
நூற்றுக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் தற்போது “அவந்தியா” என்ற மாத்திரையை சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் அந்த மாத்திரை தேவையில்லாத வகையில் இருதய நோய்களையும், மாரடைப்பையும் ஏற்ப படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
எனவே, அந்த மாத்திரையை விற்பனை செய்ய தடை விதித்து அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள் ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அவந்தியா மாத்திரைக்கு பதிலாக “ஆக்டாஸ்” என்ற மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் மாரடைப்பை ஏற்படுத்தக்கூடியது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த மாத்திரை சாப்பிட்டவர்களில் மாதந்தோறும் 500 பேர் மாரடைப்பு மற்றும் இருதய பாதிப்பினால் பாதிக்கப்படுவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அவந்தியா மாத்திரை விற்பனையாளர்கள் இதை மறுத்துள்ளனர். இந்த மாத்திரைகள் மாரடைப்பை ஏற்படுத்தும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மத்திய அரசு இதை விசாரனை செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளது.
நன்றி
- சங்கம்லைவ்
* photo from net.
Headline
சக்கரை நோயாளிகளே உஷார் ஒரு ஷாக் ரிப்போட்
0 commentsகணணியில் இருந்து உங்கள் கண்ணை பாதுகாக்க - பயிற்ச்சி
7 comments
தொடர்ந்து பல மணி நேரம் நாம் கணணியை பயன்படுத்துகிறோம் இதனால் நம் கண்களில் பல பாதிப்பை அவை தறுகிறது அவற்றில் சில
1.கண் எரிச்சல்
2.கண்ணில் வறச்சி
3.கண்ணைச்சுற்றி கருவலைம்
4.சிறு கண்கட்டிகள்
5.தொடர்ந்து படிப்பதினால் வரும் தலை வலி
6.கண் அழுத்தம்
7.தூக்கம் இன்மை
எனவே உங்கள் கண்களுக்கு பாதுகாப்பு மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் இப் பயிற்சிகளை நீங்கள் தினம் செய்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம்.
ரெடி 1 2 3 . . . காமடி
எளிய முறையில் தொப்பையை குறைக்க யோகா தெரப்பி - வீடியோ
0 comments
முன்பு எல்லாம் உடல் உழைப்புக்கு என்று தினம் பல வேலைகள் செய்தனர் இதனால் அவர்கள் உடலும் மனமும் மிக ஆரோக்கியமாக இருந்தன.
ஆனால் இன்று நாகரீகத்தின் மாற்றத்தால் வீட்டு வேலைகளில் பெரும் பகுதிகளை இயந்திர மையமானது போக்குவரத்துக்கு பயன் பட்ட மிதிவண்டிகள் மறைந்து வாகன மையமானது.
பள்ளிகளில் விளையாடுவதற்கு என்று ஒதுக்கியநேரம் என்று பல பள்ளிகளில் இல்லை ஏன் பல பள்ளிகளில் விளையாட்டு திடலே இல்லாத நிலை உள்ளது.
இதற்கு அடுத்த நிலை உணவு முறைகளில் மாற்றங்களின் காரணமாக இளம் வயதினிலே பலருக்கு இன்று தொப்பை பிரச்சனையை எதிர் கொண்டுள்ளனர்.
கீழ் உள்ள விடியோவை நன்கு புரிந்து கொண்டு தினம் நீங்கள் செய்வதன் மூலம் படி படியாக அழகிய மற்றும் இளமையான தோற்றம் பெறலாம்.
நம் நாட்டு யோக கலையை (யோகா ஆசிரியை) சின்டி நன்கு தேர்ச்சி பெற்றவர்
Just for Fun Belly Dance
சிக்கன் 65 உடலுக்கு கேடு உஷார்......
1 comments
மாலை நேரங்களில் உணவுக்காக மக்கள் அதிகம் கூடும் இடமாக இன்று நடை பாதை கடைகளில் முக்கிய பங்கு தறுவது துரித உணவு கடைகள் முன்பு நகர் பகுதியில் மட்டும் காணப்பட்ட இந்த கடைகள் இன்று அனைத்து சிறு கிராமங்களில் கூட இந்த கடைகள் வந்து விட்டன.
சிக்கன் 65 சாப்பிடுவதல் ஏற்படும் கேடுகளும் பக்க விளைவுகளும்
குமுதம் இதழில் வந்த மறு மீள் பதிவு.
ராகவனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்?
தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம்.
அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம். எப்படி? பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம். இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது : உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி.
ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது. பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும்.
இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது.
ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர். சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர்.
எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர்.
செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம். இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.
உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது. கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும்.
முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.
எடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது. உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்' என்கிறார்.
அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?
இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது: ``சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும். நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது'' என்று எச்சரிக்கிறார்.
நன்றி - குமுதம்
வடிவேலின் கோழி 65 சிரிப்பு
இளம் பெண்கள் விரும்பும் நவீன மீன் சிகிச்சை + 18 - வீடியோ
2 commentsசக்கரை நோயாளிகளுக்கான யோகா பயிற்ச்சி- வீடியோ
6 comments
சக்கரை நோயாளிகளுக்கு தினமும் சக்கரையின் அளவைச் சரியாகப் பராமரிப்பது மிகக் கடினமாக இருக்கும். தொடர்ந்து அவர்கள மாத்திரை உட்கொள்வது ஊசிகளைப் போடுவது இதனால் கொஞ்சம் நாளாக ஆக ஆக சலிப்பை தறும் செயலாக அது அமையும்.
இதனால் அவர்கள் தங்களின் சக்கரை அளவுகளை சரியாகக் கவனிக்காமல் இருந்து விடுவார்கள். இதனால் தாழ்நிலை சக்கரை, உயர்நிலைச் சக்கரை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப் படுகின்றனர்.
எனவே மருந்துகள் மட்டும் இன்றி தினமும் எளிய உடல் பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.
பாபா ராம் தேவ்வின் முழுமையான சக்கரை நோயாளிகளுக்கான பயிற்ச்சி முறை
பழங்களை விரும்பி சாப்பிடுபவரா? நீங்கள் இனி தேவை எச்சரிக்கை !
2 comments
சென்னை, செயற்கை முறையில் மாம்பழம், ஆப்பிள், வாழைப்பழங்களைப் ரசாயன முறையில் பழுக்க வைத்து சாப்பிடுவதில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தானாய் பழுக்க வேண்டியதை தடியால் அடித்துப் பழுக்கவைப்பது என்தெல்லாம் பழமொழி. கால்சயிம் கார்பைட் தான் புதுமொழி. கடைகளில் விற்கப்படும் மாம்பழங்கள் பெரும்பாலும் கார்பைட் கற்களால் பழுக்கவைக்கப்பட்டதாகத்தான் இருக்கும். வியாபாரக் காரணங்களுக்காக அவர அவசரமாகப் பறிக்கப்படும் மாங்காய்களை இயற்கை முறையில் பழுக்க வைக்க சுமார் ஆறு நாட்கள் தேவைப்படும். ஆனால், அதுரை வியாபாரிகளால் லாபம் சம்பாதிக்காமல் இருக்க முடியுமா? அதனால்தான் திருவாளர் கார்பைடின் கைங்கர்யத்தில் பழுக்க வைக்கிறார்கள். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களைச் சாப்பிடுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற கோளாறுகள்தான் ஏற்படும் என்று சொல்லி வந்தார்கள். ஆனால், கார்பைட் கற்களில் உள்ள ஆர்சனிக் ரசாயனம் புற்றுநோயை ஏற்படுத்தும் எனச் சமீபத்தில் கண்டறிந்துள்ளார்கள். ஒரு மாம்பழத்தைப் பார்த்தே அது இயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்டதா இல்லையா என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். இயற்கையான முறைகளில் பழுக்கவைக்கப்பட்டதெனில் பழும் முழுவதும் ஒரே நிறமாக இருக்கும். கார்பைட் பழுத்தின் நிறம் ஆங்காங்கே அதிகமாகவும் சில இடங்களில் கறைவாகவும் இருக்கும். தவிர பழம் சூடானதாகவும் தோலில் மெல்லிய சுருக்கங்களும் இருக்கும். சுவையான மாம்பழம் என்ற வாங்கி சொந்தத் செலவில் சூன்யம் வைத்துக்கொள்ள வேண்டாம். கவனித்து வாங்குங்கள், கழுவி உண்ணுங்கள்.
பழக்கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பளபளா ஆப்பிள்கள் நம் கண்ணைப் பறிக்கும். பறிக்கப்பட்ட ஆப்பிள்கள் கெட்டுப்போகாமல் இருக்க அதன் மீது மெழுகுப் பூச்சு செய்யப்பட்டு பதப்படுத்தப்படுவது வழக்கமானதுதான். அப்படிப் பூசப்படும் மெழுகு தேன் கூடுகளில் இருந்தோ அல்லது தாவர எண்ணெய்களில் இருந்தோ தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது அரசின் கட்டுப்பாடு. ஆனால், அந்தக் கட்டுப்பாடுகள் காற்றில பறக்க விடப்பட்டு பலகாலம் ஆகிவிட்டது. இப்போதைய பளபளாவுக்குக் காரணம் பெட்ரோலியப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் மெழுகு பூசப்படுவதே. இத்தகைய மெழுகுப்பூச்சுக்கள் ஜீரணக் கோளாறுகளில் துவங்கி பல்வேறு கேடுகளை ஏற்படுத்தும். ‘தினம் ஒரு ஆப்பில் சாப்பிட்டால் மருத்துவரே தேவை இல்லை‘ என்பார்கள். மோசமான மெழுகு பூசப்பட்ட ஆப்பிளைச் சாப்பிடுவதாலேயே, மருத்துவரைத் தேட வேண்டி வரலாம். கவனம்.
மாம்பழங்கள் தவிர்த்து வாழைப்பழங்களும் கூட அரசாங்க விதிமுறைகளை மீறி செயற்கை முறையில் பழுக்கவைக்கப்படுகின்றன. இவ்வகை வாழைப்பழங்களின் காம்பு பச்சையாகவும் பழம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
நன்றி
-சங்கம்
-விஜய் டி,வி
கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18
7 comments
பாலுறவையும், பாலுறவு உணர்ச்சிகளையும் தூண்டக்கூடிய சாக்கலேட், ஸ்டிராபெர்ரி, பல்வேறு வகையான மூலிகைப் பொருட்களுடன் தற்போது நம்பமுடியாத வகையில் இணைந்திருப்பது கழுதைகளின் தோலில் இருந்து தயாரிக்கப்படும் மாத்திரைகள்.
ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம். நம்பித்தான் ஆக வேண்டும்.
சீனாவில் பாரம்பரிய மருந்துகளைத் தயாரிப்பதற்கு கழுதைகளின் தோலை பதப்படுத்தி அதில் இருந்து எடுக்கப்படும் பொருள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த மருந்தானது, பெண்களின் பாலுணர்வைத் தூண்டுவதாகத் தெரிய வந்துள்ளது.
தற்போது ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் கழுதை தோல்களை பாரம்பரிய மருந்துகளை தயாரிப்பதற்காக பயன்படுத்தி வருகிறது.
தென் அமெரிக்காவில் நீண்டகாலமாக கழுதை தோலில் இருந்து மருத்து தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவிலும் இந்த தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
சிட்னியைச் சேர்ந் தஅ ஏற்றுமதியாளர் ஜான் பிளெமிங், வெளிநாடுகளில் கழுதைகளை விற்பனை செய்வதற்காக கழுதை வேட்டையை விரும்புவதாகக் கூறியுள்ளார்.
மருந்து நிறுவனங்களுக்கு கழுதையின் தோல் தேவைப்படுவதாகவும், அதில் இருந்து வடிகட்டுதல் மூலம் பெறப்படும் ஒருவகைப் பொருளைக் கொண்டு பாரம்பரிய மருந்துகளை அந்நிறுவனங்கள் தயாரிப்பதாகவும் தெரிகிறது.
கழுதை தோலில் இருந்து எடுக்கப்படும் பொருள் `எஜியாவோ' என்றழைக்கப்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் `நு பாவ்' என்ற மருந்து பெண்களின் பாலுறவு உந்துதலைத் தூண்டுவதுடன், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைப் போக்க உதவுவதாகவும் தெரிய வந்துள்ளது.
கழுதை தோல் ஒன்று (பதப்படுத்தப்பட்டது) 30 அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
நன்றி
-வெப்துனியா