விடுதலைப்புலிகளுடனான போரில் இலங்கை ராணுவம் வெற்றி பெறுவதற்கு இந்திய அரசாங்கமே மிகப்பெரிய உதவி செய்தது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சபையின் முதல்வரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார் என்று விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையதளம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது, இந்திய அரசாங்கத்தின் உதவிகள் இல்லாமல் இருந்திருந்தால் விடுதலைப்புலிகளை போரி ல் வென்றிருக்க முடியாது. இலங்கை மக்கள் இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நன்றி
நக்கீரன்
Headline
இந்தியாவின் உதவியுடன் புலிகளுடனான போரில் வெற்றி பெற்றோம்: இலங்கை அமைச்சர் நிமல் சில்வா
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment