இந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி உட்பட்ட இந்திய தலைவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாக உள்ளதாக வெளியான செய்தியை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா நடேசன் மறுத்துள்ளார்
இந்திய செய்தி சேவை ஒன்றே குறித்த அச்சுறுத்தல் செய்தியை வெளியிட்டிருந்தது.
சி பி என்- ஐ பி என் இணையத்தளத்திற்கு இது தொடர்பில் நடேசன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்
அதில், சுயநிர்ணய உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இந்திய மக்களுக்கும் இடையில் பிளவை உண்டாக்கவும், ஈழத்தமிழர்கள் படும் துன்பங்களை மறைக்கவுமே இவ்வாறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக நடேசன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் சோனியாவுக்கோ அல்லது அவர்களில் பிள்ளைகளுக்கோ தமிழீழ விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாக இருக்கவில்லை என நடேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி
தமிழ்வின்
Headline
'சோனியா காந்திக்கு தம்மால் அச்சுறுத்தல்' - விடுதலைப்புலிகள் மறுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment