Headline

4 நாட்களுக்குள் யுத்தம் நிறைவுக்கு வரும் - கோத்தபாய


இன்னும் நான்கு நாட்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தம் நிறைவுக்கு வரும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை பாதுகாக்கும் விசேட இராணுவ நடவடிக்கைகளை படையினர் மோதல் தவிர்ப்பு வலயத்தின் வடபகுதியின் ஊடாக ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை எனவும், படைவீரர்களது ஆயுதங்கள் மட்டுமே யுத்த களத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மோதல்களினால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக புலிகள் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யுத்த சூனிய பிரதேசத்திற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் செல்ல அனுமதியளிக்கப்பட வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையை கோத்தபாய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.


நன்றி
-செய்தி.காம்

0 comments: