Headline

Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

வீரவணக்கம்

0 comments




நன்றி சவுக்கு


தந்தை பாசத்திற்காக ஒரு மாயாஜால கின்னஸ் சாதனை - வீடியோ

3 comments

Photobucket

இன்று வரை மாயாஜால நிகழ்ச்சியின் முடிசூடா மன்னர் டேவிட் காப்பபர்ஃபீல்ட் - ன் பல சகச நிகழ்ச்சிகள் கின்னஸ் புகழ் பெற்றவை. இவர் செய்யும் மாயாஜால காட்சிகள் அனைத்தும் மக்கள் நிறைந்த அரங்குகள் அல்லது பொதுமக்கள் நிறைந்த பொது இடங்கள்.

அவருக்கு புகழ்சேர்த்த இரு நிகழ்ச்சிகள் அந்த வீடியோ தொகுப்பு உங்களுக்காக.

நிகழ்ச்சி - I

நிகழ்ச்சி பார்வையாளர் ஒருவர் அவர் தந்தை பிரிந்து பல வருடம் ஆகிறது மேலும் அவர் இப்பொழுது ஹாவாய் தீவில் வசிப்பதாக கூறுகிறார். ஹாவாய் தீவு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து பல நூறுமயில் தொலைவில் உள்ளது இருந்த போதும்


அவரின் ஆசையை நிறைவு செய்ய மக்கள் முன் அவரை ஒரு தூணி முடிய அறையில் இருந்து அவர் தந்தை வாழும் ஹாவாய் தீவுக்கு அழைத்து செல்கிறார் இவை அனைத்தும் நேரடி ஒளிபரப்பின் மூலம் மக்கள் பார்கிறார்கள் பின்பு இவர் மட்டும் அந்த தீவில் இருந்து நிகழ்ச்சி அரங்குக்கு வருகிறார்.




நிகழ்ச்சி - II

லேசரால் துண்டான உடலை கையில் எடுத்து வரும் மெய்சிலிர்கும் காட்சி


சச்சின் 200 ரன் உலக சாதனை - வீடியோ

3 comments


சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்தார். 200 ரன்களைக் குவித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

147 பந்துகளில் 200 ரன்களைத் தொட்டார் சச்சின். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது சச்சினுக்கு 442வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.






கட்டிங் பிரியர்களுக்காக ஐஸ் பார்

0 comments



வாட்டி வதைக்கும் வெயிலினால் நாம் அவதிபடும் போது தாகத்தை போக்கவும் உடல் குளிர்ச்சிக்காகவும் பழம்ரசம் சாப்பிடுவோம்.

ஆனால் இங்கு உடல் வெப்பத்திற்காக அமைக்கப்பட்டஐஸ் பார்களின் அழகிய படங்கள்








பிரபாகரனுக்கு பில்லி சூனியம் செய்த சோதிடர் கைது!!

0 comments

ghost Pictures, Images and Photos

அரசாங்கம் விரைவில் கவிழும் எனவும் பிரபாகரனுக்கு பில்லி சூனியம் செய்து, தானே கொலை செய்ததாகவும் அரச தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் கூறிய பிரபல சோதிடர் ஒருவர் தற்போது நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று ஐ.தே.க. எம்.பியான தயாசிறி விஜயசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டுப்படைத் தலைமை அதிகாரி சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:



"பிரபாகரனை கோத்தபாயவோ, சரத் பொன்சேகாவோ கொலை செய்யவில்லை. தானே பில்லி சூனியம் செய்து அவரை கொன்றதாகவும் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்றும் அரச தொலைக்காட்சியின் ஊடாக ஆரூடம் கூறிய சோதிடருக்கே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது. சோதிடர் ஜனாதிபதியை கொலை செய்வதற்கு முயற்சி செய்தார் என்னும் குற்றச்சாட்டில் தடுப்பு உத்தரவின் பேரில் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


சோதிடம் கூறிய சோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை இலங்கை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். இந்த ஆட்சியில் தான் சோதிடர் ஒருவருக்குக் கூட சோதிடம் கூற முடியாதுள்ளது. கிரகங்கள் நன்றாக இருந்தால் தான் ஒருவர் நன்றாக வாழ முடியும். அந்த வகையில் விமல் வீரவன்சவின் கிரகம் நன்றாக இருக்கிறது. அதனால் அவருக்கு நாளைக்கே அமைச்சு பதவி கூடக் கிடைக்கலாம்.

அவருக்கு அன்று கிரகங்கள் சரியாக இல்லாததால் தான் அவரால் சீகிரியாவுக்குச் செல்ல முடியவில்லை. பேராதனை பூங்காவுக்குச் செல்ல முடியவில்லை. ஆனால், தற்போது எங்கும் சென்று வரலாம். யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்ட போதிலும் தற்போதும் வீதிகள் மூடப்படுகின்றன. வீதியில் இரு பக்கங்களிலும் படை வீரர்கள் இருக்கின்றனர். பாதுகாப்பு வாகனங்கள் பின் தொடரவே செல்கின்றன. இவை யாவும் மக்களைத் துன்பப்படுத்த வைக்கும் செயற்பாடாகும் என்பது மட்டுமல்லாது இவை தவிர்க்கப்பட வேண்டிய விடயங்களுமாகும்."இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி
-வீரகேசரி
*net Photos


முத்துக்குமார் மறைந்த 100வது நாள் பாரதிராஜா தலமையில் அஞ்சலி!!!

1 comments



இலங்கை பிரச்சினை தொடர்பாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமார் இறந்து நேற்றுடன் 100 நாள் முடிந்தது.


சிவகாசி பாவடி தோப்பு திடலில் திரையுலக தமிழீழ ஆதரவு குழு சார்பில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.



இதில் தமிழ் திரையுலக இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.


இதை நினைவு படுத்தும் வகையில் பாரதிராஜா அனைவரையும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி இருக்க கேட்டுக்கொண்டார்.


அதன்படி கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஒரு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.


அப்போது ஆர்.கே.செல்வமணி,


’’தமிழ்நாட்டுக்கு, தமிழ் இனத்துக்கு துரோகம் செய்பவர்கள் யார் என்று சொல்லத்தான் நாங்கள் இங்கு வந்து இருக்கிறோம்.


நமது ராணுவத்தின் மீது நமக்கு வெறுப்புவர காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சிதான். 21/2 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் கட்சியை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்’’என்று பேசினார்.


நன்றி
-நக்கிரன்


கோயம்பத்தூரில் பரபரப்பு - ரணுவ வாகனம் தாக்கி அழிப்பு

2 comments


ஈழத்தமிழினத்தினை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசுக்கு 80 சரக்குந்துகளில் போர் தளவாடங்களை இந்திய அரசு இன்று அனுப்புகிறது. அதை தடுக்கும் முயற்சியில் தமிழர்கள் இறங்கியுள்ளனர்.
ஈழத்தில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர் அரசானது தமிழகம் சேலம் , கோயம்பத்தூர் வழியாக போர் தளவாடங்களை 80 லாரிகளில் அனுப்புகிறது. சேலம் வழியாக செல்லும் பொழுது இதை கேள்விப்பட்ட தமிழுணர்வாளர்கள் அவ்வண்டிகளை தடுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

தற்பொழுது கோயம்பத்தூரில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் அப்போர் தளவாடங்களை கொழும்புக்கு செல்லவிடாமல் தடுக்க கோவை L&T சாலையில் திரளான தமிழுணர்வாளர்கள் குழுமியுள்ளனர்.

நன்றி
-தமிழ்வின்


இன்று விக்ரமுக்கு பிறந்த நாள் - வாழ்த்து சொல்லுங்க!!

17 comments




சீயான் என்கிற விக்ரமுக்கு இன்று பிறந்தநாள்!

சிறந்த நடிப்புக்காக தேசிய விருது பெற்ற விக்ரம், மிகுந்த போராட்டங்களுக்கிடையேதான் இந்த இடத்தைப் பிடித்தார். தனக்குக் கிடைத்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள மிகுந்த கவனத்துடன் கதைகளைத் தேர்வு செய்தார். அதன் விளைவு இன்று யாருடன் ஒப்பிட முடியாதபடி, தனக்கென ஒரு தனி இடத்தைக் கோடம்பாக்கத்தில் பெற்றுள்ளார்.


விக்ரம் நடிப்பில் அடுத்து வெளிவரும் படம் கந்தசாமி. தமிழில் ஒரு ஹாலிவுட் ஸ்டைல் திரைப்படம் என்ற சொல்லுக்கு முழுமையான தகுதியுடன் இந்தப் படம் வெளிவருகிறது.

இந்தப் படத்தில் தனக்கான அனைத்துப் பாடல்களையும் விக்ரமே பாடியுள்ளார். தியாராஜ பாகவதருக்குப் பின், தனக்கான அனைத்துப்பாடல்களையும் தானே பாடிய ஹீரோ என்ற பெருமை இவருக்குண்டு. கமலுக்கும் இந்தப் பெருமை உண்டு என்றாலும், அவர் தனது படங்களில் ஓரிரு பாடல்களோடு நிறுத்திக் கொள்வது வழக்கம்.

இதற்கு அடுத்து அவர் நடிக்கும் படம் உலக அளவில் தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுதான் மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராயுடன் அவர் இணையும் ராவண் (அசோகவனம்).

கடந்த ஆண்டு இவருக்கு ஒரே படம். அதுவும் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் சொதப்பி விட்டது. இந்த ஆண்டு அதற்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்து இரு பெரிய படங்களைத் தருகிறார்.
விக்ரம் தளம்
வாழ்த்து சொல்ல

வாழ்த்துக்கள் விக்ரம்! வாழ்த்துக்கள் விக்ரம்! வாழ்த்துக்கள் விக்ரம்!







நன்றி
-தட்ஸ்தமிழ்


இனி செல்போனுக்கு 11 இலக்க எண்கள்!

0 comments




செல்போன் பயன்படுத்துவோர் மட்டுமல்ல... அவர்களுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும்கூட இன்று பெருகிவிட்டன.

நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 35 கோடி பேர் இன்றைக்கு செல்போன் உபயோகிக்கிறார்கள். இன்னும் இரு ஆண்டுகளில் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் செல்லும் கையுமாகவே காட்சி தருவார்கள் என்கிறது தொலைத் தொடர்புத் துறை.

இந்த வளர்ச்சி ஒரு நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது சென்போன் நிறுவனங்களுக்கு. இதுவரை 10 இலக்க எண்களைப் பயன்படுத்தி வரும் செல்போன் ஆபரேட்டர்களுக்கு 'நம்பர் தட்டுப்பாடு' ஏற்பட்டுவிட்டதாம்.

இந்த சிக்கலைத் தீர்க்க நாடு முழுவதும் செல்போன் ஆபரேட்டர்களுக்கு 11 இலக்க எண்களைத் தர தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் நிறுவனமான பிஎஸ்என்எல் அலுவலர் ஒருவர் நம்மிடம் கூறியதாவது:

அநேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் செல்போன் எண்கள் அனைத்தையும் 11 இலக்கத்துக்கு மாற்றிவிடும் முடிவில் உள்ளது தொலைத் தொடர்புத் துறை. வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரிலிருந்து இந்த மாறுதல்கள் ஆரம்பிக்கும். இதற்கான சுற்றறிக்கை ஏற்கெனவே வந்துவிட்டது என்றார்.

நன்றி
-தட்ஸ்தமிழ்


நாய் துரத்தியதால் சிறுவன் மாடியிலிருந்து விழுந்து பலி

0 comments





சென்னையில், நாய் துரத்தியதால் பயந்து போன சிறுவன், நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

நாயை பொறுப்பின்றி மாடியில் உலவ விட்டிருந்த விமானப் பணிப்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம், இந்தியன் ஏர்லைன்ஸ் குடியிருப்பில், நான்காவது பிளாக்கில் வசித்து வருபவர் சீனிவாசன். இவர், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவரின் மனைவி அஞ்சனா. இவர்களுக்கு ஆசிஷ் அரவிந்த் (11) என்ற மகனும், ஷிவானி (4) என்ற மகளும் உள்ளனர்.

ஆசிஷ் அரவிந்த், கேந்திர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். தேர்வு முடிந்து முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில், தேர்ச்சி பெற்ற ஆசிஷ் அரவிந்த், அடுத்த பிளாக்கில் வசிக்கும் தனது மாமா சங்கர்ராவ் வீட்டிற்கு சென்று இனிப்பு வழங்கினான்.

அதன் பின்னர் நான்காவது மாடிக்குச் சென்று அங்கிருந்த தனது நண்பனுடன் சேர்ந்து விளையாடியுள்ளான்.

அதே பிளாக்கில், விமான பணிப்பெண்களாக வேலை பார்க்கும் நமீதா நாயக் (25), அவரின் சகோதரி சமீதா நாயக் (22) ஆகியோர் வசித்து வந்தனர். இருவரும் டாபர்மேன் ரக நாயை வளர்த்து வருகின்றனர்.

இரவு நேரத்தில் நாயை மாடியில் உலவ விடுவார்களாம்.
நேற்று முன்தினம் நமீதா நாயக் வேலைக்கு சென்றிருந்தார். வீட்டில் இருந்த சமீதா நாயக் வழக்கம்போல் இரவில் நாயை மாடியில் விட்டார்.

இந்த சமயத்தில்தான் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆசிஷ் அரவிந்த்தை நாய் துரத்தியது. பயந்து போன சிறுவன் வேகமாக ஓடியுள்ளான். அப்போது நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தான்.

உடனடியாக அவனை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

நாயை பொறுப்பின்றி மாடியில் உலவ விட்ட விமான பணிப் பெண் சமீதா நாயக் கைது செய்யப்பட்டார்.

சிறுவன் ஆசிஷ் அரவிந்த் தனது கண்களை தானம் செய்ய ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தான். அதற்காக பதிவும் செய்து வைத்திருந்தான். இதையடுத்து அவனது கண்கள் தானமாக எடுக்கப்பட்டன.

இச்சம்பவம் ஏர்லைன்ஸ் குடியிருப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி
-தட்ஸ்தமிழ்


ஏப்ரல் 1 முதல் எந்த ஏடிஎம்மிலும் பணம் எடுக்கலாம்- இலவச சேவை

2 comments



வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில், 2009 ஏப்ரல் 1ம் தேதி முதல் எந்த வங்கியின் ஏடிஎம்மில் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.

இதன்மூலம், அடுத்த மாதம் 1ம் தேதி முதல் வேறு வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் இப்போது பிடிக்கப்படும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. எனவே, அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள் எதனுடைய ஏடிஎம்மிலும் கார்டை நுழைத்து கட்டணம் இன்றி பணத்தை எண்ணியபடி வெளியேறலாம்.

தவிர, பண இருப்பை அறிவது, சுருக்கமான கணக்கு ஸ்டேட்மென்ட்டின் பிரின்ட் பெறுவது என அனைத்து சேவைகளும் ஏற்கனவே உள்ளதுபோல இலவசமாக நீடிக்கும்.

எனினும் இத்திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. பெரிய வங்கிகளுக்கு லாபம்: ஏடிஎம் சேவைக்காக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ஆண்டுதோறும் வங்கிகள் ரூ.99 வரை பிடிக்கின்றன.

அதில் மற்ற எந்த வங்கிகளின் ஏடிஎம்மை தனது வாடிக்கையாளர் பயன்படுத்தினாலும் அவ்வங்கிகளுக்கு கட்டணம் செலுத்துகின்றன. அதன்படி எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி போன்ற பெரிய வங்கிகள் அதிக ஏடிஎம்களை கொண்டுள்ளதால் அவற்றை பயன்படுத்தும் பிற வங்கி வாடிக்கையாளர்கள் மூலம் லாபத்தை அதிகரித்துக் கொள்ள வழியேற்பட்டுள்ளது.

நன்றி
நக்கீரன்


நடிகர் ஜுனியர் என்.டி.ஆருக்கு படுகாயம்

0 comments


தெலுங்கு தேசம் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக விளங்குபவர், ஜுனியர் என்.டி.ஆர். இவர், மறைந்த என்.டி. ராமராவின் பேரன்.

இவர், தெலுங்கு தேசம் கட்சிக்காக, கடந்த 12-ந் தேதி பிரசாரத்தை தொடங்கினார்.

தெலுங்கு புத்தாண்டு விழாவை, தனது குடும்பத்தினருடன் கொண்டாட அவரும், அவரது நண்பரும், நடிகருமான ராஜீவ் கனகலாவும் காரில் நேற்று இரவு, ஐதராபாத் நோக்கி வந்து கொண்டு இருந்த போது, மோதே என்ற இடத்தில் வந்தபோது, ரோட்டை விட்டு இறங்கி கவிழ்ந்து விட்டது.

இந்த விபத்தில், ஜுனியர் என்.டி.ஆருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருடன் காரில் இருந்த ராஜீவ் கனகலாவும் காயம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து, இருவரும் ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜுனியர் என்.டி.ஆருக்கு சிறிய ஆபரேஷன் செய்யப்பட்டது. ஜுனியர் என்.டி.ஆரை, தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம்கட்சி பாராளுமன்ற தலைவர் எர்ரன் நாயுடு, மற்றும் தலைவர்கள் பார்த்து, உடல் நலம் விசாரித்தனர்.

நன்றி
நக்கீரன்


காக்கா பிரியாணி கோவையில் பீதி !

2 comments



கோவையில் சிக்கன் பிரியாணி என்ற பெயரில் காக்கா பிரியாணி விற்கப்படுவதாக எழுந்துள்ள புகாரையடுத்து வனத்துறையினர் காக்கா வேட்டையில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில் உண்மையை ஒப்புகொண்ட அவர்கள் ஹோட்டல் முதலாளிகளையும் கைகாட்டி உள்ளனர்.

இதையடுத்து ஹோட்டல்களில் விசாரணை நடந்து வருகிறது.

கோவை மதுக்கரையில் உள்ள ஹோட்டல்களில் சிக்கன் பிரியாணிக்கு என்ற பெயரில் காக்கா பிரியாணி போடப்படுவதாகவும், இதற்காக சிலர் மதுக்கரை-நீலம்பூர் பைபாஸ் ரோடு பகுதிகளில் வேட்டையாடி வருவதாகவும் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோவை ரேஞ்சர் சவுந்தரராஜன், பாரஸ்டர் பழனிச்சாமி, நடராஜன் மற்றும் வனத்துறையினர் நேற்று மாலை அங்கு சென்று சோதனை நடத்தினர். காக்கை வேட்டையில் மும்முரமாக இருந்த நான்கு பேரை கைது செய்தனர். அவர்கள் தோள் உரித்து பிரியாணிக்கு தயாராக வைத்திருந்த 25 காகங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை அந்த இடத்திலே குழி தோண்டி புதைத்தனர்.

வனத்துறையினரின் விசாரணையில் அவர்கள் சிறுமுகை ஆலாங்கொம்பை சேர்ந்த முத்துமாலை (25), மதுரை மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி (20), கிருஷ்ணன் (60), உரிச்சான் (40) என கூறியுள்ளனர். காக்கைகளை வேட்டையாடி குறைந்த விலைக்கு அங்குள்ள ஹோட்டல்களுக்கு சப்ளை செய்து வந்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு தலா ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து சில ஹோட்டல் உரிமையாளர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

நன்றி
-தட்ஸ்தமிழ்


இங்கிலாந்து டிவி நடிகை ஜேட்கூடி மரணம்

2 comments



பிரபல இங்கிலாந்து டிவி நடிகை ஜேட் கூடி புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனது வாழ்நாளில் இறுதிக் கட்டத்தில் இருந்த அவர் இன்று மரணம் அடைந்தார்.

பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியின் மூலம் அவர் மிகவும் பிரபலமானார். ஜேட் கூடி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை இனவெறியோடு திட்டியதாக சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி
நக்கீரன்


ஆசிரியரை செருப்பால் அடித்த பெற்றோர்

2 comments



தர்மபுரி மாவட்டத்தில் தங்களது மகனை அடித்த ஆசிரியரை, மாணவரின் பெற்றோர் செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே உள்ளது ஏரியூர் அண்ணா நகர். இந்த பகுதியை சேர்ந்தவர் மாது, கூலி தொழிலாளி. இவரது மனைவி சின்னதங்கம். இந்த தம்பதிகளின் மகன் ரமேஷ் (15)

இவன் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என தெரிகிறது. நேற்று ரமேஷ் பள்ளிக்கூடம் வந்தான். அப்போது அறிவியல் ஆசிரியர் அப்பாதுரை என்பவர் மாணவனிடம், ஏன் பள்ளிக்கு சரியாக வரவில்லை' என்று கூறி அவனை அடித்ததாக தெரிகிறது.

இதையடுத்து வீடு சென்ற ரமேஷ், தனது ஆசிரியர் தன்னை அடித்து விட்டதாக பெற்றோரிடம் கூறினான். மேலும் மயக்கம் போட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ஆத்திரமடைந்த மாது, அவரது மனைவி சின்னதங்கம் ஆகியோர் பள்ளிக்கூடம் சென்றனர். ஆசிரியர் அப்பாத்துரையிடம், ஏன் மகனை அடித்தீர்கள் என்று கூறி செருப்பால் ஆசிரியரை தாக்கி விட்டு ஓடிவிட்டனர்.

இதுகுறித்து ஆசிரியர் அப்பாத்துரை ஏரியூர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தன்னை மாது, சின்னதங்கம் ஆகியோர் தாக்கி விட்டதாக கூறி உள்ளார்.

அதுபோல ஆசிரியர் அப்பாத்துரை மீது மாதுவும் புகார் கொடுத்துள்ளார். இரு தரப்பையும் போலீஸார் விசாரிக்க முடிவு செய்தனர். ஆனால், ஆசிரியரை செருப்பால் அடித்த மாதுவும், சின்ன தங்கமும் மாயமாகி விட்டனர்.

நன்றி
தட்ஸ்தமிழ்


இருதய ஆபரேஷனுக்கு பணமின்றி தவிக்கும் 3 வயது சிறுவன்

3 comments




திருச்சியில் இருதய நோயால் மூன்று வயது சிறுவன் கடும் துயரம் அனுபவித்து வருகின்றான். அறுவைச் சிகிச்சை செய்ய பணம் இல்லாமல், அவனது ஏழைக் குடும்பம் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளது.

திருச்சி கீழ்கண்டார் கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராமசந்திரன் (30), இவர் பொன்மலை காந்தி மார்க்கெட்டில் பழம் வாங்கி வந்து தலையில் வைத்து தினசரி வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது மனைவி சித்ரா (25). கூலி வேலை செய்கிறார். இவர்களுக்கு விக்னேஷ் (5), நாகேந்திரன் (3) என்ற இரண்டு மகன் உள்ளனர்.

இதில் நாகேந்திரனுக்கு இதயத்தில் சிறு ஓட்டை இருந்துள்ளது. மேலும் இதயத்தில் நல்ல ரத்தத்தையும், அசுத்த ரத்தத்தையும் பிரிக்கும் இரு வால்வுகளும், இதயத்தின் வலதுபக்கமாக ஒரே இடத்தில் உள்ளன.

இதனால் ஒரு வால்வைப் பிரித்து இடப் பக்கம் வைத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தப் பிரச்சனையால் சிறுவன் நாகேந்திரன் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளான். நிற்கக் கூட முடியாமல் பல நேரங்களில் சிரமம் ஏற்படுகிறது.

மகன் படும் வேதனையை சகித்துக் கொள்ள முடியாமல் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் மேல் சிகிச்சைக்காக, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இதனால் அக்கம் பக்கத்தில் சில ஆயிரம் ரூபாய்கள் கடன் வாங்கிக் கொண்டு அங்கு சென்றும் அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் பலன் இல்லை.

எப்படியும் மகனை நோயின் கோரப்பிடியில் இருந்து மீட்க வேண்டும் என்று முடிவு செய்த ராமசந்திரன் தனது மனைவியின் நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்துள்ளார்.

அங்கு பரிசோதனைகளை முடித்த டாக்டர்கள் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனைகளை முடிந்த நிலையில் அந்த சிறுவனுக்கு இருதய ஆபரேஷன் செய்ய ரூ 2 லட்சம் தேவை என்று மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால் இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு போவது என்று தெரியாமல், நாகேந்திரனின் குடும்பம் மலைத்துப் போயுள்ளது.

இந்தக் குழந்தைக்கு உதவி செய்ய நினைப்போர் உதவலாம்..

சிறுவனின் முகவரி:

பெயர் - நாகேந்திரன்,
தந்தை பெயர் - ராமச்சந்திரன்,
2-123, பெரியார் தெரு,
கீழ்கண்டார் கோட்டை,
திருச்சி - 620 011.

மருத்துவரின் பெயர்: டாக்டர் சி.எஸ்.முத்துக்குமரன்,
அப்பல்லோ மருத்துவமனை,
தொலைபேசி எண்: 044-28296749,
இ மெயில்: muthu92@hotmail.com,

நன்றி
- தட்ஸ்தமிழ்