுத்தும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மத்திய அரசு இதை விசாரனை செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளது.
நன்றி
- சங்கம்லைவ்
* photo from net.
சச்சின் 200 ரன் உலக சாதனை - வீடியோ
3 comments
சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்தார். 200 ரன்களைக் குவித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
147 பந்துகளில் 200 ரன்களைத் தொட்டார் சச்சின். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது சச்சினுக்கு 442வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இது தான் காதலா ??? - நகச்சுவை - வீடியோ + 18
2 comments
பொதுவா ஆண்கள் , பெண்கள் காதல் வயப்படும் போது ஒருவர் மற்றவரை கவரும் விதமாக பல வித முயர்ச்சிகளை செய்வார்கள் இதில் அகஅழகை விட புறஅழகைமிகைப்படுத்தி அவர்கள் செய்யும் செயல்கள் பிறகு அவர்களுக்குள் உண்மை தெரியும் போது உண்டாகும் ஏமாற்றம் அவர்களின் மன நிலையை சொல்லும் இந்த வீடியா ஒரு நல்ல கவிதை.
காதலர் தின வாழ்த்துக்கள் !!!
சரத் பொன்சேகா கைது - வீடியோ
0 commentsதீவு ஹைட்டி- ல் இன்று மிக பெரிய நிலநடுக்கம் - வீடியோ
0 comments
கரீபியன் தீவு நாடுகளின் ஒன்றான ஹைட்டியில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.0 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஹைட்டி நாட்டை இந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக தெரிவித்த அமெரிக்க அதிகாரிகள், இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் சாலைகளில் அநாதையாக கிடப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் விரிவான தகவலுக்கு நக்கீரன்
நன்றி
- நக்கீரன்