சுனாமி தற்பொது ஜப்பானை தாக்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன
ஆனால் எழும் அனைகளின் உயரம் குறைந்த அளவாக உள்ளது இதனால் தற்பொழுது எவ்வித சேதத்தையும் அவைகள் ஏற்படுத்த வில்லை ஆனால் சுனாமி உயரமான அனைகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் அரசு துறைகள் அனைத்தும் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் இடுபட்டுள்ளன.
Headline
ஜப்பானை நோக்கி நகர தொடங்கிய சுனாமி - வீடியோ
2 commentsதடை இல்லா சான்றிதழ்க்கு வழங்க ரூ 2 கோடி லஞ்சமா ???
2 comments
போஸ்ட் ஆபீஸ் கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.2 கோடி லஞ்சம் கேட்டு அதில் பெரும் பகுதியை பெற்றபோது, மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மஞ்சித் சிங் பாலியை சி.பி.ஐ. அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.
மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக இருந்து வந்தவர் மஞ்சித் சிங் பாலி. தானே மாவட்டம் மிரா பயண்டர் என்ற இடத்தில் தனியார் பில்டிங் கான்டிராக்டர் ஒருவர் தனக்கு சொந்தமான 21,600 சதுர அடி (9 கிரவுண்ட்) நிலத்தில் 5,400 சதுர அடி நிலத்தை போஸ்ட் ஆபீஸ் கட்டுவதற்கு தர ஒப்புக் கொண்டார். தனியாரிடம் இருந்து தபால் துறைக்கு நிலம் வாங்கினால், அந்த நிலத்துக்கு தபால் துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.
மகாராஷ்டிரா தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் என்ற முறையில் மஞ்சித் சிங் பாலிதான் தடையில்லா சான்றிதழ் தர வேண்டும்.
இந்நிலையில், மிரா பயண்டர் பகுதியின் முன்னாள் கவுன்சிலரான ரீட்டா ஷா என்பவர் மஞ்சித் சிங் பாலியை கடந்த மாதம் சந்தித்து தடையில்லா சான்றிதழை விரைவில் வழங்க வேண்டும் என்று கோரினார்.
இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, தனியார் ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வரும் அருண் டால்மியா, அவரது மகன் ஹர்ஷ் டால்மியா ஆகியோர் ரீட்டா ஷாவை தொடர்பு கொண்டு போஸ்ட் ஆபீஸ் நிலத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தெற்கு மும்பையில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு வரும்படி கேட்டுக் கொண்டனர்.
ரீட்டா ஷா அங்கு சென்றபோது, தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.1.5 கோடி மஞ்சித் சிங் பாலிக்கும் ரூ.50 லட்சம் தங்களுக்கும் ஆக மொத்தம் ரூ.2 கோடி லஞ்சமாக கொடுக்குமாறு ஹர்ஷ் மற்றும் அருண் டால்மியா கோரினர். தங்களை மஞ்சித் சிங் பாலிதான் இது தொடர்பாக பேசுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.
சி.பி.ஐ. வலைவிரிப்பு:
இதைத் தொடர்ந்து சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்பு பிரிவிடம் ரீட்டா ஷா புகார் செய்தார். மஞ்சித் சிங் பாலியை பிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் வலை விரித்தனர். அதன்படி, ஹர்ஷ் மற்றும் அருணிடம் ரீட்டா ஷா நேற்று முன்தினம் லஞ்சமாக ரூ.2 கோடி கொடுத்தார்.
அதை எடுத்துக் கொண்டு தெற்கு மும்பையில் கொலாபாவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இருவரும் சென்றனர். அங்கு மஞ்சித் சிங்கிடம் ரூ.1.5 கோடியை கொடுத்தனர். அப்போது, மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் மஞ்சித் சிங் பாலியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இடைத்தரகர்களாக செயல்பட்ட ஹர்ஷ் டால்மியா, அருண் டால்மியா ஆகியோரும் கைதாயினர்.
மும்பை, டெல்லியில் சோதனை:
இதைத் தொடர் ந்து மும்பை, பரிதாபாத், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள மஞ்சித் சிங்கின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
1. மும்பை வீட்டில் இருந்து ரூ.34 லட்சம்
2. 10,722 அமெரிக்க டாலர்கள்
3. 3,050 இங்கிலாந்து பவுன்ட்ஸ்
4. 3,470 யூரோ
தொகையை கைப்பற்றினர். வெளிநாட்டு பணம் பெருமளவில் கைப்பற்றப்பட்டுள்ளதால் இது குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மஞ்சித் சிங் பாலி, இந்திய அஞ்சல் பணியின் 1978ம் ஆண்டு பிரிவு அதிகாரியாவார். அஞ்சல் துறையின் 10 மூத்த அதிகாரிகளுள் ஒருவர்.
கடந்த 60 ஆண்டுகளில் ரூ.2 கோடி அளவுக்கு பெரும் தொகையை லஞ்சமாக வாங்கியதற்காக உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி
-தினகரன்
mumbaimirror.com
சக்கரை நோயாளிகளே உஷார் ஒரு ஷாக் ரிப்போட்
0 comments
நூற்றுக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் தற்போது “அவந்தியா” என்ற மாத்திரையை சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் அந்த மாத்திரை தேவையில்லாத வகையில் இருதய நோய்களையும், மாரடைப்பையும் ஏற்ப படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
எனவே, அந்த மாத்திரையை விற்பனை செய்ய தடை விதித்து அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள் ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அவந்தியா மாத்திரைக்கு பதிலாக “ஆக்டாஸ்” என்ற மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் மாரடைப்பை ஏற்படுத்தக்கூடியது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த மாத்திரை சாப்பிட்டவர்களில் மாதந்தோறும் 500 பேர் மாரடைப்பு மற்றும் இருதய பாதிப்பினால் பாதிக்கப்படுவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அவந்தியா மாத்திரை விற்பனையாளர்கள் இதை மறுத்துள்ளனர். இந்த மாத்திரைகள் மாரடைப்பை ஏற்படுத்தும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மத்திய அரசு இதை விசாரனை செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளது.
நன்றி
- சங்கம்லைவ்
* photo from net.
சச்சின் 200 ரன் உலக சாதனை - வீடியோ
3 comments
சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்தார். 200 ரன்களைக் குவித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
147 பந்துகளில் 200 ரன்களைத் தொட்டார் சச்சின். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது சச்சினுக்கு 442வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இது தான் காதலா ??? - நகச்சுவை - வீடியோ + 18
2 comments
பொதுவா ஆண்கள் , பெண்கள் காதல் வயப்படும் போது ஒருவர் மற்றவரை கவரும் விதமாக பல வித முயர்ச்சிகளை செய்வார்கள் இதில் அகஅழகை விட புறஅழகைமிகைப்படுத்தி அவர்கள் செய்யும் செயல்கள் பிறகு அவர்களுக்குள் உண்மை தெரியும் போது உண்டாகும் ஏமாற்றம் அவர்களின் மன நிலையை சொல்லும் இந்த வீடியா ஒரு நல்ல கவிதை.
காதலர் தின வாழ்த்துக்கள் !!!